தெய்வங்கள் - என் சிந்தனையில்
விநாயகர் - பாகம் -2
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் 2 ஆன விநாயகர் கட்டுரையின் தொடர்ச்சி,விநாயகருக்கு பெரிய வயிறு ஏன்?
மனிதனுக்கு சுவாசம் எவ்வாறு முக்கியமானதோ அதே போல் ஜீரணத்தன்மையும் மிக அத்தியாவசியமான ஒன்று. இந்த செரிமானம் எந்த அளவுக்கு சீராக இருக்கிறதோ,உணவுகள் செரிமானமாகி,சக்திகளாக பிரிந்து, அச்சக்திகள் குலுக்கோசாக மாறி தசைகளின் இடுக்குகளில் சேமிக்க படுகிறது. அவ்வாறு சேமிக்கப்பட்ட குளுக்கோஸ் தான் இரத்தத்தின் மூலம் சக்தியாக மாற்றப்பட்டு நம் உடலின் இயக்கத்திற்கு பயன்படுத்தி கொள்ளபடுகிறது.செரிமானத்தில் குறைபாடு இருக்கிறவர்கள்.தன செயல்பாடுகளின் மந்த தன்மையும், உடல் கோளாறுகளையும் நிச்சயம் கொண்டிருப்பார்கள். செரிமான சக்தி நன்றாக உள்ளவர்களுக்கு இரத்தமும் வலிமையாக இருக்கும்.இரத்தம் வலிமையாக இருப்பின் சுருசுருப்புடனும் தொய்வில்லாமலும் அவர்களால் இயங்க முடியும். இரத்தமும்,சுவாசமும் நன்றாக இருப்பவர்கள் தன செயல்களில் ஒரு முதன்மை தன்மையை நிச்சயம் கொண்டிருப்பார்கள்தானே.செரிமானத்திற்கும்,மூளையின் செயல்பாடு,மற்றும் மூளையின் அங்கமான பிட்யூட்டரி செயல்பாடுகளுக்கும் ஒரு தொடர் சம்பந்தம் உண்டு.எந்த அளவுக்கு செரிமான சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுடைய சிந்திக்கும் திறன் மற்றும் செயல்படுகிற திறன் சிறப்பாக இருக்கும். செரிமான தன்மையின் இடமான வயிற்று பகுதி திடமாக இருக்க வேண்டும் என்று குறிப்பதே பெரிய வயிறு. சரி காலை தொங்க போட்டு அமர்ந்து இருப்பது ஏன்?
இது யோக கலையின் தனி சிறப்பு,சுவாசம் நம்முள் இரண்டு தன்மைகளில் இயங்குகிறது.ஈடா.பிங்களா என்று யோகத்தில் சொல்வார்கள்,நாம் அதை சூரியன்,சந்திரன் என்று சொல்வோம்.சுவாசம் நம் நாசியில் வலது சூரியன்,இடது சந்திரன் என பிரிந்து சூரிய, சந்திர வேலைகளை நம்முள் இயக்குகிறது இந்த சுவாச இயக்கம் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தன் செயலை மாற்றி கொள்ளும்,அதாவது வலது நாசியிலோடுகிற சுவாசம் இரண்டு மணிநேரத்திற்கு மாறி இடது நாசியில் ஓடும்,வலது பக்கம் ஓடுகிற சுவாசம் சூரியக்கலை என்றும் இடது நாசியில் ஓடுகிற சுவாசம் சந்திரக்கலை என்றும் யோகத்தில் சொல்கிறார்கள்.இந்த சுவாச மாறுதல் சூரியனை பூமி ச்ற்றுகிற நேரத்தை பொறுத்து அமையும்,ஜோதிடர்கள் இந்த பூமியின் நகர்வைத்தான் லக்னம் என்பர்.இவ்வாறு இயற்கையாய் மாறுகிற சுவாச தன்மையை நம் விருப்பத்திற்கு,நம் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்க முடியும் ஆசனத்தின் மூலம்.நம் உடம்பை இரண்டு பிரிவாக நேராக பிரித்து வலது இடது என்று வைத்து கொண்டு, எந்த பகுதியை நாம் பயன்படுத்துகிறோமோ அதற்கு எதிர் பக்கத்தில் சுவாசம் இயங்கும். இதுவும் இயற்க்கை வழங்கி இருக்கிற ஒரு விஷயம்.அப்படி சுவாசத்தை மாற்றி அமைக்க நம் ஒரு கால் பகுதியை பூமியில் அழுந்த அந்த பகுதி முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் அடுத்த பகுதியில் சுவாசம் ஓடும்.உதாரணமாக வலது காலை ஊன்றினால் இடது பக்கம் சுவாசம் ஓடும். இந்த வலது பக்கம் சுவாசம் இருக்கும் பொது ஒரு தன்மையும் இடது பக்கம் ஓடும்போது ஒரு தன்மையும் நம்முள் செயல்படும்,அதாவது சூரியக்கலை ஓடும் போது ஆளுமை சார்ந்த விஷயங்களும்,இடது,சந்திர கலை ஓடும் போது இணைவாக செல்கிற விஷயங்களும் செயல்படும் யோககலையில் இருப்பர்வர்களுக்கு புரியும். அப்படி ஆளுமை தன்மையில் சுவாசத்தை பெறுவதற்குதான். விநாயகர் இடது காலை ஊன்றி வலது காலை மடித்து வைத்திருப்பார்.

அமர்தல்என்பது குண்டலினியை மேல் எழுப்ப எத்தணிக்கிற முதல் படி, அவ்வாறு சூரிய கலையில் சுவாசம் ஓடும்போது சூரியனுக்கு உரித்தான செயல்களான தலைமை பொறுப்பு, ஒரு வேலையை திறம்பட செயல்,வீரியம்,மற்றும் இயக்கத்தன்மை மிக சீராக அமையும். மேலும் குண்டலினியை அழுத்தி சூரியக்கலை சுவாசம் ஓடும்போது யோக மார்க்கத்தில் முக்தியை நோக்கிய பயணம் சாத்தியம்,
அதே போல் விநாயகரின் யானை தலையில் தந்தம் ஒன்று உடைந்தது போல் இருக்கும் இதுவும் சுவாச கதி சம்பந்த பட்டதே அதாவது உல் போகிற சுவத்தின் அளவை விட வெளிவிடுகிற சுவாசத்தின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.12 அங்குல சுவாசம் உள் சென்றால் வெளிவருவது 8 அங்குல சுவாசமாக இருக்க வேண்டும் உள் இருக்கிற 4 அங்குல சுவாசம் நம் இயங்கு சக்தியை சீர் செய்து கொண்டே இருக்கும் இது சித்தத்துவத்தின் மிக பெரிய விஷயம். பாகம் 3 இல் தொடர்கிறேன் இன்னும் வரும் ....அஸ்ட்ரோ பாபு

No comments:
Post a Comment