Thursday, 30 October 2014

கிரகங்களின் பரிகார வழிபாடு
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை பரிகாரங்களுக்கு ஏன் குறிப்பிட்ட சக்திகளை வழிபட சொல்கிறார்கள் என்பது பற்றி, கிரகங்களின் பலவீனங்களோ, இருக்கும் இடமோ,சேர்க்கையோ ஒரு மாறுபட்ட தன்மையை நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை என் முந்தைய கட்டுரைகளில் எழுதி இருந்தேன். அத்தன்மைகளுக்கு பரிகாரமாக ஜோதிடத்தில் சொல்ல படுகிற கடவுள்கள் எவ்விதம் அத்தன்மைகளை சரி செய்யும் என்பது பற்றி பார்ப்போம். அச்சக்தியின் அடிப்படை,செயல்படும் விதம்,எதற்காக ஒரு கடவுளை ஒரு கிரகத்துக்கு சொன்னார்கள் என்பதுபற்றியதுதான் இக்கட்டுரை,
9 கிரகங்களுக்கும் தொடர்ந்து எழுதுகிறேன், முதலில் எனக்கு பிடித்த ராகுவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
ராகு -ராகுவிற்கு முக்கியமாக துர்க்கை வழிபாடு, மேலும் வழிபாடு ஸ்தலங்களான திரு நாகஸ்வரம், மற்றும் திரு காளஹஸ்தி யை கூறுவார்கள்.ராகு பலமாக இருப்பவர்கள் நடுத்தர உயரத்திற்கு மேற்பட்டும்,இயற்கையான கட்டுமஸ்தும்,ஒரு பெரிய தோற்றத்தோடு இருப்பார்கள்.ஆண்,பெண் பேதமில்லாமல் இந்த உருவ அமைப்பை பெற்று இருப்பர்கள். உடல் தசை வலிமை மிக்கவர்கள். இராகு இவர்களுடைய பிறப்பில் சாதகமான இடங்களில் இருந்தால்,அவ்வலிமை நற்செயல்களுக்கும்,கெட்ட இடங்களில் இருந்தால் கெட்ட செயல்களுக்கும் பொறுப்பேற்கும்.நற்பலன்கள்.நற் செயல்களை பற்றி நாம் எப்பொழுதுமே போற்றுவதில்லை.கெடுபலன் கெட்ட செயல்களுக்குதானே வடிகால் தேடுவோம்
நம்முடைய அனைத்து செயல்களின் மூலமாக இருக்கும் மூளை என்ற மைய பகுதிக்கு பொறுப்பேற்கும் ஈஸ்வர சக்தியான குரு சக்தியை மையமாக வைத்துதான் அனைத்து நவகிரக ஸ்தலங்களிலும் நவ கிரகங்களை வழிபாடு செய்யுமாறு வடிவமைத்து இருப்பார்கள்.நம்மை இயக்குகிற CPU மூளை பகுதிதான் என்பது நாம் அறிந்ததே. அதில் செயல்படுகிற 9 விதமான செயல் பகுதிகள்,அப்பகுதிகள் இயக்குகிற சுரப்பிகள்,சுரப்பிகளின் மூலமாக சுரக்கிற திரவ சக்தி,அத்திரவ சக்திகள் தூண்டுகிற உடம்பின் செயல்பாடு என்றுதான் நம் உடலின் சூத்திரம் இயங்குகிறது.இந்த 9 செயல்பகுதிகள் செயல்படும் விதம் அவ்வுயிர் முதல் மூச்செடுத்து பூமியில் ஜனிக்கிறபோது இருக்கிற கிரக சூழ்நிலைக்கு கேற்றவாறு செயல்படும். அதில் ஒன்றுதான் உடம்பின் மொத்த இயக்க சக்தியான தசைகள்,மற்றும் தசைகளை இயக்குகிற ராகுசக்தி. பூமி சந்திரன் சுற்று பாதையின் வெளிவெட்டு சக்தியான ராகு சக்தியை திருநாகேஸ்வரம்,திருகாளஹஸ்தி,சர்ப்ப கோவில்களில் ஸ்தாபித்து வைத்து இருக்கிறார்கள்.நம்முடைய ஆதிமூலமான ஸ்துல சூட்சும ஆரம்ப புள்ளியான ஈஸ்வர சக்தியை மையமாகவும் வைத்து இருப்பார்கள் அச்சக்தி நம் மூளையின் செயல்பாட்டை சமன்படுத்தி ஸ்திர படுத்தும். பின்னர் ராகு சக்தி தீர்மானித்து இருக்கும் பகுதிக்கு செல்லும்போது ராகு தன்மையான தசை செயல்பாட்டை தூண்டகூடிய சுரப்பிகளின் செயல் திறனை சமன் படுத்தும்.அச்செயல்பாடு அதிகமாக இருந்தால் சமன் செய்தோ, குறைவாக இருப்பின் அதிக படுத்தவோ செய்யும். கலங்கிய நீரில் விழுந்த பொருளை தேட முடியாது. நீரை தெளிய வைப்பது ஈஸ்வர சக்தி.தெளிந்த பின் பொருளை எடுப்பது போன்றது ராகு வழிபாடு.
துர்க்கை வழிபாடு:- துர்க்கை என்பது இயக்கம். துர்க்கையை ராகுவின் சந்திர கலை என்றும் கொள்ளலாம்.அல்லது ஆவோகாரண ராகு சக்தி.இந்த துர்க்கை சக்தி ராகு தன்மையின் சந்திர தன்மையாக இருப்பதால் இதன் இயக்கம் நல ஆற்றலாக மட்டுமே இருக்கும்.ஆன்மிக உட்பகுதியில் போய் கூறினால் குண்டலினியின் ஆவோகாரண இயக்கம். துர்கையை வழிபடும்போது நம்முள் இருக்கிற ராகு சக்தி கெட்ட சக்தியாக இருப்பின் அதை நற் சக்தியாக மாற்றுகிற தன்மை துர்க்கை என்று சொல்லுகிற தன்மைக்கு உண்டு.அதனால்தான் ராகுவிற்கு பரிகாரமாக துர்க்கையை சொல்கிறார்கள்.இராகு பிறப்பு ஜாதகத்தில் 1,2,4,5,8.12 இடங்களில் இருப்பவர்களுக்கான பொதுவான விசயங்களுக்கு மேற்கூறியவை பொருந்தும்.ராகுவின் கிரக செரிக்கையை அந்தந்த கிரகங்களை பற்றி எழுதும் பொது இணைத்து எழுதுகிறேன்.தொடர்ந்து 8 கிரகங்களுக்கும் எழுதுகிறேன் உங்களுடைய கருத்தை பொறுத்து. இன்னும் வரும்............அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment