Wednesday, 17 May 2017

கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 4.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த 3 பாகத்தில் கடவுள் தன்மைகள்,அதன் தொழில்,அந்த தொழிலின் அடிப்படை விதிகள்,அதன் மாற்றங்கள்,பரிணாம வளர்ச்சி பற்றி பார்த்தோம். இந்த பாகம் 4 இல் இன்னும் அதை சற்று விரிவாக பார்ப்போம்.
கடவுளின் மூன்று செயல்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,இந்த செயல்களின் அடிப்படைகளான நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம் என்ற5 தத்துவங்களின் தொடர் மாற்றங்களும் அதன் மூலமாக நடக்கும் 3 தொழில்களின் தொடர் மாற்றங்களும் பரிணாம் என்ற வளர்ச்சியை வழங்கி கொண்டே இருக்கின்றன
அந்த பரிணாம் வளர்ச்சியில் அறிவு என்ற தன்மை வளர்ச்சி யுற்று தேடுதல் பிறந்து மூலத்தை தேட துவங்கியது. அந்த தேடுதல் பயணம் படைத்தலில், உயிர் ஆன்மா என்ற இருபடி தன்மையையும்,காத்தலில் வேதம் உபநிஷம்,என்ற இருபடி தன்மையையும்,அழித்தலில் முக்தி என்ற தன்மையையும் உணரத்துவங்கியதின் விளைவும், இந்த உணர்தலின் விரிவாக்கமும் தான் ஆன்மீகம் என்ற அடை மொழிக்குள் வந்து விழுந்தது.
இந்த பூமியில் நடைபெற்று கொண்டிருந்த 3 வினைகளில்,இவற்றிற்கு மூலமாக இருந்த இருப்பு இயக்கம் அவற்றின் செயல்பாடு தன்மைகளான 5 யும் கண்டு பயந்து வழிபட துவங்கி,அவைகளை நட்பாக்கி,அவைகள் என்ன? அவற்றின் தன்மை என் ஆராய முற்பட்டு அவைகளுடன் எவ்வாறு கலக்க அல்லது ஒன்றிணைய வேண்டும் என்று அனுபவம் மூலமாக கற்றறிந்து அதன் வழிமுறைகளை பின்பற்றி கடந்து பொய் இயற்கை கடவுள் தன்மைகளான இருப்பையும் இயக்கத்தையும் அடைந்த மனிதன் அதை அடுத்த சந்ததினருக்கு தெரியப்படுத்தி கொண்டே இருந்ததுதான் வேதம்,உபநிஷ தத்துவங்கள்,மேற்குறிய விஷயங்கள் அனைத்தும் அடங்கிய விஷயம் ஒரு நான்வித முறைகளில் இன்னும் உணரப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
1.பக்தி,2,கர்ம,3,யோகம்,இராஜ என்ற 4 பாதைகளில் இந்த ஆன்மீக உணரல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
பக்தி:- பக்தி என்பது முன்னர் உரைத்தபடி ஆதி மனிதன் இயற்கையை கண்டு பய ந்து அடிபணிந்து தன்னை இயற்கையுடம் ஒப்படைத்து இயற்கையை போற்றி வேண்டி கொள்வது இதுதான் ஒப்படைத்தல் அல்லது சரணடைதல் என்ற தன்மையின் விளைவால் ஏற்பட்ட அதீத கற்பனையில் பல உருவங்களை படைத்து தன்னை அந்த உருவங்களிடம் ஒப்படைத்தது.
கர்ம:-இயற்கைக்கு மாறான விஷயங்களில் ஈடுபடாமல் தன் செயல்களை இயற்கையை ஒட்டியே செய்து வந்து, இயற்கைக்கு ஒத்திசையானவை புண்ணியம். மாறானவை பாவம் எனக்கொண்டு நாம் வாழ்கின்ற இடத்தின் தன்மைக்கு இணைந்து கூட்டத்தோடு வாழ்ந்து சென்றது.
யோகம்:- இயற்கையுடன் நட்பு பாராட்டி அவற்றுடன் கலக்க எந்த விதத்தில் 5 வித தன்மைகளை பயன்படுத்தி இருப்பு இயக்கத்தை உணர்ந்து அதன் பால் இணைந்து அல்லது கலக்க, நமக்கும் இயற்கையான பிரபஞ்சத்திற்கும் உண்டான நேரடி தொடர்பான சுவாசம்,அது செயல்படும் முறை இவற்றை கொண்டு தான் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்ற சூட்சுமத்தை கண்டுபிடித்து அனுபவம் பெற்று மூல்த்துடன் கலந்தது.
இராஜ:- இந்த இருப்பு இயக்கத்தை உணர்ந்ததோடு மட்டுமிலாமல் 5 வித தன்மைகளை ஒரு சக்திகளாக்கி பூதங்கள் என்ற தன்னிலை மிஞ்சிய சக்தியாக் கொண்டு அவற்றின் மூலம் இருப்பு இயக்கத்தை அடைந்து அத்துடன் நிலைத்தல் என்பனவாம்.
மூன்று நிலைகளான படைத்தல்,காத்தல்,அழித்தல் 5 வித தன்மைகளில் செயல் பட்ட விதம் உணரப்பட்டு,உரைக்கப்பட்ட விஷயத்தை வெளிபடுத்துவதுதான் வேதங்கள்.வேதங்களும் கால மாற்றங்களில் உணர்தல் மாறுபட மீண்டும் புணரமைக்கபட்டு இறுதியாக 4 வேதங்களாக இன்று வரை தொடர்கிறது
எனது உணர்தலில் நான் கூறிய ஒவ்வொன்றும் ஒரு கோடிட்ட விஷயங்களே மாபெரும் ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கும் விஷயத்தை சுருங்க விவரிக்க முயன்று இருக்கிறேன்.
சரி, இருப்பு,இயக்கம் இரண்டுமே இயற்கையை கடவுள் என்று வணங்கியவுடன் இருப்பை சிவமாகவும்,இயக்கத்தை சக்தியாகவும் கொண்டு இரண்டு வித தன்மைகளை ஆண்,பெண் என்ற நிலையில் கொண்டு மூன்று தன்மைகளை கடந்து கொண்டே இருக்கிறோம். பாகம் 5 இல் தொடர்கிறேன். இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment