தெய்வங்கள் - என் சிந்தனையில் பாகம் 1
விநாயகர்
விநாயகர்
நண்பர்களுக்கு வணக்கம்,
தெய்வங்கள் - என் சிந்தனையில் என்ற தலைப்பில் தொடர் கட்டுரையாக தெய்வங்கள் பற்றிய, நான் கண்ட ,உணர்ந்த விஷயங்களை எழுதுகிறேன். அதில் முழு முதல் கடவுளான விநாயகரை பற்றியது இக்கட்டுரை.
யானை முகத்தனை,எலி வாகனனை,ஈசனுக்கு மூத்தோனை,கஜ முகனோனை,விநாயக பெருமானை, உன்னை நினைத்து தொழுது இக்கட்டுரையை தொடர்கிறேன்.
விநாயக பெருமான் முழு முதல் கடவுள்,நாம் யாதொரு காரியங்கள் தொடங்கினாலும் அவரை முன்னிருத்தியேதான
தொடங்குகிறோம்.ஏன்? பார்ப்போம்.
விநாயகரின் உருவ அமைப்பு யானைத்தலை,பெருத்த வயிறு,ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்க போட்ட அமர்வு,ஒரு கொம்பு உடைந்த தந்தம்,எலி வாகனம், இது ஏன்? இது பற்றிய நிறைய கேள்விகள் நம்முள்,அதற்கு பல்வேறு விளக்கங்களையும்,வியாக்கியானங்களையும் நம் படித்தும்,கேட்டும்,இருக்கிறோம்,இவைகளை என் சிந்தனையில் பார்க்கிற பொழுது........
விலங்குகளில் பலம் பொருந்திய மிருகம் யானை என்பது நாம் அறிந்ததே.அத்தனை பலத்திற்கும்,யானை உண்பதோ புல்,இலை,தளைகளை தானே, அசைவ வகைகளை அவை முகர்ந்து கூட பார்ப்பதில்லை,அப்படி இருந்தும், அவைகளுக்கு இத்தனை பலம் எங்கிருந்து? அதன் தும்பிக்கையிலிருந்துதான்.தும்பிக்கை மூலமாக எடுக்கிற நீண்ட சுவாசத்தின் அளவுதான் காரணம்.
எந்த ஒரு உயிரினமும் உயிர் வாழ பிராணன் என்ற காற்று அவசியம்.அந்த பிராணன் சக்தி எந்த அளவு நம்முள் உள் செல்கிறதோ
அந்த அளவுக்கு நம் உடலில் இரத்த ஓட்டம் தீவிரமாக இருக்கும். எந்த அளவுக்கு இரத்த ஓட்டம் தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நரம்பு,தசை, எலும்புகளின் வலிமை இருக்கும்.இவைகளின் செயல்பாடுகளும் வலிமை மிக்கதாக தானே இருக்கும். இவைகள் இயங்க தேவையான சத்துக்களை நம் உணவில் இருந்து இரத்ததின் மூலமே பெறுகின்றன. அது மட்டுமில்லாமல் நம் மூளையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த பிராண சக்தி இன்றியமையாத ஒன்றாகும்.
பொதுவாக நம் செயல்கள் நான்கு விதமாக நம்முள் பிரிக்க படுகின்றன, பார்த்தல், புரிந்து கொள்ளல் ,உள் வாங்குதல், செயல்படுதல் என.
இந்த நான்கு செயல்பாடுகளில் தானே மனிதனின் தனித்தன்மையின் தரம் தீர்மானிக்கபடுகிறது.புத்திசாலி,அறிவாளி,அறிவிலி,மந்தம் என.

.பிராண சக்தி நம்முள் எந்த அளவுக்கு செல்கிறதோ அந்த அளவுக்கு மூளை,மற்றும் இரத்த செயல்பாடு சிறப்பாக இருக்கும் தானே.மேலும் நம் ஆயுளின் கால அளவை கூட இந்த பிராண சக்திதானே தீர்மானிக்கிறது.இந்த பிராணன் என்ற சுவாசத்தை வழிமுறை படுத்தி நம் செயல்பாடுகளின் தீவிரத்தை பெறத்தானே மூச்சு பயிற்சி,பிராணாயாமம்,வாசி போன்றவை, ஆக,ஒரு உயிரினம்,மனிதன் உட்பட,உயிர் வாழவும்,செயல்படவும்,தனி திறமைகள் வழிபடவும் இந்த பிராணன் என்கின்ற சுவாசம்தான் முடிவு செய்கிறது.சுவாசத்தினால் பலம் பெறுகிற, நீண்ட சுவாசத்தை (தும்பிக்கை) கொண்ட, மூளை பலத்தை குறிக்க (பெரியத்தலை)யானைத்தலை. சரி பெரிய வயிறு எதற்கு?,
அதற்கும் மிக முக்கியமான காரணம் உண்டு பாகம் 2 இல் தொடர்கிறேன்..நண்பர்கள் கட்டுரைகளை தொடர்ந்து படியுங்கள் அப்பொழுதுதான் புரிதல் இருக்கும்.இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு.

,
No comments:
Post a Comment