தெய்வங்கள் என் சிந்தனையில் பாகம் - 10
ஐயப்பன்
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் என்ற தொடர் கட்டுரையின் பாகம் 10 ஆன ஐயப்பனை பற்றியது கார்த்திகை மாதமும்,நீல கருப்பு வேட்டிகளும் சரண கோஷங்களும் சுவாமி என்ற அடைமொழியும் ஐயப்பனை நமக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கும்.

விஷ்ணு பெண்ணாகி,ஈஸ்வரன் ஆணாகி இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை ஐயப்பன் என்பர்.உடல் நலம் குன்றிய தன வளர்ப்பு தாய்க்கு புலிப்பால் கொண்டு வந்தவர் என்ற பராக்கிரம பாராட்டும் இவருக்கே.
நான் ஏற்கனவே என் முந்தைய கட்டுரைகளில் சுவாச தன்மைகளை
பற்றி தெளிவாக கூறியுள்ளேன். இந்த ஐயப்ப தன்மையும் சுவாசதன்மையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கபட்டுள்ளது. நம் சுவாசம் சூரியக்கலை,சந்திரக்கலை என்னும் இருபிரிவாம்.நம் இரு மூக்கு துவாரத்தில் வலது துவாரம் வழியாக ஓடும் சுவாசம் சூரியக்கலை.இடது துவாரம் வழியாக ஓடுவது சந்திரக்கலை இரண்டு மணி நேரத்துக்கு முறை இச்சுவாச தன்மை மாறி ஓடும் . சூரியக்கலை ஈஸ்வர தன்மையைய்ம் (ஆண்) சந்திரக்கலை(பெண்) பெருமாள் தன்மையயும் ஆகும். இந்த இரு சுவாச நிலைகளின் நடுநிலையான ஒரு தன்மை இருக்கிறது அதுதான் சுழிமுனை,சூரியக்கலை அறிவு என்றால் சந்திரக்கலை செயல்படுகிற புக்தி,இந்த அறிவும் ஆக்கமும் சந்திக்கிற நடுநிலை சுழிமுனை. அறிவும்,ஆக்கமும் இணைந்தால் தீர்க்கம் தானே இந்த தீர்க்கம் தான் ஐயப்பன்.ஈச்வரனான சூரியக்கலைக்கும் ,விஷுனுவாகிய சந்திரககளைக்கும் பிறந்த நடுநிலை சுழிமுனைசுவாசம் தான் ஐயப்பன்
சுழி முனை கடவுள்கள் தன் நிற்கின்ற,தன்மையில் நடுநிலையில் நேராக கால் இரண்டையும் சமமாக தரையில் ஊன்றி நிற்கிற அல்லது அமர்ந்து இருக்கின்ற வடிவத்தில் சித்தரித்து இருப்பர். இந்த சுழிமுனை கடவுள்கள் மிகசக்திவாய்ந்ததன்மையுடையவர்கள். திருப்பதி,முருகன்,ஐயப்பன் போன்றவர்கள் சுழிமுனை கடவுள்கள்.
புலிப்பால் என்கின்ற ஒரு பொருளை கொண்டுவருவது சாத்தியமான ஒன்றா? ஆனால் ஐயப்பன் காட்டுக்கு சென்று புலி மேலேயே பயணித்து வருவார்.புலிப்பாலை வேண்டிய அளவுக்கு எடுத்து கொள்ளுங்கள் என்று. எண்ணெய் கொண்டு வர சொன்னால் எண்ணெய் கிணறை கொண்டு வந்தால் என்ன செய்ய, வளர்ப்பு மகனை நாடகமாடி காட்டுக்குள் சென்று புலிப்பால் கொண்டு வர சொன்னால் மறித்து விடுவான் என்ற நாடகத்தின் தாத்பரியம் என்னவென்றால் விடுவான் சுழிமுனை சுவாசம் செய்ய முடியா ஒன்றை செய்து முடிக்கிற வல்லமை இந்த சுழிமுனை சுவாசத்திற்கு உண்டு என்பதுதான்.
மற்ற சுழிமுனை கடவுள்களிருந்து ஐயப்பன் ஒரு மாபெரும் தத்துவத்தில் வித்தியாசபடுகிறார். அந்த தத்துவம் தான் விந்து கட்டுதல்,யோக சாஸ்த்திரத்தில் இந்த விந்து கட்டுதல் மிக அற்புதங்களை கொண்டு வரும். நம் அனைத்து ஆற்றல்களும் அடங்கி இருப்பது விந்துவில் மட்டுமே. அந்த விந்தின் செலவை குறைத்து, அதை சேமிப்பது அளப்பரிய விஷயங்களை நிகழ்த்த உதவும். பிரம்மச்சரியத்தின் ரகசியமும் இதுதான். அதனால்தான் ஐயப்பன் குத்துகாலிட்டு அமர்ந்து சுவாதிஷ்ட்டான சக்கரத்தை நிறுத்தி விந்துவை கட்டி வீரியத்தை பெற வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கத்தான் குத்துகாலிட்டு அமர்ந்து இருக்கிறார்.பாலுணர்வு என்பது ஸ்ருஷ்டி தத்துவத்தில் அடுத்த ஆரம்பித்தத்தின் ஆரம்ப முனை. அதை கொல்லும்பொழுது ஒரு மாபெரும் படைப்பின் சங்கிலி தொடர் அறுந்து அத்தனை சக்தியும் நம்முள்ளே இயங்கும்.
அதேபோல் நம் உடம்பு சூரிய வட்டப்பாதையில் இயங்கும் 7 கிரக சக்திகள் 2 சாயா சக்திகளின் கலவை. இக்கிரக ஆற்றலில்தான் நாம் உருவாக்கவே பட்டிருக்கிறோம்.இவற்றின் ஆக்கம் செயல் அனைத்தும் கிரக குண நலன்களே அப்படி எனில் இந்த 9 கிரக ஆற்றலின் நன்மை மற்றும், தீமை , பக்கம் மறுபக்கம்.ஆரோகணம் ஆவோகர்ணம் என்ற தன்மைதான் ஐயப்பன் கோவிலின் 18 படிகள் 9 x 2 = 18.
சுழிமுனை இயக்கத்திற்கு தேவையான ஒன்று வெல்லம்,மட்டுமே அனைத்து சுழிமுனை கடவுள் கோவில்களிலும் வெல்லம்தான் பிரதான பிரசாதம்மாக கொள்ளப்படும் திருப்பதி லட்டு,பழனி பஞ்சாமிர்தம்,சபரிமலை அரவணை பாயாசம்.
அடுத்து பாகம் விரத முறைகள் பற்றியது நான் ஏற்கனவே சொல்லியபடி காரணங்களை மறந்து காரியங்களை கையில் எடுத்து கொண்டு பாராட்டுவதால் காரணங்கள் மறைந்தே போய் விட்டன.அதை பாகம் 11 இல் தொடர்கிறேன் இன்னும் தொடரும் .....அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment