தெய்வங்கள் - என் சிந்தனையில் ,
முருகன் - பாகம் - 4.
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை தெய்வங்கள் என் சிந்தனையில் என்ற தொடர் கட்டுரையின் பாகம் 4 ஆன முருகனை பற்றியது.
சித்தத்துவத்தில் மிக முக்கிய வடிவம் முருகன்,பதினென் சித்தர்களின் மிக மூத்தவரான போகர் அவர்கள் வணங்கி பாராட்டிய தெய்வம்,அருணகிரி நாதருக்கு முக்தி வழங்கிய கடவுள். இந்த கடவுள் வடிவம் எந்த தத்துவத்தை நமக்கு வழங்கி இருக்கிறது என்று பார்ப்போம்.
பிரபஞ்ச பஞ்ச பூத சக்திகளில் நம்மோடு நேரடி தொடர்பில் ஒவ்வொரு கணமும் தொடபில் இருக்கும் ஒரே பூதம் காற்று என்ற பிராணன் மட்டுமே. ஆம் சுவாசம் தான், இச்சுவாசம் எவ்வகையில் நம்முள் இயங்குகிறதோ அதன் அடிப்படையில் தான் நம் உடல் இயங்கும் என்பதை என் கட்டுரைகளில் தொடர்ந்து கூறி வருகிறேன். அச்சுவாசம் மூன்று தன்மைகளில் நம்முள் செயல்படுகிறது.ஈடா,பிங்களா சுழி, என அதாவது சூரிய,சந்திரன்,நடுமுனை எனலாம்.வலது நாசியில் ஓடும் சுவாசம்,சூரியன்,இடது நாசியில் ஓடும் சுவாசம் சந்திரன், இந்த இரண்டு சுவாசமும் ,ஒவ்வொரு இரண்டு மணிக்கும் தன தன்மையை மாற்றி சுவாசத்தை இயக்கும் ,அதாவது, வலது நாசியில்(சூரிய) ஓடுகிற சுவாசம் இரண்டு மணி நேரம் கழித்து இடது நாசிக்கு (சந்திர) இயற்கையாகவே மாறும்.வலதிலிருந்து இடத்துக்கு இடத்திலிருந்து வலதுக்கு மாறும்பொழுது நடுநிலை என்ற சுழிமுனையில் சுவாசம் நின்று நிதானிக்கும்.அதுதான் சுழிமுனை. இங்கு சுவாசம் பயணிக்கும் பொழுது அளப்பரிய சக்தியை நம்முள் வழங்கும். ஏனெனில் சூர்யன் என்ற இருப்பு நிலையும் சந்திர என்ற இயங்கு நிலையும் இல்லாமல் ஒன்றுமற்ற தன்மையில் இயங்கும்.இந்த ஒன்றுமற்ற நிலைதான் நம்முள் சக்தி ஓட்டத்தை பெருக்கி ஆதார சக்திகளை தாண்டும்.சூரிய,சந்திர சுவாசத்தை விட சுழிமுனை சுவாசம் மிக முக்கியமான் ஒன்றாக கொள்ளபடுகிறது.ஆறு ஆதாரங்களும் இந்த ஒன்றுமற்ற சுவாச நிலையில் தான் எழுச்சி பெரும்.சித்தர்களும்,தவசிகளும் சுவாசத்தை கட்டுபடுத்தி சுழிமுனையில் 24 மணி நேரம் இயங்க வைத்துத்தான் தன்னிலை கடந்தார்கள்,இந்த சுழிமுனை சுவாசம்தான் நம் ஆதார சக்தி சக்கரங்களின் மேல் எழுந்து ஏழு நிலைகளை கடக்க உதவும்.கல்பம் ஆகும்.
இந்த சுவாச தத்தவத்தை விளக்குகிற விஷயம்தான் முருகன், வலது சுவாசம்,தெய்வானை,இடது சுவாசம் வள்ளி,முருகன் சுழிமுனை, மூன்று சுவாசத்தின் தன்மைகள்தான் தெய்வானை,வள்ளி, முருகன்.முருகனின் கையில் வைத்திருக்கும் வேல்தான் ஆறு ஆதார சக்திகள் (முதுகெலும்பு), முருகன்(சுழிமுனை சுவாசம்) வேல் என்னும் ஆதார சக்திகள் தனனகத்தே கொண்டு (கையில் எடுத்து) ஆறு சக்தி மையங்களை கடந்து மனம் என்னும் பத்மாசூரனை வென்று, மனத்தின் இரண்டு விஷயங்களான மாயை,மற்றும் அறிவை வெட்டி,மாயை என்னும் வண்ண வண்ண ,அழகு விஷ்யங்க்களை,கற்பனைகளை ,மயிலாக்கி,ஆராய்கின்ற அறிவை சேவலாக்கி கொண்ட வடிவம் தான் முருகன்.இந்த ஆறு ஆதாரங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஸ்தலங்கள் தான் ஆறுபடை வீடு. சுழு முனையில் சுவாத்தை பிடித்து விட்டால் வயது நிற்க தொடங்கி விடும், உடம்பும் முகமும் தேஜஸ் பெரும் அதனால்தான் என்றும் அழகான், இளமையானவாகவே காட்சி தருகிறான்
நம் பிராணன் என்ற சுவாசம் தன வச படா நிலை என்பது சித்தத்துவத்தில் மனம் என்னும் மாயையில்தான். .அதனால்தான் பிராணன் என்ற பாம்பை மாயை என்ற மயில் காலில் அழுத்தி பிடித்திருக்கும், மாயை விலகினால்,சுவாசம் கட்டுப்பட்டு இயங்கி ஆதார சக்திகளை மேல் எழுப்பும்.மாயை என்ற மயிலை வாகனமாக்கி சுழிமுனையில் (முருகன்) சுவாசம் ஓடும்போது முக்தி என்ற விஷயம் நம்முள் அடைபெருகிற தத்துவம்தான் முருகன்.
ஜோதிடத்தில், செவ்வாயின் பரிகாரமாக முருகனை சொல்லுவார்கள். செவ்வாய் என்பதே இயக்கம் தானே.நம் இரத்தம்,சுவாசம் இரண்டும் ஒன்றுகொன்று தொடர்பு கொண்டவை, ஒன்றில்லாமல் ஒன்று இயங்காது. ,இரத்தம் சரியாக இயங்கவில்லையென்றால் பிராண சக்தி நம் உடலில் சரியாக சென்று சேராது.இதனால், சோம்பல்,மந்தம்,செயலில் தெளிவின்மை மாறுபாடான செயல்கள்,அதீத கோபம்,அசதி, போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களில் பிரச்சனை இருக்கும்.இதை சரி செய்கிற வழிபாடுதான் முருகன்,சுழிமுனை சக்தி பிராணனை செவ்வாய்க்கு (இரத்தத்திற்கு) பெற்று தந்து உடல் முழுவதும் பிராண சக்தியின் இயக்கம் சீர்பெற்று உடலின் இயக்கம் திறமை பெரும் ,உடலில் இருக்கும் தேவையற்ற வெப்பத்தை நீக்கி,வெப்ப சக்தியை ஒருநிலைக்கு கொண்டு வரத்தான் சந்தனம்.இரத்த விருத்திக்கு தேவையான இரும்பு சத்துக்கள் நிறைந்த,தேன்,பேரிச்சம் பூ வாழை,கற்கண்டு போன்றவைகளின் கலவையான பஞ்சாமிர்தம்,பஞ்ச பூத சக்திகளை நம்முள் பெற்று தரும்.முக்திக்கான எளிய வழியை விளக்குகின்ற தத்துவம்தான் முருகன். முடிந்தவரை முக்திக்கானவனை முருகனை சுருக்கி கொடுத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு பாகம் 5இல் அம்மன்கள் தொடரில் சந்திக்கிறேன். இன்னும் வரும்... அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment