கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 2.
பாகம் - 2.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடவுளும் ,காமமும்,ஜோதிடமும் என்ற தொடர் கட்டுரையின் பாகம் 2 இல் தலைப்பில் இருக்கும் மூன்று தன்மைகளுக்கும், நான் உணர்ந்த விதத்தில் ஒரு சிறு விளக்கம் அளித்துவிட்டு இம்முன்றும் ஒருங்கே செயல்படும் விதங்களுக்கு படிப்படியாக வருகிறேன். ஆதலால் என் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் ஒன்று.தொடர்ந்து தொடர் கட்டுரையை படித்து வாருங்கள் அப்பொழுதுதான் இந்த தலைப்பின் முழு தாத்பரியமும் புரியும்.

கடவுள்:- கடவுள் என்ற வார்த்தைக்கு நம் ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும்,ரிஷிகளும் பல்வேறு விதமான தத்துவார்த்தங்க்களை கூறி சென்றிருந்தாலும் நான் கடவுள் என்ற வார்த்தைக்கு இயற்கை என்ற ஒற்றை சொல்லைத்தான் என் அனுபவமாக கொண்டிருக்கிறேன். கடவுள் என்பதை இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி(பிரபஞ்சம் என்பதை அடுத்து வரும் பத்ததிகளில் விவரித்து இருக்கிறேன்) என கொள்ளலாம்..
கடவுள் என்பதற்கு பலவேறு விதமான வடிவங்களை நம் முன்னோர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.அந்த வடிவ சித்திரங்கள் அனைத்தும் பிரபஞ்ச சக்தி செயல்படும் விதமாகத்தான் இருக்கிறது அனுபவத்தில். பொதுவாக கடவுள் என்பது இயற்கை என்றாலும் இந்த இயற்க்கை என்பது இருப்பது, அதை தவிர வேறொரு வார்த்தையும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பை தான் இயற்கை என்று சொல்கிறோம் .அப்படித்தானே.
இயற்கை-இருப்பு இவற்றிற்கு எதுவும் விளக்கங்களோ வியாக்கியானங்களோ இல்லாத ஒன்றுதானே? "எதுவும் அற்ற" என்று கூட கொள்ளலாம் அல்லவா.இயற்கை-இருப்பு என்றால் இருப்பது அவ்வளவுதான் அதற்கு மேல் விளக்கங்கள் இல்லை.அந்த எதுவும் அற்ற இருப்பாகிய இயற்கையே கடவுள்.இந்த இருப்பு இயற்க்கை தான் பிரபஞ்சம்.
அப்படியெனில் இந்த பிரபஞ்சம் எங்கே இருக்கிறது.மனிதனாகிய நமக்கு எதிரே இருக்கும் அனைத்துமே பிரபஞ்சம்.தான்.
அறிவியல் ரீதியாக விடை காண முயன்றால் .. அதற்கு நாம், நாம் இருக்கும் இடம், நாம் இருக்கும் இடம் இருக்கும் இடம்,அதன் சூழ்நிலை,அந்த சூழ்நிலை இயங்கும் விதம் அந்த இயக்கம் வெளிபடுத்துகிற தன்மை அந்த தன்மையின் விளைவுகள் என தொடர்ந்து கொண்டே போகலாம் இருந்த போதும் அப்படியும் சென்று தேடிய விளைவு...
நாம் இருக்கும் இடமாகிய பூமி,பூமி இருக்கின்ற சூரிய குடும்பம் அந்த குடும்பத்தில் இருக்கின்ற 9 கிரகம்,2 நிழல் தன்மைகள் இத்தனை விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஒரு சீரான பாதையில் சீரான இடைவெளியில் தானும் இயங்கி கொண்டே சூரியனையும் சுற்றி வருகின்றன என்று நாம் அறிந்ததே
இந்த இயக்க குடும்பத்தில் ஈர்ப்பு விசை,விலக்கு விசை, இவை இரண்டும் உற்பத்தி செய்யும் காந்த சக்தி,அதன் பிறப்பான மின் சக்தி, மின் சக்தியின் உற்பத்தி என ஒரு கலவை சூரிய குடும்ப இருப்பிடத்தில் செயல்பட்டு கொண்டே இருக்கின்றன.இத்தனை செய்லகளும் நடைபெறும் இடம் அந்தரம் எனும் வெற்று வெளி, இவை மட்டுமில்லாமல் இந்த நாம் சூரிய குடும்பம் போல பல நூறு சூரிய குடும்பங்களும், பால் வெளி மண்டலங்களும்,நட்சத்திர கூட்டங்களும் வெட்ட வெளியில் தான் சீரான இயக்கத்தில் இருக்கின்றன.இத்தனை விஷயங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆதாரமான இருப்பு என்கின்ற இடம்தான் கடவுள் என நான் உணர்ந்தேன்.உணர,உணர,தெளிய,தெளிய பிரமாண்டம் விரிய விரிய யோசிக்கின்ற,ஆராய்கின்ற நான் இல்லாமலே இருப்புக்குள் அடங்கினேன் என்பதே உண்மை. விரிந்த வெளியில் இயங்குகின்ற கடவுள் தன்மைகளை அடுத்த பாகம் 3 இல் தொடர்கிறேன் இன்னும் வரும்..... அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment