Tuesday, 28 October 2014

சனி (மறுபதிப்பு)
என் அடுத்த கிரகங்களின் பரிகார வழிபாடு சனியை பற்றியதால் இந்த பதிப்பை பதிகிறேன்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை சனியை பற்றியது.இந்த தலைப்பை பார்த்ததும் என் கட்டுரைகளை ஜோதிட கட்டுரைதானே என்று தள்ளியவர்கள் கூட உடனே கூர்ந்து படிபீர்களே!! அந்த அளவுக்கு சனி பற்றிய பயம் நம்முள் இருக்கிறது.
சனி என்னவோ நமக்கு நேர் அல்லது மறைவாக இருந்து கொண்டு கங்கணம் கட்டி கொண்டு நமக்கு கெடுதல் செய்வதாக நினைத்து கொள்கிறோம். நமக்கு முன்னோர்கள் கூறியதும்,பல வழக்கு பழமொழிகளும் நம்மை அப்படி நினைக்க சொல்லி பயமுறுத்துகின்றன.ஆனால் சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
CSF : CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.
NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி தீர்மானிகிறது.இப்பொழுது புரிகிறதா சனி பாதித்தால் எங்கு எங்கெல்லாம் பிரச்சனை ஏற்படும் என்று. இத்தனை PORTFOLIO வை சனி வைத்து இருப்பதால் தான் பயம். மற்ற கிரகங்களுக்கு 1,2 PORTFOLIO தான் உண்டு. இத்தனைக்கும் சூரிய வட்ட பாதையில் 6 வதாக தொலை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் கதிர்வீச்சு பூமியை பூமியில் இருக்கிற உயிர்களில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது பார்த்தீர்களா. நான் ஒரு முறை நாசா WEB SITE ல் படித்தது, பூமியில் இருந்து ராக்கெட்டில் பயணித்தால் 700 கி,மீ, வேகத்தில் 41/2 ஆண்டுகள் ஆகுமாம் சனியை சென்றடைய.
ஜோதிடத்தில் சனியின் கோட்சார பயணம் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் ஆகும்.ராசி மண்டலத்தில் ஒரு ராசியின் ஒரு கிரகத்தின் அதிக பயணம் சனிக்கு மட்டுமே.
சரி இதே சனி ஒருவருள் பலமாக இருந்தால் மேற்கூறிய அனைத்து இடங்களும் மிக வலுவாகத் தானே இருக்கும். மூளையின் வலிமை,தசை வலிமை, நரம்புகளின் வலிமை ,புரிந்து கொள்ளுதல்,உள்வாங்குதல்,செயல் படுத்துதல் அனைத்து விசயங்களிலும் பலமானவராக இருப்பார்.அம்மனிதனின் செயல் பாடுகளும் மிக தீர்கமாக இருக்கும். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி சனி. இவர்கள் அதிக ஆளுமை ராசியான சிம்ம ராசிகாரர்களை கூட சில சமயம் வெல்ல வல்லவர்கள்.
சனி ஊழியகாரகதுவதுக்கு குறிப்பிட்டு உள்ளார்கள்.ஏனென்றால் மேற்கூறிய வற்றை ஒப்பிட்டு பாருங்கள் புரியும். மகரம்,கும்பம், சனி உச்சம் பெறுகிற துலாம் ராசிகரர்கள் ஆட்களை வைத்து வேலை வாங்குவதில் வல்லவர்கள், பெரிய INDUSTRIALISTஆக . இந்த ராசிகரர்களாக இருப்பதும் சனியின் மகிமைதான்.சனி நீசம் பெறுகிற மேஷ ராசி காரர்கள் அமைதியாக சோம்பலாக வலிமை குறைந்தவர்களாக இருபதும் சனியின் மகிமைதான்.(ராசி கட்டத்தில் மற்ற கிரகங்களின் உச்ச நீச ஆட்சி இவைகளால் சிலருக்கு விலக்கும் இருக்கும்).
சனி நம் ராசி மண்டலத்தை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும் இந்த 30 ஆண்டுகளில் சனி 3,6,11, இடங்களில் மட்டும் நன்மை செய்வார், அப்படியானால் 30 ஆண்டுகளில் 7 1/2 ஆண்டு காலம் மட்டும்தான் ஒருவனுக்கு கோட்சார ரீதியாக நலம் பயப்பார்.22 1/2 ஆண்டுகள் சுகசனி,அர்தாஷ்ட, அஷ்டம,7 1/2 ஆண்டு சனி என கெடு பலன்களை அளிப்பார் என ஜோதிடம் கூறுகிறது.
நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக கூறுகிறபடி நாம் பிறந்த FORMULA வையும் PROGRAM யையும் யாராலும் மாற்ற இயலாது. ஆதலால் அதை புரிந்து கொண்டு சனியை நண்பனாக்கி கொண்டு அவருடனே பயணித்தால் எக்காலத்தையும் பொற்காலம் ஆக்க முடியும்.
இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment