Wednesday, 18 December 2013

புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு 

நண்பர்களுக்கு வணக்கம், புரட்டாசியில் மட்டும் ஏன் பெருமாளுக்கு சிறப்பு. பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனின் வீரியத்தில் இருந்து மறைகிற காலம். புரட்டாசியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தை மாதம் மகர ராசியில் சஞ்சரிகிறவரை 4 மாதங்கள் பூமி சூரியனின் தென் கோட்டு பகுதியில் பயணிக்கிற காலம். தென் மேற்கு பருவ மழை முடிஞ்சு ஆடி காற்றை கடந்து அடை மழை பருவ காலத்தில் பூமி நுழைகிற மாதம் புரட்டாசி .அக்காலத்தில் மக்கள் ஆடியில் விதைத்து விட்டு மழைக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிற பருவமும் கூட.
இந்த பிரபஞ்ச பருவ நிலை மாற்றம் பூமியில் மனித உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.பூமியின் ஜீவராசிகளின் இனபெருக்கத்திற்கான காலம்.மந்த மாருதம் என்று சொல்லுகிற ஊத காற்று வீசுகிற காலம்.
சரி இதற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம். இதற்க்கு முன் ஒரு கேள்வி. ஏன் மற்ற தெய்வங்களை புரட்டாசிற்க்கு சொல்ல வில்லை? குறிப்பாக சிவ வழிபாட்டை ஏன் கூறவில்லை? ஏன் பெருமாளை மட்டும்
வழிபட சொன்னார்கள்.ஏனென்றால் ஈஸ்வர சக்தி குருதன்மை முக்தி,சந்நியாசி குணம்.பெருமாள் சுக்கிர தன்மை கல்யாண குணம் சம்சாரம்.களத்திரம்.இந்த இரண்டு கோவிலுக்கும் செல்கிறவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டை உணர்ந்து இருப்பார்கள்.ஈஸ்வர கோவிலில் ஒரு அமைதியையும் பெருமாள் கோவிலில் ஒரு உற்சாக உணர்வையும் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த இனபெருக்க பருவத்தில் பெருமாள்கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன் படுத்துகிற பச்சை கற்பூரம்,சந்தனம்,சம்பங்கி பூ,துளசி தீர்த்தம்.போன்றவை உதவும்.இது நம்முள் சுக்கிர தன்மையை தூண்டியும் சமன்படுத்தவும்(neutralizer ) செய்யும். மனதும் தெய்வீக தன்மையோடு இருக்கும்.இந்த பருவத்தில் உருவாகிற வாரிசுகள் நிலைதன்மைஉடனும்,புத்தி சாலிகளாகவும், தெய்வ பக்தி உடையவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் உடம்பில் அசுர தன்மையை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் சம்சார வாழ்வில் ஈடுபட்டு நல் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் புரடசியில் பெருமாள் வழிபாடு.
மேலும் அடைமழை காலம் தொடங்குவதால் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகிற தொற்று நோய் கிருமிகள் உருவாகி நம் உடம்பை தாக்கும்.(சளி காய்ச்சல் போன்றவை ) இதிலிருந்து காக்கவும் பெருமாள் கோவில் பச்சை கற்பூரமும் துளசியும், நாம் இருக்கிற விரதமும் மனதையும் உடம்பையும் தகுடு போல வைக்க உதவும். ஐயப்பன் விரதம் இருப்பவர்களுக்கு தெரியும் 48 நாள் விரதம் உடம்பை எந்த அளவுக்கு சீராக்கும் என்று.அடை மழை காலம் என்பதால் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் எளிதில் ஜீரணமாககூடிய சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சிறிது நேரம் தங்கி இருந்து அச்சக்தியை புரடசியில் பெற்று வாருங்கள்.வயதில் இருப்பவர்கள் நல்ல வாரிசுகளை பெறுங்கள் வயது கடந்தவர்கள் நல்ல தேக ஆரோகியத்தை பெறுங்கள்.

இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு.

2 comments:

  1. அருமையான பதிவு சார். நன்றி

    ReplyDelete
  2. Sir,, Your research is unbelievable. All your post gives a idea to look at the things in another dimension. Please publish book with all your research papers that will help the next generation to have a enough knowledge.,

    ReplyDelete