Thursday, 30 October 2014

கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 2
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை கேதுவின் பரிகார தன்மையை பற்றியது.கேதுவுக்கு பரிகாரமாக விநாயகர் வழிபாடு,சர்ப்ப கோவில்கள்,நவ கிரக ஸ்தலங்களில் கீழ் பெரும் பள்ளம் போன்றவற்றை கூறுவார்கள்.
கேது நம் மூளையின் 9 இயக்கத்தில் ஒரு பாகமான ,புரிந்து கொள்ளல்,நினைவாற்றல்,சூழ்நிலைக்கு தகுந் து உடன் செயல் படல்,(presence of mind ),உள்ளிருக்கும் விசயங்களை தெளிவுடன் வெளி கொணருவது,ஆன்மீக ஈடுபாடு,பிறப்பின் மூல பூமியான தாய் வழி பாதை ( PART OF DNA ), மேலும் தன மூலம் அறிதல்,போன்ற வற்றிற்கு பொறுப்பு எடுக்கிறது. மேற்கூறிய காரகங்களின் பொறுப்புகளால் தான் கேதுவுக்கு ஞான காரகன் என்று பெயர் போலும். கேது 7 சக்கரங்களில். மூலாதாரம், நம்முள் இருக்கும் சர்ப்ப சக்தியின் ஆரம்ப முனை.
கேது பிறப்பு ஜாதகத்தில் வலுத்து இருந்தால் மேற்கூறிய விசயங்களில் ஆழமும்,தெளிவும் இருக்கும்.கேது தன்மை கெட்டிருந்தால் மேற்கூறிய எதிர்மறை தன்மை தீவிரமாக இருக்கும்,புத்தி பிறழ்தல் பித்துக்குளித்தனம்,உடல் ஊனம்,ஞானத்திற்கு எதிரான கீழ் தரமான பழக்க வழக்கங்கள் போன்றவை இருக்கும்.
மூளையின் சீரான செயல்பாட்டிற்கு இரண்டு விசயம் மிக முக்கியம். 1.பிராண வாயு ஆன oxigen (சுவாசம்),2. இரத்த ஓட்டம் (ஜீரணத்தின் இறுதி நிலை) இவை இரண்டும் சரியாக இருக்கும்படச்சத்தில் மூளையின் செயல் பாடு திறம் மிக்கதாக இருக்கும்.ஆரியர்களின் சூத்திரமே இதுதான், சந்தியா வந்தனம்,மந்திர உச்சாடனை, மேலும் சீரான எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு பழக்க வழக்கங்கள், மேற்கூறிய இவை இரண்டும் தான் அவர்களை தெய்வீக விசயங்களில் பாண்டித்தியம் ஆக இருக்க வைத்தது.கேதுவின் தன்மை நம்மை கடவுளிடம் கொண்டு செல்லும்.
சுவாசம் எந்த அளவுக்கு உள் செல்கிறதோ அந்த அளவுக்கு நம் ரத்த ஓட்டம் அதிகரித்து மூலயில் உள்ள செல்களை தூண்டி செல்களை பலபடுத்தி, அதன் செயல்பாட்டை நலமாக வைத்து கொள்ளும்.2) அதேபோல் ஜீரண உறுப்புகள் நலமாக செயல் பட உணவுகளின் கழிவுகள் வெளியேற்றப்பட்டு இரத்தத்திற்கு தேவையான சக்தியை பெற வழி செய்யும் கழிவுகள் சேர நோய் பெருகும் என்பது சித்தர்களி ன் பொதுவான வாக்கு மூளைக்கு தேவையான சீரான பிராண சக்தி இரத்த ஓட்டத்தையும், இரத்ததிற்கு அச்சாணியான குளுகோசையும் ஒரு சேர அளித்து மூளையை திறம்பட இயக்கும்.
சுவாசம் ஜீரணம் இரண்டையும் ஒரு சேர குறிக்கிற தன்மை விநாயகருக்கு உண்டு.அதிக அளவு எடுக்க வேண்டும் என்பதை உணர்த்த தான் தும்பிக்கை போன்ற அமைப்பு, உணவுகளையும் ஜீரணத்தையும், குறிக்க தான் தொந்தி வயிறும் உலகின் கிழ்த்தரமான விசயங்களை ( எலி) காலுக்கு கீழ் வைத்தும் மூளைனுடைய செயல் திறமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான் பிரபஞ்ச படைப்பின் பெரிய தலையான யானை தலையை வைத்தும் கூறியுள்ளனர்.
விநாயகர் கோவிலில் உபயோகிக்கும் அருகம்புல் வயிற்றை சுத்தம் செய்து ஜீரண சக்தியில் இருக்கும் குறைபாட்டை நீக்கியும்,ஜீரண உறுப்புகளை தீவிரமாக செயல்பட வைக்கும்.எருக்கம் பூ வாசனையும் சுவாசம் ஜீரண விசயத்தையும் தூண்டும்.சுவாசமும் ஜீரணமும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத விசயமாக இருப்பதால்தான் மக்கள் இவற்றை அத்தியாவசியமாக பெறவேண்டும் என்றுதான் மக்கள் வாழுகின்ற இடங்களில் விநயாகரை நிர்மாணித்து வழிபட வழி செய்தனர்.
சூரிய சந்திர பாதையில் உள்வெட்டு தன்மை கேது இச்சக்தியின் தீவிரத்தை மூளையின் மொத்த செயல்பாடான ஈஸ்வர சக்தியை மையமாக்கி கீழ்பெரும்பள்ளம் என்னும் ஊரில் நிறுத்தி வைத்து வைத்திருகிறார்கள் அங்கு சென்று ஓர் இரவு தங்க நம்முள் மாறுபட்டு இருக்கும் கேது தன்மை சமன் படும்.தொடர்ச்சியான விநாயகர் வழிபாடும் கேது தன்மையை மேம்படுத்தும்.நான் வழிபாடு என்று எழுதுவதால் கோவிலுக்கு செண்டு அர்ச்சனை செய்து பூ வாங்கி சட்டை பையில் வைத்து கொள்ள அல்ல.அக்கோவிலில் இருக்கும் சக்தியை நம்முள் உணர்வது அல்லது கொண்டு செல்வது. அதலால் விநாயகர் கோவிலுக்கு சென்று குறைந்தது 1/2 மணி நேரமாவது அமர்ந்து வாருங்கள் அச்சக்தியை உணருங்கள். கேது தன்மையை உணர்ந்து உங்களுக்குள் உங்களை தேடுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள் . இன்னும் வரும் ........ அஸ்ட்ரோ பாபு

1 comment: