கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 8
நண்பர்களுக்கு வணக்கம்,
கோள்களின் 9 விதமான தன்மைகள் இயக்கமாகிய பெண்ணிற்குள் இருக்கும் கருப்பையில் எவ்விதம் தன வேலையை செய்கிறது என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம். அதே போல் இருப்பாகிய சிவனினுள்ளும் 9 விதமான தன்மைகள் ஆணின் விதை தன்மையான விந்துக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

நான் கடந்த பாகங்களில் கூறியபடி படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற தன்மையை இருப்பாகிய சிவனுக்குள்ளும் இயற்கை விதையாகிய விந்துவுக்குள் தக்க வைத்திருக்கிறது.
உண்ணும் உணவு,சகதியாகி,இரத்தமாகி,சதையாகி ,எலும்பாகி ,எலும்பு மஜ்ஜையாகி மஜ்ஜையிலிருந்து உருவாகிற திரவத்தன்மை விந்து.

உணவுஜீரணித்து,சக்தியாகி,இரத்தம்உருவாக்குதல்,படைத்தல்,எலும்புஆகி,மஜ்ஜையாவது காத்தல்,அழித்தலில் இறுதி வடிவமான விந்து என்ற திரவம் வந்து மீண்டும் இயற்கையின் விளையாட்டில் சக்தியாகிய பெண்ணிற்குள் பயணப்பட்டு அடுத்த படைத்தலுக்கு வித்திடும்.இந்த படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று நிலை சிவமாகிய ஆணினுள் நிகழும் காலம் 8 திதி.என்ற நாள் என்று சொல்லுகிற சந்திரனின் நகர்வு.
இது போல பல சூட்சுமங்கள் இயற்கை என்ற கடவுளின் தன்மையில் உருவாக்கப்பட்டு இருப்பாகிய, சிவனாகிய,ஆணாகி, இயக்கமாகிய,சக்தியாகி,பெண்ணாகி இந்த இரண்டும் இணைகிற இடத்திற்கு தள்ளுதல் காமம். இரண்டு கடவுள் தன்மைகளையும் தன கட்டுப்பாட்டில் கொண்டுவரும் காமமும் கடவுள் தன்மை தானே.

காமம் தூண்டபட்டு இணைதல் என்ற எழுத்தாக்கத்திற்க்குள் தானே இத்தனை ஆர்ப்பாட்டங்களும், இந்த இணைதலோ அதன் மூலமாகிய காமமோ நாம் சந்திக்கின்ற,பார்கின்ற, அனைவரிடத்திலும் ஏற்படுமா என்றால் இல்லை ஏற்படாது என்று அறுதிஇட்டு கூற முடியும். குறிப்பிட்ட தன்மையுள்ள ஆண் அல்லது இருப்பு, குறிப்பிட்ட தன்மையுள்ள பெண்ணோடுதான் இணைய முடியும். இது இயற்கை என்ற கடவுள் முடிவு செய்கிற விஷயம். இதனுள்ளும் எண்ணிடங்கா சூட்சுமங்கள் அடங்கி கிடக்கின்றன.
. நாம் சாதரணமாக தொடர்பு கொள்ளும் நபருக்கும் நமக்குமே இயற்கை தொடபு இருந்தால்தான் பேசவே முடியும். எத்தனயோ பேரை காரணமில்லாமல் நமக்கு பிடிப்பதில்லை என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம் அல்லவா? இதை எத்தனையோ சோதனைகள் மூலமாக சோதித்து பார்த்து நான் உணர்ந்த விஷயம்.நம் இயற்கையின் கட்டமைப்புக்கு ஒத்து வருகிற மற்றொரு இயற்கையின் கட்டமைப்போடு தான் நம்மால் இசைந்து பேசவே முடியும்.
இதை ஜோதிட சிறு குறிப்பாக உணர்த்த முற்படின்,

நீங்கள் உங்கள் வட்டங்களிலோ அல்லது அடிக்கடி சந்திக்கும் நபர்களிடத்திலோ அவர்களுடைய ராசி,நட்சத்திரம்,லக்னம்,திசா,புக்தி இவர்களின் நாதர்கள் தொடர்பு இவற்றோடு உங்களுடைய ராசி,நட்சத்திரம் லக்னம்,திசா,புக்தி நாதர்கள் இவைகள் ஒத்து இருக்கும் இல்லையென்றால் அந்த தொடர்பே இல்லாமல் போகும் இதை பற்றி இன்னும் விரிவாக அடுத்து வரும் ஜோதிட பாகங்களில் எழுதுகிறேன்
ஆக காமம் என்பது இருப்பையும்,இயக்கத்தையும் சலனபடுத்துதல், சலனப்பட்டு இரண்டு இணைந்து ஒன்றை உருவாக்களுக்கான தூண்டுதல். அந்த தூண்டுதல் ஏற்ற கட்டமைப்பு இருப்பவர்கலோடுதான் ஏற்படும் என்பதை இயற்கையான கடவுள் தன்மை தான் முடிவு செய்கிறது.
அடுத்து ஜோதிடத்தின் விளக்கத்திற்குள் சென்று மீண்டும் கடவுள்,காமம்,ஜோதிடம் எவ்வாறு இணைகிறது என்பதை கண்டு ,கடவ்ளை எவ்வாறு உணர்வது என்பதை அடுத்து வரும் பாகங்களில் பார்ப்போம். இன்னும் வரும்.... அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment