Tuesday, 25 November 2014

ஜோதிடம் அறிமுகம் 

வணக்கம் நண்பர்களே,அஸ்ட்ரோ என்ற உடன் ஒ! ஜோதிடரா என்று எண்ணாமல் நான் கற்ற, உணர்ந்த, புரிந்து கொண்ட விசைங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், ஜோதிடத்தை பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகளை நான் ஆராய்ந்து கற்ற வற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தான் இந்த பக்கத்தை முக நூலில் துவங்கி உள்ளேன் ஜோதிடம் இன்பது நம்பிக்கை தானா? நம்பலாமா? அதெல்லாம் பொய்! அட காசு பண்றன்கப்பா, என்று சொல்லி கொடுக்க பட்ட விசயங்களை தவிர்த்து வெறும் மனதால் படிங்கள் ./ ஜோதிடம் என்பது ஒரு வானவியலின் சூத்திரம் நம் இருக்கிற பூமி உள்பட கிரகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற சூரிய குடும்பத்தின் பயண பாதை. இந்த பாதையில் பயணிக்கிற கிரகங்களின் சக்தி எவ்வாறு இந்த சூரிய பாதையில் செயல் படுகிறது இந்த செயல்பாடு நம் வாழுகிற பூமியில் எவ்வாறு உள்ளது என்கின்ற கணக்கு. சூரியனை மையமாக கொண்டு ஒரு நீள் வட்ட பாதையில் மற்ற கோள்கள் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது நம் படித்த ஒன்று. ஆனால் இந்த மொத்த பாதையும் தினமும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டிருகிறது. பயணம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்றுதான் யாருக்கும் தெரியாது. இதுபோல நூற்று கணக்கான சூரிய குடும்பங்கள் அண்டவெளியில் உள்ளது. நம் பூமியை விட பெரிய பாறைகள், அவற்றின் மோதல்கள் நட்சத்திர கூட்டம்,பால்வெளி மண்டலம் அப்பாப்பா! நாசாவின் வலை தளத்தில் சென்று பாருங்கள் புரியும் இந்த பிரமாண்டம்தான் படைப்பின் விஸ்வரூபம்./ / இந்த பாடத்தில் வருகிற ஒரு சிறு தலைப்புதான் நம் பூமியும் அதில் வாழுகிற உயிர்களும் இப்பூமில் வாழுகிற உயிர்களில் டார்வின் உடைய பரிணாம கொள்கையில் புரிந்து கொள்ளல்,செயல் படுத்துதல்,பகுத்து அறிதல் என்ற மூன்று அறிவுகளினால் மனிதன் மேம்பட்டவனாக இருக்கிறான் அவனுடைய வாழ்க்கையில் இந்த வானவியல் எவ்வாறு செயல்படுகிறது என்பது தான் ஜோதிடம். நம் முன்னோர்கள் இதை அறிந்து படித்து சாமானிய மக்களுக்கு புரிந்தாற்போல் சில் உதாரணங்களை வைத்து சொன்னார்கள்.இதில் சிலர் இவ்விசயங்களை மறைத்து இதை ஒரு ரகசியமாக வைத்து கொண்டு பிழைக்க தொடங்கியதின் விளைவு தான ஜோதிடம் எதோ கண்கட்டி விதை போல மாறி போனது. இன்னும் வரும். ...... அன்புடன் அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment