Tuesday, 28 October 2014

பாகம் 1
கேந்திரம்
பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதும் அந்த நீள் வட்ட பாதையில் 12 வளைவுகள் இருப்பதையும் ஒவ்வொரு வளைவும் 30 டிகிரியில் வளைகின்றன என்றும் மொத்தம் 360 டிகிரி என்பதையும் ராசி மண்டல கட்டுரையில் எழுதி இருந்தேன். இந்த 360 டிகிரியில் இயங்குகிற 9 கிரகங்களின் சுற்று பாதையில் இயங்குகிற சக்தி மாற்றங்களை அதாவது சூரிய பாதையின் சுற்று மையம், இதன் விளைவால் ஏற்படுகிற காந்த சக்தி இவை இரண்டும் சேருகிற மின் சக்தி, சூரிய பாதையில் சுற்றுகிற ஓட்டத்தின் விளக்கு சக்தி இவை யாவும் ஒவ்வொரு திசையில் எவ்வாறு செயல் படுகிறது அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை ஒவ்வொரு திசைக்கும் அந்த திசையின் ஆரம்ப புள்ளியை கணக்கில் கொண்டு 4 புள்ளிகளாக குறிப்பிட்டு பார்த்தால் ஒரு புள்ளிக்கு 90 டிகிரி யில் பிரிகிற மூன்று வளைவுகளின் சக்தி ஓட்டத்தை பிரித்து ஒரு மையமாக கொண்டு 12 ராசிக்கும் 4 சக்தி மையங்களாக பிரித்து துல்லியமாக சக்தி ஓட்டத்தை கணக்கிட்டார்கள். இந்த நீள் வட்ட பாதையில் இருக்கிற 4 புள்ளிகளையும் இணைத்தால் ஒரு சதுர வடிவம் பெரும்.
ஆரம்ப புள்ளி 0 டிகிரியில் தொடங்கினால் முதல் 90 டிகிரி அமைகிற ராசிக்குள் இருக்கிற சக்தி ஓட்டமும் அங்கு இருக்கிற கிரகம் .கிரகத்தின் குணா நலன்கள் இவற்றின் கலவை மேலும் மேற்கூறிய சக்தி கலவை அனைத்தும் எவ்வாறு செயல் படுகிறது எனபதை தீர்மானிக்கிற மையம் தான் கேந்திரம்.360 டிகிரியை 90 டிகிரி யாக 4 பிரிவுகளாக பிரிக்கிம்போது ராசி கட்டத்தில் அந்த புள்ளி 1,4,7,10 இடங்களில் அமைவதால் இந்த இடங்களை கேந்திர மையங்களாக சொன்னார்கள்.ஒவ்வொரு புள்ளியிளுர்ந்து அடுத்த புள்ளிக்கு தன சக்தி பயணத்தை மாற்றுகிறபோது ஒரு நிலை மாற்றம் அந்த திசை திருப்பத்தில் ஏற்படுவதால் அந்த சக்தி மையங்களுக்கும் அங்கு ஓடுகிற கிரகங்களுக்கும் மிக முக்கிய மரியாதை கொடுக்க படுகிறது.ஜோதிடத்தில் சரம்,ஸ்திரம்,உபயம் என்று பிரிக்கிறபோது ஆரம்ப புள்ளி (லக்னம்) எந்த பிரிவில் அமைகிறதோ அதே பிரிவில்தான் கேந்திரம் அமையும், சரம் என்றல் சரமாக,ஸ்திரம் என்றால் ஸ்திரமாக , உபயம் என்றால் உபயமாக, . இன்னும் வரும்......... அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment