Wednesday, 17 May 2017

கடவுளும்,காமமும்,ஜோதிடமும்,
பாகம் - 10
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த பாகத்தில் ராசி,நட்சத்திரம்,லக்னம் ஆகியவற்றை நான் உணர்ந்த விதத்தில் விளக்கி இருந்தேன்.தொடர்ந்து ஜோதிட பேருந்தில் பயணிப்போம்.
ஒரு உயிர் ஜனித்து முதல் சுவாசம் எடுக்கும் நேரமே கடவுள் தன்மையான பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு ஏற்படுத்தும் முதல் சுவாசமே லக்னம். இந்த முதல் சுவாசம் எடுத்த உடனே படைத்தல்,முடிந்து காத்தலில் தன்னை அந்த உயிர் புகுத்தி கொள்ளும்.அப்படி புகுத்தி கொண்ட உயிர், காலம் என்ற வட்டத்திற்குள் வந்து அது நடத்தும் காத்தல் தொழில்தான் ஜோதிட பலன் என்பன.அவை உருவான விதம்,உருவான மூலம்,இவற்றை கொண்டு அது செயல்படுதலை தீர்மானிக்கும் கணிதம் தான் ஜோதிடமும் பலனும்.
ஒரு பொருள் எதனால் உருவாக்க பட்டிருக்கிறதோ அந்த உருவாக்கத்தின் தன்மைதானே உருவாக்கப்பட்ட அப்பொருளுக்குள் இருக்கும். அப்படியான உற்பத்தியின் மூல பொருளான பிரபஞ்ச சக்தியும்,உருவான நம்முள் தானே இருக்கும் என்று தேடிய விளைவுகளில் கண்டறிந்த விஷயங்களும்,சூட்சுமங்களும் ஏராளம்,ஏராளம். அதை எழுத போனால் இந்த தொடர் டிவி சீரியல் போல போய் கொண்டே இருக்கும்.
அதை சுருக்கி,நம் முன்னோர் கண்டெடுத்த ,,அதில் நான் உணர்ந்த,புரிந்து கொண்ட விஷயங்களை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரபஞ்சச தன்மை மனிதனாகிய நம்முள் 7 விதமான தன்மைகளை கொண்டு தன செயலை நிகழ்த்தி கொண்டிருக்கிறது.ஜோதிடத்தில் நம் மூலமான ஆணாகிய,சிவனை சூரியனாக கொண்டு,பெண்ணாகிய சக்தியை சந்திரனாக கொண்டு நாம் வாழ்கிற இடமான பூமியில் தன சக்தியை பிரதிபலிக்கிற 5 கோள்களை 5 சக்திகளாக்கி இராகு,கேது என்ற சந்திரனின் அதி தீவிர மற்று தன்மைகளையும் கணக்கில் கொண்டு 7 மையங்களை நிறுவி இயற்கை நம்முள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அந்த மையங்கள் தான் சக்கரங்கள் என்று சொல்லப்படுகிற 7 நிலைகள்,மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்புரகம்,அனாகதம்,
விசுக்தி ,ஆக்ஞ்சா
இந்த ஏழு மையங்களில் ஆணாகிய சிவ தன்மையும் பெண் ஆகிய சக்தி தன்மையும் கலந்தே இருக்கின்றன.இந்த ஆதார மையங்கள் தான் ஜாதக கட்டத்தில் பாவங்களாக கணக்கெடுக்கப்பட்டு ஜோதிடத்தில் சொல்லபட்டிருக்கிறது.
பிரபஞ்ச தொடர்பான முதல் மூச்சு எடுக்கும் நேரம் எந்த சக்கரம் இயங்க துவங்குகிறதோ அது முதல் பாவமாக சொல்லப்பட்டு அடுத்த பாவங்களின் தன்மைகள் தீர்மானிக்க படுகின்றன.மனித உயிர்களின் செயல்பாட்டில்.
ஜாதக கட்டத்தில் 1லிருந்து 7ம் பாவம் நம்மை சார்ந்தும்,7 லிருந்து 12 பாவம் நம் முன்னிலையான நம் எதிர்புறத்தை சார்ந்தும் இருக்கும்.மூலாதரத்திலிருந்து மேல் நோக்கி செல்லும் ஏழு நிலைகள் (ஆரோகரணம்) மேல் நிலையிலிருந்து மூலாதரம் வரும் ஏழு நிலைகள்(ஆவோகரணம்) என 12 பாவங்களாக (1லிருந்து 7 பாவம் மீண்டும் 7லிருந்து 1 ம் பாவம் )பிரித்து கணக்கிட்டு உள்ளனர்.நம் கோமானாண்டிகள்.
சரி நம் உடம்பு செயல்படும் இடம் என்பது மனித உடம்பில் இடுப்பிலிருந்து தலைவரை உள்ள பகுதியே இப்பகுதி இயங்குவதற்கு உதவுவனவே கைகளும் கால்களும்.இந்த உடம்பை செயல்படுத்துகிற
ஏழு மையங்களுக்குள் இரண்டு வித செயல்பாடுகள் திட்டமிடல்,செயல்படல் என்ற இரண்டு செயல்திறன்கள் செயல்படுத்தி கொண்டிருக்கின்றன.திட்டமிடல் என்பது த்லைசார்ந்த பகுதி,செயல்படல் என்பது தலைக்கு கீழ் இருக்கும் உடல் சார்ந்த பகுதி,இந்த இரண்டை இணைக்கும் சக்தி மையம் கழுத்து என்கின்ற விசுக்தி ஆதார மையம்.
இந்த கழுத்து இயங்கும் இயக்கம் விசுக்தி என்றும், கண்டம் என்றும் சொல்லபடுகிற சக்தி மையம். இதுதான் திட்டமிடலை உடம்புக்கு தெரிவித்து செயல்பாடுகள் நடைபெற துணையிருந்து அந்த செயல்பாட்டின் பயன்களை திட்டமிடலுக்கு மறுபடி தெரிவிக்கிற ரேடார் அமைப்பு.
இந்த சக்தி மையங்களான சக்கரங்கள் நம் சூரிய குடும்பத்தில் இயங்கும் கோள்களின் தன்மையால் தான் தீர்மானிக்க பட்டு உள்ளன என்பதை பிரபஞ்சம் இயங்குகின்ற மூல்ததின் தன்மையே தன்னுள்ளும் இயங்குகிறது என்பதை கண்டறிந்த முத்தோர் உரைத்த விஷயங்களில் நிறைய இருக்கிறது.
ஆதலால் நாம் செயல்படும் தன்மைகளும் இந்த கோள்களின் குணநலன்களை தான் கொண்டிருக்கிறது.அப்படி கண்டெடுத்த விஷயங்களை கோர்வை ஆக்கி சுருங்க பார்ப்பின் கோள்கள் தன குண நலன்களை மனிதர்களாகிய நம்முள் செயல்பாட்டு தன்மைகளாக கொண்டிருக்கிறது என்பதை உறுதிபட தெரிந்து கொண்ட சான்றோர்.அந்தந்த கோள்களின் தன்மைகளை பட்டியலிட்டதுதான் கிரக தன்மைகளான காரகங்கள்
கர்ரங்களை தொடர்ந்து அடுத்த பாகத்தில் பார்ப்போம்.இன்னும் வரும் ....அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment