மேற் கூறிய இத்தனை விசயங்களை செய்கிற போது மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் கீழ் இறங்கி காலடியில் கிடக்கும் அதாவது கர்ம வினைகள் தன் வசப்படும்,கர்மாவை(எலி) தன் வசப்படுத்தி தன்னிலை உயர்த்தி , ஆறு ஆதாரங்களின் மூலம் ஐந்தெழுத்தை கைலேடுத்து முக்தி அடைவதைத்தான் விநாயகர் பெருமானுக்கு சொல்லி இருக்கிறார்கள்.
விநாயகருக்கு பயன்படுத்தும் பொருள்களான எருக்கம் பூ சுவாசத்தை சீர் செய்யக்கூடியது.அருகம்புல் வயிற்றை சுத்தம் செய்துசெரிமான சக்தியை அளித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.எள்ளு உருண்டை,அதிக உயிர் சக்தி வாய்ந்த ஒரு பொருள்,அதில் ஜீரணத்தை தூண்டக்கூடிய வெள்ளம் சேர்த்து உண்ணும்போது செரிமானம் அதிகமாகி உயிர் சக்தியான பிராண சக்தி அதிகம் கிடைக்க பெறும்.
.
ஜோதிடத்தில் கேதுவின் பரிகாரத்திற்கு விநாயகரை சொல்வார்கள்.கேது ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால் ஞானம் கெடும், இயற்க்கைக்கு மாறான சிந்தனை மற்றும் உடல் வலிமை இல்லாமை,குறுக்கு புத்தி, போன்றவை இருக்கும்.விநாயகரின் மேற் கூறிய தன்மைகளை நாம் கடைபிடிக்கும் போது அவை நீங்கி சுவாசம் சீர்பெற்று,இரத்த ஓட்டம் சீராகி மூலை திறம்பட செயல பட ஆரம்பித்தால் அதற்க்கு எருக்கம் பூ வாசம்,அருகம்புல்,எள்ளு உருண்டை,இவைகளை மருந்தாகவும் கொண்டால் கேதுவின் மாற்று தன்மை மாறி உடலிலும்,மூளை செயல் பாட்டிலும்
பலம் பெறுவார் என்பதற்காகத்தான் கேதுவிற்கு விநாயகரை பரிகாரமாக சொன்னார்கள் அதிலும் இரு காலையும் மடக்கி அமர்ந்திருக்கும் விநாயகர் இதினினும் சக்தி வாய்ந்தவர் நான் மேற் கூறிய சூரியக்கலை,சந்திரக்கலை இயக்கத்தின் நடுநிலை சுழிமுனை, இந்த சுழிமுனையில் சுவாசம் ஓடுவது யோக மார்கத்தில் மிக பெரிய சக்தி.அந்த தன்மையில் இருக்கும்வினாயகர் மேலே சொன்ன அனைத்து தன்மைகளின் தீவிரம்.
மேலும் தலையில் குட்டி கொள்வது ஒரு அக்கு பன்சர் முறை மூலைக்கு செல்லும் நரம்புகளை தூண்டுவது. அதே போல் தோப்பு கரணம் போடுவது,இரத்த ஓட்டத்தை சீராக்கி மூலைக்கு இரத்த ஓட்டத்தை கொண்டு செல்வது என சொல்லி கொண்டே போகலாம்.
இப்பொழுது புரிகிறதா ஏன் விநாயகரை முழு முதல் கடவுளாக வைத்தார்கள் என்று வாழ்வியல் ஆனாலும் சரி,யோக மார்கமானாலும் சரி அனைத்தும் வினாகருக்குள் அடக்கம்
.விநாயகர் என்பது ஒரு பெரிய ரகசியம் நிறைய முடிச்சுகள் நிறைந்த ஒரு விஷயம் முடிந்தவரை சுருக்கி கொடுத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு பக்கம் 4 இல் முருகன் பற்றி தொடர்கிறேன்.இன்னும் வரும் ......அஸ்ட்ரோ பாபு.
No comments:
Post a Comment