தெய்வங்கள் ன் சிந்தனையில் பாகம் 11
ஐயப்பன் - விரத முறைகள்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் - 11 ஆனா ஐயப்பன் கட்டுரையின் தொடர்ச்சியான விரத முறைகளை பற்றியது.
ஐயப்பனின் விரத முறைகள்:-
48 நாள்:- திதி கணக்கில் கொண்டால் 48 திதி எனலாம்.அமாவாசை இலிருந்து பௌர்ணமி வரை 16 திதி இது சந்திரனின் பாதி சுற்று.சந்திரனின் சுற்று பாதையில் இரண்டு விஷயம் ஒன்று அமாவாசை மற்றொன்று பௌர்ணமி. சந்திரன் பௌர்ணமி லிருந்து அமாவசை வரை தன சக்தியை ஒரு மாதிரியும் அடுத்த 16 திதியான அமாவாசை இலிருந்து பௌர்ணமி வரை வேறு வித பரிமாணத்தையும் தன சக்தியின் மூலம் வெளிபடுத்தும்.சந்திரன் மனம் சார்ந்த விஷயம்,மனத்தளவில் முதல் 16 திதி நாம் கடைபிடிக்கும் விரதங்களால் நம்முள் இருக்கும் மாற்று தன்மைகளை நீக்கும். அடுத்த 16திதி என்ன விரத முறைகள் கடைபிடிக்கிறோமோ அந்த விரதத்தின் விளைவுகளான பலன்களை நம்முள் விதைக்கும். அடுத்த 16திதி விதைத்த விஷயங்களை ஸ்திரபடுத்தும் இதுதான் 48 திதி(48 நாள்) விரத காலம். இந்த 48 திதி கணக்குதான் ஒரு மண்டலம் அனைத்து விதமான விரதங்களுக்கும் மாற்று முறைகளுக்கும் இது பொருந்தும் அடிப்படை.
கலர் ஆடை:- இது நமக்கு நாமே ஒரு வட்டம் போட்டு கொள்ளுதல். நம்மை நமக்கே அடையாளம் காட்டி கொண்டு விரத முறையை கடைபிடித்தல்.மேலும் பாலுணர்வின் புற தூண்டுதலான பெண்களுக்கும் உணர்த்துதல்.கலர் ஆடை அணிந்திருத்தளால் விரதமிருப்பவரை தூண்டுகிற தன்மையை தவிர்க்க வேண்டும் என்ற வலுயுறுத்தல்.அவ்வாறு தூண்டுவது பாவம் என்ற கதையையும் கூறி மீறினால் பல விளைவுகள் நடக்கும் என்று பயமுறித்தியும் வைத்திருக்கிறார்கள்.
உணவு விரதம்:- எளிதில் ஜீரணம் ஆகும் சாத்வீக உணவுகளை உண்டு ஜீரண இயக்கத்தை நான் மேற்சொன்ன 48 திதிகள் மூலமாக மாற்றி அமைத்தல்.ஜீரண சக்தி பொலிவு பெரும்பொழுது நம் பிடியூட்டரி இயக்கம் சீர் பெற்று நம் சிந்திக்கும் திறன்,செயல்படும் திறன் அதிகரிக்கும் என்பதாலும் உடலில் தேவையற்ற கழிவுகள் வெளியேறி உடம்பும் திடம் பெரும் என்பதாலும் சாத்வீக உணவு முறை. மேலும் புத்தியில் பாலுணர்வு,வன்மம்,மற்றும் வீரியம் இவற்றை தூண்டக்கூடிய அசைவ உணவுகளை தவிர்த்து புத்தியை மாற்றக்கூடிய மது போன்ற போதை வஸ்துக்களை நிறுத்தி சிந்திக்கும்,செயல் செய்யும் ஆற்றலையும் அதிகரிக்கவே இந்த உணவு முறை விரதம்.
மாத விலக்கு,மரணம்,தீட்டு:- பெண்களின் மாதாந்திர விலக்கு,மற்றும் மரணம் வேண்டாம் என்பதற்கான காரணம். விரதமிருப்பவர் ஒரு மாறுபட்ட உணவுமுறை,மற்றும் உடல் மனம் இவற்றின் சீரமைப்பு விரதங்கள் மூலமாக கடைபிடிக்கின்றபொழுது உடலின் தன்னியக்கத்தில்(மெட்டொபாலிஷம்) ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும். அந்த காலங்களில் மாத விலக்கு கிருமிகளை வெளியேற்றும் தன்மை கொண்ட விஷயம்.இதனால் விரதமிருப்பவரின் உடல் மாற்றத்தில் நோய் கிருகிகள் தொற்ற வாய்ப்பும்,கிருமிகளின் தொற்றால் உடல்நலம் பாதிக்கும் என்பதால் தவிர்க்க சொன்னார்கள். அதேபோல் மரணம் என்பதும் மனத்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தி மனதில் விரத முறையால் ஏற்பட இருக்கும் வைராக்கிய ஒற்றுமையை கெடுக்கும் என்பதாலும் வேண்டாம் என்றனர்.
விரத மாலை:- விரதமிருப்பவரின் வைராக்கியத்தை ஸ்திரபடுத்த்தலின் அடையாளம். இல்லறத்தில் இருப்பவர்களால் ஒரு வைராக்கியத்துடன் தான் ஐயப்ப விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.மனது மற்றும் உடம்பை சீர்கட்டமைப்பு என தான் இந்த விரதமே அதை கெடுக்க கூடிய மன தூண்டுதலுக்கு இல்லறத்தில் வாய்ப்பு அதிகம் என்பதால் அதை தனக்கு தானே உணர்ந்து கொள்ளத்தான் எப்பொழுதும் உடலில் ஸ்பரிசித்து கொண்டே இருக்கும்படியான ஒரு உணர்வு மணி தான் விரத மாலை.மேலும் விரதமிருப்பவர் மற்ற பாலினத்தவரான பெண்களை கவரக்கூடிய புற அழகு சார்ந்த விஷயமான தன தோற்றத்தை பொலிவு படுத்தும் சிகை அலங்காரம்,தாடி மீசை போன்றவற்றை சீர் செயாமல் இருத்தல் போன்றவையும் விரத முறையில் நழுவாமல் இருக்கத்தான்
விரத முறைகள் அடுத்த பாகமான 12 லிலும் தொடரும் இன்னும் வரும்...அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment