Tuesday, 28 October 2014

பரிகாரம்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை பரிகாரம் பற்றியது.நான் போன கட்டுரையில் கூறியபடி இந்த பரிகாரம்தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்றும் பொய் என்றும் மக்கள் நம்புகிற அளவுக்கு சர்ச்சையான விஷயம். காரணம் எப்படி மனிதனுக்கு தப்பிபதற்கு ஒரு விசயமானதோ அதேபோல்,எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்பதும் மனிதனுக்கு தேவை. தீர்வை கண்டுபிடிக்க என்னவெல்லாம் முடிமோ அனைத்தையும் செய்தான்.இந்த மனித இயல்பை பயன்படுத்திக்கொண்டு அந்நாளில் முன்னோர்கள் பிரச்சனை இருக்கும் மனிதனுக்கு அப்ப்ரசனைக்கு காரணம் அவன் இல்லை அவன் விதி என்றும்,விதியிலிருந்து தப்பிக்க வலி உண்டு அதுதான் பரிகாரம் எனவும் கூறினார். மனிதனும் ஆறுதல் அடைந்து அவர்கள் சொன்ன வழியை கையாண்டான்.இது ஒரு மனோதத்துவ தீர்வு. பரிகாரம் செய்து விட்டால் இனி ப்ரசனைஇல்லை அல்லது எதுவும் மாறுபட்டு நடக்காது என்ற நம்பிக்கை மனப்பாங்கு பிரச்சினையின் அழுத்தத்தில் இருந்து அம்மனிதனை வெளியே கொண்டு வந்தது. அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தவனுக்கு பிரச்சனயை அணுகுவதும் அதை கையாள்வதும் எளிதாக இருந்தது.அதிலிருந்து விடுபடவும் வழியை கொடுத்தது.
பூஜைகள்,மந்திரம்,எந்திரம்,தாயத்து இன்னும் நிறைய இருக்கிறது. இந்த பரிகாரம் என்ற வார்த்தையை வைத்து ஒரு கூட்டம் பெரிய வியாபாரமே நடத்துகிறது. எனக்கு தெரிந்து சென்னையில் ஒருவர் 5 குழுக்கள் வைத்து இருக்கிறார் பரிகார பூஜை செய்யஒரு குழுவில் 10 -12 பேர் இருகிறார்கள் ஒரு பூஜைக்கு 1 முதல் 5 லட்சம் வரை வாங்குகிறார்கள் எந்த ஊருக்கு வர வேண்டுமோ வந்து பூஜை செய்து கொடுப்பார்கள் போக்குவரத்து தங்குமிடம் அவர்களுக்கு கார் இவ்வளவும் ஏற்பாடு செய்து பரிகாரத்துக்கு அழைத்தவர் குடும்பத்தோடு அவர்கள் காலில் விழுந்து மரியாதையோடு வழி அனுப்பி வைப்பார்கள். பிரச்சனயில் இருப்பவர்களுடைய பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். அனால் இதிலிருந்து மாறுபட்டும் பலர் இருகிறார்கள்.அவர்கள் கோவிலுக்கு பயணம் போக சொல்வார்கள்.இது கொஞ்சம் பரவா இல்லை.ஒரு தீர்வாக கூட கொள்ளலாம் .
நம் முன்னோர்கள் கண்டுபிடித்த கோவில் சமாசாரம் கொஞ்சம் மாற்றத்தை நம்முள் கொண்டு வரும் என்பதும் உண்மைதான்.
கோவிலில் தீர்மானித்து இருக்கிற சக்தி பற்றி நான் முந்தைய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். அந்த சக்தி நம் உடம்பின் manufacture formula vil உள்ள நிறை குறைகளை சற்று சமன் படுத்தும் நமக்கு எச்சக்தி தேவை படுகிறதோ அச்சக்தி இருக்கிற கோவிலுக்கு சென்று குறைந்தது 3 மணிநேரம் உட்பிரகாரதிலோ அல்லது கோவில் வளாகத்திலோ தங்கி வாருங்கள். சற்று மாறுதல் கிடைக்கும்.அங்கு பூஜைகள் செய்வதோ,ஸ்வாக சொல்லுவதோ உங்கள் விருப்பம். ஆனால் இருப்புதான் மிக முக்கியம். அங்கு சென்று அவசர அனுமதி சீட்டு வாங்கி ஒரு அர்ச்சனை செய்து உடனே கிளம்பி வருவதில் ஒன்றும் பயன் இல்லை.
மேலும் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை ஒரு நல்ல ஜோதிடரின் அறிவுரை பெற்று செல்லவும். உங்களுக்கு எந்த கோவில் உகந்ததோ அதற்க்கு சென்று வலிமை பெற்று வாழ்க்கையில் வரும் பிரசனைகளை வென்று வளமுடன் வாழுங்கள்.
இன்னும் வரும் ............... அன்புடன் அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment