Thursday, 30 January 2014

அய்யா வணக்கம்.நவாம்சத்தில் உச்சம்,நீசம்,ஆட்சி என்பது உண்டா?

பதில்  ::  நவாம்சம் என்பதே கிரகம் நின்ற ராசியை 9 ஆக பிரித்து அந்த கிரகத்தை தொலை நோக்கி கொண்டு

தீர்க்கமாக பார்பது. கிரகம் நின்ற நட்சத்திர பாதத்தை வைத்துதானே அந்த கிரகம் நவாம்சத்தில் எங்கு அமர்கிறது

என்று கூறுகிறோம்.கிரகம் ஒரு நட்சத்திர காலில் நிற்பதால் அந்த நட்சத்திர குணாதிசயம் கிரகம் நின்ற ராசியின்

குணநலன்களை அந்த கிரகம் தான் நின்ற ராசியில் பிரதிபலிக்கும் என்பதுதானே அடிப்படை.அப்படி என்றால் அந்த


நட்சத்திர காலுக்கு தானே முக்கியத்துவம் கிரகத்துக்கு ஏது ஆட்சி,உச்சம் நீசம் எல்லாம்.


 உதாரணம்:  குரு ராசியில் மேஷத்தில் பரணி காலில் 2 பாதத்தில் நின்றால் நவாம்சத்தில் கன்னியில் அமர்வார் 

அப்பொழுது உபய ராசியான கன்னி ராசி குணாதசியம்,பரணி நட்சத்திர குணாதசியம் இரண்டையும கலந்து 

மேஷத்தில் பிரதிபலிப்பார் இதுதான் குருவின் பலம். ஆதிபத்தியம் சுய குணநலன்களோடு மேற்கூறிய நட்சத்திர 

ராசி குணநலன்களோடு மேஷத்தில் இருப்பதுதான் குருவின் பலம். இத்தனண பிரிவாக கிரக நிலையை பிரித்து 

அறியத்தான் நவாம்சம் 

No comments:

Post a Comment