Thursday, 12 November 2015

தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் - 12
ஐயப்பனின் விரத முறைகள்.
நண்பர்களுக்கு வணக்கம் இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிதனையில்சிந்தனையில் ஐயப்பனின் விரத முறைகளின் தொடர்ச்சி பாகம் ஆன 12.
விரத மாலை முடிந்து அடுத்து
சரண கோஷம்.:- தினமும் பஜனை கூட்டு வழிபாடு சரண கோஷம் என்பவை காடு வழி பயணத்தில் போகின்ற கூட்டத்தோடு ஒற்றுமையை வளர்க்கும் விரத முறைகளின் வைராக்கியத்தை ஸ்திர படுத்தும்.மேலும். காட்டு மிருகங்களை நெருங்க விடாமல் இருப்பதற்கும் . மேலும் தினமும் சரணகோஷம் கூட்டு வழிபாடு பஜனை பாடல்கள் என்று இருக்கும் பொழுது இறை சிந்தனையிலிருந்து மாறாமல் இருக்க வைக்கும்.
கார்த்திகை மாதம்:- ஐயப்பன் விரதம் ஏன் கார்த்திகை மாதம் கடை பிடிக்க வேண்டும். ஆடி ஆகாதா? ஐப்பசி வேண்டாமா ? அதற்கும் காரணமாகத்தான் இந்த மாதத்தை தேர்ந்தெடுத்தார்கள். முதலில் கார்த்திகை என்பது இன பெருக்க காலம் என்பதை புரட்டாசி,மற்றும் மார்கழி மாதம் என்ற கட்டுரைகளில் தெளிவாக எழுதி இருக்கிறேன். சந்திரன் நீசம் பெறுகிற மாதம் மனம் பலம் குன்றி இருக்கும் காலம்.மனம்தானே பல்வேறு சிந்தனைகளை நமக்கு அளித்து நம் ஒருமுக சிந்தனையில் இருக்க இயலாமல் செய்வது. அது பலம் குறைந்த காலங்களில் மனம் செயல் கரைந்து இருக்கும் காலம் அந்த காலங்களில் இறையை நோக்கி ஒருமுக சிந்தனை என்பது சுலபம்.அடுத்து கார்த்திகை இனபெருக்க காலம் விந்து உற்பத்தி அதிக படுகிற காலம் இந்த காலத்தில் விந்தை கட்டி அந்த சக்தியை இறை நோக்கி திருப்புவது.மேலும் இந்த சுழிமுனை சக்தி பிரபஞ்சத்திலிருந்து இயற்க்கை நமக்கு வழங்கிய் இடம் அடர்ந்த காட்டுப பகுதி, அதுவும் கேரளா வனப்பகுதி அந்த தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் யாத்திரை வைத்து கொண்டனர். மழைக்காலம் முடிந்து குளிர்காலத்தின் ஆரம்பம். காட்டு பயணத்தின் முதல் தேவை தண்ணீர். மழைக்காலம் முடிந்த நேரம் என்பதால் வன பகுதிகளில் நீருக்கு குறை இருக்காது.வெப்பமும் மழை குளிரும் இல்லா காலம்.சிரமம் இல்லா நெடுந்தூர காடு வழி பயணம் இந்த விந்து உற்பத்தி பலபடுகிற காலத்தில் காலை மாலை குளியல் இறை சிந்தனை,பஜனை பாடல் சரண கோஷம் அனைத்தும் நம்மை இறை நோக்கிய சிந்தனைக்கே.
அடுத்து இந்த கன்னிசாமி,மணிகண்ட சாமி போன்றவைகள் பயணிப்பவர்களின் ஒற்றுமைக்காகவும் , ஒழுக்கத்திற்க்காகவும் உண்டாக்கப்பட்ட ஒன்று.சாமி என்று அழைப்பது விரதமிருப்பவரை விரத தன்மையில் நழுவாமல் தொடர்ந்து தன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இருமுடி:- நெய் தேங்காய், சுழி முனை எனது வீர்யம் என்று கூறியிருக்கிறேன், கொழுப்பு,அது ஜீரணிக்க வெல்லம்,நல்ல தாவர கொழுப்பு தேங்காய்.இவை மூன்றும் உடல் மன இயக்கங்களின் வீரீயத்திர்க்கான மூலம்.அதைத்தானே கொண்டு போகிறோம். நெடு வழி பயணம் நெய் கெடாமல் இருக்க தேங்காய் க்குள் ஊற்றி கொண்டு செல்கிறோம்.கூடவே பூஜை சாமான்கள் படைக்க என.அந்த காலங்களில் நெடுந்தூரம் பயணம் காட்டு வழி இரவு தங்கும் பொழுது குளிருக்கு வேண்டும் என்பதால் கனமான பெட்சீட்.இன்றைக்கு ஏன்? அதுதான் காலையில் சென்றுஇரவு திரும்பி விடுகிறோமே. காரணம் மறைந்து போய் கர்ரியங்கள் இருப்பதால் தான
மிக பிரமாதமான சட்டத்திட்டங்களை கொண்டு இந்த வீரியமான விரத்தை கடைப்பிடித்து சுழிமுனை சக்தி மூலமாக நம் ஆற்றலை பெருக்க நம் முன்னோர் வடிவமைத்த ஒன்றுதான்.ஐயப்ப வழிபாடு.இந்த சுழிமுனை தன்மையை அடர்ந்த காட்டு பகுதிக்குள் உணர்ந்த நம் முன்னோர்கள் அந்த சக்தியை எவ்வகையில் நம் உடல் தன்மையும் மனத்தன்மையும் இருந்தால் அந்த சுழிமுனை சக்தியை முழுமையாக பெற இயலும் என்பதற்கான வழிமுறைகள் தானே இந்த விரதங்கள்.
மேலும் அந்த காலங்களில் காட்டில் நீண்ட பயணம் மேற்கொண்டு கடினமான பாதைகளை கடக்க வெறும் கால் நடை,மற்றும் உடல் பலம் பெற வெறும் தரையில் படுத்தல்,அந்த காட்டு குளிரை தாங்க தினமும் அதிகாலை குளிர்ந்த நீரில் நீராடல் என பல சோதனைகளை உருவாக்கி உடலையும் மனதையும் திடபடுத்தி அந்த அடர்ந்த வனத்திற்கு வர செய்து அந்த அற்புத சக்தியின் வடிவமாம் ஐயப்பனை அடைய செய்தனர். அவர்களுக்கு நன்றி கூறி கார்த்திகை மாதம் விரதம் இருந்து நேர்த்தியாகவே மாலை அணிந்து பார்த்த சாரதியின் மைந்தனே உன்னை காண வேண்டியே தவம் இருந்து இருமுடி சுமந்து
சென்று வருவோம்.மீண்டும் இறுதி பாகம் ஆன ஈசனில் சந்திப்போம் இன்னும் வரும்............ அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment