Tuesday, 28 October 2014

சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம்
4 நாட்களுக்கு முன்னர் ஈரோடு பவானி சங்கமேஷ்வர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு களிமண், கடலைமாவு,மண் போன்ற வற்றில் பாம்பு உரவம் செய்து அதன்முன் ஒருவரை அமர்த்தி மந்திரங்கள் ஜெபித்து கொண்டிருந்தனர் விசாரித்ததில் சர்ப்ப தோஷ நிவர்த்திர்க்கு என்றனர்.அதற்க்கு 1,000/- முதல் 25,000 வரை வசூல் வேறு.மனசுக்குள் ஏதோ செய்தது.மக்களின் பயத்தை, ஜோதிடத்தின் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாரிப்பதர்க்கு இவ்வாறா செய்வார்கள்? இவ்வாறு செய்கிற பரிகாரங்களில் மாற்றம் கிடைகிறதா? தோஷம் நீங்கி விடுமா என்ன?
சர்ப்ப தோஷம் :- காலசர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், புத்திர தோஷம் போன்ற வற்றிற்கு சொல்கிறார்கள்,நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் ஜோதிடர்கள் பொது விதிகளாக சொல்லுகிற ராகு, கேது இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால் கால சர்ப்ப தோஷம்,1,2,7,8, இல் ராகு கேது இருந்தால் களத்திர தோஷம், ஆணுக்கு 5ம் பெண்ணுக்கு 9ம் புத்திர தோஷம் என கொள்ளலாம். மேலும் சுக்கிரன்,செவ்வாய்,சனி உடன் ராகு கேது சேரும் பொது அக்கிரகங்கள் தன்மை, அக்கிரகங்கள் எடுக்கும் ஸ்தானம் இருக்கும் இடம்,இவற்றில் மாறுபட்ட கெடு பலன்கள் என்பதும் ஜோதிட விதி.
மேற்கூறியவைகள் ஒருஜதகத்தில் இருப்பின் அவை இவர்கள் செய்கிற பாம்பு வாழைமரத்திற்கு தாலி கட்டி வெட்டுவது போன்றவைகளால் எவ்வாறு மாறும். இந்த ராகு கேது சர்ப்பங்கள் நம் தலைக்கு மேலோ,முன்னோ,பின்னோ நின்று கொண்டு கங்கணம் கட்டி கொண்டு நமக்கு கெடுதல் செய்வது போலவும் மந்திரிச்சு வேப்பிலை அடிச்சி தாயத்து கட்டினால் பேய் ஓடி விடும் என்ற நம்பிக்கை பேரில் இந்த பரிகாரங்கள் செய்தால் சர்ப்பங்கள் ஓடி தங்கள் புற்றினில் ஒளிந்து கொள்ளும் என்ற கணக்கில் அல்லவா இவர்கள் செய்கிறார்கள்,மக்களின் மூட நம்பிக்கையா? அல்லது ஜோதிடர்களின் தவறான வழிகாட்டுதலா?எனக்கு புரிய வில்லை. ஒரு பெரிய மன வருததில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ராகு கேது என்பது பூமி சூரியனை சுற்றுகிற சுற்றுபாதையும்,சந்திரன் பூமியை சுற்றுகிற சுற்று பாதையும் வெட்டு படுகிற இடம். என்பதும் பூமிக்கு வெளி வெட்டு ராகுவாகவும், உள்வெட்டு கேதுவாகவும் இருப்பதை அனைவரும் ஒப்புகொள்ளும்போது, எந்த பரிகாரங்கள் எங்கிருந்து இவற்றை கட்டுபடுத்தும்? இரு வேறு காந்த சக்திகள் சுற்று ஓட்டத்தின் சக்திக்கு இணைகிற ஒரு சக்திவைந்த மையம்தான் இவ்விரு முனைகளும், மேலும் ஒரு உயிரின் ஜனன காலத்தில் இவ்விரு வெட்டு சக்தியின் சக்தி எவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கிறதோ அதை பொறுத்தே அவ்வுயிரின் தயாரிப்பு நடைபெறும்.அவ்வுயிர் வளர்ந்து பெரியவர்களாயினும் அச்சக்தி அவர்களுள் தானே அய்யா இருக்கும் வெளியில் போய் விடுமா என்ன. எப்பொருளால் ஒரு பொருள் செய்ய பட்டதோ அப்பொருள் தன்மையை தன்பால் தானே கொண்டிருக்கும்.
ராகு கேதுக்களை பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன் அவற்றின் செயல்பாடு,நம் உடலில் ஏற்படுத்துகிற விளைவு பற்றி என் டைம் லைனில் பாருங்கள். சுருங்க கூறின் கேது புரிதல்,ராகு தீவிர செயல் பாடு, எனலாம். ராகு கேது ஒரு மாறுபட்ட மிக பெரிய சக்தி மையம்.
சரி,சுக்கிரன்,சனி,செவ்வாய் இந்த ராஜ கிரகங்களுடன் சர்ப்பங்கள் சேரும்போது அக்கிரக்காகங்களின் ஸ்தானமும் அமைப்பும் எவ்வாறு நம் உடலில் செயல்படுகிறதோ அதன் செயல் வேகமும் புரிதலும் மாருபடல்தான் இக்கிரகங்கள் ராகு கேதுவுடன் சேரும் பொது நடக்கும். நான் உறுதியிட்டு கூறுகிற விஷயம் நம் உற்பத்தி பார்மட்டை மாற்றவோ அழிக்கவோ யாராலும் முடியாது. ஆனால் அதன் செயல்பாட்டை,அதற்குண்டான சக்தி தீர்மானத்திற்கும் ஆலயத்திலோ அல்லது காலத்தை வென்ற,பஞ்சபூதங்களை கடந்த சித்தர்கள் ஜீவ சமாதிகளிலோ சர்ப்ப செயல்பாட்டை மாற்றுகிற அல்லது சமன் படுத்துகிற சக்திகளை பெறலாம்,இதனால் ராகு கேது செயல்பாடு சமன்பட்டு அதன் தீவிரம் நம் உடலில் குறையும்.
மக்களிடத்தில் ஜோதிடத்தின் அறிவியல் உண்மைகளை கொண்டு செல்லும் நோக்கத்திலும்,அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு வாழ்க்கையை திறம்பட வாழ வேண்டும் என்ற பிராத்தனையுடந்தான் குரு துணையோடு எழுதி வருகிறேன். நன்றி ...... இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment