Thursday, 30 October 2014

எந்த கோவிலுக்கு செல்வது.

நண்பர்களுக்கு வணக்கம், என் நண்பர்கள் சனி கிழமை தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.முதலில் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அப்படியே பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து அனுமனுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வருவர்.இது தவறான வழிபாட்டு முறை ஆகும்.எப்படி என்று பார்ப்போம்.

ஈஸ்வரன் கோவில் என்பது குரு(JUIPER) சக்தியை தீர்மானம் செய்து ஒரு ஸ்தூபி போல கற்ப கிரகத்தில் நிறுத்தி வைத்து இருப்பார்கள்,லிங்கத்தின் கீழ் இருக்கும் செப்பு தகட்டிர்க்கும் மேல் இருக்கிற கோபுரத்தின் ஏரியல் ஆன கலசத்திற்க்கும் ஒரு WIRELESS CONNECTION இருக்கும் இந்த சக்தி நம்முள் இறங்கி மூளையின் ஒட்டு மொத்த CONTROL ரூமையும் சமன் படுத்தும் ஏன் என்றால் குருவின் கதிர்கள் பூமியில் மனிதனின் மூளையின் ஒட்டு மொத்த இயக்கத்தின் தூண்டு கோளாகும். ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் போது மூளையின் ஒட்டு மொத்த சக்தியும் அமைதி பெரும்.ஆன்மீக முறையில் சொல்ல வேண்டும் என்றால் ஈஸ்வர சக்தி முக்தி ஆகும்.ஈஸ்வர கோவிலில் பயன்படுத்த படும் வில்வம் விபுதி உத்ரட்சம் போன்றவை அமைதியை நம்முள் தக்க வைப்பவை.
ஆனால் பெருமாள் கோவில் இதற்கு நேர் எதிரான சம்சார சக்தி அதாவது சுக்கிரன் சக்தி ஆகும். கல்யாண குணங்களாகிய குடும்பம்,கலகலப்பு, சந்தோஷம் சம்சாரம்,இவற்றின் தூண்டுதல் சம்சார உலகிலேயே கடவுளுடன் வாழ்வது., அங்கு பயன் படுத்தப்படும் பச்சை கற்பூரம், சந்தனம்,சம்பங்கி போன்ற வாசனை பொருள்கள் நமக்குள் சம்சார தனத்தை தூண்டும் இரண்டும் இரு வேறு சக்திகள். இரண்டு கோவிலுக்கும் செல்வது என்பது BREAK பிடித்து கொண்டே ACCELERATOR கொடுப்பது.
அனுமன் சக்தி நம்முள் இருக்கிற குண்டலினி நம்முள் இருக்கிற சக்தி பிரவாகம் ஆதலால்தான் அவரை பாடி பில்டர் போல சித்தரித்து இருக்கிறார்கள் பெருமாள் சக்தியும் அனுமன் சக்தியும் சம்சார வாழ்விற்கு அவசியம் ஆதலால்தான் பெருமாள் கோவிலில் அனுமனை தனி கோவிலில் வைத்து இருப்பார்கள்.
ஆதலால் எதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள் அந்த சக்தியை மட்டும் உணருங்கள் பலன் பெறுங்கள்.
இன்னும் வரும் ............. அஸ்ட்ரோ பாபு.

3 comments:

  1. சார் மிக்க நன்றி . சார் சில கோவில்களில் சிவன் விஷ்ணு இருவரும் இருக்கிறார்களே . அப்படி குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருப்பதற்கு காரணம் என்ன ?

    ReplyDelete
  2. sir,

    சிவன் - குரு
    விஷ்ணு - சுக்கிரன்
    பிரம்மா - எந்த கிரகத்தை குறிக்கிறார் ?

    ReplyDelete
  3. சார் , சில கோவில்களை ஒரு இரவு தங்க சொல்கிறீர்கள் . எ.கா :- திங்களூர் - சந்திர சக்தி பெற ... இரவு கண் விழித்து இருக்க வேண்டுமா (அ) இரவு கோவில் உறங்கலாமா ?

    திங்கள் கிழமைகளில் இரவு முழுவதும் கோவிலில் தங்க அனுமதிப்பார்களா ?

    ReplyDelete