Wednesday, 18 December 2013

இராகு 
சூரியனின் வட்ட பாதையில் சந்திரன் பூமியை சுற்றி வருகிற கிரகம் சந்திரன் பூமியை சுற்றுகிற வட்ட பாதையும் பூமி சூரியனை சுற்றுகிற வட்ட பாதையும் இணையும் இடம்தான் ராகு.அப்படி பார்த்தல் சூரியன் உடைய நிழல் ராகு. சந்திரன் உடைய நிழல் கேது ஆகும்.முதலில் ராகு பத்தி பார்போம். இந்த ராகு பூமியில் உள்ள உயிர்களின் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக மனித உடலில் தசை,தசை நார்கள், அவற்றின் செயல்கள், உடலில் உள்ள மின் சக்தி. இந்த மின் சக்தி தூண்டுகிற நரம்பும் தசை நார்களும் தூண்டுகிற இடம் (NERO MUSCULAR JUNCTION) இவைகளை இயக்குகிற சக்தியாக ராகு இருக்கிறது.ஜனன காலத்தில் இராகுவின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பொருத்து அந்த ஜாதகரின் தசை செயல்பாட்டை கணக்கிடலாம். நல்ல இடங்களில் ராகு இருந்தால் நல்ல செயல்களுக்கும் கெட்ட இடத்தில இருந்தால் கெட்ட செயல்களுக்கும் இந்த தசை வலிவு பயன்படும் குறிப்பாக 6 ம் இடம் ராகுவிற்கு சிறந்ததாக கருதலாம்,நோய் எதிரி வேலை போன்ற வற்றிற்கு உரிய ஸ்தானமாக ஜோதிடத்தில் கொள்கிறார்கள். இந்த இடத்தில ராகு இருந்தால் நோய் நொடி எதிர்ப்பு, எதிரியை வெல்லுதல், வேலையில் சிறப்பு இருக்கும். அதேபோல் 9ம் இடம் தன வலிமையால் அனைத்து பாகியங்களையும் பெறுவார். 2 ல் இராகு நாக்கிலும் சொல்லிலும் வலிமை இருக்கும். வார்த்தைகள் கத்தி வைத்து வெட்டியது போல் இருக்கும். 2ம் இடம் வாக்கு ஸ்தானம் மட்டும் இல்ல குடும்ப ஸ்தானம் கூட குடும்பத்தில் அனுசரணையும் அரவணைப்பும் மிக முக்கியம். நேர்கோட்டு செயல் அங்கு பல எதிர் விளைவுகளை உண்டு பண்ணும் என்பதால் தான் 2 ல் இராகு இருப்பவரை இராகு வலுவாக உள்ள ஜாதகருக்குதான் பொருத்துதல் வேண்டும் திருமண பொருத்தத்தில். வலிவோடு வலிவு சேரும்போது சமம் ஆகும். என்று

இராகு வலிமை குறைவாக இருப்பவர்கள் தசையின் வலிமையை கூட் ட கூடிய மொச்சை உளுந்து பயிர் வகைகளை அதிக அளவில் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். இவற்றில் ப்ரோட்டின் அதிகம் இருக்கும் ப்ரோட்டின் தசையை வலு படுத்தும். இருந்தாலும் ஜனன நேரத்தில் இராகுவின் நிலைமயை பொறுத்து தான் அதை முடிவு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை ஒரு மனிதனுடைய அனைத்தும் பிறப்பிலேயே தீர்மானம் செய்யப்பட்டு விடுகிறது. செய்த பொருளை மாற்றவோ திருத்தி உரு மாற்றவோ முடியாத வாறுதான் ப்ரோக்ராம் செய்ய பட்டு அனுப்பி வைக்க பட்டு இருக்கிறோம். எந்த ஒரு பரிகாரமோ எந்திர தந்திர தகடுகளோ இந்த இயல்பை மாற்ற முடியாது. ஆனால் கோவில்கள், சித்தர் சமாதிகள் வேண்டுமானால் 15-20 சதவீதம் வரை தேவை படுகிற சக்தியை தூண்டும் அம்மாதிரி விசயங்களை தான் கோவில் இடத்தில பொருத்தி ஜனன பாதிப்பில் இருக்கிற மக்களை அங்கு வர வைத்து அந்த மாற்று சக்தி இணைய பெறுமாறு செய்தார்கள் அங்கு உபயோகிக்கிற பொருள்களின் வாசனையும் (smell theraphy) மந்திரங்களும் (sound therophy ) பிரசாதங்களும்(food theraphy) அங்கு தீர்மானித்து இருக்கிற சக்தியை ஒட்டியேதான் இருக்கும் அச்சக்தியை தூண்டும்.கூட

உலகம் என்பது எழுதிய நாடக மேடை.
நம் எலோரும் நடிகர்கள் மட்டுமே.

இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு.

No comments:

Post a Comment