Thursday 30 October 2014

வணக்கம் நண்பர்களே, என் அடுத்த பதிஉவ் 
லக்னமும் ராசியும் 
சூரியனை மையமாக கொண்டு இருக்கிற நம் பூமி உள்பட இருக்கிற சூரிய குடும்பத்தின் நீள் வட்ட பாதையை டிகிரில் பிரித்தால் மொத்த டிகிரி 360 ( 4 பிரிவுகள் ஒரு பிரிவு 90 டிகிரி ) 90 டிகிரியை இன்னும் துல்லியமாக கணிக்க அதை மூன்று 30 டிகிரியாக பிரிக்க மொத்தம் 12 பிரிவுகள் வரும். இதுதான் 12 ராசி மண்டலம் ஒரு ஒரு பிரிவும் 30 டிகிரி ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி 12 x 30 = 360 டிகிரி.

இந்த 12 ராசி மண்டலத்திற்குள் இருக்கும் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்துதான் அன்றைய வனவியாளர்கள் ஆராய்சியாளர்கள் கிரகங்கள் நகருதலை கண்டறிந்தனர் அடையாளத்திற்கு பெயரும் இட்டனர்.ஒரு ராசில் (30 டிகிரி) 3 நட்சத்திரம் ஒரு ஒரு நட்சதிர்க்கும் மேல்.கீழ்,இடம் ,வலம் என 4 பாதை என்பதைதான் 4 பாதம் என ஜோதிடத்தில் கூறுகின்றனர்

நம் முன்னோர்கள் (வானவியாலார்கள்) கண்டுபிடித்தது மொத்தம் 7 கிரகங்கள் 2 நிழல கிரகங்கள் (ராகு, கேது ஜோதிடத்தில் மிக சக்தி வாய்ந்த கிரகங்கள் இவற்றை பற்றி பின்னர் கூறுகிறேன் ) மொத்தம் 9 கிரகங்கள் ஒவ்வவு ரு கிரக பாதையில் இருக்கிற பெரிய மூன்று நட்சத்திரம் அவற்றின் நேர்கொட்ட்டு பிரிவு 4 ( பாதங்கள்) 9x3x4=108 பாதங்கள் என பிரித்தனர் கணக்குகாக

அடுத்து பூமி சூரியனை சூற்றி வர 24 மணி நேரம் (12 ராசி மண்டலங்கலயும் (360 டிகிரி) சுற்றி வர) 24/12 = 2 மணி நேரம். இந்த 2 மணி நேரத்தில் சூரிய மண்டலத்தில் பூமி நிற்கிற ராசி மண்டலம் தானாய்யா லக்னமாக ஜோதிடத்தில் கூறு கின்றனர். ஒரு குழந்தை பிறக்கும் போது பூமி எந்த ராசி மண்டலத்தில் இருக்கிறதோ அந்த ராசி தான் ஜனன லக்னம்.மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியனையும் கிழக்கத்திய நாடுகளில் சந்திரனை மையமாக கொண்டு ஜனன ராசியை கணக்கு எடுக்கிறார்கள்

ஜோதிடத்தில் சந்திரன் நிற்கிற ராசி மண்டலம் ஜனன ராசி என்றும் சந்திரனை வைத்து நடப்பு பலன்களும் லக்னத்தை வைத்து அப்பிறப்பின் நிரந்தர பலன்களையும் கண்டறிகிறார்கள் ஜோதிடத்தில்

இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு .
எந்த கோவிலுக்கு செல்வது.

நண்பர்களுக்கு வணக்கம், என் நண்பர்கள் சனி கிழமை தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.முதலில் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அப்படியே பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து அனுமனுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வருவர்.இது தவறான வழிபாட்டு முறை ஆகும்.எப்படி என்று பார்ப்போம்.

ஈஸ்வரன் கோவில் என்பது குரு(JUIPER) சக்தியை தீர்மானம் செய்து ஒரு ஸ்தூபி போல கற்ப கிரகத்தில் நிறுத்தி வைத்து இருப்பார்கள்,லிங்கத்தின் கீழ் இருக்கும் செப்பு தகட்டிர்க்கும் மேல் இருக்கிற கோபுரத்தின் ஏரியல் ஆன கலசத்திற்க்கும் ஒரு WIRELESS CONNECTION இருக்கும் இந்த சக்தி நம்முள் இறங்கி மூளையின் ஒட்டு மொத்த CONTROL ரூமையும் சமன் படுத்தும் ஏன் என்றால் குருவின் கதிர்கள் பூமியில் மனிதனின் மூளையின் ஒட்டு மொத்த இயக்கத்தின் தூண்டு கோளாகும். ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் போது மூளையின் ஒட்டு மொத்த சக்தியும் அமைதி பெரும்.ஆன்மீக முறையில் சொல்ல வேண்டும் என்றால் ஈஸ்வர சக்தி முக்தி ஆகும்.ஈஸ்வர கோவிலில் பயன்படுத்த படும் வில்வம் விபுதி உத்ரட்சம் போன்றவை அமைதியை நம்முள் தக்க வைப்பவை.
ஆனால் பெருமாள் கோவில் இதற்கு நேர் எதிரான சம்சார சக்தி அதாவது சுக்கிரன் சக்தி ஆகும். கல்யாண குணங்களாகிய குடும்பம்,கலகலப்பு, சந்தோஷம் சம்சாரம்,இவற்றின் தூண்டுதல் சம்சார உலகிலேயே கடவுளுடன் வாழ்வது., அங்கு பயன் படுத்தப்படும் பச்சை கற்பூரம், சந்தனம்,சம்பங்கி போன்ற வாசனை பொருள்கள் நமக்குள் சம்சார தனத்தை தூண்டும் இரண்டும் இரு வேறு சக்திகள். இரண்டு கோவிலுக்கும் செல்வது என்பது BREAK பிடித்து கொண்டே ACCELERATOR கொடுப்பது.
அனுமன் சக்தி நம்முள் இருக்கிற குண்டலினி நம்முள் இருக்கிற சக்தி பிரவாகம் ஆதலால்தான் அவரை பாடி பில்டர் போல சித்தரித்து இருக்கிறார்கள் பெருமாள் சக்தியும் அனுமன் சக்தியும் சம்சார வாழ்விற்கு அவசியம் ஆதலால்தான் பெருமாள் கோவிலில் அனுமனை தனி கோவிலில் வைத்து இருப்பார்கள்.
ஆதலால் எதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள் அந்த சக்தியை மட்டும் உணருங்கள் பலன் பெறுங்கள்.
இன்னும் வரும் ............. அஸ்ட்ரோ பாபு.
கிரகங்களின் பரிகாரவழிபாடு - 7
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை குருவின் பரிகார வழிபாட்டை பற்றியது குரு தன்மை நம்முடைய ஒட்டு மொத்த மூளையின் செயல்பாட்டு தன்மையை இயக்குகிற ஒரு சக்தி என்பதை உணர்த்தத்தான் குரு பற்றிய கட்டுரையை பதிந்திருந்தேன்.
நம் உடல் மனது இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வழிநடுத்துகிற, இயக்குகிற ஒரு மாஸ்டர் CPU வாக இருப்பது நம் மூளை பகுதியாகும். மூளையில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. செரிபரம்,செரிபலம்,மிடுள இவை மூன்றையும் இணைக்கிற பிரைன் ஸ்டெம் இவை ஒவ்வொரு பகுதியும் உடம்பின் சில உறுப்புகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை தீர்மானிகின்றன மூளை எதன் மூலம் செயல்களை செய்கிறது என்றால் ஒவ்வொரு பகுதியில் சுரக்கிற திரவங்கள் மூலமாக மூளையின் ஒட்டுமொத்த செயல்களும் செயல் வடிவம் பெறுகின்றன. நான் ஏற்கனவே புதன்,ராகு,கேது,செவ்வாய் சந்திரன்,கட்டுரைகளில் எழுதியுள்ள அனைத்து விசயங்களின் கட்டுபாட்டு அறையாக செயல்படும் குருவின் தன்மை நம்முள் பலமாக இருப்பின் மேற்கூறிய கிரகங்களின் கட்டுப்பாடும் செயல் திறனும் நேர்கோணமாக இயங்கும்.அதாவது PITUITARY,NON NERVINESS JUNCTION,INDUCING OF MUSCLES,CONTROL OF BLOOD CELLS,ACTIVITIES OF BLOOD இவைகளின் கட்டுபாடு அறையாக விளங்குகிற மூளையின் செயல்களை குரு தன்மை இயக்குகிறது.இந்த இயக்கங்களின் மூலமே குரு தன்மைதான்
குரு தன்மை தன் ஜனன காலத்தில் மறைந்தோ,நீசம் பெற்றோ,கேந்திர ஆதிபத்திய தோஷம் கொண்டவர்கள். தியான பயற்சி ஆலய வழிபாடு மூலமாக குறைந்து இருக்கிற குரு தன்மையை நம்முள் சமன் படுத்தி கொள்ள முடியும்
தியானம்:- நம் உடலில் 7 சக்கரங்கள் இயங்குவது நாம் அறிந்ததே. இச்ச்சக்கரத்தில் அனாகதம் சக்கரம் குரு தன்மைக்கு கூறப்பட்டுள்ளது அனாகத சக்கரத்தை எழுப்புகிற அ.....உ.....ம் (ஓம்) என்ற ஓங்கார மந்திரத்தில் இருக்கின்ற உ சப்தம் அனாகத இயக்கத்தை துரிதபடுத்தி குரு தன்மையை நம்முள் தீவிரபடுத்தும். ஓங்கார மந்திரம் 15 -20 நிமிடம் வரை தொடர்ந்து 48 திதிகள் அமாவாசையிலிருந்து ஆரம்பித்து ஜெபிக்க வீண்டும்.
அடுத்து குவிப்பு தியான பயிற்சி (concentration meditation )இது இளம் வயதினருக்கு மட்டுமே. எண்ணங்களை சிதறவிடாமல் இருக்க மனதின் வேலையை ஒருமுகமாக திருப்பி நெற்றி புருவங்களுக்கு இடையில் நம் கவனத்தை கொண்டு வந்து அந்நிலையில் தொடர்ந்து 15 நிமிடம் இருத்தல். இதற்க்கு மந்தரங்கலையோ அல்லது ஒரு தீப ஒளி போன்றோ கற்பனையாக நினைத்து கொண்டு த்யானம் செய்தல் நம் விழிப்புணர்வு தன்மை மேம்பட உதவும். நம் விழிப்பு தன்மை தீவிரமாக, நம் செயலில் கவனிப்பு தன்மை அதிகமாகி செயல் தரம் படும் மற்றொரு வகை தியானமான ( breath watch )
கண்மூடி நம்முள் இயங்கும் சுவாசத்தை தொடர்ந்து கவனித்தல், அவ்வாறு கவனிக்கிறபோது நாம் என்ற என்ற உணர்வு மாறி சுவாசம் மட்டுமே இருக்கும் இத்தன்மையும் தீவிரமாக இருக்கும் மாறுபட்ட தன்மையை சமன்படுத்தும்.
நடுத்தர வயது மற்றும் வயது கடந்தவர்களுக்கு சூன்ய தியானம் ஒன்று பயிற்சியின் குறுகிய காலத்திலேயே துரித நிலையை கொடுக்கும். மனம் தாண்டி ஒவ்வரு பயிற்சியிலும் செல்வதால் மனதின் எவ்விதமான சஞ்சலங்களும் இவர்களை ஆட்கொள்ளா, பேச்சு குறைந்து செயலில் கவனம் மேம்படும். நிதானம் பிறக்கும்.இந்த தியானம் ஒரு குருவின் துணையோடு முறையாக பயின்றுதான் செய்ய வேண்டும். கிரகஸ்தர்கள் 15 நிமிடம் மட்டுமே இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஆலய வழிபாடு.:- நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமான கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்கு சென்று வாருங்கள்.மேலும் திருச்செந்தூர் கோவிலும் குருவின் ஸ்தலமாக சொல்லபட்டுள்ளது.அங்கும், சென்று ஒரு இரவு தங்கி வாருங்கள்.
உணவு முறை:- புலால் உண்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்,எளிதில் ஜீரணமாகிற பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்வது நலம் வயிறு எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறதோ மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்
மேற்சொன்ன தியான பயிற்சியின் ஊடே ஒருமுறை மேற்கண்ட கோவில்களுக்கு சென்று வாருங்கள் ஈஸ்வர சக்தியை(குரு தன்மையை) உங்களுக்குள் உணருங்கள் வளம் பெறுங்கள். இன்னும் வரும்..........................அஸ்ட்ரோ பாபு
கிரகங்களின் பரிகார வழிபாடு - 6
நண்பர்களுக்கு வணக்கம் ,
இந்த கட்டுரை சனியின் பரிகார வழிபாட்டு முறையை பற்றியது.சனியின் முக்கியத்துவம், மற்றும் சனியின் செயல்பாட்டை பற்றி இரண்டு தினம் முன்பே பதிவிட்டிருந்தேன். அனைவரும் படித்திருப்பீர். படிக்காதவர்களுக்காக சனியின் செயல்பாட்டை பற்றி ஒரு சிறு குறிப்பையும் கீழே தருகிறேன்.
சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
CSF : CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.
NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி தீர்மானிகிறது
இத்தனை விசயங்களை உள்ளடக்கிய சனியின் மாறுபட்ட தன்மையை, அதாவது சனி 1,2,4,5,7,8,12 இடங்களில் ஜனன காலத்தில் இருந்தால் அந்த அதிபதியம் ஆன 1.உடல்,2.குடும்பம்,4.சுகம்,5.பூர்வ புண்ணியம்,7,களத்திரம்,8.ஆயுள் பாவம்,12,அயன சயன போகத்தில் மாறுபட்ட செயல்பாட்டை தருவார்.
சனிக்கு பரிகாரமாக மூன்று முறைகளை பயன்படுத்தலாம். 1,உடல்பயிற்சி 2.தியானம்.3.கோவில் வழிபாடு.
1. உடல்பயிற்சி :- யோக பயிற்சியில் முக்கியமான உடல் பயிற்சியான சூரிய நமஸ்காரம்.இதனை முறையாக பயின்று தொடர்ந்து பயிற்சி செய்து வாருங்கள்.உடலில் இருக்கும் அனைத்து இயக்கங்களும் இந்த பயிற்சியால் ஊக்கம் பெற்று சீர் பெறும்.உடல் மந்த தன்மையும் புத்தியின் மந்த தன்மையும் மாறி பொலிவு பெறும்.குறிப்பாக நரம்பு மண்டலத்தின் மூலமான முதுகெலும்பு பலம் பெறவும் அதை சார்ந்த தசை பகுதிகள் பலம் பெறவும் இவற்றின் மூலம் இரத்த ஓட்டம் சீர்பெற்று மூளை சீராக இயங்கும்.
2. தியானம்:- செரிபுரோ புளுயிட் குறைபாட்டால் மந்தமாக அல்லது வீரியமாக இருக்கிற செயல்பாட்டை சமம் செய்ய தியானம் ஒரு சிறந்த முறை, ஒவ்வொரு தியானத்திலும் ஒவ்வொரு பயன் உண்டு.சனிக்கு, திறம்பட இயங்கவும்,சுறுசுறுப்பாக இயங்கவும் தேவையான துடிப்பும் மற்றும் விழிப்பு உணர்வுக்கும் பிரபஞ்ச ஒலியான அ.......உ ......ம் என்ற மந்திரத்தை ஒரு நாளை 15 - 20 நிமிடம் கண்முடி உச்சரியுங்கள 48 நாள் உச்சரிக்க பெரிய மாற்றத்தை நம்முள் கொண்டு வரும்.
3. கோவில் வழிபாடு:- துரிய நிலையான கால் பைரவரை வழிபடுதல் மந்த தன்மையை மாற்றி தீவிர செயல்பாடும், அதிதீவிர செயல்பாட்டில் ஒரு நிதானத்தையும் பெறலாம்.எல்லா வற்றின் மொத்த செயல்பாடான மூளையின் நிதானமான செயல்பாடு செரிபுரோ புளுயிட் செயலில் புனரமைப்பு செய்து சீர்பட இயக்கும்.இயக்கங்களின் செயல்களில் ஒரு தீர்க்கம் கிடைக்கும்.கோச்சாரத்தில் சனியின் சஞ்சாரம் ஒரு ராசியில் 21/2 ஆண்டு,12 ராசிக்கும் 30 ஆண்டு.இந்த 30 ஆண்டுகளில் ராசிக்கு 3.6.11.இந்த மூன்று இடங்களில் வரும்போது மட்டும் நன்மை பயப்பார்.மீதம் 23,1/2 ஆண்டுகள் 71/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்ட்ட சனி என்று கெடு பலன்களை அளிப்பார்.சனி ஒன்றும் நமக்கு எதிராக நின்று கொண்டு நமக்கு மட்டும் எப்பொழுதும் தீமை செய்கிறார் என்ற மனப்பாங்கு சனியின் தாக்கத்தில் இருப்பர்வர்களின் எண்ணம்.
