Wednesday, 17 May 2017

நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு மாதிரி பதிவு, நான் எழுதி கொண்டிருக்கும் என் ஆய்வில் கிரகங்களும்,காரகங்களும்,பரிகாரகங்களும் புத்தகத்தின் முதல் கட்டுரை நண்பர்களின் கருத்தூட்டத்திற்க்காக ...
சந்திரன்.
. நம் சூரிய குடும்பத்தின் மிக முக்கியமான நாம் தினமும் நேரில் காண்கின்ற கிரகத்தை பற்றியது. ஆம் சந்திரன். என்னை பொறுத்த வரை இந்த கிரகம் தான் ஒரு மனிதனை ஒவ்வொரு நாளும் வழி நடத்துகிறது என்பேன். ஏன் என்று பார்க்கலாம்.
சந்திரன் பூமிக்கான இயற்க்கை துணைக்கோள். பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுவதை போல சந்திரன் பூமியை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. பூமியிலிருந்து 3,84,403 கி,மீ, தூரத்தில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் கூட, இது பூமியை சுற்றி வர 29.32 நாட்கள் ஆகும். சந்திரனில் நீர், பாலைவனம்,மலைகள் இருக்கு இல்லை என்ற ஆராய்ச்சியில் வானவியலாளர்கள் இன்றும் வாதிட்டும் அறிந்தும் கொண்டு தானிருக்கிறார்கள்
.
நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரன் தான் மிக முக்கியமானதாக கருதபடுகிறது ஒரு குழந்தை பிறப்பின்போது சந்திரன் எந்த ராசியில் நிற்கிறதோ அந்த ராசியை அக்குழந்தையின் ஜனன ராசி என்று கூறுவர். பல யோகங்கள் சந்திரனை முன் வைத்தே கணக்கிடப்பட்டுள்ளன. மிக முக்கியமான யோகங்களின் ராஜாவான கஜ கேசரி யோகம் சந்திரனை முன் வைத்தே கணக்கிட படுகிறது.
சந்திர ராசியை வைத்துதான் பிறக்கும் குழந்தையின் குணநலன்களை அறிகிறார்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம். சந்திரனை இந்திய ஜோதிடத்தில் மனதிற்கான கிரகம் என்று கூறுகின்றனர். சந்திரன் ராசி கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை வைத்துத்தான் ஒரு மனிதனின் அந்த நாளுடைய பலன்களை கூற முடியும். சந்திரன் ஆட்சி ராசி கடகம், இவர் ரிஷபத்தில் உச்சமும் விருச்சிக ராசியில் நீசமும் பெறுகிறார்.சந்திரனை வைத்துதான் திதி,நட்சத்திரம்,அமாவாசை,பௌர்ணமி போன்றவை தீர்மாணிக்கபடுகிறது.மேற்கூறிய நான்கின் நிலைகள்தான் பூமியில் ஜீவராசிகளை ஆட்கொண்டு வழி நடத்துகிறது.
நம் மூளையில் உள்ள செரிபலத்தில் ventricle 1,ventricle 2, இன் இயக்கமும்,நம்முடையbllod plasma.,வின் இயக்கத்தையும் வைத்துகொண்டு ventricle 3., வழியாக medulla வை . இயக்குகிறது. இந்த 4 இன் ஒரு முக்கிய பகுதியான மனத்தை இயக்குகிறது blood plasma,வை இயக்குவதால் இரத்தத்தின் ஓட்டத்தையும் அதன் விரைவு செயல் பாட்டையும் இயக்குவதால் மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து மூளையை திறம்பட செயல்பட வைப்பதால் மூளையின் இயக்கமும் pituitary இயக்கமும் சீராக இருந்து நம்முடைய மனம் தெளிவான செயல்ப்பாட்டை செய்து எண்ணங்கள் தெளிவாகி அதன் செயல் திறம்பட உடலின் வழியாக செய்யப்படுகிறது. உடலின் செல்களின் இயக்கத்திற்கு மூலமாக இருப்பதால் சந்திரனை வைத்து அம்மனிதனின் மூலமான DNA வான அவனின் தாயின் உடைய பங்கை கூட கணிக்க முடியும்.ஆக இரத்தத்தின் ஓட்டமும்,அதனால் வீரியபடும் மூளையின் தன்மையும் இவை இரண்டும் செயல்படும் திரையான மனமும் சந்திரன்.
கேது,ராகு,குரு,புதன், போன்றவற்றின் பகுதி செயல்பாடாகவும் சந்திரன் இருப்பதால் சந்திரன் இரத்த இயக்கமும்,குருவின் மூளை செயல்படும் திறமாக இருப்பின் அம்மனிதன் திறமைசாலியாக இருப்பான். அனைத்து வெற்றிகளிலும் எல்லா கலைகளிலும் பெறுவான் அல்லவா, இரத்த இயக்கத்தை எந்த சக்தியுடன் சேர்த்தாலும் ஒரு பெரிய சக்தியாக வெளிவரும் என்பதால் தான் சந்திரனை எல்லா யோகங் களுக்கும் முக்கியமாக கூறினார்கள்.
சந்திரன் வலுவாக இருக்கிற ரிஷப, கடகம்,ராசிக்காரர்கள் மனதளவில்
பலமுள்ளவர்களாகவும் எனது சூழ்நிலையிலும் பதட்ட படாதவர்காளகவும் இருப்பர். சந்திரனுடைய நட்சத்திரமான ரோகினி,அஸ்தம்,திருவோணம் நட்சத்திர காரர்கள் பிறர் மனம் அறிந்து பேசுவதில் வல்லவர்கள் , பிறரை தன் தெளிவான பேச்சினால் கவர கூடியவர்களாக இருப்பார்கள். சந்திரனுடைய பயணம் 21/2 நாட்கள் ஒரு ராசியில். தினமும் நாம் நடந்து கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு சந்திரனின் சுழற்சியே காரணம். நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள் தெளிவு பட புரியும்.
காரகம்
சந்திரன் மனோக்காரகன்,மாத்ரு காரகன் ஏன்?
கிரகங்கள் நம்முள் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தி நம்மை இயக்குகிறது .அதே சூத்திரத்தின் அடிப்படையில் சந்திரன் நம் உடலில் இரத்த ஓட்டத்திற்கும் மன செயல்பாடுகளுக்கும் பொறுப்பு எடுக்கிறது. எப்படி?
எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் வெள்ளை அணுக்கள்,சிகப்பு அணுக்களின் கலவையான இரத்த உற்பத்தியை செவ்வாய் கவனித்து கொண்டாலும், அந்த இரத்த ஓட்டத்தின் சீரான தன்மையையும் ஓட்ட நேர்த்தியையும் சந்திரனே கவனித்து கொள்கிறது.
இரத்த ஓட்டம் சீராக இருப்பின் நரம்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாகவும்,செயல்பாடு திறம்படவும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே.அதே நேரம் இரத்த ஓட்டம் சீராக இருப்பின் மூலையின் செயல்பாடும் திறம்பட இருக்கத்தானே செய்யும்.
சந்திரன் நம் உடலில் வலுவாக இருப்பின் இந்த செயல்பாடுகளின் சூட்சும விஷயமான மனமும் மனத்தின் இயக்கமான எண்ணங்களும் மேம்பட்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.மனம் புத்தி,அறிவு இம்மூன்றும் நம்முள் இயங்கும் ஒரு சூட்சும நிலைகள் தான் இவை மூன்றும் நன்றாக இயங்கின் , இவற்றின் செயல்பாடுகளான மனித செயல்கள் தெளிவாகவும் திறம்படவும் இருக்கும் மனம் தெளிவாக்க இருப்பின் சிந்தனைகள் நலமுடனும் ஆரோக்கியமான எண்ணங்களும் செயல்பாடுகளாய் மாறும்.சிறந்த சிந்தனையாளர்களாகவும்,நல்ல கற்பனை வளம் உள்ளவர்களும் சந்திரன் பலம் வாய்ந்தவர்களே.
சந்திரன் பலமிழந்து இருப்பின் இதன் மாற்று தன்மையை நம் செயல்களில் பிரதிபலிக்கும்.மறதி ,மந்த தன்மை,தவறான சிந்தனைகள் சோம்பி கிடத்தல், முன்கோபி,போன்ற தன்மைகள் ஆட்கொள்ளும்.
.இரத்த ஓட்டம் தான் நம் அணுக்களின் ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் கூட பொறுப்பு எடுக்கிறது.நம் மூல அணுக்களின் கடத்தலும்,கூட, இரத்த ஓட்டத்தின் சீரால் தான் இயங்குகின்றன.DNA என்று சொல்லபடுகிற நம் மூலக் கூறுகளின் இயக்கங்கள் இச்சீரான இரத்த ஓட்டத்தின் முலமே உயிர்ப்போடு செயல்படுகிறது.மேலும் இரத்தமும், இரத்த தன்மைகளும் நம்முள் தாயிடமிருந்தே இயற்கை சிருஷ்டி நமக்கு வழங்கி இருக்கிறது ஆதலால்தான் நம் மூலமான தாயின் நிலையை கூட இரத்தம்.இரத்த ஓட்டத்தைகொண்டுஅறியமுடிகிறது.மேற்கூறியவைகளால்தானசந்திரன்ம்னோக்காரகனாகவும்,மாத்ருக்காரகனாகவும் ஆனான்.
கிரகங்களின் பரிகார வழிபாடு பாகம் 5
சந்திரனுக்கு தோஷம் என்பது இல்லையென்றாலும் வளர்பிறை சந்திரன்,தேய்பிறை சந்திரன் என்ற பாகுபாடு உள்ளது.வளர்பிறை சந்திரன் சுபம் எனவும் தேய்பிறை சந்திரன் சமம் எனவும் கொள்கிறார்கள்.
.
ஆன்மீக வழியில் சந்திரனுக்கு இயக்கம் என கொள்ளலாம் இருப்பு சூரியனும்,இயக்கம் சந்திரனும் ஆகும். இயக்கம் சீரிய வழியில் இருப்பின் இருப்பும் சுழற்சியில் வீரியபடும். சூரியன் கேந்திரம் என்றால் சந்திரன் திரிகூனம் ஆகும்.நம்முள் இருக்கிற இருப்புகளாகிய இரத்தம்,தசை,நரம்பு,எலும்பு ஆகியவற்றை இயக்குகிற இயக்க சக்தியாக சந்திரன் நம்முள் இயங்குகிறது.ஆனால் ரஜோ குணமாக இல்லாமல்,சாத்வீக குணத்தோடு இயங்குகிறது.நம் உடலின் நீர் தன்மையின் ஆதாரம் சந்திரன். சந்திரனுடைய சக்தியை நீர் இருக்கும் இடங்களில் அமாவாசை, மற்றும் பௌர்ணமி நேரங்களில் நன்றாக உணர முடியும்.
சந்திரனுக்கு வளர்பிறை தேய்பிறை என்ற பாகுபாடு உள்ளது அல்லவா.சந்திரன் பூமியை சாய்ந்த பாதையில் கீழ்முகமாக இறங்குகின்ற சுற்றுப்பாதை தேய்பிறை என்றும்,மேல்முகமாக ஏறுகிறபோது வளர்பிறை. மேலிருந்து கீழாக வரும்போது ஒரு சக்தியையும் கீழிருந்து மேலே போகும்போது ஒருவித சக்தியையும் சந்திரன் பூமிக்கு வெளிபடுத்துகிறது. சிறு குழந்தைகள் சறுக்கு விளையாடுகிறபோது படி ஏறுகிறபோது முழு சக்தியையும் சறுக்கும்போது சக்தி குறைந்தும் பயன்படுத்துவது போலத்தான். வளர்பிறையில் பிறந்தவர்கள் சந்திரனின் சக்தி ஓட்டம் அதிகமாகவும் தேய்பிறையில் பிறந்தவர்கள் சக்தி ஓட்டமும் குறைந்தவராகவும் இருப்பார்
.மேலும் ராசி கட்டத்தில் மறைவிடங்களான 3,6,8,12, சந்திரனின் நீச வீடான விருச்சிகம், சர்ப்ப சேர்க்கை மேலும் பகை கிரக சேர்க்கை போன்றவைகளில் சந்திரனின் தொடர்பு இருப்பின் சந்திரனின் சக்தியான மனதில் ஒரு மாறுபட்ட தன்மையை ஏற்படுத்தி இருக்கும். கேந்திர திரிகோணத்திலோ சுப கிரக சேர்க்கையோ இருப்பின் மனதின் தன்மை வலிமையோடும் மற்றும் தெளிவு நிறைந்ததாகவும் இருக்கும்நான் முன்னரே கூறியுள்ளபடி மூளை(குரு),இரத்தம்(செவ்வாய்),தசை (ராகு),நரம்பு(சனி),எலும்பு(சூரியன்) இவைகளில் மன சேர்க்கை சேரும்போது உடல் எவ்வாறு செயல் படுகிறதோ அதை பொறுத்துத்தான் அந்த மனிதனின் செயல்பாடுகள் இருக்கும்.
சந்திரன் பாதிப்பு உள்ளவர்கள் இலகுவாக ஜீரணிக்க கூடிய உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம்.எந்த அளவுக்கு ஜீரணம் எளிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு புத்தியின் செயல்பாடு சீராக இருக்கும்.பச்சை காய்கறிகள்,பழங்கள்,மாவு சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும்.தினமும் அதிகாலை நடைபயிற்ச்சி இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ள உதவும்
சந்திரனின் முக்கிய பரிகார ஸ்தலமாக திருப்பதியை சொல்கிறார்கள்.நான் மேற்கூறிய இடங்களில் சந்திரன் ஜனனத்தில் கொண்டிருப்பவர்கள் இங்கு செல்கிற போது சந்திரனின் மாறுபட்ட சக்தி சம நிலைக்கு வரும்.அதனால்தான் நம் முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறை திருப்பதி தரிசனம் மேற்கொண்டனர்.அதேபோல் நவ கிரக ஸ்தலங்களில் கும்பகோணம் திங்களூரில் சந்திரனின் சக்தியை நிலை நிறுத்தி வைத்து இருக்கின்றனர்.இந்த இடங்களில் சென்று ஒரு இரவு தங்கி வாருங்கள் மனதளவில் பெரிய மாற்றங்களை உணர்விர்கள் மனதும் உங்கள் வாழ்வும் வளம் பெரும். இன்னும் வரும்......
அஸ்ட்ரோ பாபு .

No comments:

Post a Comment