நண்பர்களுக்கு வணக்கம்,
பண்டிகை காலங்கள் முடிந்து பருவ மழை காலங்களில் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த பருவ மழை நன்கு பெய்து பூமியை குளிர செய்து விவசாயம் பெருகி அனைத்து வளங்களை, அனைத்து மக்களும் பெற்றிட எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் அந்த பிரபஞ்ச சக்தியை மனதார பிராத்திக்கிறேன்.
மக்களிடையே பெரும் கேள்விகளாய் இருக்கும் விஷயம் யோகம், தோஷம் என்பன அவற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
யோகம்: நம் ஜனனத்தின் போதே நம் விளையாட்டு சூத்திரத்தை நம் உடலில் புகுத்திதான் அனுப்பி இருக்கிறார்கள் என்று என் முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களோடு கூறியிருக்கிறேன்
ஒரு உயிரின் ஜனனத்தில் கிரகங்களின் நிலைதான் நம் உடலில் ஆதிக்கம் செய்கிறது இதை நம் முன்னோர்கள் வரைபடமாக சொன்னதுதான் ஜோதிடத்தின் ஜாதக கட்டம். இதுதான் உடம்பின் முதல் ஸ்கேன். எந்த கிரகம் உடலில் எந்த இடத்தில என்ன வலுவுடன் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்ல கூடியது . ஜாதக கட்டத்தை, (உடம்பின் ஸ்கேன் ) அலசி பார்க்கும்போது வலுவுடன் இருக்கிற இடங்களை நல்லது என்றும் வலுவிழந்து இருக்கிற இடங்களை கெட்டது என எடுத்து கொண்டால், அந்த நல்ல இடங்களின் தன்மையும் செயல்பாடும் யோகம் எனவும். கெட்ட இடங்களின் தன்மையும் செயல்பாடும் தோஷம் எனவும் கொள்ளலாம்.மேலும் கிரகங்களின் குண நலன்களையும் கணக்கில் கொண்டு பார்த்து அந்த யோகத்தின் பலத்தையும் கணக்கிடலாம்.உதாரணத்திற்கு,
சந்திரனும் செவ்வாய்யும் சேர்ந்து இருந்தால் சந்த்ரமங்கள யோகம் மனமும்,இரத்தமும், இரத்தம் சார்ந்த பகுதியும் மிக பலமாக இருக்கும் எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்கும். உடம்பு துடிப்பாகவும் இருக்கும் புதுமை விரும்பிகளாக, அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி வெற்றியும் காண்பர்.இந்த கிரக சேர்க்கை உடையவர்களை பார்த்து இவர்கள் எப்படி இப்படி இருக்கின்றனர் என மற்றவர் வியக்கும் வண்ணம் இருப்பர்.மேலும்
லக்னத்தில் ஒரு நல்ல கிரகம் வலுபெற்றலோ அல்லது அந்த கிரகம் இரத்த சம்பத்தப்பட்ட இடத்திலோ அல்லது அறிவு சார்ந்த இடத்திலோ அல்லது மனம், உடம்பு, நரம்பு, தசை சார்ந்த கிரகங்களோடு கூடி இருந்தாலோ ராஜயோகம் என்பர் வாழ்கையின் அனைத்து சந்தோசங்களும் இவர்களுக்கு கை கூடும்.
தோஷம்: மேற்கூறியவையில் எதிர்மறை தான் தோஷம் என்பர். கெட்ட இடங்களில் கெட்ட கிரகங்கள் வலுபெறல். உதாரணத்திற்கு உடலை மட்டும் சொல்லகூடிய 8 ம் இடத்தில் செவ்வாய் இருப்பின் இரத்தம் மிகவும் வேகமாக இருக்கும். அளவுக்கு மீறிய செயல்பாடு உடம்பின் வேகமும் அதிகம் இருக்கும் . கோபம்,முரட்டு தனம் முன்பின் யோசியாமை போன்ற குணங்களால் விபத்து இரத்த அழுத்தம்,தசைகளின் மாற்று செயல்பாடு போன்றவை இருக்கும்.இவர்களால் வாழ்க்கையை நிதானித்து பார்கவோ நடக்கவோ முடியாது.பொதுவாக தோஷம் செவ்வாய்,ராகு, கேது போன்றவைக்கு மட்டும் பெருவாரியாக சொல்ல பட்டிருகிறது . இன்னும் விளக்கமாக இந்த செவ்வாய்,ராகு ,கேது பற்றி தனித்தனியே ஏற்கனவே எழுதி உள்ளேன் அவற்றை படித்து பார்த்து அவற்றின் எதிர்மறை (சாதக கட்டத்தில் மறைமுக இடங்கள்) செயல்பாட்டை ஒப்பிட்டு பார்த்தால் தோஷம் என்பது என்னும் தெள்ளதெளிவாக புரியும். இன்னும் வரும் ...... அஸ்ட்ரோ பாபு.

No comments:
Post a Comment