Thursday, 30 October 2014

கிரகங்களின் பரிகார வழிபாடு - 6
நண்பர்களுக்கு வணக்கம் ,
இந்த கட்டுரை சனியின் பரிகார வழிபாட்டு முறையை பற்றியது.சனியின் முக்கியத்துவம், மற்றும் சனியின் செயல்பாட்டை பற்றி இரண்டு தினம் முன்பே பதிவிட்டிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர். படிக்காதவர்களுக்காக சனியின் செயல்பாட்டை பற்றி ஒரு சிறு குறிப்பையும் கீழே தருகிறேன்.
சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
CSF : CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.
NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி தீர்மானிகிறது
இத்தனை விசயங்களை உள்ளடக்கிய சனியின் மாறுபட்ட தன்மையை, அதாவது சனி 1,2,4,5,7,8,12 இடங்களில் ஜனன காலத்தில் இருந்தால் அந்த அதிபதியம் ஆன 1.உடல்,2.குடும்பம்,4.சுகம்,5.பூர்வ புண்ணியம்,7,களத்திரம்,8.ஆயுள் பாவம்,12,அயன சயன போகத்தில் மாறுபட்ட செயல்பாட்டை தருவார்.
சனிக்கு பரிகாரமாக மூன்று முறைகளை பயன்படுத்தலாம். 1,உடல்பயிற்சி 2.தியானம்.3.கோவில் வழிபாடு.
1. உடல்பயிற்சி :- யோக பயிற்சியில் முக்கியமான உடல் பயிற்சியான சூரிய நமஸ்காரம்.இதனை முறையாக பயின்று தொடர்ந்து பயிற்சி செய்து வாருங்கள்.உடலில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் இந்த பயிற்சியால் ஊக்கம் பெற்று சீர் பெறும்.உடல் மந்த தன்மையும் புத்தியின் மந்த தன்மையும் மாறி பொலிவு பெறும்.குறிப்பாக நரம்பு மண்டலத்தின் மூலமான முதுகெலும்பு பலம் பெறவும் அதை சார்ந்த தசை பகுதிகள் பலம் பெறவும் இவற்றின் மூலம் இரத்த ஓட்டம் சீர்பெற்று மூளை சீராக இயங்கும்.
2. தியானம்:- செரிபுரோ புளுயிட் குறைபாட்டால் மந்தமாக அல்லது வீரியமாக இருக்கிற செயல்பாட்டை சமம் செய்ய தியானம் ஒரு சிறந்த முறை, ஒவ்வொரு தியானத்திலும் ஒவ்வொரு பயன் உண்டு.சனிக்கு, திறம்பட இயங்கவும்,சுறுசுறுப்பாக இயங்கவும் தேவையான துடிப்பும் மற்றும் விழிப்பு உணர்வுக்கும் பிரபஞ்ச ஒலியான அ.......உ ......ம் என்ற மந்திரத்தை ஒரு நாளை 15 - 20 நிமிடம் கண்முடி உச்சரியுங்கள 48 நாள் உச்சரிக்க பெரிய மாற்றத்தை நம்முள் கொண்டு வரும்.
3. கோவில் வழிபாடு:- துரிய நிலையான கால் பைரவரை வழிபடுதல் மந்த தன்மையை மாற்றி தீவிர செயல்பாடும், அதிதீவிர செயல்பாட்டில் ஒரு நிதானத்தையும் பெறலாம்.எல்லா வற்றின் மொத்த செயல்பாடான மூளையின் நிதானமான செயல்பாடு செரிபுரோ புளுயிட் செயலில் புனரமைப்பு செய்து சீர்பட இயக்கும்.இயக்கங்களின் செயல்களில் ஒரு தீர்க்கம் கிடைக்கும்.கோச்சாரத்தில் சனியின் சஞ்சாரம் ஒரு ராசியில் 21/2 ஆண்டு,12 ராசிக்கும் 30 ஆண்டு.இந்த 30 ஆண்டுகளில் ராசிக்கு 3.6.11.இந்த மூன்று இடங்களில் வரும்போது மட்டும் நன்மை பயப்பார்.மீதம் 23,1/2 ஆண்டுகள் 71/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்ட்ட சனி என்று கெடு பலன்களை அளிப்பார்.சனி ஒன்றும் நமக்கு எதிராக நின்று கொண்டு நமக்கு மட்டும் எப்பொழுதும் தீமை செய்கிறார் என்ற மனப்பாங்கு சனியின் தாக்கத்தில் இருப்பர்வர்களின் எண்ணம்.
நவகிரக ஸ்தலங்களில் சனியின் தீர்க்கத்தை திருநள்ளாறு ஸ்தலத்திலும், குச்சனூர் ஸ்தலத்திலும் தீர்மானம் செய்து வைத்து இருகின்றனர் நம் முன்னோர், அங்கும் சென்று ஒரு இரவு தங்கி சனியின் செயல்பாட்டை நமக்கு சாதகமாக்கி கொள்ளலாம். மேலும் சனி நமக்கு கிடைக்க கூடிய அனுபவங்களின் மூலமாக நம்மையே மாற்றி நம் திறனை மேம்படுத்துவார் என்பதுதான் உண்மை.சனியை போற்றுவோம்.வளம் பெறுவோம்.இன்னும் வரும்.........அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment