Wednesday, 17 May 2017

கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 6
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கடவுளும், காமமும்,ஜோதிடமும் தொடர் கட்டுரையின் பாகம் 6. காமம் என்ற பேருந்தின் பயணம் தொடர்கிறது.
ஆக காமம் என்பது சலனம்,சலனம் ஏற்படுத்துகிற ஈர்ப்பு,இருப்பு இயக்கம் என்ற இரண்டு இயற்கையான தன்மைகளில் ,படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற மூன்று வினைகளுக்குள் தன்னை சுழற்றி கொண்டே இருக்கிறது.. காமம் இயற்கையுடன் இணைந்து இயற்கையின் மூலமான இருப்பையும்,இயக்கத்தையும் இயக்கி படைத்தல் என்ற தொழிலை சீராக செய்து கொண்டிருக்கிறது.இப்பிரபஞ்ச்சத்தில்.ஆக காமம் இப்பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து தான் இருக்கிறது.
இருப்பு என்பது ஒரு தன்னிலை,இயக்கம் என்பது ஒரு தன்னிலை இந்த தன்னிலைகளும் சலனப்படுகிறபொழுது ஈர்ப்பு ஏற்பட்டு படைத்தல் நிழ்கிறது.இருப்பை சிவனாகவும்,இயக்கத்தை சக்தியாகவும்,அதை ஆண் ,பெண் என்று வடிவமாக்கி கொடுத்து இருக்கிறார்கள். இயற்கை தன் மூன்று தொழில்களை இந்த இரண்டின் மூலமாக தானே நிகழ்த்தி கொண்டிருக்கிறது.படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற மூன்று நிலைகளிலும் நாம் உணர்கிறோமோ இல்லையோ காமம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
இயற்கை தன்மையான இருப்பு என்ற ஒன்றுமில்லா நிலையை நம் முன்னோர்கள் சிவம் என்றனர் அதே போல் இயக்கம் என்ற இயங்குகின்ற நிலையை சக்தி என்றனர் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஏகப்பட்ட விளக்கங்களை நம் முன்னோர்கள் கொடுத்திருந்தாலும் நான் உணர்ந்தது இரண்டு தன்னிலை என்ற தன்மையை மட்டுமே
படைத்தல் என்பது ஒன்றை உருவாக்கள் , இந்த ஆணும் பெண்ணும்,சிவனாகிய இருப்பாகிய ஒன்றுமில்லா தன்மையும், சக்தியாகிய இயக்கம் என்ற இயங்குகின்ற தன்மையும் சலனப்பட்டு காமுற்று இணைந்து ஒரு நிலையில் சந்தித்து ஒன்றை உருவாக்குவது.
காத்தல் என்பன் உருவாகிய ஒன்றை இந்த இயற்க்கை தன்னை 5 வழிமுறைகளின்(நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்) மூலம் நிலை நிறுத்தி கொள்வது,
அழித்தல் உருவாகிய காக்கப்பட்ட ஒன்று மீண்டும் இயற்கையில் இணைகிற ஒரு விஷயம்.இதுதான் இது மட்டும்தான் இந்த இயற்கை நமக்கு வழங்கிய ஒன்று.
இருப்பு,இயக்கம் சலனப்பட்டு காமுற்று இயங்கி ஒன்றை உருவாக்குதல் படைத்தல் அதேபோல் உருவாக்கிய ஒன்றிலிருந்து பிரிந்து இயற்கை நிலையான இருப்பையையும்,இயக்கத்தையும் நோக்கி பயணப்பட்டு முடியுருவது அழித்தல் இந்த இரண்டு நிலைகளின் காமத்தில் தான் தன்னிலைகளான இருப்பு,சிவன்,இயக்கம் சக்தி இவற்றின் தொடர்பில் இருக்கிறோம்.
படைத்தலின் காமத்தில் தான் காலம்,உணர்வுகள் என்ற உருவமில்லா,சுட்டி காட்ட முடியா,உணர்த்த முடியா மாயையில் சிக்கி,தன்னிலையான இயற்கையை விட்டு விலகி நிற்கிறோம்.காலம் பூமியில் நாம் ஜனித்த்கவுடனே தொடங்கி விடுகிறது.இயற்கையாகிய பிரபஞ்ச தன்மைகளான சூரிய,சந்திர கோள்களின் சக்தி நடனம் நடைபெற துவங்கி விடும். அந்த நடனத்தின் பிரிவுகளான உணர்வுகளுக்குள்ளும் நாம் பயணப்பட்டேதான் காத்தலை கடந்து அழித்தளுக்குள் நுழைந்து சிவன் சக்தியை அடைய வேண்டும்.
இந்த உணர்வுகள் ஆசை,கோபம்,பொறாமை,அடைதல்,என்ற பிரிவுகளுக்குள்ளே நான் என்ற விஷத்தை உருவாக்கி அந்த சுவைக்கு நம்மை அடிமையாக்கி,அந்த சுவை என்கின்ற விஷத்தை உட்கொள்ள உட்கொள்ள நாம் படைத்தலின் முலத்தை மறைத்து விடுகிறது.இந்த நான் என்ற விஷ சுவையை விலக்க, உணர்வுகளை தவிர்த்து,காலம் என்ற அத்தன்மையை கடந்து மூலத்தை அடையத்தான் இத்தனை பிரயத்தனம். காத்தலில்.
அழித்தல் காமத்தில், நர்த்தனம் ஆடிய உணர்வுகளும் அது தந்த நான் விஷ சுவையும், காலமும் முடிவிற்கு வந்து மூல்த்தை நோக்கி பயணப்படுகிற நேரம். மூலத்தின் அடையாளங்களை தேட முற்படும் ஒடுங்குவதற்கு.
மனிதர்களாகிய நாம் பூமிக்குள் வந்தவுடனே காலம் நம்மை தத்து எடுத்து கொள்கிறது.அதில்தான் உணர்வுகள் பிறக்கின்றன.ஆசை தன தோகையை விரிக்கிறது,தான் என்ற தன்மை தலையெடுத்து சுயம் (நான்) பிறந்து தன்,தனது என்று உருவெடுத்து உறவுகள்,என இன்றைக்கு உலகம் இப்படி மாற்றிவிட்டது.ஆனால் இயற்கைக்கும் மேலே கூரப்பட்கூறப்பட்ட விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
இயற்க்கை படைத்தலில் தொடங்கி காத்தலில் தன்னை நிலை நிறுத்தி மற்றொன்றை உருவாக்கி அழித்தலில் தன்னை இயற்கையோடு இணைத்து கொள்ளும்.
படைப்பை மனிதன் தன சுயநலத்திற்கு இன்றைக்கு வளைத்து கொண்டாலும் இன்றும் ஆணுக்கு சிவத்திற்கு படைத்தலுக்கு காரணாமாய் இருக்கிற விந்து சுரத்தலும், சக்திக்கு சுரோணிதம் சுரத்தலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அதை எந்த மனிதனும் நிறுத்த முடிவதில்லையே. அவை இயற்கையின் ஏற்பாடு. அதேபோல் காத்தலில் சுவாசமும்,உணவும்,தொடர்ந்து கொண்டேதான் இருக்க வேண்டும்,காலம் என்ற வயது கடத்தலும் இயற்கை தன்னை நிலை நிறுத்தி இருக்கிறது இவற்றை நாம் எதுவும் செய்துவிட முடியாது.இந்த இயற்கை விஷயங்களில் மனிதன் மாற்றத்தை செய்ய எத்தணித்த பொழுதுதான் இன்றைக்கு இத்தனை நோய்கள், உடல்,மன பிரச்சனை.போராட்டம், குண நலன்களில் மாற்றம் என்று இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறது.
சரி இயற்கை தன்மையான ஆண் ,பெண் என்ற வடிவம் பெற்ற சிவனும் சக்தியும் காமுற்று படைத்தலில் தன்னை புகுத்தி கொள்ளும் பொழுது நிகழ்கிற நிகழ்வு இயற்கை நடத்துகிற நர்த்தனம் தானே,அந்த நர்த்தனத்தை நாம் உணர்ந்தால் இயற்கையான சிவனும் சக்தியையும் நாம் உணர முடியம் தானே. மாற்று வழியில் சொன்னால், சிவனும் சக்தியும் ஆடும் நர்த்தனம் தானே கலவி சிவன் சக்தி இரண்டும் இணைதல். இன்னும் சற்று இலகுவாக சிந்திக்கிறபொலுது .படைத்தல் எப்பொழுதெல்லாம் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் இயற்கை என்ற கடவுள் தன்மையில் இருந்தால்தானே சாத்தியம். அடுத்த பாகத்தில் தொடரும். நான் பதிகிற படங்களை உற்று பாருங்கள் பிரபஞ்ச்சத்தில் நடைபெறுகிற காமம் நெபுலா என்ற சொல்லபடுகிற சக்தி ஓட்டங்கள் ஒன்றை ஒன்று இணைகிற பொழுது நடைபெறுகிற விஷயத்தைதான் படங்களாக பதிகிறேன். இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment