தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் - 8
கிராம தேவதைகளும் குல தெய்வங்களும்
கிராம தேவதைகளும் குல தெய்வங்களும்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் 8 ஆன கிராம தேவதைகள் மற்றும் குலதெய்வங்கள் பற்றியது.
மக்கள் கூட்டமாக வாழ்ந்த காலங்களில் மனிதனின் அறிவு முதிர்ச்சியும், தேடுதலும் ஆரம்பித்த பிறகு குழுக்கள் பிரிந்து வாழ்வாதாரத்தின் அடிப்படையில் வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்த பொழுது புது சூழ்நிலை புதிய வசிப்பிடங்கள்,புதிய தொழில், புதிய தட்ப வெப்ப நிலை மாறுதல்.மேலும் கடைபிடித்து வந்த விஷயங்களில் இருந்து மாறுதல் போன்றவை ஒரு வித பயத்தை பிரிந்த வந்த கூட்டத்தினர்க்கு அளித்ததால் தாம் முன்பு இருந்த கூட்டத்தில் தியாக மனப்பான்மையில் கூட்டத்தினரின் நன்மைக்காக வாழ்ந்த அல்லது உயிர் நீத்த மனிதர்களையே முன்னர் இருந்த கூட்டத்தினர் வழிபட்டு வந்த அவர்களையே இப்புதிய சுழலை சமாளிக்கிற மன,உடல் பக்குவத்தை பெற்று தருமாறு வேண்டி கொண்டனர். மேலும் அவர்களின் பயத்திற்கு மாற்றாக புதிய கூட்டத்தின் தலைமை ஏற்படுத்தி கொடுத்த தன்னம்பிக்கை அல்லது பயம் நீங்குவதற்கான உருவ அமைப்புகளை கொண்டு வழிப்பட்டவையே கிராம தேவதைகள் .
மேலும் சில இடங்களில் பிரபஞ்ச சக்தியின் தன்மையை பூமியில் கிடைக்கின்ற அல்லது அந்த உயிர்சக்தியின் தன்மை நிலைத்திருந்த இடங்களில் அங்கு வாழ்ந்த கூட்டத்தின் தலைமை அச்சக்தியை உணர்ந்து அதை அக் கூட்டத்திற்க்கு வழங்குவதற்காக அங்கு ஒரு மாறுபட்ட உருவங்களை நிறுவி மக்களை அங்கு வர செய்து அச்சக்தியை பெற செய்தனர். கோவில்கள் கலாசாரம் உருவான பிறகும் கூட வழிவழியாய் கடைபிடித்து வந்த அந்த வழிபாட்டு தன்மைகளை அக்கூட்டவழித்தோன்றல்களும் தொடர்ந்தே வந்தன மேலும் இம்மாறான வழிபாடுகள் வாழ்வாதாரத்திர்க்காக தான் இருந்த கூட்டத்தை விட்டு போன மக்களின் ஒற்றுமைக்காகவும் நாளடைவில் தலைமை உபயோகபடுத்தி கொண்டது.
ஒரு கூட்டம் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் தனி குழுக்களாக பிரிந்து குலமாக மாறி சாதி பிரிவினைகள் ஏற்பட்டு இன்று பல மாற்றங்களை பெற்றிருந்தாலும் அந்த கூட்டத்தினரின் அடையாளமாக இந்த வழிபடல் முறைகளையும் அவர்கள் ஏற்படுத்திய அடையாள உருவகங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இயல்பாகவே முற்காலத்தில் கூட்டமாக வாழ்ந்த மக்களின் நலனுக்காக இருட்டு,வெளிச்சம் பலம் இவற்றை பார்த்து பயந்த மக்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஊன்றுகோலாக இருந்தது தான் கிராம தேவதைகள். அந்த பயத்தை அந்த கூட்டத்தின் ஒற்றுமைக்காக அக்கூட்டத்தின் தலைமை பயன்படுத்தி கொண்டு இவ்வாறான வழிபடல்களில் மக்களை கொண்டு சென்று கூட்டத்தை திறம்பட நிர்வகித்தனர்.
அமைதிக்காக,வீரத்திற்காக,பயத்திற்காக பொறாமை குணத்தின் மாற்றாக,எதிரிக்காக என பல தெய்வ வழிபாடுகள் இன்றளவும் கிராமங்களில் கடைபிடிக்கப்ட்டு வருகின்றன.
பருவ கால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் விரட்ட அந்த பருவ கால மாற்ற மாதங்களில் திருவிழாக்கள் ஏற்பாடு செய்து அனைத்து மக்களையும் ஒன்றாக கூட்டி பருவ மாற்றங்களினால் ஏற்படும் நோய் மனசோர்வு போன்ற விஷயங்களுக்கு மருந்துகள் என்று சொல்லபடுகிற உடல்,மன,காக்கிற மருந்து பொருள்களை பயன்படுத்தி நோய்களிலிருந்து மக்களை காப்பாற்றவும் செய்தனர . இந்த கிராம தெய்வ வழிபாடுகள் இன்றளவும் கிராமங்களில் சூரியனின் தட்சயானமான கால தொடக்கமான ஆடியிலும் உத்திராயண துவக்கம் ஆன தை மாதங்களிலும், உக்கிர காலங்களான பங்குனி,சித்திரை மாதங்களிலும் கிராமங்களில் வேப்பிலை பானகரம்,மோர் மஞ்சள் போன்ற பொருள்களை கொண்டுதான் கோவில் விழாக்கள் கொண்டாபடுகின்றன.இந்த பொருள்கள் ஒரு கிருமிநாசியினியாகவும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பயன்பட கூடியவையே.
மேலும் இந்த தெய்வ வழிபாடுகளில் ஒரு பருவ காலம் முடிந்த பிறகு அந்த கூட்டத்தினருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அவர்கள் இருந்ததற்காகவும், இனி அடுத்த பருவ காலங்களிலும் தங்களை அவ்வாறே காக்க வேண்டும் என்றும் அந்த தெய்வங்களுக்கு அன்றைய காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் அறிவு முதிர்சியின்படி நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள் வாழ்வாதார தொழிலின் அடிப்படையில் அந்த பருவகாலங்களில் அவர்கள் சம்பாதித்த பொருள்களை அந்த தெய்வங்களுக்கு வைத்து நன்றி கூறினர். விவசாயத்தில் கிடைத்த தானியங்கள் , காய்கறிகள், வேட்டையாடுதலில் கிடைத்த மாமிசங்கள், கால்நடைகள், போன்றவற்றை நன்றி செலுத்தும் விதமாக அந்த தெய்வங்களுக்கு வழங்கி வழிபட்டனர்.படைத்த பொருள்களை ஒன்று திரட்டி சமைத்து மொத்தமாக அக்கூட்டத்தினருக்கு வழங்கி மேலும் அக்கூட்ட்த்தின் ஒற்றுமையை ஸ்திரபடுத்தினர்.
தொடர்ச்சியான இந்த வழிபாடுகள்தான் கால மாற்றத்தினால் மேலும் மேலும் பல பிரிவுகளாய் பிரிந்த மக்கள் தம் முன்னோர் ஏற்படுத்திய இந்த வழிபாட்டு முறைகளை தாம் எங்கு சென்ற போதிலும் கடைபிடித்து வந்தனர் இது தான் தங்கள் குல அடையாளாமாக கொள்வதற்கும் பயன்படுத்தினர். இதுதான் இன்றைய மக்கள் கடைபிடிக்கும் குலதெய்வ வழிபடல்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.நான் மேற்கூறிய அனைத்தும் இந்த குல தெய்வ வழிபாட்டு முறைகளில் சூட்சுமமாக வைத்து இருக்கின்றனர்.

என்னுடைய காலங்களும் மாற்றங்களும் என்ற கட்டுரையில் இன்னும் வரிவாக இபபருவ மாற்றங்களை எழுதியுள்ளேன் வேதங்களில் கடைசி வேதமான அதர்வண வேதத்தில் இந்த வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக எழுதப்பட்டு இருப்பதாக வேத விற்பன்னர்கள் கூறுகின்றனர். ஆதலால் நம் வழி தோன்றல்களின் அடையாளமாகவும் நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தையையும் நம் கிராம தேவதைகள் மற்றும் நம் குல தெய்வ வழிபாடல்களை தொடர்ந்து செய்து பெறுவோம் வளம் பெறுவோம் ..இன்னும் வரும்... அஸ்ட்ரோ பாபு.
No comments:
Post a Comment