நவகிரக ஸ்தலங்களில் சனியின் தீர்க்கத்தை திருநள்ளாறு ஸ்தலத்திலும், குச்சனூர் ஸ்தலத்திலும் தீர்மானம் செய்து வைத்து இருகின்றனர் நம் முன்னோர், அங்கும் சென்று ஒரு இரவு தங்கி சனியின் செயல்பாட்டை நமக்கு சாதகமாக்கி கொள்ளலாம். மேலும் சனி நமக்கு கிடைக்க கூடிய அனுபவங்களின் மூலமாக நம்மையே மாற்றி நம் திறனை மேம்படுத்துவார் என்பதுதான் உண்மை.சனியை போற்றுவோம்.வளம் பெறுவோம்.இன்னும் வரும்.........அஸ்ட்ரோ பாபு
கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 4
நண்பர்களுக்கு வணக்கம்
இந்த கட்டுரை கலகலப்பு,காதல்,சல்லாபம்,அலங்காரம்,போன்ற கல்யாண குணங்களின் தன்மையான் சுக்கிரனுடைய பரிகார வழிபாட்டை பற்றியது.கலகலப்பிற்கும்,காதலுக்கும் அதிபதியான சுக்கிரனுக்கு முதலாய் கூறுவது விஷ்ணு என்ற பெருமாளைத்தான் நவக்கிரக ஸ்தலங்களில் கும்பகோணம் கஞ்சனூர்.
நம் மூலையில் ஒரு பகுதியாக இயங்குகிற pinal gland என்ற சுரப்பிக்கு பொறுப்பு எடுக்கிறது சுக்கிரன். இந்த சுரப்பி மனதில் ஒரு கலகலப்பு தன்மையை உண்டாக்கும். மேலும் தன்னை அழகுபடுத்தி கொள்ளுதல்,பிறரை கவருகிற பேச்சு, நடை,உடை,பாவனை.எதையும் எதார்த்தமாக எதில் கொள்ளல்,காதல் உணர்வு,அதன் தொடர்ச்சியான காமம்,போன்ற உணர்வுகளை மனதில் தோற்று வித்து அதை செயல்படுத்துகிற தன்மையையும் நம் மூளைக்கு கட்டளையிடும்.
சுக்கிரன் ஜனன காலத்தில் நல்ல இடங்களில் இருந்தால் அந்த நபர் மேற்குறிய குணநலன்களுடன் இருப்பார்.சந்திரன்,புதன்,குரு போன்றவர்களின் சேர்க்கை இருப்பின் இத்தன்மை போற்றுதலாகவும்,செவ்வாய்,சனி,ராகு,கேது இருப்பின் மாறுபட்டும் இருக்கும்.உடலை இயக்கும் 7 சக்கரங்களில் சுவாதிஷ்டானத்திர்க்கும் அதன் செயல்பாட்டிற்கும் சுக்கிரனே செயல் வீரர்.
நம் உடலில் இயங்குகிற இரண்டு சக்திகளான சூரிய சந்திர கலைகளில் சூரிய சக்தியின் மூலம் குரு .சந்திர சக்தியின் மூலம் சுக்கிரன் .நம் முன்னோர்கள் இந்த இரு எதிர் சக்திகளையும் ஈஸ்வரன் விஷ்ணு சக்திகளாக வடித்து வழிபட்டு வந்தார்கள்.பின்னர் தோன்றிய மனிதர்களின் அகந்தையில் இச்சக்திகள் தனிதனி யாக கொண்டாடப்பட்டு, இரு வேறு மதங்களாக பிரிந்து சைவத்திற்கு ஈஸ்வரனும் வைணவத்திற்கு விஷ்ணுவாகவும் கொள்ளப்பட்டனர்.
பெருமாள் சுக்கிர சக்தியாக இருப்பதால் அச்சக்தியை நிலை நிறுத்தி இருக்கிற கோவில்களில் கல்யாண குணங்களை தூண்டுகிற வாசனை பொருள்களான சந்தனம்,பச்சை கற்பூரம்,சம்பங்கி போன்றவற்றையும் கவர்ச்சி பொருள்களான பட்டு,பீதாம்பரம்,தங்கம்,வைரம்,போன்றவற்றையும் பிரசாதமாக பித்த பொருள்களான புளி,வெல்லம் போன்றவற்றையும் மூலிகைகளில் இரத்தத்தை சுத்தம் செய்து உடலை சீராக இயக்குகிற கிருமி கொல்லியான துளசியையும் பயன்படுத்தி அங்கு வருகிற மக்களுக்கு சுக்கிர தன்மையை வழங்கினார்கள். வாழ்வியலுக்கு உரித்தான சக்தி என்பதால் தான் காத்தல் என்ற பதவியையும் வழங்கி இருக்கிறார்கள்.
பெருமாள் கையில் வைத்திருக்கும் சங்கு பிரபஞ்ச ஒலியான ஓங்காரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும்.சக்கரம் பிரபஞ்ச இயக்கத்தையும்,நான்கு திசைகளின் இருப்பையும் குறிக்கும்.ஆணின் இரு வேறு சக்திகளான ஈஸ்வர விஷ்ணு சக்தியும் இத்தன்மைகளை பிரிக்கிற பெண் சக்தியும்தான் இரண்டு வெள்ளை கோடுகளுக்குள் சிகப்பு கோடுகளான நாமம்
சுக்கிர தன்மை மாறு பட்டு இருப்பவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.இந்தன்மை தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் தீவிர சக்தியாக நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.திருமண தாமதம்,கணவன் மனைவி உறவில் சிக்கல் உள்ளவர்கள் இங்கு சென்று ஓர் இரவு தங்கி வாருங்கள். பலன் கிட்டும்,
கும்பகோணத்தில் கஞ்சனூர் என்ற இடத்திலும் சுக்கிரணனின் சக்தியை நிலை நிறுத்தி இருக்கிறார்கள், அங்கு சென்று அச்சக்தியையும் உணருங்கள் உள்வாங்கி கொள்ளுங்கள் வளம் பெறுங்கள். இன்னும் வரும் ........... அஸ்ட்ரோ பாபு.
கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 3
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை மிக பெரிய தோஷமாக கொள்கிற செவ்வாய் தோஷ பரிகார வழிபாட்டை பற்றியது, செவ்வாய், இரத்தகாரகன் ஆகும்.செவ்வாய்க்கு முழு முதலாய் கூறுவது முருக பெருமானைத்தான்.அடுத்து சக்தி வழிபாடு,நவ கிரக ஸ்தலங்களில் வைதீஸ்வரன் கோவில்.
நம் மூலையில் இரத்த உற்பத்தி, அதன் வீரியம்,அதன்,இயக்கம் ஆகியவற்றிற்கு செவ்வாய் பொறுப்பு எடுக்கிறது,எலும்புகளில் உள்ள மஜ்ஜையிலிருந்து உற்பத்தி ஆகிற வெள்ளை அணுக்களின் தீவிரத்தை துல்லியமாக குறிகாட்டும் செவ்வாய். இரத்தம் நம் உடலில் பிராண சக்தியை சீராக நம் உடல் முழுவதும் கொண்டு சென்று உடலின் இயக்கத்தை சீராக வைத்து கொள்ளும்.என்பது நாம் அறிந்ததே.நம் உடம்பின் அனைத்து பிரிவுகளுக்கும் ,இயக்கங்களுக்கும் இரத்தமும் இரத்தம் கொண்டு செல்லும் பிராணனும் மூலம்.ஆகையால் செவ்வாய் அனைத்து இயக்கத்திற்கும் மூலமாக இருக்கும் அல்லவா.
முருக கடவுளின் இடமும் வளமும் இருக்கிற வள்ளி தெய்வானை என்கிற சக்திகள் நம் சுவாச அடிப்படையான சூரிய கலை,சந்திர கலையையை குறிக்கும்.நம் சுவாசம் இரண்டு மணிக்கொரு தடவை மாறும். வலது பக்கம்,ஓடுகிற சுவாசம்,மாறி இடது பக்கம் ஓடும்.சுவாசம் இரத்தத்தை இயக்குகிற மூலம்.பிராணன் இல்லையேல் எதுவும் இல்லை. இந்த இட வல சுவாச நிலை தான் வள்ளி தெய்வானை.முருகன் சுழிமுனை என்று சொல்கிற சூரிய சந்திர சக்திகளை சமன் படுத்தும் கட்டுபாடு மையம்.சுவாசம் சீராக இருக்கும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்கும் இது ஒரு சங்கிலி தொடர் போல செயல்படும் சுவாசம் கெட்டால் இரத்தம் கெடும்.இரத்தம் கெட்டால் சுவாசம் கெடும். சுழிமுனை சீராக செயல்பட இடது சுவாசமும்,வலது சுவாசமும் சமன்பாட்டு நம் உடம்பிற்கு ஒழுங்கான இயக்கத்தை கொடுக்கும். சுழி முனைக்கு ஆன்மீகத்தில் பெரிய இடமும்,யோகா விசயங்களின் வேராகவும் செயல்படும்.அதை பற்றி பின்னர் எழுதுகிறேன்.மேலும் மயில் என்பது மாயை வண்ணங்கள் கலந்து அலங்காரமாய் கவர்ந்து இழுக்கிற தன்மை.நம் வாழ்க்கையில் நிரந்தரம் என்று நினைத்து இருக்கிற அனைத்து விசயங்களும் மாயைதான்.
அதை குறிப்பதுதான் மயில். மயில் மிதித்து இருக்கும் பாம்பு நம் குண்டலினி. மாயை நம் ஆதார சக்தியான குண்டலினியை உணர முடியாதவாறு அமுக்கி வைத்திருக்கும் சூட்சுமம் தான் மயில் காலால் பாம்பை மிதித்துஇருப்பது.
இவை அனைத்தும் சீராக கிடைப்பின், வேல் குண்டலினியின் மேல் வழியான நேர் தண்டு அதன் மேல் சக்தி ஏறி ஆக்ஞ்சா தொடும் போது
நம்முள் இருக்கிற அரக்க தன்மை(சூரன்) அளித்து கடவுள் தன்மையான சகஸ்ராவுக்கு நம்மை அழைத்து செல்லும்.இத்தன்மை அனைத்தும் நிறைவேற நாம் பிறப்பு இறப்பை கடந்து ஒரு நிறை நிலையை அடைவோம்.ஆதலால்தான் முருகனை என்றும் இளமையாகவே சித்தரித்திருப்பார்கள். இயக்கத்தின் வெளிப்பாடாக இருப்பதால்தான் நம் உடலில் மூல இயக்கமான இரத்தத்திற்கு முருகனை வழிபட சொன்னார்கள். செவ்வாய் சக்தி நம்முள் அதிகமாக இருப்பின் முருகனும்,குறைந்து இருப்பின் சக்தி வழிபாடும் தேவை.
சக்தி என்பது நம்முள் இருக்கும் இயக்கமும்,தூண்டலும். இரத்த இயக்கம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்தத்தில் நெகடிவ் தன்மை உடையவர்கள் சக்தி வழிபாடு செய்ய வேண்டும். சக்தி வடிவான அம்மன் கோவிலில் பயன்படுத்தும் வேப்பிலை, கிருமிகளை கொன்று நம்முள் நோய் தன்மையையும்,எதிர்மறை தன்மையையும் விரட்டி நம்மை காக்கும்.எலுமிச்சை சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி, சிட்ரிக் ஜீரண சக்தியை தூண்டி உணவுகளை ஜீரணித்து இரத்த ஓட்டத்திற்கு தேவையான சக்தியை கொடுக்கும்.வைட்டமின் டி உடம்பிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும். மஞ்சள்,சுண்ணாம்பு கலந்த குங்குமம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். செவ்வாய் நீசம் பெற்றவர்கள் சக்தி வழிபாடு செய்வது அவசியம்.
நவ கிரக ஸ்தலங்களில் வைதீஸ்வரன் கோவில் என்னும் ஊரில் செவ்வாய் சக்தியை நிர்மாணம் செய்து வைத்து இருக்கிறார்கள். அங்கும் சென்று வர அச்சக்தியும் செவ்வாய்(இரத்த) குறைபாடுகளை சமன் செய்யும்.
நான் எப்பொழுதுமே கூறுவதுதான், கோவிலுக்கு சென்று அங்கு இருக்கிற சக்திகளை உணருங்கள் வெறுமே வணங்கி வருதலில் ஒரு பலனும் இல்லை.
செவ்வாயில் ராகு இணைந்தால் மிக பெரிய வீரிய தன்மையை கொடுத்து செவ்வாயின் தன்மையை பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும்.
செவ்வாய் கேது இணைவு இரத்த சம்பத்தப்பட்ட வியாதிகளை கொடுக்கும்.
இதை பற்றி எழுதினால் ஒரு புத்தகம் எழுத வேண்டிய அளவுக்கு எழுத வேண்டும் என்பதால் முக்கிய விவரங்களை சுருக்கி கொடுத்து இருக்கிறேன் .மேற்கூறிய வழிபாடுகளை கடைபிடித்து நிவர்த்தி பெறுங்கள் வளமுடன் வாழுங்கள். இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு
கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 2
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை கேதுவின் பரிகார தன்மையை பற்றியது.கேதுவுக்கு பரிகாரமாக விநாயகர் வழிபாடு,சர்ப்ப கோவில்கள்,நவ கிரக ஸ்தலங்களில் கீழ் பெரும் பள்ளம் போன்றவற்றை கூறுவார்கள்.
கேது நம் மூளையின் 9 இயக்கத்தில் ஒரு பாகமான ,புரிந்து கொள்ளல்,நினைவாற்றல்,சூழ்நிலைக்கு தகுந் து உடன் செயல் படல்,(presence of mind ),உள்ளிருக்கும் விசயங்களை தெளிவுடன் வெளி கொணருவது,ஆன்மீக ஈடுபாடு,பிறப்பின் மூல பூமியான தாய் வழி பாதை ( PART OF DNA ), மேலும் தன மூலம் அறிதல்,போன்ற வற்றிற்கு பொறுப்பு எடுக்கிறது. மேற்கூறிய காரகங்களின் பொறுப்புகளால் தான் கேதுவுக்கு ஞான காரகன் என்று பெயர் போலும். கேது 7 சக்கரங்களில். மூலாதாரம், நம்முள் இருக்கும் சர்ப்ப சக்தியின் ஆரம்ப முனை.
கேது பிறப்பு ஜாதகத்தில் வலுத்து இருந்தால் மேற்கூறிய விசயங்களில் ஆழமும்,தெளிவும் இருக்கும்.கேது தன்மை கெட்டிருந்தால் மேற்கூறிய எதிர்மறை தன்மை தீவிரமாக இருக்கும்,புத்தி பிறழ்தல் பித்துக்குளித்தனம்,உடல் ஊனம்,ஞானத்திற்கு எதிரான கீழ் தரமான பழக்க வழக்கங்கள் போன்றவை இருக்கும்.
மூளையின் சீரான செயல்பாட்டிற்கு இரண்டு விசயம் மிக முக்கியம். 1.பிராண வாயு ஆன oxigen (சுவாசம்),2. இரத்த ஓட்டம் (ஜீரணத்தின் இறுதி நிலை) இவை இரண்டும் சரியாக இருக்கும்படச்சத்தில் மூளையின் செயல் பாடு திறம் மிக்கதாக இருக்கும்.ஆரியர்களின் சூத்திரமே இதுதான், சந்தியா வந்தனம்,மந்திர உச்சாடனை, மேலும் சீரான எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு பழக்க வழக்கங்கள், மேற்கூறிய இவை இரண்டும் தான் அவர்களை தெய்வீக விசயங்களில் பாண்டித்தியம் ஆக இருக்க வைத்தது.கேதுவின் தன்மை நம்மை கடவுளிடம் கொண்டு செல்லும்.
சுவாசம் எந்த அளவுக்கு உள் செல்கிறதோ அந்த அளவுக்கு நம் ரத்த ஓட்டம் அதிகரித்து மூலயில் உள்ள செல்களை தூண்டி செல்களை பலபடுத்தி, அதன் செயல்பாட்டை நலமாக வைத்து கொள்ளும்.2) அதேபோல் ஜீரண உறுப்புகள் நலமாக செயல் பட உணவுகளின் கழிவுகள் வெளியேற்றப்பட்டு இரத்தத்திற்கு தேவையான சக்தியை பெற வழி செய்யும் கழிவுகள் சேர நோய் பெருகும் என்பது சித்தர்களி ன் பொதுவான வாக்கு மூளைக்கு தேவையான சீரான பிராண சக்தி இரத்த ஓட்டத்தையும், இரத்ததிற்கு அச்சாணியான குளுகோசையும் ஒரு சேர அளித்து மூளையை திறம்பட இயக்கும்.
சுவாசம் ஜீரணம் இரண்டையும் ஒரு சேர குறிக்கிற தன்மை விநாயகருக்கு உண்டு.அதிக அளவு எடுக்க வேண்டும் என்பதை உணர்த்த தான் தும்பிக்கை போன்ற அமைப்பு, உணவுகளையும் ஜீரணத்தையும், குறிக்க தான் தொந்தி வயிறும் உலகின் கிழ்த்தரமான விசயங்களை ( எலி) காலுக்கு கீழ் வைத்தும் மூளைனுடைய செயல் திறமாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான் பிரபஞ்ச படைப்பின் பெரிய தலையான யானை தலையை வைத்தும் கூறியுள்ளனர்.
விநாயகர் கோவிலில் உபயோகிக்கும் அருகம்புல் வயிற்றை சுத்தம் செய்து ஜீரண சக்தியில் இருக்கும் குறைபாட்டை நீக்கியும்,ஜீரண உறுப்புகளை தீவிரமாக செயல்பட வைக்கும்.எருக்கம் பூ வாசனையும் சுவாசம் ஜீரண விசயத்தையும் தூண்டும்.சுவாசமும் ஜீரணமும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத விசயமாக இருப்பதால்தான் மக்கள் இவற்றை அத்தியாவசியமாக பெறவேண்டும் என்றுதான் மக்கள் வாழுகின்ற இடங்களில் விநயாகரை நிர்மாணித்து வழிபட வழி செய்தனர்.
சூரிய சந்திர பாதையில் உள்வெட்டு தன்மை கேது இச்சக்தியின் தீவிரத்தை மூளையின் மொத்த செயல்பாடான ஈஸ்வர சக்தியை மையமாக்கி கீழ்பெரும்பள்ளம் என்னும் ஊரில் நிறுத்தி வைத்து வைத்திருகிறார்கள் அங்கு சென்று ஓர் இரவு தங்க நம்முள் மாறுபட்டு இருக்கும் கேது தன்மை சமன் படும்.தொடர்ச்சியான விநாயகர் வழிபாடும் கேது தன்மையை மேம்படுத்தும்.நான் வழிபாடு என்று எழுதுவதால் கோவிலுக்கு செண்டு அர்ச்சனை செய்து பூ வாங்கி சட்டை பையில் வைத்து கொள்ள அல்ல.அக்கோவிலில் இருக்கும் சக்தியை நம்முள் உணர்வது அல்லது கொண்டு செல்வது. அதலால் விநாயகர் கோவிலுக்கு சென்று குறைந்தது 1/2 மணி நேரமாவது அமர்ந்து வாருங்கள் அச்சக்தியை உணருங்கள். கேது தன்மையை உணர்ந்து உங்களுக்குள் உங்களை தேடுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள் . இன்னும் வரும் ........ அஸ்ட்ரோ பாபு
கிரகங்களின் பரிகார வழிபாடு
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை பரிகாரங்களுக்கு ஏன் குறிப்பிட்ட சக்திகளை வழிபட சொல்கிறார்கள் என்பது பற்றி, கிரகங்களின் பலவீனங்களோ, இருக்கும் இடமோ,சேர்க்கையோ ஒரு மாறுபட்ட தன்மையை நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை என் முந்தைய கட்டுரைகளில் எழுதி இருந்தேன். அத்தன்மைகளுக்கு பரிகாரமாக ஜோதிடத்தில் சொல்ல படுகிற கடவுள்கள் எவ்விதம் அத்தன்மைகளை சரி செய்யும் என்பது பற்றி பார்ப்போம். அச்சக்தியின் அடிப்படை,செயல்படும் விதம்,எதற்காக ஒரு கடவுளை ஒரு கிரகத்துக்கு சொன்னார்கள் என்பதுபற்றியதுதான் இக்கட்டுரை,
9 கிரகங்களுக்கும் தொடர்ந்து எழுதுகிறேன், முதலில் எனக்கு பிடித்த ராகுவில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
ராகு -ராகுவிற்கு முக்கியமாக துர்க்கை வழிபாடு, மேலும் வழிபாடு ஸ்தலங்களான திரு நாகஸ்வரம், மற்றும் திரு காளஹஸ்தி யை கூறுவார்கள்.ராகு பலமாக இருப்பவர்கள் நடுத்தர உயரத்திற்கு மேற்பட்டும்,இயற்கையான கட்டுமஸ்தும்,ஒரு பெரிய தோற்றத்தோடு இருப்பார்கள்.ஆண்,பெண் பேதமில்லாமல் இந்த உருவ அமைப்பை பெற்று இருப்பர்கள். உடல் தசை வலிமை மிக்கவர்கள். இராகு இவர்களுடைய பிறப்பில் சாதகமான இடங்களில் இருந்தால்,அவ்வலிமை நற்செயல்களுக்கும்,கெட்ட இடங்களில் இருந்தால் கெட்ட செயல்களுக்கும் பொறுப்பேற்கும்.நற்பலன்கள்.நற் செயல்களை பற்றி நாம் எப்பொழுதுமே போற்றுவதில்லை.கெடுபலன் கெட்ட செயல்களுக்குதானே வடிகால் தேடுவோம்
நம்முடைய அனைத்து செயல்களின் மூலமாக இருக்கும் மூளை என்ற மைய பகுதிக்கு பொறுப்பேற்கும் ஈஸ்வர சக்தியான குரு சக்தியை மையமாக வைத்துதான் அனைத்து நவகிரக ஸ்தலங்களிலும் நவ கிரகங்களை வழிபாடு செய்யுமாறு வடிவமைத்து இருப்பார்கள்.நம்மை இயக்குகிற CPU மூளை பகுதிதான் என்பது நாம் அறிந்ததே. அதில் செயல்படுகிற 9 விதமான செயல் பகுதிகள்,அப்பகுதிகள் இயக்குகிற சுரப்பிகள்,சுரப்பிகளின் மூலமாக சுரக்கிற திரவ சக்தி,அத்திரவ சக்திகள் தூண்டுகிற உடம்பின் செயல்பாடு என்றுதான் நம் உடலின் சூத்திரம் இயங்குகிறது.இந்த 9 செயல்பகுதிகள் செயல்படும் விதம் அவ்வுயிர் முதல் மூச்செடுத்து பூமியில் ஜனிக்கிறபோது இருக்கிற கிரக சூழ்நிலைக்கு கேற்றவாறு செயல்படும். அதில் ஒன்றுதான் உடம்பின் மொத்த இயக்க சக்தியான தசைகள்,மற்றும் தசைகளை இயக்குகிற ராகுசக்தி. பூமி சந்திரன் சுற்று பாதையின் வெளிவெட்டு சக்தியான ராகு சக்தியை திருநாகேஸ்வரம்,திருகாளஹஸ்தி,சர்ப்ப கோவில்களில் ஸ்தாபித்து வைத்து இருக்கிறார்கள்.நம்முடைய ஆதிமூலமான ஸ்துல சூட்சும ஆரம்ப புள்ளியான ஈஸ்வர சக்தியை மையமாகவும் வைத்து இருப்பார்கள் அச்சக்தி நம் மூளையின் செயல்பாட்டை சமன்படுத்தி ஸ்திர படுத்தும். பின்னர் ராகு சக்தி தீர்மானித்து இருக்கும் பகுதிக்கு செல்லும்போது ராகு தன்மையான தசை செயல்பாட்டை தூண்டகூடிய சுரப்பிகளின் செயல் திறனை சமன் படுத்தும்.அச்செயல்பாடு அதிகமாக இருந்தால் சமன் செய்தோ, குறைவாக இருப்பின் அதிக படுத்தவோ செய்யும். கலங்கிய நீரில் விழுந்த பொருளை தேட முடியாது. நீரை தெளிய வைப்பது ஈஸ்வர சக்தி.தெளிந்த பின் பொருளை எடுப்பது போன்றது ராகு வழிபாடு.
துர்க்கை வழிபாடு:- துர்க்கை என்பது இயக்கம். துர்க்கையை ராகுவின் சந்திர கலை என்றும் கொள்ளலாம்.அல்லது ஆவோகாரண ராகு சக்தி.இந்த துர்க்கை சக்தி ராகு தன்மையின் சந்திர தன்மையாக இருப்பதால் இதன் இயக்கம் நல ஆற்றலாக மட்டுமே இருக்கும்.ஆன்மிக உட்பகுதியில் போய் கூறினால் குண்டலினியின் ஆவோகாரண இயக்கம். துர்கையை வழிபடும்போது நம்முள் இருக்கிற ராகு சக்தி கெட்ட சக்தியாக இருப்பின் அதை நற் சக்தியாக மாற்றுகிற தன்மை துர்க்கை என்று சொல்லுகிற தன்மைக்கு உண்டு.அதனால்தான் ராகுவிற்கு பரிகாரமாக துர்க்கையை சொல்கிறார்கள்.இராகு பிறப்பு ஜாதகத்தில் 1,2,4,5,8.12 இடங்களில் இருப்பவர்களுக்கான பொதுவான விசயங்களுக்கு மேற்கூறியவை பொருந்தும்.ராகுவின் கிரக செரிக்கையை அந்தந்த கிரகங்களை பற்றி எழுதும் பொது இணைத்து எழுதுகிறேன்.தொடர்ந்து 8 கிரகங்களுக்கும் எழுதுகிறேன் உங்களுடைய கருத்தை பொறுத்து. இன்னும் வரும்............அஸ்ட்ரோ பாபு.

Tuesday 28 October 2014

பயம்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த பயம் இருட்டு பயமோ,திருட்டு பயமோ அல்ல, இந்த பயத்திற்கு விளக்கமோ ஏன்? ஆதரவோ கூட யாராலும் கூறமுடியாது.இந்த பயத்தை வெளியில் யாரிடமும் சொல்லவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாது. அப்படி பகிர்ந்தால் சிரிப்பார்கள் ஏளனம் பேசுவார்கள். அனால் இந்த பயத்தை அனுபவிப்பவர்கள் இதை சித்ரவதை என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்,ஏன்? எதனால்? என்று பார்ப்போம்.
காலைலோ, முன் பகலோ அல்லது மாலையிலோ வயிற்றில் ஒரு குண்டு மேலே எழுந்து வருது போல் இருக்கும். வியர்க்கும், இதய துடிப்பு அதிகரிக்கும்.என்னவோ இத்துடன் வாழ்க்கை முடிந்து விடும் என்று தோன்றும். வீட்டிலிருக்கிற அனைவரையும் துணைக்கு அழைக்கும். உடனே மருத்துவமனை தேடி போக சொல்லும்.மருத்துவமனை சென்றால் எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்தால் எதுவும் இருக்காது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவரின் கையை பற்றி கொண்டு காப்பாற்ற சொல்லி கதரியவர்களை பார்த்து இருக்கிறேன். மருத்துவரே குழம்பி மறுபடி,மறுபடி பரிசோதனைகளுக்கு எழுதி கொடுப்பார்.எல்லா பரிசோதனை முடிவுகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே கூறும்.அனால் கற்பனை விரிந்தோடும்,இறந்து விட்டாற்போல் அல்லது நிரந்தரமாக படுக்கையில் கிடப்பதுபோல் , உபயோகமில்லாமல் கிடப்பதுபோல், மிக பெரிய நோய் வந்து வீழ்த்தி விட்டது என்று தன்னிரக்கம் கொண்டு ........ இப்படி செல்லும் அந்த பயம். இந்த பயம் சிறு வியாதிகளை கணக்கு எடுத்து கொள்ளது, மாரடைப்பு,கான்செர்,கிட்னி இழப்பு போன்ற பெரிய நோய்களை மட்டும்தான் கணக்கெடுக்கும். பட்டவர்களுக்குத்தான் இதன் வேதனை புரியும். 7 1/2, அஷ்டம சனி நடப்பவர்களுக்கு இந்த பயம் வருகிற வைப்பு அதிகம்.
மருத்துவருக்கே கூட புரியாத பயம் இது.ஏன் இப்படி? நான் நேற்று எழுதிய சனி பற்றிய கட்டுரையில் கூறியCSF ( CEREBELLAR SPINAL FLUID) இன் செயல்பாட்டின் குறையே கரணம். இதன் சுரப்பு தன்மையில் மாற்றம் ஏற்பட்டு MIDULA யை தாக்கி,நரம்புகளும் தவறான செய்தியை கொடுக்கும். HYPOTHALAMAS தவறான கற்பனைகள் ஓடி மனதை தாக்கும்.
இதற்க்கு ஒரே மருந்து காலையில் வெறும் வயற்றில் நெல்லிக்காய் சாறு அருந்துவதுதான். சாறு அருந்திய 1 மணி நேரம் கழித்துதான்,டீ,காபி, காலை உணவு அருந்த வேண்டும். மது பழக்கம் உள்ளவர்கள் உடனே நிறுத்த வேண்டும்.மேலும் இதற்க்கு HOMEOPATHY இல் நல்ல மருந்துகள் இருக்கின்றன நல்ல HOMEOPATHY மருத்துவரை அணுகி நிவாரணம் பெறலாம்.
மேலு இந்த நேரங்களில் சனி சக்தி தீர்மானம் செய்து இருக்கிற திருநள்ளாறு,குச்சனூர் ஸ்தலங்களுக்கு சென்று கோவிலில் ஒரு நாள் இரவு தங்கி வர இந்த பயம் தெளியும்.
இன்னும் வரும்.......... அன்புடன் அஸ்ட்ரோ பாபு .
செவ்வாய்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை ஜோதிடத்தின் பெரிய சர்ச்சையை கிளப்புகிற அங்காரகன் என்ற செவ்வாய் பற்றியது,செவ்வாய் சூரிய குடும்பத்தின் நீள் வட்ட பாதையில் 4 வது கிரகமாகும். பூமிக்கு அடுத்த சுற்றில் சுற்றுவது. செவ்வாய் பூமியை சுற்றிவர 687 நாட்கள் ஆகும். ஒரு ராசி மண்டலத்தை கடக்க 57.25 நாட்கள் ஆகும்.இதன் சுற்றளவு பூமியின் பாதி என கணக்கிட்டு உள்ளனர். சிகப்பு நிறத்தை உடையது.காரணம் Iron Oxide மிக அதிகமாக செவ்வாயின் மேற்புறத்தில் காணப்டுவதால். மேலும் IRON,MAGNEESIUM POTASSIUM SULPHAR போன்ற வேதிபோருட்களும் உள்ளன.பூமியிலிருந்து 230 பில்லியன் கி.மீ .தூரத்தில் உள்ளது. இதற்க்கு 1) PHOPOL,2.DEIMESS. என்று 2 நிலாக்கள் உள்ளன.இது தன்னைத்தானே சுற்றிவர 24 மணி 37 நிமிடம் ஆகும்.
செவ்வாய் மனித உடம்பில் இரத்தம், இரத்தத்தை சார்ந்த இயக்கமும் ஆகும். செவ்வ்வாய் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் வலுவான இரத்த வகை உடையவர்களாக இருப்பார். அதாவது A+,AB+,O+ அதேபோல் ஆதிக்கம் குறைவாக இருப்பவர்கள் B+, ஆதிக்கம் இல்லாதவர்கள் NEGATIVE வகை இரத்த வகையை உடையவராக இருப்பர். செவ்வாய் BLOOD PLAZMA,HEMOGLOBIN,PLATS , போன்றவற்றின் செயல்களின் தலைமை இடம் ஆகும். எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்கிற வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அது இரத்தத்தை காத்து மனித உடம்பை நோய்களிலிருந்து காக்க உதவுவது நாம் அறிந்ததே . செவ்வாய் இயக்கம் உடம்பில் நன்றாக இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள். விளையாட்டு வீரர்கள்,ராணுவம்,போலீஸ் துறை போன்ற துறைகளில் இருப்பார்கள் HEMOGLOBIN ஆணுக்கு 12 ம் பெண்ணுக்கு 13 ம் இருக்கும்PLATE COUNT 6.5 ஆக இருக்கும்.இரத்தம் வலுவாக இருப்பின் இதயம் நன்றாக இயங்கி நரம்புகளுக்கு வலு கொடுத்து தசைகளை நன்றாக இயக்கி மூலையில் இருக்கிற CAVITIES உரம் சேர்த்து மொத்த உடம்பின் இயக்கத்தையும் உறுதியாகவும் நேர்த்தியாகவும் பார்த்து கொள்கிறது.
சரி.ஜோதிடத்தில்,இந்த செய்வாய் தோஷம் பாடாய் படுத்துகிறது அதாவது ராசி கட்டத்தில் 2,4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். இரத்தம் வலுவாக இருப்பதால் அதிக உணர்ச்சி வசபடுபவராகவும், செயல் திறன் மிக்கவராகவும் இருப்பார் செய்வாய் காரர்கள்.1). 2. இடம் குடும்பம்,வாக்கு ஸ்தானத்தை குறிக்கும்.குடும்பத்தில் எளிதில் உணர்ச்சி வசபடுவதால் கோபம்,நேர்கோட்டு பேச்சு,சுளீர் என்று பேசுதல் போன்றவை இருக்கும் இது குடும்ப ஒற்றும்மைக்கு உகந்த குணம் அல்ல அல்லவே.2). 4 ம் இடம் சுகஸ்தானம் இதிலும் வேகம் என்பது சரியானதல்ல.3) 7 ம் இடம் களத்திரம், அதாவது திருமணம்,கூட்டாளி, காமம் இவற்றை குறிக்கிற இடம். திருமண உறவில் காமம் என்பது தலை யாய் இருப்பது. இதில் இதே இரத்த வேகத்தில் இருப்பவர்கள் சேரும்போதுதான் பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால் தாம்பத்திய உறவில் ஆணுக்கோ,பெண்ணுக்கோ பல பிரச்சனைகள் ஏற்படும். மேலும் மாறுபட்ட இரத்த வகை சேரும்போது குழந்தை பிறப்பில் பெண்ணுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.இது மருத்துவ உண்மை ஆகும்.4) 8 ம் இடம் உயிர் ஸ்தானம் இதில் செவ்வாய் இருப்பின் அதிக பலத்தினால் இரத்த அழுத்தம், ஆபரேஷன் இதய சம்பத்த பட்ட நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. 5) 12 ம் இடம் அயன சயன போக ஸ்தானம். இது கொஞ்சம் பரவாஇல்லை இவர்கள் கொஞ்சம் வேகமாக இருப்பதால் தூக்கம் குறைவாக இருக்கும்.
இந்த இடங்களில் செவ்வாய் இருக்கும்போது மேற்குறிய வாழ்க்கையின் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் என்பதை த்தான் தோஷம் என்றனர் முன்னோர்.ஆதலால் மேற்கூறிய இடங்களில் செவ்வாய் இருக்கிற ஆணையையும் பெண்ணையும் தான் திருமண உறவுக்கு பார்க்க வேண்டும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மைதான்.மேலும் பெண்களின் மாதவிடாய்,கர்ப்ப பை பிரச்சனனைகளுக்கும் காரணம் செவ்வாய்தான்.அந்தி சாய்கிற நேரம் செவ்வாயை வானத்தில் மேற்கு பகுதியில் காணலாம்
செவ்வாய் பற்றி எழுத மிகுந்த இடமும் நேரமும் வேண்டும்.முடிந்தவரை முக்கியமான விஷயைங்களை கூறி இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
செவ்வாய் நீசம் உள்ளவர்களோ தோஷம் உள்ளவர்களோ கும்பகோணம் வைதீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரக பகவன் சந்நிதிக்கு சென்று ஒரு நாள் தங்கி வாருங்கள் அங்கு தீர்மானித்து இருக்கிற சக்தி கொஞ்சம் மாற்றத்தை கொடுக்கும்.
இன்னும் வரும்........ அன்புடன் அஸ்ட்ரோ பாபு.
நண்பர்களுக்கு வணக்கம்,இந்த கட்டுரை திருமண உறவை பற்றியது.நம்முள் 80% பேருக்கு திருமண உறவில் நிறைய வெற்றிடங்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நிறைய பேர் வாழ்க்கையை நொந்து கொள்கிற உறவும்.நான் நன்றாக இருக்கிறேன் என்று சில பேர் வாழ்க்கையை பாராட்டுவதற்கு காரணமும் இந்த உறவுதான் ஏன் இந்த முரண்பாடு என்று பார்ப்போம்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து மத,சமுதாய நெறிமுறைகளோடு வாழ்க்கையை சீர்பட நடத்துவதற்கு ஏற்படுத்திய உறவு திருமண உறவு. இதில் அந்த ஆணும் பெண்ணும் மனமொத்து வாழ்க்கையை வாழவேண்டும். அதற்க்கு 1) புரிந்து கொள்ளல்,(புதன்)2) ஏற்று கொள்ளல்(குரு),3)விட்டு கொடுத்தல் (குரு),4)நிபந்தனை இல்லா
காதல்(சுக்கிரன்),5)தாம்பத்தியம்(சுக்கிரன்,ராகு) இந்த மிக முக்கியமான குணங்கள் கண்டிப்பாக வேண்டும்.
இவற்றில் எல்லாவற்றிற்கும் முதலாய் புரிந்து கொள்ளல். இது புதனுடைய ........ நம் மூலையில், புதனுடைய தன்மை உடலில் ஆண்,பெண் இருவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.( புதனை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள் )விட்டு கொடுத்தல் இது பாதி புதன், பாதி குரு தன்மை. ஏற்று கொள்ளல் இந்த முதிர்ந்த எண்ணம் இருப்பவர்களிடையே எந்த பிரச்னையும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.இது முழுக்க குருவின் பங்கு, .நிபந்தனை இல்லா காதல் உடம்பிலும் புத்தியிலும் சுக்கிர தன்மை இருப்பவர்க்கு இயற்க்கையாகவே காதல் ஊற்றெடுக்கும். கொஞ்சம் குருவின் தன்மையும் இருந்தால் இந்த நிபந்தனை இல்லா காதல் கைகூடும்.அடுத்து தாம்பத்தியம் இது முழுக்க சுக்கிரன் சார்ந்த விஷயம் ராகுவின் துணையும் இருந்தால் இன்னும் சிறப்பு. ஆனால் மேற்கூறிய குணங்கள் இல்லாமல் இந்த தாம்பத்தியம் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது. மனது காதலால் விரிந்து தாம்பத்தியம் மலர வேண்டும்.அதுதான் தெய்வீகம்.தெய்வீகத்தை திருமண உறவில் மட்டுமே உணர முடியும்.
புதன்,குரு,சுக்கிரன்,ராகு தன்மைகள் ஒரு ஆணுக்கு எவ்வாறு உள்ளதோ அதை பொருத்து பெண்ணையும் பெண்ணுக்கு உள்ளவாறு ஆணையும் சேர்க்க வேண்டும் இது புரிய வேண்டும் என்றுதான் முந்தைய பத்தியில் சுருக்கமாக ஒவ்வொரு ....... சொன்னேன். இப்பொழுது ஜோதிட மொழியில் எவ்வாறு .... செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் ராசி கட்டத்தில் 2,4,5,7,9,11 இடங்களாக
இருக்க வேண்டும்.2.குடும்பம் 4 சுகம்,5,குணம்,7,தாம்பத்தியம்,9,பாக்கியம் 11,லாபம் ஸ்தானங்களில் இருத்தல் அவசியம். அடுத்து நட்சத்திரம்,ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்புக்குரிய நட்சத்திரமாக இருத்தல் நலம். சிலருக்கு யோகாதிபதி நட்சத்திரமாக அமையும் இந்த யோகாதிபதி நட்சத்திர பொருத்தம் இருப்பவர்களுக்குத்தான் திருமணம் சொர்க்கத்தில் நிச்சியக்க படும் எனலாம்.ஆனால் பெண்ணுக்கு ஆணும் ஆணுக்கு பெண்ணும் 6 க்கு 8 என்ற ஸ்தானத்தில் மட்டும் இருக்க கூடாது அப்டி இருந்தால் ஏட்டிக்கு போட்டிதான்.
இவற்றை ஏதுமறியா காதல் திருமணங்களில் பெரும்பாலும் தோல்வி அடைவதற்கு காரணம் மேற்கூறியவைதான்.ஆயிரம் காலத்து பயிரான திருமணத்துக்கு பார்க்கும் போது ஆண் பெண்ணின் பிறந்த தேதி,நேரம் பிறந்த இடம் மூன்றையும் கொடுத்து நல்ல ஜோதிடரிடம் அறிவுரை பெற்று செய்வது நலம் என்பது என் தனிப்பட்ட கருத்து.நம்முடைய படைப்பின் சூத்திரம் தான் இந்த ராசி கட்டம் ஒரு மருத்துவரை விட மேலாக துல்லியமாக சொல்லகூடிய போர்முலா.ஆகையால் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்று ஒதுக்காமல் ஒப்பிட்டு திருமணம் செய்யுங்கள் வளம் பெறுங்கள் ஆனந்தமாக வாழுங்கள்...
இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு.
ஜோதிடம் ---- உண்மையா?
நண்பர்களுக்கு வணக்கம் ஜோதிட பாதையில் இருக்கும் நானே இந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டிய நிர்பந்தம் இன்றைய சூழ்நிலையில் ஜோதிடம் என்பது வேப்பிலை அடித்து குறி சொல்லும் ஒரு விஷயமாக போனது.மக்கள் மத்தியில்,ஜோதிடம் என்பது ஒரு மிக பெரிய அரிய கலை அக்கலை தகுதி இல்லாதவரிடம் சென்று அக்க்கலையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்று நம் முன்னோர்கள் இக்கலையின் மூலத்தை அல்லது சூத்திரத்தை மறைத்து அதன் பதிவுகளை மட்டும் விட்டு சென்றதன் விளைவும் மூலம் தெரியாமல் கணக்குகளை மட்டும் கையில் வைத்து கொண்டு இக்கலையை கையாள்வதும் பெரிய பலவீனமான விஷயமாக போனது. தன சுய அறிவாலும் ஆராய்ச்சி சிந்தனையாலும் அல்லது குரு மூலமாக மூலத்தை தெரிந்து கொண்ட சிலரும் அதை இன்னமும் ரகசியமாக பாதுகாப்பதும், ஜோதிடம் என்பதை ஒரு அறிவியல்,கணக்கியல் என்பதை மறந்து என்னப்பா! உண்மையா அது போல் நடக்குமா? என்று பட்டி மன்றம் நடத்துகிற சந்தேக சூழலில் தான் இன்னமும் ஜோதிடம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நிதர்சனமான உண்மை என்பதால்தான் இன்னமும் அழியாமல் அதுவே தன்னை காத்து வந்து கொண்டிருக்கிறது.
இருக்கும் இடம், இடத்தின் தன்மை, இதன்மையில் செயல்படும் சக்திகள்,நாம் யார்,எங்கிருந்து வந்தோம்,எதனால் உருவானோம்,எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பற்றியதுதான் ஜோதிடகலையின் மூலமே.இதை சந்தேகிப்போர்,இக்கலையை உள்வைத்து மேல் தடவிய இனிப்பு கலவையான கடவுள் தத்துவத்தை எவ்வித மாற்று கருத்தும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டு போற்றி வருவதும் அதை இன்னும் இன்னும் மெருகேற்றி போற்றி வருவதுதான் வேடிக்கை. ஜோதிடம் என்பது ஒரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விஷயங்களை அவருடைய கட்டத்தை பார்த்து சொல்வது என்று நினைத்து கொண்டிருகிறார்கள்.ஜோதிடம்தான் பிரபஞ்ச மூலசூத்திரம். இல்லாத ஒன்றை(கடவுள் தத்துவம்) இருக்கிறது என்று அதற்க்கு கற்பனை (உருவ வழிபாடு) அடையாளங்களை வைத்து கூறிய விஷயங்களை ஏற்று கொள்கிறவர்கள் இதன் மூலத்தை கண்களால் பார்த்து,அனுதினமும் உணருகிற விஷயத்தை மறுப்பதோ சந்தேகிப்பதோ விந்தையாக இல்லை. ஜோதிடம்தான் அனைத்திற்கும் மூலம், சரி மேலே கூறியவைகளை கொஞ்சம் விரிவாக பார்த்தோமானால் ஜோதிடம் எவ்வாறு அனைத்திற்கும் மூலம் என்று தெரியும்.
இடம்: நாம் இருக்க வேண்டும் என்றால் இருப்பு என்று ஒன்று வேண்டும் அல்லவா? அந்த இருப்புதான் இடம்- இந்த பூமி என்ற நாம் வாழும் இடம். இந்த பூமி என்பது என்ன? எங்கிருக்கிறது? பூமி என்பது ஒரு கிரகம் என்பதும் அது சூரியன் என்ற ஒரு நெருப்பு கோல கிரகத்தை மையமாக கொண்டிருக்கிற ஏழு அடுக்கு சுற்று பாதையில் ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு கிரகங்கள் பூமியை போலவே தன்னைதானே சுற்றி கொண்டு. சூரியனையும் சுற்றி வருகிறது.ஒவ்வொரு கிரகமும் மற்ற சுற்று கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இருக்கிறது,இவை போக ஒவ்வொரு சுற்று பாதை கிரகத்துக்கும் துணை கிரகங்களான சந்திரன்கள் வேறு அக்கிரகத்தை ஆட கொள்கின்றன.அப்படியானால் இந்த பூமிக்கும் மற்ற கிரகங்களின் ஆளுமையும் அதன் தன்மைகளும் இருக்க தானே செய்யும், சூரியன்,சூரியனை சுற்றுகிற அனைத்து கிரகங்களின் சுற்றுப்பாதை,அதன் வேகம்,அதன் கால அளவு,சுற்றுவதினால் ஏற்படுகிற விசை மாற்றம்,சக்தி ஓட்டம்,சக்திமாற்றம்,.இத்தனை மேற்கூறிய விஷயங்களுக்கும் ஒரு இருப்பு வேண்டும் அல்லவா அதுதான் நட்சத்திர மண்டலம்.அதில் நம் பூமி இருக்கிற சுற்று பாதையில் ஆளுமை செய்கிற நட்சத்திரங்களான " 27 நட்சத்திரங்கள் "
,பூமி தன்னை சுற்றுகிற கால அளவான "நாள்" பூமி சூரியனை சுற்றுகிற கால அளவான "வருடம்". பூமியின் துணை கோளான சந்திரன் பூமியை சுற்றுகிற கால அளவான இரவு,பகல்,சூரியன்,சந்திரன்,பூமி இவைகளின் தினசரி சுற்றுகளின் இடைவெளிகளை கணக்கான "திதி", பூமி சுற்றுகிற சுற்றின் ஆரம்பம்,முடிவு கணக்கெடுக்கும் "திசை".அவற்றை துல்லியபடுத்தும் "திக்கு".பூமியின் சுற்று பாதையில் ஏற்படும் மற்ற சுற்று பாதை கிரகங்களின் மாற்றங்கள். ஒட்டு மொத்த சூரிய சுற்று பாதையின் சக்தி நிலைகளான "கேந்திரம்". சுற்று பாதை சக்திகளின் சுழி முனைகள் "திரிகோணம்" இவை எல்லாம் இந்த பூமியில் உள்ள உயிரினங்களான, அதில் பரிணாம வளர்ச்சியின் முதிர்ச்சியில் வந்த மனிதன்.அவன் மேற்கூறிய சக்தி ஓட்டங்களின் உள்ளே தோன்றுவது "லக்னம்" தோன்றுகிற இடம் "ராசி" இவைகளை கூறுகிற ஏரியல் ஆன "நட்சத்திரம்" இந்த பிரமாண்டமான படம் தான் ஜோதிடம். மேலும் மேற்கூறிய ஒட்டு மொத்த இயக்கமும் நம்மை(மனிதனை) எவ்வாறு இயகுகிறது என்பதுதான் ஜோதிட சூட்சுமம்.அதற்க்கு உண்டான சூத்திர கணக்குகள்.
இந்த பிரமாண்ட பிரபஞ்ச விசயத்தை வானவியல் என்று கண்டுபிடித்து உலகுக்கு அளித்த எகிப்தியர்கள் நமக்கு முன்னோடியாக இருந்தாலும் இந்த ரகசியம் பூமியில் மனிதனிடம் எவ்வாறு செயல் படுகிறது நம் உடல் நம்மை மேற்கண்ட வான வெளி கிரகங்களின் ஆளுமையில் எவ்வாறு இயக்குகிறது. நம் உடம்பில் வானவியலின் வித்தைகள் எவாறு செயல்படுகிறது என்று மானிட வர்க்கத்திற்கு சொன்னவன் நம் இந்தியன்.
இந்த பிரமாண்ட கிரகங்களின் சூத்திரத்தை 12 கட்டங்களாக கொண்டு வந்து கிரக ஓட்டங்களையும் நட்சத்திர இருப்புகளையும் இவை ஆளுகின்ற விஷயங்களின் வரைபடம்தான் அய்யா ஜோதிடம்.எல்லாவற்றிற்கும் ஆதாரத்தின் மூலமே ஏற்று கொள்வோர் மேற்கூறிய அனைத்தையும் தினசரி உணர்ந்தும் இச்சங்கதியில்தான் வாழுகிறோம் என்பதை மறந்து ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை நம்புவத வேண்டாமா? என்று வாதிடுவது தான் உலக மாபெரும் விந்தையாக தெரிகிறது ? ஜோதிடம் நம் இருப்பிடம்,நம் உற்பத்தி,சூத்திரம் நம் செயல்பாட்டிற்கான software.
இந்த பிரமாண்ட ரகசியத்தை சூட்சுமத்தை அறிவியலை கணக்கை வணங்குவோம் போற்றுவோம். இன்னும் வரும்...... அஸ்ட்ரோ பாபு.
குரு (மறு பதிப்பு)
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை இயற்க்கை சுபர் என்று சொல்லுகிற குருவை பற்றியது. நம்மிடம் சனியை பற்றி எந்த அளவு பயமும் இருக்கிறதோ அந்த அளவுக்கு குருவை பற்றிய சந்தோஷம் இருக்கும். வாழ்கையில் நாம் சந்திக்கிற அல்லது எதிர்பார்க்கிற அனைத்து நல்ல விசயங்களுக்கும் குருவின் துணை வேண்டும் என்பது அனைவரின் கருத்து. எதனால் அப்படி குரு என்ன அவ்வளவு உயர்வு ? பார்ப்போம்.
குரு சூரிய குடும்பத்தின் 5 வது கிரகமாகும்.சூரிய குடும்பத்தின் பெரிய கிரகங்களுள் குருவும் ஒன்று 1,42,984 கி,மீ சுற்றளவு கொண்ட பெரிய கிரகம்.இதில் 88-90% ஹைட்ரோஜென் 8-12% ஹீலியம் உள்ளது மீதேன்,நீராவி மற்றும் அம்மோனியா தன்னுடைய வளிமண்டலத்தில் கொண்டுள்ளது.பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள்( 1 வருடம்) என்றால் குருசூரியனை சுற்றி வர 11.86 ஆண்டுகள் ஆகும்.
நம் உடல் மனது இவற்றின் செயல்பாடுகள் அனைத்தையும் வழிநடுத்துகிற, இயக்குகிற ஒரு மாஸ்டர் CPU வாக இருப்பது நம் மூளை பகுதியாகும். மூளையில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன. செரிபரம்,செரிபலம்,மிடுள இவை மூன்றையும் இணைக்கிற பிரைன் ஸ்டெம் இவை ஒவ்வொரு பகுதியும் உடம்பின் சில உறுப்புகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை தீர்மானிகின்றன மூளை எதன் மூலம் செயல்களை செய்கிறது என்றால் ஒவ்வொரு பகுதியில் சுரக்கிற திரவங்கள் மூலமாக மூளையின் ஒட்டுமொத்த செயல்களும் செயல் வடிவம் பெறுகின்றன. நான் ஏற்கனவே புதன்,ராகு,கேது,செவ்வாய் சந்திரன்,கட்டுரைகளில் எழுதியுள்ள அனைத்து விசயங்களின் கட்டுபாட்டு அறையாக செயல்படும் குருவின் தன்மை நம்முள் பலமாக இருப்பின் மேற்கூறிய கிரகங்களின் கட்டுப்பாடும் செயல் திறனும் நேர்கோணமாக இயங்கும்.அதாவது PITUITARY,NON NERVINESS JUNCTION,INDUCING OF MUSCLES,CONTROL OF BLOOD CELLS,ACTIVITIES OF BLOOD இவைகளின் கட்டுபாடு அறையாக விளங்குகிற மூளையின் செயல்களை குரு தன்மை இயக்குகிறது.இந்த இயக்கங்களின் மூலமே குரு தன்மைதான். அதாவது சுக்கிலம் சுக்கிரன் என்றால் விந்தணுக்களின் பலம் குருவை சார்ந்தது.(புத்திரகாரகன்)புரிந்து கொள்ளல்,வெளிபடுத்துதல்,இவற்றின் மூலமாக கணக்கிடுதல்(வித்தை காரகன்,கல்விகாரகன் ) இதன் பலன்கள் ஆனா பொருள் ஈட்டல் (தனகாரகன்) இம்மூன்று பொறுப்புகளும் குருவிற்கு இதை வைத்துதான் கொடுத்து இருப்பர்களோ நம் முன்னோர்கள்?.
ஜோதிடத்தில் யோகம் என்று கூறுகிற நம்மின் நற் தன்மைகளின் வீரியங்கள் குருவின் தன்மையால் இன்னும் மேம்படுத்தலும் அல்லது குருவை முன்னிருத்தியே வகுத்துள்ளனர்.குரு சந்திர யோகம் கஜ கேசரி யோகம் போன்றவை உதாரணங்கள்.
இத்தனை விசயங்களின் கட்டுப்பாடு இருப்பதால் இதை கடந்து செல்கிற ஆன்மீக விசயங்களும் ஞான விசயங்களும் குருவே பொறுப்பு எடுக்கிறார்.
மேலும் இந்த ஒரு கிரகத்துக்குதான் இரண்டு இணைகின்ற பஞ்ச பூத தத்துவங்களை கொடுத்து இருகிறார்கள் அதாவது நெருப்பு மற்றும் ஜல தத்துவம் இந்த தத்துவங்களின் குணங்களின் அடக்கமும் குரு தன்மைக்குள் அடங்குகிறது. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் பொறுப்பு எடுப்பதால் இந்த ராசி காரர்கள் இந்த சமுகம் வகுத்து இருக்கிற நற் தன்மைகளிலிருந்து சிறிதும் வழுவாமால் நேர்மை யோடு வாழ்க்கையை நடுத்துபவர்களாக இருப்பார்கள்
அதிக பொறுப்புகளை பிரபஞ்சத்திலும், நம் உடம்பிலும் எடுப்பதால் குருவை பற்றி எழுத ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு இடம் தேவை என்றாலும் எனக்கு தெரிந்தவரை நான் அறிந்த புரிந்து கொண்ட குரு விஷயங்களை கொடுத்து இருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு என் குருவை நமஸ்கரித்து முடிக்கிறேன். இன்னும் வரும்....... அஸ்ட்ரோ பாபு
பாகம் 2
இந்த கர்மாவின் துவக்கம் மூளை பகுதி,இது சுசும நாடி என்று சொல்கிற முதுகு தண்டின் (சனி)வழியாக தன் இயக்கத்தை செய்து
கொண்டிருக்கிறது (என் சனியின் கட்டுரை படிக்கவும் இதனால்தான் சனியை கர்மக்காரகன் என்று கூறினாரோ ). இந்த சுசும நாடி 7 பகுதியாக செயல் படுகிறது இதன் சுழிமுனை முதுகு தண்டின் கீழ் பகுதியில் அடங்கி இருக்கிறது,இந்த கர்மா சுசும நாடியில் 7 படிகளில் அமர்ந்து செயல் படுகிறது.அதுதான் 7 சக்கரங்கள் 1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம் 3,மணிபூரகம் 4. அனாகதம் 5.விசுக்தி 6.ஆங்ஞா 7.சகஸ்ரா.இந்த 7 நிலைகளின் தன்மையும் 7 கிரகங்களால் ஆதிக்கம் செய்ய படுகிறது.உதாரணத்திற்கு சுவாதிஷ்டானம் ஆளுவது சுக்கிரன் என்பது அந்த சக்கரத்தின் தன்மைகளை பார்த்தாலே தெரியும்.சுக்கிர தன்மைகள் அந்த கருவுக்குள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த இடம் தீர்மானம் செய்கிறது.சுக்கிரன் வலுவிழந்து இருந்தால் (தோஷம்) மந்தமாகவும்,வலுவோடு இருந்தால் (யோகம்) தீவிரமாகவும் சுவாதிஷ்டானம் செயல் படும்.(7 சக்கரங்களின் தன்மையும் கிரக நிலையை பற்றி பின்னேர் எழுதுகிறேன்) இந்த கர்மா ஒவ்வொரு கணமும் நம்முள் இயங்கி கொண்டே இருக்கிறது.சரி இந்த கர்மாவில் இருந்து தப்பிகவோ அல்லது விடுபடவோ முடியாதா என்ற நம் முன்னோர்களின் ஆராய்ச்சியில் பிறந்ததுதான் யோக கலை யோக கலையின் ஒரு பகுதி தியானம். எண்ணங்களற்ற நிலை, சூன்யா, 1 மணி நேரம் சூனியாவில் இருந்தால் எண்ணங்களற்ற நிலை ஒரு ஷணம் கிடைத்தால் பெரும் விஷயம். அந்த சூனிய அளவை பெருக்கி கொண்டே சென்றால் பயிற்சியின் மூலமாக கர்மா இல்ல நிலை ஏற்படும் இதற்கு நம் மூச்சுயின் இயக்கத்தை சீர்படுத்தி எண்ணங்களை ஒரு நிலைக்கு கொண்டு வந்து தியானத்திற்கு மனதை தயார் செய்வது பிரணாயாமம். இவைகள் மூலம் மனதை நாம் சொல்லும்விதமாக கொண்டு வந்து கர்மாவை கரைத்தல் இது போன்று கர்மாவை இல்லாமல் செய்ய நம் முன்னோர்கள் கையாண்ட கலைகள் ஏராளம் நாளடைவில் இவை எல்லாம் இன்று வியாபாரமாய் போனது.ஒரு துர்பாக்கியம். இந்த கலைகள் மூலமாக கர்மா இல்லாத நிலைக்கு போகிறபோது தான் முக்தி. இந்த கர்மா பயணிக்கிற தோணிதான் சுக்கிலமும் சுரோணிதமும் . ஞானிகள் கர்மாக்கள் வேறு கரு எடுக்க கூடாதென சுக்கிலத்தை கட்டி இருக்கிற உடம்பிலேயே கர்மாவை கரைத்து யோக கலையின் மூலமாக கொன்றார்கள்.நண்பர்களே மிக பெரிய விஷயத்தை கையிலெடுத்து அதில் இருக்கிற முக்கிய கருத்துக்களை முடிந்த வரையில் சுருக்கி கொடுத்து இருக்கிறேன். நான் கூறியுள்ள விஷயங்கள் ஒவ்வுன்றும் ஒரு புத்தகம் எழுதுகிற அளவு விஷயம் ஒவ்வொரு விஷயத்தையும் மேலோட்டமாய் பாராமல் ஆழ்ந்து பாருங்கள் நம் மூலம் என்னவென்று புரிபடும்.
இன்னும் வரும்....... அஸ்ட்ரோ பாபு....
கர்மா ( பாகம் 1 ) (மறு பதிப்பு )
நண்பர்களுக்கு வணக்கம் எந்த கட்டுரை மனிதனின் மூலமாக சொல்லபடுகிற கர்மாவை பற்றியது, ஒரு மனிதனை பற்றிய நல்ல கேட்ட விஷயங்களை சொல்கிறபோது அவனவன் கர்மா என்ற வழக்கு சொல்லை அனைவரும் கேட்டு கொண்டிருக்கிறோம். கர்மா என்றால் என்ன என்று உரைப்பவரிடம் வினவினால், கர்மா அவரவர் முன்ஜென்ம பாவ,புண்ணியம் என்று கூறுவர். இதை பற்றிய நீண்ட நெடுநாளாய் என்மனதில் ஓடி கொண்டிருக்கிற ஒரு விஷயத்தை நெடு நாளாய் ஆழ்ந்து படித்து,ஆன்மீக பெரியவர்கள்,ஜோதிட ஆய்வாளர்கள்,ஆசான்கள் இவர்களிடம் கல்ந்தாராயிந்து கிடைத்த விஷயங்களை என்னுள் போட்டு தேடி பார்தததன் விளைவு இந்த கட்டுரை.
எண்ணங்கள் தான் ஒரு மனிதனை ஆட்கொள்கிறது வழி நடத்துகிறது என்பதை நாம் கேட்டும் உணர்ந்தும் இருக்கிறோம்.அந்த எண்ணங்கள் நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊற வேண்டுமென்றால் அவ்வெண்ணத்தின் ஆழமும் தீவிரமும் இருக்க வேண்டும்.அவ்வாறு தீவிரமாக இருக்கிற எண்ணமே வாழ்க்கையாய் மாறி போகிறது..சரி அடுத்து ஒரு உயிரை உருவாக்குகிற ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் செல்லில் ஊறிப்போன தீவிர எண்ணங்களை கொண்டு இருக்கும் அல்லவா? வெவ்வேறு எண்ணங்களை தன்னகத்தே கொண்ட சுக்கிலமும்,சுரோணிதமும் கலந்து அந்த கலவையில் இரண்டும் கலந்த அதாவது இரண்டு எண்ணங்களும் கலந்த ஒரு கலவை உயிரோட்டம் பெற்று கருவாக வளர்கிறது,ஆணின் குண நலன்களோடும் , பெண்ணின் குண நலன்களோடும் ( உருவம்,உடல் அமைப்பு,உறுப்புகளின்
அமைப்பு அனைத்தும் ) கலந்த கலவையில் உருவான கரு எப்படி உருவங்களை கொண்டிருக்கிறதோ அப்படியே அந்த ஆணின்,பெண்ணின் எண்ணங்களையும் கொண்டிருக்கிறது. அந்த கருவின் மூலாமாக கிடைத்த எண்ணங்கள் தான்,கரு வளர்ந்து உரு பெற்று மனிதனாக ஆகி அந்த மனிதனின் செயல்களாக வடிவு பெறுகிறது.கருவுக்குள் தோன்றிய எண்ணங்கள்தான் கர்மா அந்த எண்ணங்களின் செயல் வடிவம் பெறுவது கர்ம வினை என்கிறோம்.இந்த எண்ணங்கள் எவ்வாறு செயல் படும், இந்த எண்ணங்களின் வலிவு,திண்மை,செயல்படும் விதம் செயல் படுகிற வாழ்வியல் இடங்கள் போன்றவை அந்த கரு உருவாகும் போது இருக்கிற பிரபஞ்ச தன்மையின், கோள்களின் நிலை பொருத்து மனிதனுள் செயல்படுகிறது.இந்த செயல்பாட்டு கணக்குதான் அந்த கருவின் ஜாதக கட்டம்.... தொடரும் பாகம் -2 இல் . இன்னும் வரும் ....அஸ்ட்ரோ பாபு
நண்பர்களுக்கு வணக்கம் ராசிகளை எப்படி 12 ஆக பிரித்தார்கள்? 360 பாகைகளை எதற்கு 30 பாகைகளாக பிரிக்க வேண்டும்?
நண்பர்களுக்கு வணக்கம் ,
சூரிய வட்டப்பாதை ஒரு நீள் வட்ட பாதை என்பதும் அதில் அனைத்து கிரகங்களும் தனக்கென ஒரு பாதையில் தன்னைத்தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருவதும் நாம் அறிந்ததே. இதில் பூமியின் பாதை சூரியனில் இருந்து நான்காவது அடுக்கு பாதையாகும்.இதில் பூமி 23 டிகிரி சாய் கோணத்தில் தன்னைதானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.இந்த நீள் சுற்று பாதையில் இருக்கிற வளைவுகளை பிரித்தால் 12 வளைவுகள் வரும். ஒவ்வொரு வளைவும் 30 டிகிரி கோணத்தில் வளைகின்றன.ஆக 12 வளைவுகள் க்ஸ் 30 டிகிரி= 360 இதுதான் ஒரு முழு சுற்று பாதை.
பூமி தன்னைதானே சுற்றுகிற அளவையும் பூமி சூரியனை சுற்றுகிற அளவையும் நம் முன்னோர்கள் நாம் மூச்சுவிடும் கால அளவுகளை வைத்து கணக்கிட்டு உள்ளார்கள்.பூமி சூரியனுக்கு முகமும்,முதுகும் காட்டிட 21,600 சுவாசம் நேரம் ஆகும்.இதை இன்னமும் துல்லியமாக கணிக்கிட நாடி துடிப்பு கணக்கு ( இதை பற்றி பின்னர் எழுதுகிறேன்).

இந்த 12 வளைவுகளை சூரிய பாதையில் பூமியை மையமாக வைத்து சூரியனிலிருந்து , சனியின் சூரிய பாதை வரை அந்தந்த கிரகங்களின் பாதையில் 30 டிகிரி கோணத்தில் இருக்கிற வளைவுகளை ஒன்று சேர்த்து நேர்கோட்டால் வரைந்தால் ஒரு குறுங்கோணம் வரும்.இதுதான் ராசி என்றனர். 7 கிரகங்களின் சுற்று பாதையும் சேர்த்து ராசி மண்டலம் என்றனர்.
ஒவ்வொரு கிரகமும் தன்னைதானே சுற்றி, அதுவும் ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி , சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு, என இந்த மூன்று சக்தியும் ஒவ்வொரு வளைவுகளில் ஒவ்வொரு விதமான சக்தியை கொண்டதாக இருக்கிறது.ஒவ்வொரு வளைவுகளில் ஒவ்வொரு விதமான வேகம் காந்த சக்தி மாற்றம், காந்த சக்தி,ஈர்ப்பு சக்தி கலவை என்று இந்த ராசிகட்டம் ஒவ்வொரு விதமாய் தன்னை வெளி படுத்து கிறது.
இந்த ராசி மண்டலத்தை பூமி கடக்கிற காலத்தை மேற்சொன்ன அளவுகளை கொண்டுதான், மணி,நாட்கள்,மாதம்,வருடம் என நாட்காட்டி யாக சொன்னார்கள்.
காலே காற்றாய் , காற்றே உயிராய்,
காற்றின் அசைவே உயிரின் துடிப்பாய்
துடிக்கும் நாடி வினாடியாகி
நாழிகை நாளாய்,திங்கள்,ஆண்டாயீ......திரு. பொன்னையா சுவாமிகளின் பொன்னான வரிகள் இதை தெளிவாக உணர்த்தும்
இன்னும் வரும்...............அஸ்ட்ரோ பாபு
எந்த கோவிலுக்கு செல்வது.
நண்பர்களுக்கு வணக்கம், என் நண்பர்கள் சனி கிழமை தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம்.முதலில் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு அப்படியே பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து அனுமனுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வருவர்.இது தவறான வழிபாட்டு முறை ஆகும்.எப்படி என்று பார்ப்போம்.
ஈஸ்வரன் கோவில் என்பது குரு(JUIPER) சக்தியை தீர்மானம் செய்து ஒரு ஸ்தூபி போல கற்ப கிரகத்தில் நிறுத்தி வைத்து இருப்பார்கள்,லிங்கத்தின் கீழ் இருக்கும் செப்பு தகட்டிர்க்கும் மேல் இருக்கிற கோபுரத்தின் ஏரியல் ஆன கலசத்திற்க்கும் ஒரு WIRELESS CONNECTION இருக்கும் இந்த சக்தி நம்முள் இறங்கி மூளையின் ஒட்டு மொத்த CONTROL ரூமையும் சமன் படுத்தும் ஏன் என்றால் குருவின் கதிர்கள் பூமியில் மனிதனின் மூளையின் ஒட்டு மொத்த இயக்கத்தின் தூண்டு கோளாகும். ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் போது மூளையின் ஒட்டு மொத்த சக்தியும் அமைதி பெரும்.ஆன்மீக முறையில் சொல்ல வேண்டும் என்றால் ஈஸ்வர சக்தி முக்தி ஆகும்.ஈஸ்வர கோவிலில் பயன்படுத்த படும் வில்வம் விபுதி உத்ரட்சம் போன்றவை அமைதியை நம்முள் தக்க வைப்பவை.
ஆனால் பெருமாள் கோவில் இதற்கு நேர் எதிரான சம்சார சக்தி அதாவது சுக்கிரன் சக்தி ஆகும். கல்யாண குணங்களாகிய குடும்பம்,கலகலப்பு, சந்தோஷம் சம்சாரம்,இவற்றின் தூண்டுதல் சம்சார உலகிலேயே கடவுளுடன் வாழ்வது., அங்கு பயன் படுத்தப்படும் பச்சை கற்பூரம், சந்தனம்,சம்பங்கி போன்ற வாசனை பொருள்கள் நமக்குள் சம்சார தனத்தை தூண்டும் இரண்டும் இரு வேறு சக்திகள். இரண்டு கோவிலுக்கும் செல்வது என்பது BREAK பிடித்து கொண்டே ACCELERATOR கொடுப்பது.
அனுமன் சக்தி நம்முள் இருக்கிற குண்டலினி நம்முள் இருக்கிற சக்தி பிரவாகம் ஆதலால்தான் அவரை பாடி பில்டர் போல சித்தரித்து இருக்கிறார்கள் பெருமாள் சக்தியும் அனுமன் சக்தியும் சம்சார வாழ்விற்கு அவசியம் ஆதலால்தான் பெருமாள் கோவிலில் அனுமனை தனி கோவிலில் வைத்து இருப்பார்கள்.
ஆதலால் எதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள் அந்த சக்தியை மட்டும் உணருங்கள் பலன் பெறுங்கள்.
இன்னும் வரும் ............. அஸ்ட்ரோ பாபு.
சனி (மறுபதிப்பு)
என் அடுத்த கிரகங்களின் பரிகார வழிபாடு சனியை பற்றியதால் இந்த பதிப்பை பதிகிறேன்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை சனியை பற்றியது.இந்த தலைப்பை பார்த்ததும் என் கட்டுரைகளை ஜோதிட கட்டுரைதானே என்று தள்ளியவர்கள் கூட உடனே கூர்ந்து படிபீர்களே!! அந்த அளவுக்கு சனி பற்றிய பயம் நம்முள் இருக்கிறது.
சனி என்னவோ நமக்கு நேர் அல்லது மறைவாக இருந்து கொண்டு கங்கணம் கட்டி கொண்டு நமக்கு கெடுதல் செய்வதாக நினைத்து கொள்கிறோம். நமக்கு முன்னோர்கள் கூறியதும்,பல வழக்கு பழமொழிகளும் நம்மை அப்படி நினைக்க சொல்லி பயமுறுத்துகின்றன.ஆனால் சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
CSF : CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.
NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி தீர்மானிகிறது.இப்பொழுது புரிகிறதா சனி பாதித்தால் எங்கு எங்கெல்லாம் பிரச்சனை ஏற்படும் என்று. இத்தனை PORTFOLIO வை சனி வைத்து இருப்பதால் தான் பயம். மற்ற கிரகங்களுக்கு 1,2 PORTFOLIO தான் உண்டு. இத்தனைக்கும் சூரிய வட்ட பாதையில் 6 வதாக தொலை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் கதிர்வீச்சு பூமியை பூமியில் இருக்கிற உயிர்களில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது பார்த்தீர்களா. நான் ஒரு முறை நாசா WEB SITE ல் படித்தது, பூமியில் இருந்து ராக்கெட்டில் பயணித்தால் 700 கி,மீ, வேகத்தில் 41/2 ஆண்டுகள் ஆகுமாம் சனியை சென்றடைய.
ஜோதிடத்தில் சனியின் கோட்சார பயணம் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் ஆகும்.ராசி மண்டலத்தில் ஒரு ராசியின் ஒரு கிரகத்தின் அதிக பயணம் சனிக்கு மட்டுமே.
சரி இதே சனி ஒருவருள் பலமாக இருந்தால் மேற்கூறிய அனைத்து இடங்களும் மிக வலுவாகத் தானே இருக்கும். மூளையின் வலிமை,தசை வலிமை, நரம்புகளின் வலிமை ,புரிந்து கொள்ளுதல்,உள்வாங்குதல்,செயல் படுத்துதல் அனைத்து விசயங்களிலும் பலமானவராக இருப்பார்.அம்மனிதனின் செயல் பாடுகளும் மிக தீர்கமாக இருக்கும். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி சனி. இவர்கள் அதிக ஆளுமை ராசியான சிம்ம ராசிகாரர்களை கூட சில சமயம் வெல்ல வல்லவர்கள்.
சனி ஊழியகாரகதுவதுக்கு குறிப்பிட்டு உள்ளார்கள்.ஏனென்றால் மேற்கூறிய வற்றை ஒப்பிட்டு பாருங்கள் புரியும். மகரம்,கும்பம், சனி உச்சம் பெறுகிற துலாம் ராசிகரர்கள் ஆட்களை வைத்து வேலை வாங்குவதில் வல்லவர்கள், பெரிய INDUSTRIALISTஆக . இந்த ராசிகரர்களாக இருப்பதும் சனியின் மகிமைதான்.சனி நீசம் பெறுகிற மேஷ ராசி காரர்கள் அமைதியாக சோம்பலாக வலிமை குறைந்தவர்களாக இருபதும் சனியின் மகிமைதான்.(ராசி கட்டத்தில் மற்ற கிரகங்களின் உச்ச நீச ஆட்சி இவைகளால் சிலருக்கு விலக்கும் இருக்கும்).
சனி நம் ராசி மண்டலத்தை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும் இந்த 30 ஆண்டுகளில் சனி 3,6,11, இடங்களில் மட்டும் நன்மை செய்வார், அப்படியானால் 30 ஆண்டுகளில் 7 1/2 ஆண்டு காலம் மட்டும்தான் ஒருவனுக்கு கோட்சார ரீதியாக நலம் பயப்பார்.22 1/2 ஆண்டுகள் சுகசனி,அர்தாஷ்ட, அஷ்டம,7 1/2 ஆண்டு சனி என கெடு பலன்களை அளிப்பார் என ஜோதிடம் கூறுகிறது.
நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக கூறுகிறபடி நாம் பிறந்த FORMULA வையும் PROGRAM யையும் யாராலும் மாற்ற இயலாது. ஆதலால் அதை புரிந்து கொண்டு சனியை நண்பனாக்கி கொண்டு அவருடனே பயணித்தால் எக்காலத்தையும் பொற்காலம் ஆக்க முடியும்.
இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது
பெண் மூலம் நிர்மூலம் --- ஏன் இப்படி?
நண்பர்களே அக்காலத்தில் மக்கள்
ஆற்றங்கரை ஓரங்களில் கூட்டம் கூட்டமாய் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள். அவர்களின் ஒற்றுமை கெட்டுவிடாதவாறு இருக்க அந்த கூட்டத்தினரிடம் சில விதிமுறைகள் விதித்து அதை யாரும் மீறி விடாதவாறு பார்த்து கொண்டார்கள். சொந்தம், பந்தம், உறவு,சமுதாயம் போன்ற முடிச்சுகளை போட்டு தங்கள் கூட்டத்தை இன்னும் பலபடுத்தி கொண்டார்கள்.அங்கு ஆண்கள் பொருள் தேடி வெளியே சென்றார்கள்.பெண்கள் வீட்டை கவனித்து கொண்டார்கள்.அனைவரும் கூட்டு குடும்பமாகவே வாழ்ந்தனர். ஒரே குடும்பத்தில் அப்பொழுதெல்லாம் 12,13 குழந்தைகள் கூட பிறந்தன.அந்த குடுமபத்தின் தலைவனும் தலைவியும் அக்குழந்தைகளை திறம்பட வழி நடத்தி சென்றார்கள். சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் மேலும் படியுங்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தின் குணநலன்களை பார்ப்போம்.ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம் நான் ஏற்கனவே புதனனின் தன்மைகளை எழுதி உள்ளேன். இவர்களுக்கு பிடுயுடரி செயல்பாடு தீவிரமாக இருக்கும்.எதையும் ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பர்.தீர்க்க தரிசனமும், சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல் படலும், புரிதல் தெளிவாக இருபதால் தெளிவும் அதிகமாக இருக்கும்.பொருத்தமான காரணங்கள் இல்லாமல் எதையும் ஏற்று கொள்ள மாட்டார்கள். புத்தி தெளிவாக இருப்பதால் சிந்தனை அதிகம் இருக்கும்.சிந்தனைக்கு செயல் வடிவமும் கொடுப்பர். செயலிலும் தீவிரமும் இருக்கும்.தன பணியில் தீவிரமாக இருப்பார் சுய நலம் மிகுந்து இருக்கும்.எதை செய்தாவது தான் நினைத்ததை சாதிப்பர். தன தனிப்பட்ட நுண்ணறிவின் மூலம் தன்னை அடையாளம் காண்பித்து தன்னை நிரூபிப்பர் மேலும் .சந்திரனின் வழிகாட்டலும் (கடக ராசி) இருக்கும்.மனதளவில் திடமாகவும் பகல் காணுபவராகவும் இருப்பார். சுருக்கமாக ஜோதிட மொழியில் சொன்னால் சர ராசியில் ஜல தத்துவம். புதனின் ஆதிக்கமும் கூட.
முன்னர் அறிமுக உரையில் கூறியது போல ஒரு கூட்டு குடும்பத்தில் அக்காலத்தில் இம்மாதிரி கூரிய அறிவுடைய பெண்களை சமாளிப்பது கடினமாக இருந்தது.அவளுடைய அறிவு விஷங்களில்.., மேலும் குடும்ப தலைவின்(மாமியார்) கட்டுப்பாடும் மூட சமுக கோட்பாடுகளில் ஒத்துபோகாத குணமும் ஆயில்ய நட்சத்திர பெண்ணுக்கு இருந்தது.இப்பொழுது புரிகிறதா ஆயில்யம் மாமியாருக்கு ஏன் ஆகாது என்று?
மூலம்: ஆஹா , கேதுவின் முழு ஆட்சி பெற்ற நட்சத்திரம் ஞானத்தின் தெளிவில் இருப்பர். எதையும் ஒரு எதிர்பார்ப்புடனே காரியத்தை கொண்டு போவார்கள்.குருவின் ராசியான தனுசுவின் குணங்களும் குருவின் தாக்கமும் இருக்கும்.அறிவும் ஞானமும் ஒரு சேர இருக்கும்.தனக்கு நிகர் தானே என்று நினைப்பர். தன தனிப்பட்ட கருத்துகளால் தனித்து காண்பர். அனைத்து விஷயங்களிலும் தீர்கமான அறிவும் விஷய ஞானமும் தன்னகத்தே கொண்டு இருப்பர்.சற்று கபட தன்மையுடனும் அதை வெளியே தெரியாதவாறும் நடந்து கொள்வர்.உபயத்தில் நெருப்பு தத்துவம் அதுவும் பெண்ணிற்கு ....இதுவும் அக்கால கொள்கைக்கு மாறுபட்டு இருக்கும் என்பதால் அந்த பெண் வாழ்க்கை பட்ட கூட்டு குடும்பத்தில் இந்த குணங்கள் சரியாக .வராது என்பதால் பெண் மூலம் நிர்மூலம் என்று பயமுறுத்தி மூல நட்சத்திர பெண்ணை வேண்டாம் என்றார்கள்.
இதே போல் விசாகம்,கேட்டை க்கும் தனியாக உண்டு.ஆனால் இக்காலத்தில் தெளிவான, அறிவாளியான மன திடமான பெண்களால் பல குடும்பங்கள் நிமர்ந்ததை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஜோதிடர்களாகிய நாம் இதை மக்களுக்கு கொண்டு சேர்த்து கால மாற்றங்களை மக்களுக்கு புரிய வைத்து கூரிய பெண்மையை போற்ற வேண்டும் என்பதே என் அவா.
இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு
பாகம் 1
கேந்திரம்
பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றி வருவதும் அந்த நீள் வட்ட பாதையில் 12 வளைவுகள் இருப்பதையும் ஒவ்வொரு வளைவும் 30 டிகிரியில் வளைகின்றன என்றும் மொத்தம் 360 டிகிரி என்பதையும் ராசி மண்டல கட்டுரையில் எழுதி இருந்தேன். இந்த 360 டிகிரியில் இயங்குகிற 9 கிரகங்களின் சுற்று பாதையில் இயங்குகிற சக்தி மாற்றங்களை அதாவது சூரிய பாதையின் சுற்று மையம், இதன் விளைவால் ஏற்படுகிற காந்த சக்தி இவை இரண்டும் சேருகிற மின் சக்தி, சூரிய பாதையில் சுற்றுகிற ஓட்டத்தின் விளக்கு சக்தி இவை யாவும் ஒவ்வொரு திசையில் எவ்வாறு செயல் படுகிறது அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை ஒவ்வொரு திசைக்கும் அந்த திசையின் ஆரம்ப புள்ளியை கணக்கில் கொண்டு 4 புள்ளிகளாக குறிப்பிட்டு பார்த்தால் ஒரு புள்ளிக்கு 90 டிகிரி யில் பிரிகிற மூன்று வளைவுகளின் சக்தி ஓட்டத்தை பிரித்து ஒரு மையமாக கொண்டு 12 ராசிக்கும் 4 சக்தி மையங்களாக பிரித்து துல்லியமாக சக்தி ஓட்டத்தை கணக்கிட்டார்கள். இந்த நீள் வட்ட பாதையில் இருக்கிற 4 புள்ளிகளையும் இணைத்தால் ஒரு சதுர வடிவம் பெரும்.
ஆரம்ப புள்ளி 0 டிகிரியில் தொடங்கினால் முதல் 90 டிகிரி அமைகிற ராசிக்குள் இருக்கிற சக்தி ஓட்டமும் அங்கு இருக்கிற கிரகம் .கிரகத்தின் குணா நலன்கள் இவற்றின் கலவை மேலும் மேற்கூறிய சக்தி கலவை அனைத்தும் எவ்வாறு செயல் படுகிறது எனபதை தீர்மானிக்கிற மையம் தான் கேந்திரம்.360 டிகிரியை 90 டிகிரி யாக 4 பிரிவுகளாக பிரிக்கிம்போது ராசி கட்டத்தில் அந்த புள்ளி 1,4,7,10 இடங்களில் அமைவதால் இந்த இடங்களை கேந்திர மையங்களாக சொன்னார்கள்.ஒவ்வொரு புள்ளியிளுர்ந்து அடுத்த புள்ளிக்கு தன சக்தி பயணத்தை மாற்றுகிறபோது ஒரு நிலை மாற்றம் அந்த திசை திருப்பத்தில் ஏற்படுவதால் அந்த சக்தி மையங்களுக்கும் அங்கு ஓடுகிற கிரகங்களுக்கும் மிக முக்கிய மரியாதை கொடுக்க படுகிறது.ஜோதிடத்தில் சரம்,ஸ்திரம்,உபயம் என்று பிரிக்கிறபோது ஆரம்ப புள்ளி (லக்னம்) எந்த பிரிவில் அமைகிறதோ அதே பிரிவில்தான் கேந்திரம் அமையும், சரம் என்றல் சரமாக,ஸ்திரம் என்றால் ஸ்திரமாக , உபயம் என்றால் உபயமாக, . இன்னும் வரும்......... அஸ்ட்ரோ பாபு.
சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம்
4 நாட்களுக்கு முன்னர் ஈரோடு பவானி சங்கமேஷ்வர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு களிமண், கடலைமாவு,மண் போன்ற வற்றில் பாம்பு உரவம் செய்து அதன்முன் ஒருவரை அமர்த்தி மந்திரங்கள் ஜெபித்து கொண்டிருந்தனர் விசாரித்ததில் சர்ப்ப தோஷ நிவர்த்திர்க்கு என்றனர்.அதற்க்கு 1,000/- முதல் 25,000 வரை வசூல் வேறு.மனசுக்குள் ஏதோ செய்தது.மக்களின் பயத்தை, ஜோதிடத்தின் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாரிப்பதர்க்கு இவ்வாறா செய்வார்கள்? இவ்வாறு செய்கிற பரிகாரங்களில் மாற்றம் கிடைகிறதா? தோஷம் நீங்கி விடுமா என்ன?
சர்ப்ப தோஷம் :- காலசர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், புத்திர தோஷம் போன்ற வற்றிற்கு சொல்கிறார்கள்,நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும் ஜோதிடர்கள் பொது விதிகளாக சொல்லுகிற ராகு, கேது இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால் கால சர்ப்ப தோஷம்,1,2,7,8, இல் ராகு கேது இருந்தால் களத்திர தோஷம், ஆணுக்கு 5ம் பெண்ணுக்கு 9ம் புத்திர தோஷம் என கொள்ளலாம். மேலும் சுக்கிரன்,செவ்வாய்,சனி உடன் ராகு கேது சேரும் பொது அக்கிரகங்கள் தன்மை, அக்கிரகங்கள் எடுக்கும் ஸ்தானம் இருக்கும் இடம்,இவற்றில் மாறுபட்ட கெடு பலன்கள் என்பதும் ஜோதிட விதி.
மேற்கூறியவைகள் ஒருஜதகத்தில் இருப்பின் அவை இவர்கள் செய்கிற பாம்பு வாழைமரத்திற்கு தாலி கட்டி வெட்டுவது போன்றவைகளால் எவ்வாறு மாறும். இந்த ராகு கேது சர்ப்பங்கள் நம் தலைக்கு மேலோ,முன்னோ,பின்னோ நின்று கொண்டு கங்கணம் கட்டி கொண்டு நமக்கு கெடுதல் செய்வது போலவும் மந்திரிச்சு வேப்பிலை அடிச்சி தாயத்து கட்டினால் பேய் ஓடி விடும் என்ற நம்பிக்கை பேரில் இந்த பரிகாரங்கள் செய்தால் சர்ப்பங்கள் ஓடி தங்கள் புற்றினில் ஒளிந்து கொள்ளும் என்ற கணக்கில் அல்லவா இவர்கள் செய்கிறார்கள்,மக்களின் மூட நம்பிக்கையா? அல்லது ஜோதிடர்களின் தவறான வழிகாட்டுதலா?எனக்கு புரிய வில்லை. ஒரு பெரிய மன வருததில்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ராகு கேது என்பது பூமி சூரியனை சுற்றுகிற சுற்றுபாதையும்,சந்திரன் பூமியை சுற்றுகிற சுற்று பாதையும் வெட்டு படுகிற இடம். என்பதும் பூமிக்கு வெளி வெட்டு ராகுவாகவும், உள்வெட்டு கேதுவாகவும் இருப்பதை அனைவரும் ஒப்புகொள்ளும்போது, எந்த பரிகாரங்கள் எங்கிருந்து இவற்றை கட்டுபடுத்தும்? இரு வேறு காந்த சக்திகள் சுற்று ஓட்டத்தின் சக்திக்கு இணைகிற ஒரு சக்திவைந்த மையம்தான் இவ்விரு முனைகளும், மேலும் ஒரு உயிரின் ஜனன காலத்தில் இவ்விரு வெட்டு சக்தியின் சக்தி எவ்வாறு பிரபஞ்சத்தில் இருக்கிறதோ அதை பொறுத்தே அவ்வுயிரின் தயாரிப்பு நடைபெறும்.அவ்வுயிர் வளர்ந்து பெரியவர்களாயினும் அச்சக்தி அவர்களுள் தானே அய்யா இருக்கும் வெளியில் போய் விடுமா என்ன. எப்பொருளால் ஒரு பொருள் செய்ய பட்டதோ அப்பொருள் தன்மையை தன்பால் தானே கொண்டிருக்கும்.
ராகு கேதுக்களை பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன் அவற்றின் செயல்பாடு,நம் உடலில் ஏற்படுத்துகிற விளைவு பற்றி என் டைம் லைனில் பாருங்கள். சுருங்க கூறின் கேது புரிதல்,ராகு தீவிர செயல் பாடு, எனலாம். ராகு கேது ஒரு மாறுபட்ட மிக பெரிய சக்தி மையம்.
சரி,சுக்கிரன்,சனி,செவ்வாய் இந்த ராஜ கிரகங்களுடன் சர்ப்பங்கள் சேரும்போது அக்கிரக்காகங்களின் ஸ்தானமும் அமைப்பும் எவ்வாறு நம் உடலில் செயல்படுகிறதோ அதன் செயல் வேகமும் புரிதலும் மாருபடல்தான் இக்கிரகங்கள் ராகு கேதுவுடன் சேரும் பொது நடக்கும். நான் உறுதியிட்டு கூறுகிற விஷயம் நம் உற்பத்தி பார்மட்டை மாற்றவோ அழிக்கவோ யாராலும் முடியாது. ஆனால் அதன் செயல்பாட்டை,அதற்குண்டான சக்தி தீர்மானத்திற்கும் ஆலயத்திலோ அல்லது காலத்தை வென்ற,பஞ்சபூதங்களை கடந்த சித்தர்கள் ஜீவ சமாதிகளிலோ சர்ப்ப செயல்பாட்டை மாற்றுகிற அல்லது சமன் படுத்துகிற சக்திகளை பெறலாம்,இதனால் ராகு கேது செயல்பாடு சமன்பட்டு அதன் தீவிரம் நம் உடலில் குறையும்.
மக்களிடத்தில் ஜோதிடத்தின் அறிவியல் உண்மைகளை கொண்டு செல்லும் நோக்கத்திலும்,அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு வாழ்க்கையை திறம்பட வாழ வேண்டும் என்ற பிராத்தனையுடந்தான் குரு துணையோடு எழுதி வருகிறேன். நன்றி ...... இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு.
கேது
நண்பர்களுக்கு வணக்கம், போன கட்டுரையில் ராகு பற்றி பார்த்தோம்,சூரிய வட்ட பாதை, சந்திரன் பூமியை சுற்றுகிற வட்ட பாதை, இரண்டும் சூரியனுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும். படத்தை பார்த்தால் தெரியும்.உள்ளே இரு பாதையும் வெட்டு படுகிற இடம் ராகு. வெளியே வெட்ட படுகிற இடம் கேது. ராகு பலமாக இருப்பவர்கள் உடல் வலிமை மிக்கவர்கள் கேது பலமாக இருப்பவர்கள் மூளை வலிமை மிக்கவர்கள், ஒல்லியான குள்ளமான தோற்றத்தில் இருப்பவர்கள். கேது ஞானகாரணக கூறுகின்றனர் ஜோதிடத்தில். மூலையில் இருக்கிற non nervical cavities சொந்தகாரர். கேதுவின் ஆதிக்கத்தில் இருப்பவர் எபோழுதும் alert அகவே இருப்பர் அதுவும் லக்ன கேந்திரத்தில் கேது இருந்தால் Brain Cavities System வலுவாக இருக்கும். எப்பொழுது எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து சூழ்நிலையை தமக்கு சாதகமாக மாற்றி கொள்ள வல்லவர்.அதே போல் மூளையின் நரம்பு மண்டலம் இவர்களுக்கு விரைவாக இயங்கும் எந்த file யும் உடனே ஒலித்து வைக்கவும் வெளி கொணரவும் இந்த கேது சாப்ட்வேர் திறமை மிக்கது .
storage capacity அதிகம் இருக்கும் இவர்களிடம் பழைய புராண இதிகாச விசயங்களை அலசுவதில் வல்லவர்கள்.லக்னத்தில் குருவும் கேதும் இருந்தால் சொல்லவே வேண்டாம் ஒட்டு மொத மூளையும் high speed processor high storage ram system.
உடல் தசை வலிமை குறைவாக இருக்கிற காரணத்தினால் சிறிய விபத்துக்களில் கூட அதிகமான காயங்கள் பெறக்கூடும். கேது ஆதிக்கத்தில் இருந்தால் உடலில் வடுக்களோ,அப்ரேசனோ எலும்பு முறிவோ ஒரு நிரந்தர வடு உடலில் இருக்க கூடும்.
கேது மனம்,ஞானம், அறிவு மூன்றின் ஒவ்வொரு பங்கு கலவை. கேது ஜாதகத்தில் கெட்ட இடங்களில் இருந்தாலோ கெட்ட சேர்க்கை பெற்று இருந்தாலோ மிக மோசமான system corrupt போல செயல் இருக்கும். கெட்ட சகவாசம்,துர்சேர்க்கை கீழ் தரமான பெண் சேர்க்கை என மனமும் புத்தியும் போகும்.
ராகு,கேது சந்திக்கிற இடங்கள் சூரிய பாதியில் நேர்க்கு நேர் அதாவது 360 டிகிரியில் 180 டிகிரியில் இருக்கும் இவை பூமி சந்திரனின் நிழல் ஆதலால் இந்த கிரகங்களின் பாதைக்கு எதிர் திசையில் பயணிக்கும்.
கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே என்ற வழக்கு மொழி ராகு கேதுவிற்கு தானோ என்பது என் ஐயப்பாடு .
இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு.
ஏன் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு சிறந்தது?
திதி என்பதே சந்திரன் தன் பாதையில் பூமியை சுற்றி வருகிற நகர்வை குறிப்பது. சந்திரன் பூமியின் கீழ் நோக்கி வருகிற 15 திதிகள் மேல் நோக்கி போகிற திதிகள் என 30 திதிகள்.என்பது அனைவரும் அறிந்ததே. அமாவாசை சிவம் என்றும் பௌர்ணமி சக்தி என்றும்,
இதை சித்ததுவத்தில் சந்திரன் பூமியை நோக்கி வருவதை சிவம் சக்தி நோக்கி வருவதாகவும்,(அமாவாசை இலிருந்து பௌர்ணமி வரை) மேல் நோக்கி போவதை சக்தி சிவனை நோக்கி போவதாகவும் (பௌர்ணமி இலிருந்து அமாவாசை வரை) கூறுகிறார்கள்.
சந்திரன் தன்மை பௌர்ணமி புள்ளியில் பூமியில் இலிருந்து குறைந்து கொண்டே வந்து அமாவாசை புள்ளியில் நின்று வளர்ந்து தன் தன்மையை கூட்டி கொண்டே சென்று பௌர்ணமி யில் நிறைவு பெறும்.இதுதான் இயற்க்கை நமக்கு வழங்கி இருக்கிற ஒரு விஷயம். சந்திரன் தன்மை பூமியில் எவ்வாறு இருக்கிறது அது எவ்வாறு மனித உயிர்களை ஆட்கொள்கிறது என்பதை என் சந்திரன் கட்டுரையில் தெளிவுபட விவரித்துள்ளேன். சந்திரன் நம் மனதை இயக்குகிற ஒரு தன்மையை நமக்கு வழங்குகிறது.அதனால் தான் சந்திரனுக்கு மனக்காரகன் என்று பெயர்.
சரி அவ்வாறு பௌர்ணமி யில் (தேய்பிறை) தன் பயணத்தை துவக்குகிற சந்திரன் தன் பாதையின் மையபுள்ளியான 8 வது தினத்தில் இருந்து அடுத்து 7 தினங்களுக்கு அந்த மறைவு தன்மை படிப்படியாக அதிகரித்து முழு மறைவு தன்மையை (அமாவாசை) அடையும். அப்படி சந்திரன் மறைவு தன்மையின் மைய புள்ளியில் வருகிற பொழுது
மனதின் இயக்கத்திலும் ஒரு மாறுபாடு இருக்கும்.தெளிவற்ற தன்மையில் மனம் இயங்கும்.அல்லது மனம் இயங்குகிற தன்மை குறையும்.
மனம் தொடர்ந்து இயங்கி கொண்டே இருப்பதால் தான் நாம் மாயை என்ற விசயங்களில் உழன்டு கொண்டே இருக்கிறோம்.மனம்தான் நாம் பிரபஞ்ச சக்தியை உணர்வதற்கு தடையாக இருக்கும் ஒரு விசயம். மனதின் இயங்கு தன்மை குறைகிற போது ஈஸ்வர சக்தியான பைரவ சக்தியை உட்புகுத்தி நம்முள் ஏற்பட்டு இருக்கிற குறை பாடுகளை அச்சக்தியின் மூலமாக சமன் படுத்தி கொள்ளலாம். பைரவ கோவிலில் பயன்படுத்துகிற பொருள்களும் அச்சக்தியை நமக்கு வழங்குவதாக தான் இருக்கும்.
7 1/2, அஷ்டம சனி நடக்கும் காலங்களிலோ, நீச,மறை விடத்து சனியின் திசை நடக்கும் காலங்களிலோ நடக்கும் மாறுபாடான சிரமங்களில் இருந்து வெளி வர இந்த கால பைரவ தன்மை வலிவகுக்கும். அது என்ன சனிக்கு மட்டும் என்று கேட்பவர்களுக்கு சனியை பற்றியும் தனியாக எழுதி இருக்கிறேன் அதையும் படித்து ஒப்பிட்டு பாருங்கள் புரியும் மொத்தமும் எழுதினால் இன்னும் கட்டுரை நீண்டு விடும்.
வளர்பிறையில் இதேமைய புள்ளியான 8 திதிஇலிருந்து அடுத்த 7 நாட்கள் மனம் தீவிரமாக வேலை செய்யும்.மனம் இயக்குகிற உடலிலும் ஒரு தீவிர தன்மை பரபரப்பாக இயங்கும். அப்பொழுது மனதை அடக்கி உட்செல்ல வைப்பது சிரமம். அப்படி தீவிரமாக இருக்கிற மனதின் இயக்கத்தை நேர்கோண தன்மைக்கு கொண்டு செல்ல பைரவ பெண் தன்மையான பைரவி வழிபாடு துணை செய்யும்
மறைவு மற்றும் வெளிவருகிற இரண்டு மைய புள்ளிகளும் ( 8 ம் திதியான அஷ்டமி திதி) இரண்டு தன்மைகளை மிக தீவிரமாக தருவதால் தான் புதிய வேலைகளையோ அல்லது புது விஷயங்களையோ அந்நாளில் தவிர்த்தார்கள். நீங்களும் உணர்ந்து பாருங்களேன். இன்னும் வரும் ........ அஸ்ட்ரோ பாபு
கால பைரவர்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை மிக சக்தி வாய்ந்த கால பைரவ தன்மை பற்றியது.நற்பலன்களோ கெடு பலன்களோ ஜோதிடத்தை பொறுத்தவரை காலத்தால் ஏற்படுபவைதான்.இந்த காலம் என்பதை உணர்வது மனம்,உடல், இவை இரண்டையும் இயக்குகிற கதி என்கிற மூச்சு.இம்மூன்றும்தான். இம்மூன்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஒன்றில்லாமல் ஒன்று என்பது இயலாத காரியம்.இம்மூன்றும் இரண்டு நிலைகளில் வேலை செய்கிறது நம்முள். 1. ஸ்தூலம் என்ற வெளி நிலை சூட்சுமம் என்கின்ற உள்நிலை.மேற்கூறிய மனம் உடல், மூச்சு மூன்றும் நமக்கு 5 விதமான செயல் தன்மைகளை வழங்கி இருக்கிறது. 1.விழிப்பு நிலை(நாம் இயங்குதல்) 2,,கனவு நிலை ( எண்ணங்களின் போக்கில் போதல் அல்லது நிலைத்தல்)3.உறக்க நிலை (இறப்பு நிலை),4.துரிதம் (விழிப்புணர்வோடு கூடிய மனமற்ற நிலை)5.துரிதாதிதம்( ஏதுமற்ற நிலை). இதில் 5 நிலை ஞானிகலுக்கும் சித்தர்களுக்கும் கை கூடுகிற நிலை.
ஏதும் இல்லா நிலை என்பது சோல் என்ற உயிர் நிலை மட்டுமே. இப்பிரபஞ்சமே உயிர்நிலை தான், அனைத்திலும் பரவி நிற்ப்பது அந்நிலையோடு சேர்ந்து இருத்தல் தான் 5 ம் நிலையான துரிதாதிதம்.1,2,3, நிலைகளை நாம் தினமும் தினசரி வாழ்க்கையில் பார்த்தும் அனுபவித்தும் வருகிறோம். 4 ம் நிலை துரித நிலை, இது மிக பெரிய அளப்பரிய சக்திகளை கொண்டிருக்கிற நிலை,மனம்தான் நமக்கு காலத்தை உணர்த்துவது,காலத்தில் நடக்கும் செயல்களுக்கு பொறுப்பும் மனம்தான்.மனம்தான் நமக்கு எவையெல்லாம் சாதகமோ அதை நற்செயல் என்றும் பாதகங்களை கெடுபலன்,கெடுசெயல் என்று பிரித்தாள்கிறது. இம்மனம் இல்லாதபோது அதன் செயல்களும் இருக்க போவதில்லை அல்லவா? நல்லது கெட்டது என்ற பிரித்தாளும் விசயங்களும் நம்முள் நடக்க முடியாததுதானே? இந்நிலைக்கு ஒருவர் போகிறபோது காலம் எங்கே இருக்கும்,காலத்தை உணர்த்துகிற மனதை கடந்த நிலை, .எண்ணம் இல்லாதபோது மனம் இல்லை மனம் இல்லையெனில் இயக்கம் இல்லை இயக்கம் இல்லையெனில் விளைவுகளும் இல்லை,இயக்கமும் விளைவுகளும் இல்லையெனில் உடலின் தேவை இல்லை, உடல் தேவை,மன தேவை இல்லாதபோது இவைகளை இயக்குவதற்கு அச்சாக இருக்கிற மூச்சுக்கும் வேலை இல்லைதானே? சராசரி மனிதனுக்கு 21,600 சுவாசம் ஒரு நாளைக்கு ஏற்படும் இந்த சுவாச கதியை வைத்துதான் அனைத்து காலங்களும் கணிக்கப்பட்டவை. இதை பற்றி உடல் சக்கரங்களை பற்றி எழுதும்போது எழுதுகிறேன்.இந்த 21,600 சுவாசம் துரித நிலையில் இருக்கும் பொழுது 800 முதல் 5,000 ஆக குறையும்.அது துரிதநிலையின் தீவிரத்தை பொறுத்தது.
இதை விட மிக முக்கியமான ஒன்று மனதை நாம் கடப்பதற்கு பெரிய மலை கல்லாக இருப்பது மனதின் சத்தமே அதாவது பேச்சு (பேச்சு என்பது இங்கே வெளியில் வாய்திறந்து வெளியில் பேசுவது அல்ல மனதின் உள்ளே இடைவிடாது குரைத்து கொண்டே இருக்கிற குரல்) அப்பேச்சு அடங்குகிற போது மனது தானாக அடங்குவதை தியான பயிற்சியில் இருப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள். துரித நிலையில் இருக்கும் போது பிரபஞ்சசக்தி நம்மை இயக்கும். அந்த அளப்பெரிய சக்தி காலத்தை கடந்து நம்மை கொண்டு செல்லும் ஒரு புள்ளியில் மையத்தில் நம்மை கொண்டு சேர்க்கும் அல்லது மையத்தில் வைத்து நம்மை இயக்கும். இந்த துரிதநிலை தான் கால பைரவர்.
உலகில் மனிதர்கள் சந்திக்கின்ற அனைத்து கஷ்டங்களுக்கும் பரிகாரமாக கால பைரவரை வழிபட சொல்வார்கள்.அஷ்டாமதிபதி,6 ம் அதிபதி திசை நடக்கின்ற காலங்களிலோ அல்லது கோச்சரத்தில் அஷ்டமா ஸ்தானத்தில் பாப கிரகங்கள் பயணிக்கிற காலங்களோ இந்த கால பையரவ வழிபாடுகள் பெரிய மாற்றங்களை கொடுக்கும் .காலபைரவ வழிபாட்டுத்தலங்களில் அத்தகைய சக்தியை நிலைநிறுத்தி வைத்திருப்பார்கள் அச்சக்தி தொடர்ந்து செயல் படுவதற்கு உண்டான சப்தங்களான மந்திரங்களும் அச்சக்தியை நம்முள் செலுத்தும் பொருள்களை தான் பயன்படுத்துவார்கள். மனதில் குறைக்கின்ற குரலான நாயை வாகனமாக்கி காலத்தை கடந்து இருக்கிற நிலையை நாம் சிறிது நேரமாவது உணருகிறபோது நம் கஷ்டங்களிலான அழுத்தம் சிறிது விடுபட்டு நம்மை சிறிது நேரமாவது பிரபஞ்ச சக்தியோடு இருக்க வைக்கும் இந்த காலபைரவ வழிபாடு. பிரபஞ்ச சக்தி நாம் கஷ்டங்களிலிருந்து விடுபடவும்,அல்லது சிரமங்களும் வேதனைகளும் பாதிக்காத ஒரு நிலையை நமக்கு கொடுக்கும். உணர்ந்து பாருங்கள் .
காலபைரவ தன்மை எழுத வேண்டுமென்று நெடுநாளாய் தோன்றியும் எழுத முடியாமல் வேலைகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தன. என்னை இன்று இயக்கி இதை எழுத வைத்த என்னுள் என்றும் இருக்கிற என் குரு நாகாவை வணங்கி பதிகிறேன். இந்த உன்னதநிலையை உணர்ந்து பாருங்கள் இதுவும் ஒரு ஈஸ்வர நிலைதான்.மனதை கடந்து போகிற அனைத்து நிலைகளுமே ஈஸ்வர நிலைதான் உணருங்கள் நலம் பெறுங்கள் இன்னும் வரும். .......... அஸ்ட்ரோ பாபு.
சந்திரன்.
நண்பர்களுக்கு வணக்கம்,
அதீத வேலை பளு காரணமாக தொடர்ந்து எழுத முடிய வில்லை தோழமைகளே. இந்த கட்டுரை நம் சூரிய குடும்பத்தின் மிக முக்கியமான நாம் தினமும் நேரில் காண்கின்ற கிரகத்தை பற்றியது. ஆம் சந்திரன். என்னை பொறுத்த வரை இந்த கிரகம் தான் ஒரு மனிதனை ஒவ்வொரு நாளும் வழி நடத்துகிறது என்பேன். ஏன் என்று பார்க்கலாம்.
சந்திரன் பூமிக்கான இயற்க்கை துணைக்கோள். பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுவதை போல சந்திரன் பூமியை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. பூமியிலிருந்து 3,84,403 கி,மீ, தூரத்தில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் கூட, இது பூமியை சுற்றி வர 29.32 நாட்கள் ஆகும்.சந்திரனின் முக்கிய அம்சம் அதன் ஈர்ப்பு தன்மை. ஆம், பூமியின் ஈர்ப்பு தன்மையை விட சந்திரனின் ஈர்ப்பு தன்மை 6 மடங்கு குறைவு. சந்திரனில் நீர், பாலைவனம்,மலைகள் இருக்கு இல்லை என்ற ஆராய்ச்சியில் வானவியலாளர்கள் இன்றும் வாதிட்டும் அறிந்தும் கொண்டு தானிருக்கிறார்கள்.
நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரன் தான் மிக முக்கியமானதாக கருதபடுகிறது ஒரு குழந்தை பிறப்பின்போது சந்திரன் எந்த ராசியில் நிற்கிறதோ அந்த ராசியை அக்குழந்தையின் ஜனன ராசி என்று கூறுவர். பல யோகங்கள் சந்திரனை முன் வைத்தே கணக்கிடப்பட்டுள்ளன. மிக முக்கியமான யோகங்களின் ராஜாவான கஜ கேசரி யோகம் சந்திரனை முன் வைத்தே கணக்கிட படுகிறது.
சந்திர ராசியை வைத்துதான் பிறக்கும் குழந்தையின் குணநலன்களை அறிகிறார்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம். சந்திரனை இந்திய ஜோதிடத்தில் மனதிற்கான கிரகம் என்று கூறுகின்றனர். சந்திரன் ராசி கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை வைத்துத்தான் ஒரு மனிதனின் அந்த நாளுடைய பலன்களை கூற முடியும். சந்திரன் ஆட்சி ராசி கடகம், இவர் ரிஷபத்தில் உச்சமும் விருச்சிக ராசியில் நீசமும் பெறுகிறார்.சந்திரனை வைத்துதான் திதி,நட்சத்திரம்,அமாவாசை,பௌர்ணமி போன்றவை தீர்மாணிக்கபடுகிறது.மேற்கூறிய நான்கின் நிலைகள்தான் பூமியில் ஜீவராசிகளை ஆட்கொண்டு வழி நடத்துகிறது.
நம் மூளையில் உள்ள செரிபலத்தில் ventircle 1,vemtricle 2, இன் இயக்கமும்,நம்முடையbllod plasma.,வின் இயக்கத்தையும் வைத்துகொண்டு ventircle 3., வழியாக midula vai. இயக்குகிறது. இந்த 4 இன் ஒரு முக்கிய பகுதியான மனத்தை இயக்குகிறது blood plasama,வை இயக்குவதால் இரத்தத்தின் ஓட்டத்தையும் அதன் விரைவு செயல் பாட்டையும் இயக்குவதால் மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து மூளையை திறம்பட செயல்பட வைப்பதால் மூளையின் இயக்கமும் pitutary இயக்கமும் சீராக இருந்து நம்முடைய மனம் தெளிவான செயல்ப்பாட்டை செய்து எண்ணங்கள் தெளிவாகி அதன் செயல் திறம்பட உடலின் வழியாக செய்யப்படுகிறது. உடலின் செல்களின் இயக்கத்திற்கு மூலமாக இருப்பதால் சந்திரனை வைத்து அம்மனிதனின் மூலமான DNA வான அவனின் தாயின் உடைய பங்கை கூட கணிக்க முடியும்.
கேது,ராகு,குரு,புதன், போன்ற வற்றின் பகுதி செயல்பாடாகவும் சந்திரன் இருப்பதால் சந்திரன் இரத்த இயக்கமும்,குருவின் மூளை செயல்படும் திறமாக இருப்பின் அம்மனிதன் திறமைசாலியாக இருப்பான். அனைத்து வெற்றிகளிலும் எல்லா கலைகளிலும் பெறுவான் அல்லவா, இரத்த இயக்கத்தை எந்த சக்தியுடன் சேர்த்தாலும் ஒரு பெரிய சக்தியாக வெளிவரும் என்பதால் தான் சந்திரனை எல்லா யோகங் களுக்கும் முக்கியமாக கூறினார்கள்.
சந்திரன் வலுவாக இருக்கிற ரிஷப, கடகம்,ராசிக்காரர்கள் மனதளவில்
பலமுள்ளவர்களாகவும் எனது சூழ்நிலையிலும் பதட்ட படாதவர்காளகவும் இருப்பர். சந்திரனுடைய நட்சத்திரமான ரோகினி,அஸ்தம்,திருவோணம் நட்சத்திர காரர்கள் பிறர் மனம் அறிந்து பேசுவதில் வல்லவர்கள் , பிறரை தன் தெளிவான பேச்சினால் கவர கூடியவர்களாக இருப்பார்கள். சந்திரனுடைய பயணம் 21/2 நாட்கள் ஒரு ராசியில். தினமும் நாம் நடந்து கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு சந்திரனின் சுழற்சியே காரணம். நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள் தெளிவு பட புரியும்.
இன்னும் வரும்......... அஸ்ட்ரோ பாபு.
பரிகாரம்
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை பரிகாரம் பற்றியது.நான் போன கட்டுரையில் கூறியபடி இந்த பரிகாரம்தான் ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்றும் பொய் என்றும் மக்கள் நம்புகிற அளவுக்கு சர்ச்சையான விஷயம். காரணம் எப்படி மனிதனுக்கு தப்பிபதற்கு ஒரு விசயமானதோ அதேபோல்,எந்த பிரச்சனைக்கும் தீர்வு என்பதும் மனிதனுக்கு தேவை. தீர்வை கண்டுபிடிக்க என்னவெல்லாம் முடிமோ அனைத்தையும் செய்தான்.இந்த மனித இயல்பை பயன்படுத்திக்கொண்டு அந்நாளில் முன்னோர்கள் பிரச்சனை இருக்கும் மனிதனுக்கு அப்ப்ரசனைக்கு காரணம் அவன் இல்லை அவன் விதி என்றும்,விதியிலிருந்து தப்பிக்க வலி உண்டு அதுதான் பரிகாரம் எனவும் கூறினார். மனிதனும் ஆறுதல் அடைந்து அவர்கள் சொன்ன வழியை கையாண்டான்.இது ஒரு மனோதத்துவ தீர்வு. பரிகாரம் செய்து விட்டால் இனி ப்ரசனைஇல்லை அல்லது எதுவும் மாறுபட்டு நடக்காது என்ற நம்பிக்கை மனப்பாங்கு பிரச்சினையின் அழுத்தத்தில் இருந்து அம்மனிதனை வெளியே கொண்டு வந்தது. அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தவனுக்கு பிரச்சனயை அணுகுவதும் அதை கையாள்வதும் எளிதாக இருந்தது.அதிலிருந்து விடுபடவும் வழியை கொடுத்தது.
பூஜைகள்,மந்திரம்,எந்திரம்,தாயத்து இன்னும் நிறைய இருக்கிறது. இந்த பரிகாரம் என்ற வார்த்தையை வைத்து ஒரு கூட்டம் பெரிய வியாபாரமே நடத்துகிறது. எனக்கு தெரிந்து சென்னையில் ஒருவர் 5 குழுக்கள் வைத்து இருக்கிறார் பரிகார பூஜை செய்யஒரு குழுவில் 10 -12 பேர் இருகிறார்கள் ஒரு பூஜைக்கு 1 முதல் 5 லட்சம் வரை வாங்குகிறார்கள் எந்த ஊருக்கு வர வேண்டுமோ வந்து பூஜை செய்து கொடுப்பார்கள் போக்குவரத்து தங்குமிடம் அவர்களுக்கு கார் இவ்வளவும் ஏற்பாடு செய்து பரிகாரத்துக்கு அழைத்தவர் குடும்பத்தோடு அவர்கள் காலில் விழுந்து மரியாதையோடு வழி அனுப்பி வைப்பார்கள். பிரச்சனயில் இருப்பவர்களுடைய பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். அனால் இதிலிருந்து மாறுபட்டும் பலர் இருகிறார்கள்.அவர்கள் கோவிலுக்கு பயணம் போக சொல்வார்கள்.இது கொஞ்சம் பரவா இல்லை.ஒரு தீர்வாக கூட கொள்ளலாம் .
நம் முன்னோர்கள் கண்டுபிடித்த கோவில் சமாசாரம் கொஞ்சம் மாற்றத்தை நம்முள் கொண்டு வரும் என்பதும் உண்மைதான்.
கோவிலில் தீர்மானித்து இருக்கிற சக்தி பற்றி நான் முந்தைய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். அந்த சக்தி நம் உடம்பின் manufacture formula vil உள்ள நிறை குறைகளை சற்று சமன் படுத்தும் நமக்கு எச்சக்தி தேவை படுகிறதோ அச்சக்தி இருக்கிற கோவிலுக்கு சென்று குறைந்தது 3 மணிநேரம் உட்பிரகாரதிலோ அல்லது கோவில் வளாகத்திலோ தங்கி வாருங்கள். சற்று மாறுதல் கிடைக்கும்.அங்கு பூஜைகள் செய்வதோ,ஸ்வாக சொல்லுவதோ உங்கள் விருப்பம். ஆனால் இருப்புதான் மிக முக்கியம். அங்கு சென்று அவசர அனுமதி சீட்டு வாங்கி ஒரு அர்ச்சனை செய்து உடனே கிளம்பி வருவதில் ஒன்றும் பயன் இல்லை.
மேலும் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பதை ஒரு நல்ல ஜோதிடரின் அறிவுரை பெற்று செல்லவும். உங்களுக்கு எந்த கோவில் உகந்ததோ அதற்க்கு சென்று வலிமை பெற்று வாழ்க்கையில் வரும் பிரசனைகளை வென்று வளமுடன் வாழுங்கள்.
இன்னும் வரும் ............... அன்புடன் அஸ்ட்ரோ பாபு
புதன் கிரகம்
நண்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரை நம்முள் இருக்கிற நுண்ணறிவு திறனை பற்றியது. ஆம் புதன் நம்முள் இருக்கிற நுண்ணறிவு திறனாகும். புதன் சூரியனின் சார்பு கோள் எனலாம்.சூரிய குடும்பத்தில் மிக சிறிய கோள் ஆகும். சூரியனை அடுத்து இருக்கிற வட்ட பாதையில் சுற்றி வருகிற கோள். புதன் சூரியனை சுற்றி வர 88 நாட்கள் ஆகும். புதன் சூரியனிலிருந்து 28.3 டிகிரியில் உள்ளது இதில் பொட்டாசியம் 31.7%, சோடியம் 24.9% உள்ளன. மேலும் ஹைட்ரஜென் இரும்பு தாதுக்களும் உள்ளன. சூரியனுடைய வட்ட பாதையில் 30 டிகிரிகுள்ளேதான் சுற்றி வரும். ஆதலால் ஜோதிட கட்டத்தில் சூரியனுக்கு அடுத்த அல்லது சூரியனோடு சேர்ந்து தான் இருக்கும் .
ஜோதிடத்தில் கிரகங்களின் வரிசை கிரமத்தில் உள்ளவாறு கிரகங்களை பற்றி எழுதாமல் முதலில் ராகு,,கேது, புதன் என்று எழுதுவதை பற்றி ஜோதிடம் அறிந்த நண்பர்களுக்கு வினா எழலாம். என் நோக்கமே எந்த கிரகங்களினால் பாதிப்பு அதிகம் என்று கூறுகிறார்களோ அந்த கிரகங்களை பற்றிய அறிவியல் உண்மைகளை எழுதுவதே.
HYPOTHALAMUS இன் அங்கமான PITUITARY செயல்பாடுதான் நம் நுண்ணறிவை தீர்மானம் செய்கிறது. இது மூளைக்கு அருகில் ஒரு சிறு பட்டாணி போல் இருக்கும்.இதன் செயல்பாட்டை தான் புதன் தீர்மானம் செய்கிறது. ஞானம்(கேது) அறிவு(குரு) இவைகளின் மேம்படுத்திய ஒரு விஷயம் தான் நுண்ணறிவு. பகுத்து அறிதல்,சூழ்நிலைக்கு சாதகமாக செயல்படல் ,அல்லது பேசுதல்.வளைந்து கொடுத்து காரியம் சாதித்தல்,பொறுமையாய் காத்து இருத்தல், ஒரு வார்த்தைக்கு பல அர்த்தம் புரிதல், மொழித்திறன், ஞாபக திறன், அதை தேவை படுகிற இடத்தில சரியாக பயன் படுத்தல், கூர்மையான தெளிவான, புரிந்து கொள்ளல் இவைகளைத்தான் PITUITARY செய்கிறது. நம் உடலில் இருக்கிற புதனின் சக்தியை பொறுத்தே மேற்கூறிய திறன்களின் மாற்றம் இருக்கும்.
ஜோதிடத்தில் புதனின் ஆட்சில் இருக்கிற மிதுனம், கன்னி ராசிகாரர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பது புதனின் தன்மையால்தான்அதிலும் கன்னி ராசியில் புதன் உச்சம், நரம்புகளின் ELECTRICAL CO-ORDINATION தூண்டகூடிய பொட்டாசியம் , சோடியம் இவர்களுக்கு உடலில் அதிக சதவீதத்தில் இருக்கும். மிக திறமையான பேச்ச்சும் சூட்சுமமான செயலிலும் கன்னி ராசி காரர்கள் வல்லவர்கள்,அதேபோல் நீசம் ஆகிற மீன ராசிகாரர்கள் கறாராக இருப்பதற்கும் கண்டிப்பாக இருப்பதற்கும் புதனின் எதிர் மறைதன்மைதான் காரணம்.
ஒரு உதாரணத்துக்கு மது அருந்திய உடன் இரத்தத்தில் கலந்து நரம்புகளின் வழியே மூளைக்கு சென்று செரிபலத்தை தூண்டி அது தன செய்யல பாட்டை அதிக படுத்தி PITUITARY நிலை தன்மையை மாற்றுவதால்தான் போதையில் உள்ளவர்கள் இயற்க்கை தன்மையை இழந்து தாருமாறாக நடந்து கொள்கிறார்கள்.
மேற்கூறிய திறன்கள் எல்லாம் இக்காலத்தில் பொருளீட்டு கொள்கையில் பொருத்தி பார்ப்பின் தரகு,AGENCY,PRO மற்றும் தொடர்பாலார்க்கு பொருந்தியதாக இருக்கும் . அல்லது இத்தொழில் இருப்பவர்களுக்கு எல்லாம் புதன் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்று நல்ல ஆதிபத்தியம் பெற்றோ இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
புதன் கெட்டரிந்தால் மூடனாக அறிவீ ளியாக அல்லது அறிவு ஊன முற்றவனாக, எல்லாம் அறிந்தவராக பேசுதல், தர்க்க வாதம் செய்பவர்களாக, தன்னை பறை சாற்றி கொள்பவர்ககளாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
புதனின் கதிர்வீச்சு கும்பகோணம் திருவெண்காட்டில் தீர்மானித்து இருகிறார்கள். நம்முன்னோர்கள். பாதிப்பு உள்ளவர்கள் அங்கு சென்று கோவிலில் ஒரு நாள் தங்கி வந்தால் பாதிப்பில் சிறிது மாற்றம் ஏற்படும்.
இன்னும் வரும்.......... அன்புடன் அஸ்ட்ரோ பாபு