பாகம் 2
இந்த கர்மாவின் துவக்கம் மூளை பகுதி,இது சுசும நாடி என்று சொல்கிற முதுகு தண்டின் (சனி)வழியாக தன் இயக்கத்தை செய்து
கொண்டிருக்கிறது (என் சனியின் கட்டுரை படிக்கவும் இதனால்தான் சனியை கர்மக்காரகன் என்று கூறினாரோ ). இந்த சுசும நாடி 7 பகுதியாக செயல் படுகிறது இதன் சுழிமுனை முதுகு தண்டின் கீழ் பகுதியில் அடங்கி இருக்கிறது,இந்த கர்மா சுசும நாடியில் 7 படிகளில் அமர்ந்து செயல் படுகிறது.அதுதான் 7 சக்கரங்கள் 1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம் 3,மணிபூரகம் 4. அனாகதம் 5.விசுக்தி 6.ஆங்ஞா 7.சகஸ்ரா.இந்த 7 நிலைகளின் தன்மையும் 7 கிரகங்களால் ஆதிக்கம் செய்ய படுகிறது.உதாரணத்திற்கு சுவாதிஷ்டானம் ஆளுவது சுக்கிரன் என்பது அந்த சக்கரத்தின் தன்மைகளை பார்த்தாலே தெரியும்.சுக்கிர தன்மைகள் அந்த கருவுக்குள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த இடம் தீர்மானம் செய்கிறது.சுக்கிரன் வலுவிழந்து இருந்தால் (தோஷம்) மந்தமாகவும்,வலுவோடு இருந்தால் (யோகம்) தீவிரமாகவும் சுவாதிஷ்டானம் செயல் படும்.(7 சக்கரங்களின் தன்மையும் கிரக நிலையை பற்றி பின்னேர் எழுதுகிறேன்) இந்த கர்மா ஒவ்வொரு கணமும் நம்முள் இயங்கி கொண்டே இருக்கிறது.சரி இந்த கர்மாவில் இருந்து தப்பிகவோ அல்லது விடுபடவோ முடியாதா என்ற நம் முன்னோர்களின் ஆராய்ச்சியில் பிறந்ததுதான் யோக கலை யோக கலையின் ஒரு பகுதி தியானம். எண்ணங்களற்ற நிலை, சூன்யா, 1 மணி நேரம் சூனியாவில் இருந்தால் எண்ணங்களற்ற நிலை ஒரு ஷணம் கிடைத்தால் பெரும் விஷயம். அந்த சூனிய அளவை பெருக்கி கொண்டே சென்றால் பயிற்சியின் மூலமாக கர்மா இல்ல நிலை ஏற்படும் இதற்கு நம் மூச்சுயின் இயக்கத்தை சீர்படுத்தி எண்ணங்களை ஒரு நிலைக்கு கொண்டு வந்து தியானத்திற்கு மனதை தயார் செய்வது பிரணாயாமம். இவைகள் மூலம் மனதை நாம் சொல்லும்விதமாக கொண்டு வந்து கர்மாவை கரைத்தல் இது போன்று கர்மாவை இல்லாமல் செய்ய நம் முன்னோர்கள் கையாண்ட கலைகள் ஏராளம் நாளடைவில் இவை எல்லாம் இன்று வியாபாரமாய் போனது.ஒரு துர்பாக்கியம். இந்த கலைகள் மூலமாக கர்மா இல்லாத நிலைக்கு போகிறபோது தான் முக்தி. இந்த கர்மா பயணிக்கிற தோணிதான் சுக்கிலமும் சுரோணிதமும் . ஞானிகள் கர்மாக்கள் வேறு கரு எடுக்க கூடாதென சுக்கிலத்தை கட்டி இருக்கிற உடம்பிலேயே கர்மாவை கரைத்து யோக கலையின் மூலமாக கொன்றார்கள்.நண்பர்களே மிக பெரிய விஷயத்தை கையிலெடுத்து அதில் இருக்கிற முக்கிய கருத்துக்களை முடிந்த வரையில் சுருக்கி கொடுத்து இருக்கிறேன். நான் கூறியுள்ள விஷயங்கள் ஒவ்வுன்றும் ஒரு புத்தகம் எழுதுகிற அளவு விஷயம் ஒவ்வொரு விஷயத்தையும் மேலோட்டமாய் பாராமல் ஆழ்ந்து பாருங்கள் நம் மூலம் என்னவென்று புரிபடும்.
இன்னும் வரும்....... அஸ்ட்ரோ பாபு....

No comments:
Post a Comment