தெய்வங்கள்- என் சிந்தனையில்
பாகம் - 5 அம்மன்கள்.
பாகம் - 5 அம்மன்கள்.
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் என்ற தெய்வங்கள் பற்றிய தொடர் கட்டுரையில் அம்மன்களை பற்றியது.அம்மன் வழிபாடு எதற்கு என்பதற்கான முத்தாய்ப்பு கட்டுரையாக நேற்று காலங்களும் மாற்றங்களும் வழிபாடுகளும் கட்டுரையை பதிந்திருந்தேன்.
பிரபஞ்ச சிருஷ்டியில் பஞ்ச பூதங்கலான நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,ஆகிய மூலாதார சக்திகளின் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் தான் செயல்படுகிறது.1.இருப்பு,2,இயக்கம். இந்த பஞ்ச பூத அடிபடையில் இயங்குகிற இந்த இரண்டு தன்மைகளும் பூமியில் இருக்கும் அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்கும்.மனிதனின் படைப்பிலும் இவ்விஷயம் இயங்கும்தானே. நம்முள்இருக்கும்,இருப்பு,சிவம்,இயக்கம் சக்தி.
இருப்பு,இயக்கம் இரண்டும் இயங்க தேவையான விஷயம் பிரபஞ்ச தொடர்பான சுவாசம். சுவாசம் பற்றிய விரிவான விஷயங்களை முந்தைய பாகங்களில் கூறியிருக்கிறேன்.சூரியக்கலை,சுவாச இயக்கம் சிவம் சார்ந்தது,அது உள்தேடல்,சந்திரக்கலை சுவாச இயக்கம் சக்தி சார்ந்தது.அது வெளி தேடல்,அதாவது நம்முள் இருக்கிற மூலத்தை தேடுகிற ஆன்மீக பாதை சூரியக்கலை சுவாசம் இயக்குகிற சிவம். மனித உடல் புற செயல்களுக்கு தேவையான விஷயங்களை நடத்துவது சந்திரக்கலை சுவாசம் இயக்குகிற சக்தி இயக்கம். இருப்பும் இயக்கமும் இரண்டு விதமாக செயல்படும் அகம்,புறம்,என்று, அகம் என்பது நம்முள் இருக்கும் கடவுளின் தன்மையை நோக்கிய பயணம்.புறம் என்பது நம் உடல் செயல்பாடுகளின் வெளிப்பாடு .
நம் உடல் இயக்கம் சீர்பெற சக்தி என்ற இயக்கம் இன்றியமையா ஒன்று.நான் முந்திய கட்டுரைகளில் கூறியபடி சுவாசம் நம்முள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறும்.சூரியக்க்லையில் ஓடும் சுவாசம் மாறி சந்திரக்கலையில் ஓடும் அவ்வாறு மாறுகிற சுவாசத்தை ஒரே தன்மையில் இயக்க வைக்கிற சூட்சுமத்தை நான் ஏற்கனவே விளக்கி யுள்ளேன் அதன் படிபடையில் வலது காலை கீழ் ஊன்றி இடது காலை மடக்கி சந்திரக்கலையை உடலுக்குள் செலுத்தி இயக்கத்தை தூண்டுகிற அமைப்பே அம்மன் தத்துவம்.இதில் நம் முன்னோர் மற்றோர் சூட்சுமத்தையும் உள்வைத்து உள்ளனர்.
ஒரு செயல் நடைபெற இன்னொரு முக்கிய விஷயமும் நடைபெற்றாக வேண்டும்.அவை உருவாக்கம்,செயல்படல்,அழித்தல் அதாவது ஆத்தல்,காத்தல்,அழித்தல், என இதற்கு சித்தத்துவத்தில் சில சப்தங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி இருக்கிறார்கள்,சப்த வடிவங்கள் அட்சரங்கள் எனப்படும்.இந்த அட்சரங்கள் 51 ஆகும்.இந்த அட்சரங்களில் அ,உ,ம் என்பன ஆக்கம்,இயக்கம்,அழித்தல் என்ற விஷயங்களை நம்முள் சூட்சுமமாக செய்து கொண்டே இருக்கும். இதன் விரைவு ஒலியே ஓம் என்ற மந்திரம். இந்த அ,உ,ம், என்பதைத்தான் சூலமாக இயக்க சக்தியான அம்மன் கையிலேந்தி இருப்பார்.
மேலும் புற இயக்க சக்திக்கு,புறத்தில் ஏற்படும் பருவகால மாற்றங்கள் மனித உடம்பில் தாக்கங்களை ஏற்படுத்தி இயக்கத்தை பாதிக்க செய்யும் அப்பாதிப்பை நீக்கத்தான் எதிர்ப்பு சக்திகளான மஞ்சள்,வேப்பம்,பானகரம் , எலுமிச்சை போன்றவைகள், மஞ்சள் கிருமி நாசினி,வேப்பம் நோய் எதிர்ப்பு சக்தி,பானகரம், நம்முள் இருக்கும் நீர்த்தன்மையை சமன் படுத்த, எலுமிச்சை அமிலத்தன்மையை தூண்ட என புற பொருள்களை கொண்டு உடல் இயக்கத்தை துரித படுத்தினர்.
இந்த அ,உ,ம் என்பதுதான் அம்மன்களின் முப்படைப்புகலான,மீனாட்சி(ஆக்கம்),(அ),காமாட்சி செயல்)(உ), விசாலாட்சி(அழித்தல்)(ம்).
இதில் முக்திக்கான விஷயங்களையும் உட்புகுத்தி இருக்கின்றனர் நம்முள் இருக்கும் ஆதார சக்திகள் மலர்கின்ற தாமரையில்,அதன்மேல் அமர்ந்த ஆன்மா என்னும் கிளி (மீனாட்சி ), சப்பணமிட்ட தன்மை, சுழி முனை சுவாசம் செயல் தீவிரம்,கரும்பு ஆறு ஆதார சக்தி கடந்து சோலை என்ற வெளிப்பாடு கரும்பில்(காமாஷி), அமைதியின் விதமாய் எளிமையாய் (விசாலாட்சி) என்ற அமைப்பில் செயலின் ஒடுக்கம்,நிறைவு, காணலாம்.அங்குசம் மனம்,பாசக் கயிறு ஆசை இரண்டையும் கையில் வைத்து சுழி முனையில் சுவாசம் ஓடும் போது செயலில் தீவிரம்,தீர்க்கமும் இருக்கும் இதுதான் அடிப்படை நிறைய அம்மன் உருவங்ககளை நாம் பார்க்கிறோம் இந்த அடிப்படையில் உற்று நோக்குங்கள் நிறைய விஷயங்கள் உங்களுக்கே புரிபடும்.
ஒரு மிக பெரிய விஷயத்தை கையிலெடுத்து முடிந்தவரை முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறேன்.
எப்பொழுது எல்லாம் மனமும் உடலும் சோர்ந்து போகிறதோ அம்மன் கோயிலுக்கு செல்லுங்கள் அம்மன் இயக்க சக்தி தூண்டுதலான விஷயங்களை உள் செலுத்தும் நாம் உறசாகபடுவோம் அடுத்த பாகம் 6 ஆனா பெருமாள் பற்றிய விஷயங்களில் சந்திக்கிறேன். இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment