ருது
நண்பர்களுக்கு வணக்கம், அதீத வேலை காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை, இந்த கட்டுரை பெண்ணின் ருது பற்றியது. பெண் என்பவள் சக்தி,ஆண் என்பவன் சிவம்.ஆண் இருப்பு,பெண் இயக்கம், இயக்கம் இல்லா இருப்பு உபயோகம் அற்றது.பிரபஞ்சத்தில் இருக்கிற அனைத்துமே இவ்விரு தத்துவங்களுக்குள்ளே அடங்குவதை நாம் தெளிவுற சிந்திக்கும் போது புலப்படும்.மேலும் பிரபஞ்சத்தில் இருக்கிற ஐந்து சக்திகளான பஞ்ச பூத தத்துவங்களான நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவகைகளின் அடிப்படையில்தான் நம் ஞானிகளும் சித்தர்களும் பூமியில் இருக்கிற அனைத்து விசயங்களிலும் உட்புகுத்தி அதன் செயல் சூத்திரங்களையும் கணக்கிட்டார்கள்.இப் பஞ்ச பூத தத்துவத்தில் இருப்பு சிவனாகவும்,இயக்கம் சக்தியாகவும் கொண்டு பல சூட்சுமங்களை உணர்த்திருக்கிறார்கள்.மனிதனின் உருவாக்கத்தில் சக்தியும் சிவனும் மட்டுமே இயங்குவதாக கண்டார்கள். இதில் இருப்பு சிவனை விட இயக்க சக்தி பெரும் சக்தி வாய்ந்ததாக உணர்ந்ததால் தான் இயக்கத்தின் ஆதி கடவுளாக ஆதிபராசக்தியை கொண்டு அச்சக்திக்கு பெண் வடிவமும் கொடுத்தனர். மேலும் நாம் வணங்குகிற அனைத்து கடவுள்களிலும் மேற்கூறிய தத்துவங்களின் அடிப்படையில்தான் சித்தரித்து இருக்கிறார்கள்.சிவம் சக்தி இரண்டையும் ஜோதிட தத்துவத்தில் சூரியன் சந்திரனுக்கு ஒப்பிட்டு பூமியின் இயக்கத்தை இரவு,பகல்,நாள் நட்சத்திரம்,திதி இவைகளின் கணக்குகளின் மூலமாக கொண்டிருப்பார்கள்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனை மட்டுமே கணக்கெடுப்பதால் நம் நாட்டின் ஜோதிடத்தில் இருக்கிற தீர்க்கம் அங்கு கிடைப்பதில்லை.மேற்கூறிய சிறிய முத்தாய்ப்புடன் நான் எழுத வந்த ருது பற்றி பார்ப்போம்.
உயிர் ஜனித்ததிலிருந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வுயிரின் நிலை மாறி அடுத்த நிலை அடையும்.இது ஜனன கால குருவின் சுழற்சியை கணகெடுத்து சொல்லபட்டு இருக்கிற ஒரு விஷயம். சக்தியின் இயக்கமான பெண்ணில் இத்தன்மை பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.பெண்ணில் முதல் 12 ஆண்டுகள் முடிவுறுகிற தருவாயில் அடுத்த நிலைக்கு சக்தியினை உருவாக்கி ஒரு சக்தி பிரவாகமாக மாற்றுகிற காலம். ஆம் ஓர் உயிரிலிருந்து இன்னொரு உயிரை உருவாக்குவதற்கு உண்டான சக்தி மைய இயக்கத்தின் ஆரம்பம். ஓர் உயிரை ஜனனிப்பதற்க்கு உண்டான கருவறை திறப்பு,கோவில் கும்பாபிஷேகம். ஒளியாக இருந்து ஒளி பிழம்பாக உருமாறுகிற பருவம்.இந்த ருது, பெண் வடிவத்தை தாயாக சக்தியாக சக்தியின் திரளாக உருவெடுக்கும் நேரம். இது சக்தியாக பெண்ணிற்கு மட்டுமே ஏற்படுகிற இயற்க்கை தந்த வரம். இத்தன்மையில் அந்த பெண்ணின் உடலில் பிரபஞ்ச சக்தியின் வலிமை இறங்கி இருக்கிற நேரம். நம் வீட்டில் இருக்கும் 12 -13 வயது பெண்ணை பாருங்கள் புரியும். குழந்தை தனம் மாறி உடலில் மாற்றங்களை மட்டுமே நாம் வெளிப்படையாக காணமுடியும் அனால் சூட்சுமத்தில் பெரிய சக்தி வடிவமாக இருப்பார்கள்.
அச்சக்தியின் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள்.பால பருவத்தின் இறுதி நிலை குழந்தையும் தெய்வீகமும் தாண்டவமாடும் வசீகர முகம்.
இப்பருவத்தில் இருக்கிற பெண்ணை வைத்து துவங்குகிற நற் காரியங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். முக்கியமான வேலைக்கு வெளியில் செல்பவர்கள் வீட்டில் இருக்கும் இந்த தன்மையில் இருக்கும் பெண்ணிடத்தில் வாக்கோ,அல்லது பணமோ,அல்லது வேலைக்கு உகந்த பொருளையோ பெற்று செல்லுங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.மேலும் உடல்நிலை சரில்லாமல் இருப்பவர்கள் நெடுநாள் வியாதியினால் சிர்மபடுபவர்கள் இப்பருவத்தில் இருக்கும் பெண்ணின் கையினால் தொடர்ச்சியாக மருந்து உண்டுவர நிச்சயம் பெரிய மாற்றத்தை உணர்வார்கள்.
பெண் என்ற சக்தி மையத்திற்கு 3 நிலைகள் முக்கியமாக கருதபடுகிறது.
1.ருது என்கிற கர்ப்பகிரக திறப்பு 2.சக்தி சிவனை ஆகர்ஷணமாக்கி தன்னுள் அடக்குகிற முதல் தாம்பத்திய உறவு 3.சக்தி,சிவம் உரு கருவாகி இருக்கிற கர்ப்ப காலம்.இம்மூன்று தன்மைகளிலும் பெண் ஜொலிப்பாள்.அவர்களுடைய முகம் ஒரு பொலிவு பெற்று தெய்வீக தன்மையை வெளிபடுத்துவதை காணலாம்.
பெண் ருதுவாகி சக்தியாகின்ற அந்த யோனி திறப்பை இன்றும் மிக பெரிய சக்தி விழாவாக மேற்கு வங்காளம்,கவுகாத்தியில் உள்ள காமாக்கினி கோவிலில் காணலாம்.அவ்விழாவில் சாதுக்கள்,சித்தர்கள்,நாகாக்கள்,பெருவாரியாக கலந்து கொள்கிற வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்ற மிக பெரிய விழா அது.
பெண்ணாகிய சக்தியில் இவ்வுண்ணதத்தை உணர்ந்து தான் நம் முன்னோர்கள் சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று கேந்திரத்தை இயக்குகிற திரிகோணத்தை போற்றி உள்ளனர்.இச்சக்தியை பெண்ணை போற்றுவோம்,வணங்குவோம் . இன்னும் வரும்...... அஸ்ட்ரோ பாபு