Tuesday, 28 October 2014

கர்மா ( பாகம் 1 ) (மறு பதிப்பு )
நண்பர்களுக்கு வணக்கம் எந்த கட்டுரை மனிதனின் மூலமாக சொல்லபடுகிற கர்மாவை பற்றியது, ஒரு மனிதனை பற்றிய நல்ல கேட்ட விஷயங்களை சொல்கிறபோது அவனவன் கர்மா என்ற வழக்கு சொல்லை அனைவரும் கேட்டு கொண்டிருக்கிறோம். கர்மா என்றால் என்ன என்று உரைப்பவரிடம் வினவினால், கர்மா அவரவர் முன்ஜென்ம பாவ,புண்ணியம் என்று கூறுவர். இதை பற்றிய நீண்ட நெடுநாளாய் என்மனதில் ஓடி கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை நெடு நாளாய் ஆழ்ந்து படித்து,ஆன்மீக பெரியவர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள்,ஆசான்கள் இவர்களிடம் கல்ந்தாராயிந்து கிடைத்த விஷயங்களை என்னுள் போட்டு தேடி பார்தததன் விளைவு இந்த கட்டுரை.
எண்ணங்கள் தான் ஒரு மனிதனை ஆட்கொள்கிறது வழி நடத்துகிறது என்பதை நாம் கேட்டும் உணர்ந்தும் இருக்கிறோம்.அந்த எண்ணங்கள் நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊற வேண்டுமென்றால் அவ்வெண்ணத்தின் ஆழமும் தீவிரமும் இருக்க வேண்டும்.அவ்வாறு தீவிரமாக இருக்கிற எண்ணமே வாழ்க்கையாய் மாறி போகிறது..சரி அடுத்து ஒரு உயிரை உருவாக்குகிற ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் செல்லில் ஊறிப்போன தீவிர எண்ணங்களை கொண்டு இருக்கும் அல்லவா? வெவ்வேறு எண்ணங்களை தன்னகத்தே கொண்ட சுக்கிலமும்,சுரோணிதமும் கலந்து அந்த கலவையில் இரண்டும் கலந்த அதாவது இரண்டு எண்ணங்களும் கலந்த ஒரு கலவை உயிரோட்டம் பெற்று கருவாக வளர்கிறது,ஆணின் குண நலன்களோடும் , பெண்ணின் குண நலன்களோடும் ( உருவம்,உடல் அமைப்பு,உறுப்புகளின்
அமைப்பு அனைத்தும் ) கலந்த கலவையில் உருவான கரு எப்படி உருவங்களை கொண்டிருக்கிறதோ அப்படியே அந்த ஆணின்,பெண்ணின் எண்ணங்களையும் கொண்டிருக்கிறது. அந்த கருவின் மூலாமாக கிடைத்த எண்ணங்கள் தான்,கரு வளர்ந்து உரு பெற்று மனிதனாக ஆகி அந்த மனிதனின் செயல்களாக வடிவு பெறுகிறது.கருவுக்குள் தோன்றிய எண்ணங்கள்தான் கர்மா அந்த எண்ணங்களின் செயல் வடிவம் பெறுவது கர்ம வினை என்கிறோம்.இந்த எண்ணங்கள் எவ்வாறு செயல் படும், இந்த எண்ணங்களின் வலிவு,திண்மை,செயல்படும் விதம் செயல் படுகிற வாழ்வியல் இடங்கள் போன்றவை அந்த கரு உருவாகும் போது இருக்கிற பிரபஞ்ச தன்மையின், கோள்களின் நிலை பொருத்து மனிதனுள் செயல்படுகிறது.இந்த செயல்பாட்டு கணக்குதான் அந்த கருவின் ஜாதக கட்டம்.... தொடரும் பாகம் -2 இல் . இன்னும் வரும் ....அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment