Thursday, 30 October 2014

கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 3
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை மிக பெரிய தோஷமாக கொள்கிற செவ்வாய் தோஷ பரிகார வழிபாட்டை பற்றியது, செவ்வாய், இரத்தகாரகன் ஆகும்.செவ்வாய்க்கு முழு முதலாய் கூறுவது முருக பெருமானைத்தான்.அடுத்து சக்தி வழிபாடு,நவ கிரக ஸ்தலங்களில் வைதீஸ்வரன் கோவில்.
நம் மூலையில் இரத்த உற்பத்தி, அதன் வீரியம்,அதன்,இயக்கம் ஆகியவற்றிற்கு செவ்வாய் பொறுப்பு எடுக்கிறது,எலும்புகளில் உள்ள மஜ்ஜையிலிருந்து உற்பத்தி ஆகிற வெள்ளை அணுக்களின் தீவிரத்தை துல்லியமாக குறிகாட்டும் செவ்வாய். இரத்தம் நம் உடலில் பிராண சக்தியை சீராக நம் உடல் முழுவதும் கொண்டு சென்று உடலின் இயக்கத்தை சீராக வைத்து கொள்ளும்.என்பது நாம் அறிந்ததே.நம் உடம்பின் அனைத்து பிரிவுகளுக்கும் ,இயக்கங்களுக்கும் இரத்தமும் இரத்தம் கொண்டு செல்லும் பிராணனும் மூலம்.ஆகையால் செவ்வாய் அனைத்து இயக்கத்திற்கும் மூலமாக இருக்கும் அல்லவா.
முருக கடவுளின் இடமும் வளமும் இருக்கிற வள்ளி தெய்வானை என்கிற சக்திகள் நம் சுவாச அடிப்படையான சூரிய கலை,சந்திர கலையையை குறிக்கும்.நம் சுவாசம் இரண்டு மணிக்கொரு தடவை மாறும். வலது பக்கம்,ஓடுகிற சுவாசம்,மாறி இடது பக்கம் ஓடும்.சுவாசம் இரத்தத்தை இயக்குகிற மூலம்.பிராணன் இல்லையேல் எதுவும் இல்லை. இந்த இட வல சுவாச நிலை தான் வள்ளி தெய்வானை.முருகன் சுழிமுனை என்று சொல்கிற சூரிய சந்திர சக்திகளை சமன் படுத்தும் கட்டுபாடு மையம்.சுவாசம் சீராக இருக்கும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்கும் இது ஒரு சங்கிலி தொடர் போல செயல்படும் சுவாசம் கெட்டால் இரத்தம் கெடும்.இரத்தம் கெட்டால் சுவாசம் கெடும். சுழிமுனை சீராக செயல்பட இடது சுவாசமும்,வலது சுவாசமும் சமன்பாட்டு நம் உடம்பிற்கு ஒழுங்கான இயக்கத்தை கொடுக்கும். சுழி முனைக்கு ஆன்மீகத்தில் பெரிய இடமும்,யோகா விசயங்களின் வேராகவும் செயல்படும்.அதை பற்றி பின்னர் எழுதுகிறேன்.மேலும் மயில் என்பது மாயை வண்ணங்கள் கலந்து அலங்காரமாய் கவர்ந்து இழுக்கிற தன்மை.நம் வாழ்க்கையில் நிரந்தரம் என்று நினைத்து இருக்கிற அனைத்து விசயங்களும் மாயைதான்.
அதை குறிப்பதுதான் மயில். மயில் மிதித்து இருக்கும் பாம்பு நம் குண்டலினி. மாயை நம் ஆதார சக்தியான குண்டலினியை உணர முடியாதவாறு அமுக்கி வைத்திருக்கும் சூட்சுமம் தான் மயில் காலால் பாம்பை மிதித்துஇருப்பது.
இவை அனைத்தும் சீராக கிடைப்பின், வேல் குண்டலினியின் மேல் வழியான நேர் தண்டு அதன் மேல் சக்தி ஏறி ஆக்ஞ்சா தொடும் போது
நம்முள் இருக்கிற அரக்க தன்மை(சூரன்) அளித்து கடவுள் தன்மையான சகஸ்ராவுக்கு நம்மை அழைத்து செல்லும்.இத்தன்மை அனைத்தும் நிறைவேற நாம் பிறப்பு இறப்பை கடந்து ஒரு நிறை நிலையை அடைவோம்.ஆதலால்தான் முருகனை என்றும் இளமையாகவே சித்தரித்திருப்பார்கள். இயக்கத்தின் வெளிப்பாடாக இருப்பதால்தான் நம் உடலில் மூல இயக்கமான இரத்தத்திற்கு முருகனை வழிபட சொன்னார்கள். செவ்வாய் சக்தி நம்முள் அதிகமாக இருப்பின் முருகனும்,குறைந்து இருப்பின் சக்தி வழிபாடும் தேவை.
சக்தி என்பது நம்முள் இருக்கும் இயக்கமும்,தூண்டலும். இரத்த இயக்கம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்தத்தில் நெகடிவ் தன்மை உடையவர்கள் சக்தி வழிபாடு செய்ய வேண்டும். சக்தி வடிவான அம்மன் கோவிலில் பயன்படுத்தும் வேப்பிலை, கிருமிகளை கொன்று நம்முள் நோய் தன்மையையும்,எதிர்மறை தன்மையையும் விரட்டி நம்மை காக்கும்.எலுமிச்சை சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி, சிட்ரிக் ஜீரண சக்தியை தூண்டி உணவுகளை ஜீரணித்து இரத்த ஓட்டத்திற்கு தேவையான சக்தியை கொடுக்கும்.வைட்டமின் டி உடம்பிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மஞ்சள்,சுண்ணாம்பு கலந்த குங்குமம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். செவ்வாய் நீசம் பெற்றவர்கள் சக்தி வழிபாடு செய்வது அவசியம்.
நவ கிரக ஸ்தலங்களில் வைதீஸ்வரன் கோவில் என்னும் ஊரில் செவ்வாய் சக்தியை நிர்மாணம் செய்து வைத்து இருக்கிறார்கள். அங்கும் சென்று வர அச்சக்தியும் செவ்வாய்(இரத்த) குறைபாடுகளை சமன் செய்யும்.
நான் எப்பொழுதுமே கூறுவதுதான், கோவிலுக்கு சென்று அங்கு இருக்கிற சக்திகளை உணருங்கள் வெறுமே வணங்கி வருதலில் ஒரு பலனும் இல்லை.
செவ்வாயில் ராகு இணைந்தால் மிக பெரிய வீரிய தன்மையை கொடுத்து செவ்வாயின் தன்மையை பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும்.
செவ்வாய் கேது இணைவு இரத்த சம்பத்தப்பட்ட வியாதிகளை கொடுக்கும்.
இதை பற்றி எழுதினால் ஒரு புத்தகம் எழுத வேண்டிய அளவுக்கு எழுத வேண்டும் என்பதால் முக்கிய விவரங்களை சுருக்கி கொடுத்து இருக்கிறேன் .மேற்கூறிய வழிபாடுகளை கடைபிடித்து நிவர்த்தி பெறுங்கள் வளமுடன் வாழுங்கள். இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment