Wednesday, 17 May 2017


கடவுளும்,காமமும்,ஜோதிடமும்.
பாகம் - 11
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த பாகம் ஜோதிட பேருந்தின் கடைசி நிறுத்தம்.கடந்த பாகத்தில் இயற்கை என்னும் பிரபஞ்சச தன்மையான கடவுள் தன்மை நம்முள் எவ்வாறு செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுகிற செயல்பாடுகள்தான் ஜோதிடம் என்பதை நான் உணர்ந்த தன்மையில் விளக்கி இருந்தேன்.
ஒவ்வொரு கிரகமும் மனித உடலினுள் எந்த செயல்பாட்டுகளை செய்கிறதோ அந்த செயல்பாடுகளை தான் ஜோதிடத்தில் கிரக காரகங்கள் அல்லது கிரக தன்மைகள் என கொண்டிருக்கிறார்கள்.நம் முன்னோர்கள்.இந்த செயல்பாடுகளை குறித்த கணக்குகளை நம் முன்னோர்கள் அவரவர் உணர்ந்த தன்மையில் விளக்கி சென்றிருக்கிறார்கள். அவரவர் கணக்கு முறைகளும் அவர்களுடைய அனுபவங்களும் ஜோதிட முறைகளாகி இன்றைக்கும் சுடர் விட்டு பிராகாசித்து கொண்டுதான் இருக்கிறது.சரி ஜோதிட பயணத்தை தொடர்வோம்.
இந்த கோள்கள் தன தன்மைகளான காரகங்களோடு மனித உடம்பின் 7 ஆதார மையங்களில் அடைக்கப்பட்டு தன வினையை செயலாற்றி கொண்டிருக்கின்றன.அவ்வாறு மனித உடம்பின் செயல்களை பட்டியலிட்டதில் எந்த செயல்கள் எந்த கிரகங்களால் நடத்த படுகிறதோ அந்தசெயல்களின் பொறுப்புகளை அந்த கிரக தன்மைகளாக கொண்டார்கள்.
சூரியன்ஆண்மக்காரகன்,சந்திரன்,தாய்க்காரகன்,மனோக்காரகன்,செவ்வாய் - இரத்தக்காரகன்,சகோதரக்காரகன்,புதன்-வித்யாக்காரகன் நுண்ணறிவு,குரு-புத்திரக்காரகன்,தனக்காரகன்,சனி-கர்மாக்காரகன் ஆயுட்க்கார்கன்,கேது -ஞானகாரகன்,தாய் வழி உறவு,ராகு-மோடசக்காரகன், தந்தை வழி பாட்டனார் என கிரக காரகங்களை பிரித்து கணக்கிட்டு நம் செயல்பாடுகளை கண்டு பிடித்ததுதான் ஜோதிடம் , இந்த செயல்பாடுகள் இறந்த காலம்,நிகழ காலம், எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்று கணக்கிட்டு உரைத்த விஷயம்தான் ஜோதிட பலன் ஜோதிடம் வேறு ஜோதிட பலன் வேறு.
ஜோதிடம் உண்மையை கண்டறிவது இயற்கையான பிரபஞ்சச தன்மையை உணர்வது.ஆனால் இதன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற கணக்கீடுகள் ஜோதிட பலன்.
மேலும்,நிழல் வெட்டு புள்ளிகளான ராகு கேது இரண்டும் நமக்கு அதாவது பூமிக்கு வெகு அருகே செயல்படுகிற தன்மையினாலும்,சூரிய பாதை,பூமி,சந்திரன் மூன்று சக்தி நிலைகள் சந்திக்கின்ற சக்தி ஓட்டம் நிறைந்திருக்கின்ற இடமாதலால் அவற்றை முதன்மையாக கொண்டே இந்த 7 சக்தி மையங்கள் இயங்குகின்றன.கேது முதல் மையமான மூலாதாரமாகவும்,ராகு இறை நிலையான சகஸ்ராவுமாக இருந்து இடையில் இருக்கும் 5 மையங்கள் சுக்கிரன்,புதன்,குரு,சனி,செவ்வாய் என்ற 5 கிரகங்களின் ஆதிக்கத்தில் தன தொழிலை இயற்கை தீர்மானித்த வாறு செயல்படுத்தி கொண்டிருக்கின்றன.இந்த இயற்கை நம் உருவாகத்திலேயே தன தன்மைகளை உட்புகுத்தி நம்முள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது இந்த நர்த்தனத்தைதான் நாம் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எதோ நாம் தீர்மானித்த ,நாம் கணக்கு போடுகிற,நாம் ஜெயித்த நாம்,நாம்,நாம் என்று உரைத்து கொண்டிருக்கிறோமே நாமா செய்கிறோம் அனைத்தும் இயற்கை என்ற கடவுள் தன்மையின் செயல்பாடுகளே அன்றி வேறேதும் உண்டா?
என்னால் முடிந்தவரை கடவுள்,காமம் ,ஜோதிடம் மூன்றையும் சுருக்கி கொடுத்து இருக்கிறேன்.
இந்த தொடர் கட்டுரையின் நோக்கம் இம்முன்றையும் விளக்குவதல்ல,இயற்கையான பிரபஞ்சச தன்மையான கடவுளை உணர்வதற்குதான்.
நாம் ஜோதிடத்தில் பயணித்து காமத்தின் மூலமாக கடவுளை உணர,எனக்கு உணர்த்திய விதத்தில் அல்லது நான் உணர்ந்த விதத்தை நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கடவுள் தன்மை,என்ற விஷயத்திற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் இருந்தாலும் நான் உணர்ந்தது.இதுவே.
எப்படி,ஏன்,இது உண்மையில்லை, சாத்தியமா,பொய் என்று இனிவரும் பாகங்களில் வரும்விஷ்யங்க்ளை விமர்சித்தாலும் நான் உணர்ந்த விஷயம் இதுதான்.இதை நான் மற்றவரிடத்திலும் சோதித்து பார்த்து உங்களுக்கு பகிர்கிறேன். அவர்களும் என நட்பு வட்டத்தில் இங்கே இருந்து இதை படித்தும் அனுபவித்தும் தான் இருக்கிறார்கள். .வேண்டுமென்றால் வைத்து கொள்ளுங்கள இல்லையெனில் ஒரு பையித்த்யக்காரனின் உளறல் என்று ஒதுக்கி விடுங்கள்.
நான் உணர்ந்த கடவுள் நிலைகள் 5, அவை ருத்ரன்காளி,அர்த்தனாரிஸ்வரா, நடராஜா-ஈஸ்வரி,கால் பைரவா - பைரவி, சதா சிவா-பார்வதி.
இந்த நிலைகளை தொடர்ந்து பார்ப்போம் இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.

1 comment: