Thursday, 30 October 2014

கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 4
நண்பர்களுக்கு வணக்கம்
இந்த கட்டுரை கலகலப்பு,காதல்,சல்லாபம்,அலங்காரம்,போன்ற கல்யாண குணங்களின் தன்மையான் சுக்கிரனுடைய பரிகார வழிபாட்டை பற்றியது.கலகலப்பிற்கும்,காதலுக்கும் அதிபதியான சுக்கிரனுக்கு முதலாய் கூறுவது விஷ்ணு என்ற பெருமாளைத்தான் நவக்கிரக ஸ்தலங்களில் கும்பகோணம் கஞ்சனூர்.
நம் மூலையில் ஒரு பகுதியாக இயங்குகிற pinal gland என்ற சுரப்பிக்கு பொறுப்பு எடுக்கிறது சுக்கிரன். இந்த சுரப்பி மனதில் ஒரு கலகலப்பு தன்மையை உண்டாக்கும். மேலும் தன்னை அழகுபடுத்தி கொள்ளுதல்,பிறரை கவருகிற பேச்சு, நடை,உடை,பாவனை.எதையும் எதார்த்தமாக எதில் கொள்ளல்,காதல் உணர்வு,அதன் தொடர்ச்சியான காமம்,போன்ற உணர்வுகளை மனதில் தோற்று வித்து அதை செயல்படுத்துகிற தன்மையையும் நம் மூளைக்கு கட்டளையிடும்.
சுக்கிரன் ஜனன காலத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அந்த நபர் மேற்குறிய குணநலன்களுடன் இருப்பார்.சந்திரன்,புதன்,குரு போன்றவர்களின் சேர்க்கை இருப்பின் இத்தன்மை போற்றுதலாகவும்,செவ்வாய்,சனி,ராகு,கேது இருப்பின் மாறுபட்டும் இருக்கும்.உடலை இயக்கும் 7 சக்கரங்களில் சுவாதிஷ்டானத்திர்க்கும் அதன் செயல்பாட்டிற்கும் சுக்கிரனே செயல் வீரர்.
நம் உடலில் இயங்குகிற இரண்டு சக்திகளான சூரிய சந்திர கலைகளில் சூரிய சக்தியின் மூலம் குரு .சந்திர சக்தியின் மூலம் சுக்கிரன் .நம் முன்னோர்கள் இந்த இரு எதிர் சக்திகளையும் ஈஸ்வரன் விஷ்ணு சக்திகளாக வடித்து வழிபட்டு வந்தார்கள்.பின்னர் தோன்றிய மனிதர்களின் அகந்தையில் இச்சக்திகள் தனிதனி யாக கொண்டாடப்பட்டு, இரு வேறு மதங்களாக பிரிந்து சைவத்திற்கு ஈஸ்வரனும் வைணவத்திற்கு விஷ்ணுவாகவும் கொள்ளப்பட்டனர்.
பெருமாள் சுக்கிர சக்தியாக இருப்பதால் அச்சக்தியை நிலை நிறுத்தி இருக்கிற கோவில்களில் கல்யாண குணங்களை தூண்டுகிற வாசனை பொருள்களான சந்தனம்,பச்சை கற்பூரம்,சம்பங்கி போன்றவற்றையும் கவர்ச்சி பொருள்களான பட்டு,பீதாம்பரம்,தங்கம்,வைரம்,போன்றவற்றையும் பிரசாதமாக பித்த பொருள்களான புளி,வெல்லம் போன்றவற்றையும் மூலிகைகளில் இரத்தத்தை சுத்தம் செய்து உடலை சீராக இயக்குகிற கிருமி கொல்லியான துளசியையும் பயன்படுத்தி அங்கு வருகிற மக்களுக்கு சுக்கிர தன்மையை வழங்கினார்கள். வாழ்வியலுக்கு உரித்தான சக்தி என்பதால் தான் காத்தல் என்ற பதவியையும் வழங்கி இருக்கிறார்கள்.
பெருமாள் கையில் வைத்திருக்கும் சங்கு பிரபஞ்ச ஒலியான ஓங்காரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும்.சக்கரம் பிரபஞ்ச இயக்கத்தையும்,நான்கு திசைகளின் இருப்பையும் குறிக்கும்.ஆணின் இரு வேறு சக்திகளான ஈஸ்வர விஷ்ணு சக்தியும் இத்தன்மைகளை பிரிக்கிற பெண் சக்தியும்தான் இரண்டு வெள்ளை கோடுகளுக்குள் சிகப்பு கோடுகளான நாமம்
சுக்கிர தன்மை மாறு பட்டு இருப்பவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.இந்தன்மை தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் தீவிர சக்தியாக நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.திருமண தாமதம்,கணவன் மனைவி உறவில் சிக்கல் உள்ளவர்கள் இங்கு சென்று ஓர் இரவு தங்கி வாருங்கள். பலன் கிட்டும்,
கும்பகோணத்தில் கஞ்சனூர் என்ற இடத்திலும் சுக்கிரணனின் சக்தியை நிலை நிறுத்தி இருக்கிறார்கள், அங்கு சென்று அச்சக்தியையும் உணருங்கள் உள்வாங்கி கொள்ளுங்கள் வளம் பெறுங்கள். இன்னும் வரும் ........... அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment