Wednesday, 17 May 2017

கடவுளும்,காமமும்,ஜோதிடமும்,
பாகம் - 7,
நண்பர்களுக்கு வணக்கம்,
பாகம் 6 இல் சிவனும் சக்தியும் இணைதல் வரை பார்த்தோம்.படைத்தல் நிகழ்கிற பொழுது இருப்பாகிய சிவனும்,இயக்கமாகிய சக்தியும் இணைந்து தன்னிலையில் இருந்து முன்னிலை என்ற ஒரு புதிய படைப்பை படைக்கிறார்கள் . இதுவும் இயற்கை தான்.எப்பொழுது எல்லாம் படைத்தல் நடைபெறுகிறதோ அப்பொழுது எல்லாம் கடவுள் தன்மை முழுமையாக இருக்கிறது என்பது உண்மைதானே.
சிவனும் சக்தியும் ஈர்ப்பு,சலனம் என்ற இயற்கையின் தூண்டுதலால் இணைந்து படைத்தலை உருவாக்குகிறபொழுது, இந்த இயற்கை அந்த படைத்தல் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று,சிவனாகிய ஆணினுள்ளும் , சக்தியாகிய பெண்ணின் உள்ளும் படைத்தலுக்கு உண்டான சில் நேர்த்தியான சூட்சுமங்களை உள்ளடக்கியே வைத்திருக்கிறது.அது என்ன? தொடர்ந்து பார்ப்போம்.
பெண்ணிற்கு மட்டும் ஏன் கருப்பை? அந்த கருப்பையை தினமும் பாதுகாக்கிற விஷயம், அதனுள் படைத்தலை உருவாக்குகிற தன்மை அதற்கு மூலபொருலான கருமுட்டை, அதேபோல் ஆணுக்கு ஏன் விந்து,அது உருவாகிற தன்மை,விந்தின் பயன் என்று எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா?
சிவம் என்பது இருப்பு என்பதை ஆரம்ப பாகங்களில் விளக்கி இருந்தாலும்,சிவன் என்பது அசைவற்ற இருப்பே.சக்தி என்ற இயக்கத்தின் துணையுடனே தான் சிவன் தன்னை நிலை நிறுத்தி கொள்ளும்.
ஒன்று உருவாக இருப்பும் இயக்கமும் தேவைதானே.ஆனால் உருவாகிய ஒன்று வளரப்பட சும்மா இருக்கிற இருப்பு எங்கனம் பயன்படும்? . இருப்பு தன் பங்களிப்பை இயக்கத்தோடு இணைகிற்பொழுது வழங்குவதோடு சரி, இருப்பு வழங்கிய விஷயத்தை இயக்கமாகிய சக்தி,தன இயக்கத் தன்மையில் இயக்கி படைத்தலை முழுமையடைய செய்து காத்தலுக்கு தள்ளி விடுகிறது.இந்த சக்தியின் படைத்தல் இயக்கத்திற்கு தான் இயற்கை கர்ப்பப்பையை இயக்கமான பெண்ணிற்கு கொடுத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் அந்த கர்ப்பபையை பாதுகாத்தும் வருகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் 27 நாட்களுக்கு ஒருமுறை இயல்பாய் நடைபெறும் இது என்ன கணக்கு? இதுவும் கடவுள் என்ற இயற்கையின் விளையாட்டுதான் இதன் உள்ளும் ஆத்தல்,காத்தல்,அழித்தல் என்ற தத்துவமே வேலை செய்கிறது.
காமம் என்பதை வெகு இலகுவாக நினைத்து கொண்டிருக்கிறோம் காமம் அசிங்கம்,பேச தகுந்ததன்று என்ற தீண்டாமை நிலைக்கு வைத்திருக்கிறோம்.
ஆனால் இந்த காமம் நடைபெற இயற்கை என்ற கடவுள் எத்தனை நாடகங்களை நடத்துகிறார் என்று ஆழ்ந்து பார்க்கும்பொழுது பிரமிப்பும்.ஆண்,பெண் இணைவு என்பதை தாண்டி இருப்பையும்,இயக்கத்தையும் உணர்ந்து பிரமித்து அதுக்குள்ளே அடங்க செய்து விடும்.
இந்த ஆண், பெண் தன்மைகளை படைத்தலுக்கு தயார் படுத்துகிற தன்மையும் பிரபஞ்சச சக்தி இணைவுகளாண கோள்களின் பங்களிப்பையும் மிக பெரியதாகவே இயற்கை பயன்படுத்துகிறது.
நம் சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டுமே நடுவில் இருந்து மற்ற கோள்கள் தன்னை சுற்றிக்கொண்டு ஒரு சீரான பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அந்த கோள்களின் தன்மைகள் அதன் குண நலன்களின் கலவை பிரபஞ்ச சக்தியாக பரிணமித்து இருக்கிறது.என்பதை தொடர்ந்து எழுதி வருகிறேன்.இந்த படைத்தலிளும் அந்த கோள்களின் பங்களிப்பும் இருக்கவேதான் செய்கிறது.
இருப்பகிய சூரியன் நகர்வும், இயக்கமாகிய சந்திரனின் அசைவும் சக்தியாகிய பெண்ணினுள் இருக்கும் உறபத்தி சாலையான கருப்பையை பேணுவதில் தன பங்கை வழங்கி இருக்கின்றன.பூமியின் நகர்வு சூரியனின் பாதையில் தினமும் 1 டிகிரி.சந்திரனனின் நகர்வு பூமி வட்டத்தில் தோராயமாக ஒரு நாள் இந்த இரண்டும் பிரபஞ்சத்தில் இருக்கிற 9 கோள்களின் 9 விதமான தன்மையை பூமியில் இருக்கும் உயிர்களிலும் 9 விதமான சக்தியை வழங்குகின்றன என்பதே சூட்சுமம்.அப்படி இந்த 9 விதமான தன்மைகள்,பெண்ணின் கருப்பையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் உருவாகி படைத்தலில் 9 வும், காத்தலில் 9வும்,அழித்தலில் 9வும் தன ஆர்ப்பாட்டத்தை பரி சாற்றித்தான் சக்தியாக பெண்ணை படைத்தலில் பங்கெடுக்க வைக்கிறது.
முதல் 9 நகர்வு பெண்ணின்னுள் படைத்தலின் கரு முட்டை உற்பத்தி,அடுத்த 9 நகர்வு கருமுட்டை காத்தலில் உருபெற்று இருத்தல்,அடுத்த 9 நகர்வு அழித்தலில் கருமுட்டை பலம் இழந்து அழிதல். பின் அது உதிராமாகி பெண்ணின்னுள் இருந்து வெளியேறி இயற்கையோடு கலந்து விடல்.
இந்த ஒவ்வொரு 9 தன்மைக்குள்ளும் 9 விதமான உணர்வுகளை 9 நாளில் பெண்ணுக்கு வழங்கி கொண்டே இருக்கும். இயற்கை. உடல் மாற்றங்கள் மனம், குண பேதங்கள் என முதல் 9 நகர்வான 9 நாட்களுக்கு பிறகு கருமுட்டை முழுமையடைந்து கரு முட்டை தன்னை வெளியேற்ற பெண்ணிற்கு தரும் சமிக்சை சலனம்.அந்த சலனம் தான் காமம்.அடுத்த பாகத்தில் இந்த சலனமும் கோள்களின் விளையாட்டுகளும் படைத்தலில் சிவமாகிய ஆணுக்குள் எப்படி விந்து என்ற விளையாட்டை விளையாடுகின்றன என்பதை பார்த்து உணர்வோம்......... இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment