Wednesday, 17 May 2017

கடவுளும் காமமும் ஜோதிடமும்
பாகம் 1
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த சில மாதங்களாக அதீத வேலை நிமித்தம் காரணமாக என்னால் தொடர்ந்து எழுதி புதிய பதிவுகள் எதுவும் இட இயலவில்லை.என் எழுத்துக்கள் மூலமாக உங்களை சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மனதில் ஓடி கொண்டிருந்த சில எண்ணங்களை ஒருமைபடுத்தி ஒரு தொடர் கட்டுரையாக கடவுளும் காமும் ஜோதிடமும் என்ற தலைப்பில் எழுத இருக்கிறேன். 
கடவுள் என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களும்,விளக்கங்களும்,புராண இதிகாச வேதங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், கடவுள் தன்மையை நான் உணர்ந்த விதத்தில் என்னால் முடிந்தவரை விவரிக்க முயல்கிறேன்.இந்த தொடர் கட்டுரை மூலமாக. ஞானிகளும் ,யோகிகளும்,சித்தர்களும் பல்வேறு விதமாக கடவுளை விவரித்து இருந்தாலும் கடவுள் என்பது ஒன்று தான் என்பதை அவர்களும் தங்கள் கூற்றினுள் தெளிவுற உணர்த்தி சென்றிருக்கின்றனர். அந்த ஒன்றை,ஒன்றான ஒன்றினுள் ஒன்றாக இருக்கிற தன்மையை நான் உணர்ந்த விதத்தில் தொடர்ந்து எழுதுகிறேன்.
கடவுளை உணர்வதே நிலையான இன்பம் என்ற முன்னோர்களின் கூற்றில் இரண்டுவித தன்மைகளை இந்த இன்பத்தில் எடுத்து கொடுத்து சென்றிருக்கிறார்கள்.கடவுளை உணர்வது பேரின்பம் மற்றதெல்லாம் சிற்றின்பம் எனலாம்.ஆனால் நாளைடைவில் சிற்றின்பம் என்ற வார்த்தையை தாம்பத்திய உறவுக்கு கொடுத்து விட்டனர்.இருந்த போதிலும் கடவுள் தன்மயை இரண்டு இன்பத்திலும் உணரமுடியும்.ஆனால் பேரின்பத்தில் கடவுள் தன்மையில் நிலைத்து தொடர்ந்து இருக்க முடியும்.சிற்றின்பத்தில் கடவுள் தன்மை தொட்டு உணர மட்டுமே முடியும்.இந்த இரண்டு இன்பங்களுக்கும் கால அளவு தான் வேறுபாடு.இறை பற்றிய விவரங்களை தொடர்ந்து விரிவாக அடுத்த பாகத்திலிருந்து எழுதுகிறேன்.
சரி, இந்த கடவுள் தன்மையை உணர்வதற்கு உண்டான ஜோதிட அமைப்புகள் எவ்வாறு இருக்கும். அந்த அமைப்புகள் நம்முள் எவ்வாறு செயல்பட்டு கடவுள் தன்மையில் இருக்க வைக்கும். அது பேரின்பமோ,சிற்றின்பமோ தெய்வ தன்மையை உணர்தல் என்பதே பெரிய பாக்கியம் அல்லவா? அதற்குண்டான ஜோதிட அமைப்புகளை இத்தொடர் கட்டுரையில் விவரித்து எழுதுகிறேன்.
மிக பெரிய கடும் சுமையான விஷயத்தை கையிலெடுத்து சுமக்க இருக்கிறேன் என் குரு நாகாவையும், சத்குரு கசவனம்பட்டி மௌன குருவும்,அப்பன் அம்பலத்தானும் துணை நிற்க கை கூப்பி வணங்கி வேண்டி தொடர்கிறேன் . பாகம் 2 இல்........ இன்னும் வரும்
....அஸ்ட்ரோ பாபு. .

2 comments:

  1. வணக்கம். இன்று மயிலைக் குறித்து அது மாயை என்பதான உங்கள் பதிவைப் பார்த்தேன். நன்று! இதனை விளக்கும் பாடல் எங்கேனும் உள்ளதா? என்னை சுந்தரா அட் ஜிமெயிலில் தொடர்புகொள்ள இயலுமா. நன்றி! sundara

    ReplyDelete
  2. அய்யா இது என் உணர்தல் மட்டுமே நான் எப்பொழுதும் மூல நூல்களையோ பாடல்களையோ எடுத்து கையாள்வதில்லை என் பதிவுகளில்

    ReplyDelete