Thursday, 24 January 2019

ஸ்ருஷ்டி தத்துவம்,
பாகம் - 1.

நண்பர்களுக்கு வணக்கம்,
பல மாதங்கள் கழித்து மீண்டும் எழுத துவங்குகிறேன். என்னுள் நெடுநாளாய் ஓடி கொண்டிருந்த இந்த ஸ்ருஷ்டி தத்துவத்தை,அதில் நான் உணர்ந்த விஷயங்களை நண்பர்களாகிய உங்களுடன் இத்தொடரின்  மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.இதில் நான் எழுத போகும் விஷயங்கள் அனைத்தும் என் சொந்த உணர்தல்களே.ஒவ்வொரு விஷயங்களையும் என்னுள் விதைத்து எழுத தூண்டுகிற என் குரு நாகாவே இத்தொடரையும்  எழுத தூண்டுகிறார். அவரை வணங்கி  இத்தொடரை தொடர்கிறேன்.
நான் என் முந்தைய  கட்டுரைகளில் உரைத்துள்ளபடி, இந்த பூமியில் ஜனித்த மனித உயிர்கள் உட்பட அனைத்தின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. உயிர்கள் தன்னை நிலைநிறுத்தி கொள்ள உணவு, இயக்கசுவாசம், இவை இரண்டுமே இனப்பெருக்க என்ற விஷ்யத்திற்குத்தான்.இது,இது மட்டுமே இயற்கை வழங்கிய விஷயம். பரிணாம வளர்சசியில் மனிதன் வளர்ச்சியுற்று ஆறாம் அறிவை பெற்று அதன் மூலம் சிந்தனை என்ற அதிசய  ஆற்றலில் நாகரிக மேம்பாடு அடைந்து. அந்த நாகரிக மேம்பாட்டின் வளர்சசியில் கூட்டம் கூட்டமாக விரிந்து அந்த கூட்டத்தின் நலனுக்கென சில விதிகளை வகுத்து,அவரவர் வாழ்ந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு தத்தம் வாழ்வாதாரங்களை பெருக்கி கொண்டனர்.

அவ்வாறு வாழ்ந்த கூட்டங்களில்  தம் கூட்டத்தின் நலனுக்காக ,தம் வாழ்வாதாரத்திற்காக , தங்கள்  செயல்களை பிரித்து தான் வாழ்ந்து வந்த கூட்டத்தின் உறுப்பினர்களையும்  அந்த செயல்பாட்டிற்காக பிரித்து தங்களை காத்து மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கி வாழ்ந்து  வந்தனர். அச்செயல்பாடுகளாவன, கற்பித்தல்,காத்தல்,கொணர்தல் ,அல்லது வழங்குதல்,பராமரித்தல் என கூட்ட  உறுப்பினர்கள் பிரிக்கப்ட்டு ஒவ்வொரு கூட்டமும் தத்தம் பணிகளை செவ்வனே செய்து தங்கள் கூட்ட வாழ்வாதாரத்திற்காக வாழ்ந்து வந்தனர்.

ஆதிகால மனிதனின் இந்த வாழ்வியல் முறைகளில் அவன் கண்ட,உணர்ந்த  விஷயங்கள் 5 அவை நீர்,நிலம்,நெருப்பு காற்று ஆகாயம் இவை மட்டுமே.  இவற்றின் ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் வாழ்வாரத்தின் இன்றியமையா ஒன்றாக இருந்த படியால்  அவற்றை அவன் வணங்கும் பூதங்களாக(உருவம் இல்லா எதையும் செய்யும் வல்லமை படைத்த )மாற்றி, அந்த பூதங்களின் பயன் பாட்டினை புரிந்து கொண்டு அந்த பயன்பாடுகளை தன வாழ்வு மேம்பட எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் விளைவால் பல சூட்சுமங்களை கண்டறிந்து அந்த சூட்சுமங்களை  சொல்லி சென்றதுதான் வேதங்களாய் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து நின்று கொண்டிருக்கிறது.
இந்த பஞ்ச பூதங்கள் தான் இந்த பூமியில் இருக்கிற அனைத்து விஷயங்களின் மனிதன் உட்பட ஆதாரமாக இருக்கிறது அல்லது கட்டமைப்பாக இருக்கிறது. அவ்வாறு எடுத்து கொள்கைகளில் மனிதனுக்குள்ளும் இந்த பஞ்ச பூத தன்மைகள் இருப்பதை உணர்ந்து அந்த பஞ்ச பூத தன்மைதான் மனிதனின் உடலமைப்புகளாய் இருக்கின்றன  என்பதை அறிந்து, தன வாழ்வாதார செயல்களுக்கு அந்த பூத அமைப்புகள் உடையவர்களை பயன்படுத்தி கொண்டனர்.உதாரணமாக நெருப்பு(காத்தல்),நிலம்(கொணர்தல் அல்லது வழங்குதல்),காற்று(கற்பித்தல்),நீர்(பராமத்தால்) என்பனவாம்.
இந்த பஞ்ச பூத அடிப்படை கட்டமைப்பை கொண்டவர்களை மேற் சொன்ன செயல்பாடுகளுக்கு பிரித்து பயன்படுத்தி தங்கள் கூட்டத்தினை காத்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் வந்த சிலரின் தனிப்பட்ட குண பேதங்களால் இவைகள் வர்ணங்களாக மாற்றப்பட்டு பல பிரிவுகளாய் பிரிந்து வேறுவிதமாய் போனது இன்று.
இந்த பஞ்ச பூத உடல் கட்டமைப்புக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து அக்கட்டமைப்புகளுக்கு காரணமாய் இருக்கின்ற பஞ்ச பூத தத்துவங்களை உள்வாங்கி எப்படி எவ்வாறு,என்று தேடி எடுத்த விஷயங்கள் தான் பிரபஞ்சம், கிரகங்கள் சூரியன் சந்திரன்,நட்சத்திரங்கள் கிரகங்கள் போன்றவை.இந்த விஷயங்கள் எப்படி பூமியில் இருக்கும் உயிர்களை உருவாக்குகிறது என்பது தான் ஜோதிடம், அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் எவ்வாறு செயல்படும் என்பதுதான் ஜோதிட பலன்.இந்த பஞ்ச பூத தத்துவங்கள் தான்  சிவா எனும் நமசிவாயமாய் ...    இன்னும் தொடரும் .....அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்  இன்னும் வரும். ஆஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment