Tuesday, 28 October 2014

ஏன் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு சிறந்தது?
திதி என்பதே சந்திரன் தன் பாதையில் பூமியை சுற்றி வருகிற நகர்வை குறிப்பது. சந்திரன் பூமியின் கீழ் நோக்கி வருகிற 15 திதிகள் மேல் நோக்கி போகிற திதிகள் என 30 திதிகள்.என்பது அனைவரும் அறிந்ததே. அமாவாசை சிவம் என்றும் பௌர்ணமி சக்தி என்றும்,
இதை சித்ததுவத்தில் சந்திரன் பூமியை நோக்கி வருவதை சிவம் சக்தி நோக்கி வருவதாகவும்,(அமாவாசை இலிருந்து பௌர்ணமி வரை) மேல் நோக்கி போவதை சக்தி சிவனை நோக்கி போவதாகவும் (பௌர்ணமி இலிருந்து அமாவாசை வரை) கூறுகிறார்கள்.
சந்திரன் தன்மை பௌர்ணமி புள்ளியில் பூமியில் இலிருந்து குறைந்து கொண்டே வந்து அமாவாசை புள்ளியில் நின்று வளர்ந்து தன் தன்மையை கூட்டி கொண்டே சென்று பௌர்ணமி யில் நிறைவு பெறும்.இதுதான் இயற்க்கை நமக்கு வழங்கி இருக்கிற ஒரு விஷயம். சந்திரன் தன்மை பூமியில் எவ்வாறு இருக்கிறது அது எவ்வாறு மனித உயிர்களை ஆட்கொள்கிறது என்பதை என் சந்திரன் கட்டுரையில் தெளிவுபட விவரித்துள்ளேன். சந்திரன் நம் மனதை இயக்குகிற ஒரு தன்மையை நமக்கு வழங்குகிறது.அதனால் தான் சந்திரனுக்கு மனக்காரகன் என்று பெயர்.
சரி அவ்வாறு பௌர்ணமி யில் (தேய்பிறை) தன் பயணத்தை துவக்குகிற சந்திரன் தன் பாதையின் மையபுள்ளியான 8 வது தினத்தில் இருந்து அடுத்து 7 தினங்களுக்கு அந்த மறைவு தன்மை படிப்படியாக அதிகரித்து முழு மறைவு தன்மையை (அமாவாசை) அடையும். அப்படி சந்திரன் மறைவு தன்மையின் மைய புள்ளியில் வருகிற பொழுது
மனதின் இயக்கத்திலும் ஒரு மாறுபாடு இருக்கும்.தெளிவற்ற தன்மையில் மனம் இயங்கும்.அல்லது மனம் இயங்குகிற தன்மை குறையும்.
மனம் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதால் தான் நாம் மாயை என்ற விசயங்களில் உழன்டு கொண்டே இருக்கிறோம்.மனம்தான் நாம் பிரபஞ்ச சக்தியை உணர்வதற்கு தடையாக இருக்கும் ஒரு விசயம். மனதின் இயங்கு தன்மை குறைகிற போது ஈஸ்வர சக்தியான பைரவ சக்தியை உட்புகுத்தி நம்முள் ஏற்பட்டு இருக்கிற குறை பாடுகளை அச்சக்தியின் மூலமாக சமன் படுத்தி கொள்ளலாம். பைரவ கோவிலில் பயன்படுத்துகிற பொருள்களும் அச்சக்தியை நமக்கு வழங்குவதாக தான் இருக்கும்.
7 1/2, அஷ்டம சனி நடக்கும் காலங்களிலோ, நீச,மறை விடத்து சனியின் திசை நடக்கும் காலங்களிலோ நடக்கும் மாறுபாடான சிரமங்களில் இருந்து வெளி வர இந்த கால பைரவ தன்மை வலிவகுக்கும். அது என்ன சனிக்கு மட்டும் என்று கேட்பவர்களுக்கு சனியை பற்றியும் தனியாக எழுதி இருக்கிறேன் அதையும் படித்து ஒப்பிட்டு பாருங்கள் புரியும் மொத்தமும் எழுதினால் இன்னும் கட்டுரை நீண்டு விடும்.
வளர்பிறையில் இதேமைய புள்ளியான 8 திதிஇலிருந்து அடுத்த 7 நாட்கள் மனம் தீவிரமாக வேலை செய்யும்.மனம் இயக்குகிற உடலிலும் ஒரு தீவிர தன்மை பரபரப்பாக இயங்கும். அப்பொழுது மனதை அடக்கி உட்செல்ல வைப்பது சிரமம். அப்படி தீவிரமாக இருக்கிற மனதின் இயக்கத்தை நேர்கோண தன்மைக்கு கொண்டு செல்ல பைரவ பெண் தன்மையான பைரவி வழிபாடு துணை செய்யும்
மறைவு மற்றும் வெளிவருகிற இரண்டு மைய புள்ளிகளும் ( 8 ம் திதியான அஷ்டமி திதி) இரண்டு தன்மைகளை மிக தீவிரமாக தருவதால் தான் புதிய வேலைகளையோ அல்லது புது விஷயங்களையோ அந்நாளில் தவிர்த்தார்கள். நீங்களும் உணர்ந்து பாருங்களேன். இன்னும் வரும் ........ அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment