Monday, 23 December 2013

நண்பர்களுக்கு வணக்கம்,
என்னுடைய கட்டுரைகளை தொடர்ச்சியாக படித்து விட்டு எனது நண்பர் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் என்னை கடவுள் மறுப்பு கொள்கைக்கு மாறி விட்டாயா என்றும் கேட்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை, பிரபஞ்சத்தில் இருக்கிற மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளை உருவாக்கி அவை ஒவ்வொன்றும் உயிர்வாழ ஏற்ற உடலை,உணவை,இடத்தை வழங்கி இருக்கிற அந்த பிரபஞ்ச சக்தியை வணங்குகிறேன்.எப்பொழுதும் அச்ச்சக்தியுடன் தொடர்பும் கொண்டிருக்கிறேன் நன்றி உணர்வால். இச்ச்சக்தியுடன் தொடர்பில் இருக்கிற சாதுக்களோடும், ஆராய்ச்சியாளர்களோடும் சித்தர்களோடும் தொடர்பில் இருக்கிறேன். இது நிதர்சனமான உண்மை.
அதே நேரத்தில் ஆன்மீகத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ நடைபெறுகிற விசயத்தை, முன்னோர்கள் சொன்னதை கடைபிடித்து வருகிற மக்களுக்கு, அவ்விஷயத்தில் நான் அறிந்த, புரிந்து கொண்ட, அனுபவித்த அறிவியல் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதை தெளிவு பெற விவரித்தும் கூற முயல்கிறேன். அக்காலத்தில் கேள்விகளாலும்,விவாதங்களாலும் ஒரு நல்ல விஷயம் மக்களுக்கு செல்லாமல் போய் விடும் என்று கடவுளின் பெயராலோ,கோவிலின் பெயராலோ அல்லது ஜோதிடத்திலோ இருக்கிற, அல்ல ஏற்படுத்திய அறிவியல் உண்மையை மக்களுக்கு பயம் ஏற்படுத்தி உணர்த்திய கதைகளின் அறிவியல் உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டு
பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதி வருகிறேன். தோழமைகளே.
சனி, புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு,விதி,பரிகாரம் போன்ற கட்டுரைகளுக்கு நண்பர்களிடத்தில் நல்ல பாராட்டுகளும், இதே பாதையில் இருப்பவர்களின் விமர்சனங்களையும் பார்க்கிற பொழுது உங்களின் ஒத்துழைப்பில் என்னுடைய இந்த முக நூல் துவக்க நோக்கம் நிறைவேறுவதாக உணர்கிறேன்.
சில நண்பர்கள் என்னை கேள்வி பதில் பகுதியை தொடங்க சொல்லி கேட்கிறார்கள். உங்களின் கேள்விகளை என்னுடைய Timeline il post செய்யுங்கள். நான் எனக்கு தெரிந்தவரை அதற்க்கு பதில் கூற தயாராக உள்ளேன் நண்பர்களே. இன்னும் வரும்.............. அன்புடன் அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment