Thursday 24 January 2019

ஸ்ருஷ்டி தத்துவம்       பாகம் - 2

நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை ஸ்ருஷ்டி தத்துவம் என்னும் தொடர் கட்டுரையின் பாகம் - 2 ஆன மனித கட்டமைப்பை பற்றியது. பாகம் 1  இல் பஞ்ச பூத   தத்துவம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டு அது எவ்வாறு மனித வாழ்வாதார விஷயங்களில் பயன்படுத்தி கொள்ளப்பட்டது என்பதனை எழுதி இருந்தேன்.

அவ்வாறு உற்று நோக்குகைகளில் மனித உயிர்களில் இரண்டு வித தன்மைகள் இருப்பதையும் கண்டு உணர்ந்து, அந்த இரண்டு வித தன்மைகளிலும் இந்த பஞ்ச பூத தன்மைகள் எங்கனம் செயல்படுகிறது என்பதனையும் நம் முன்னோர்கள் உணர்ந்து உள்வாங்கி சொல்லி சென்றிருக்கின்றனர்.அந்த இரண்டு தன்மைகள் ஆவன. இருப்பு, இயக்கம் என்பனவாம்.
இருப்பு இல்லையெனில் இயக்கம் இல்லை, அதேபோல் வெறும் இருப்பும் அல்லது வெறும் இயக்கமும் பயன் இல்லை. ஏதோ ஒன்று செயல்பட வேண்டும் எனில் செயல்பட போகும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்தானே அதேபோல் ஏதோ ஒன்று இருப்பதை இயக்கம்தான் செய்லபட வைக்க உதவும் சக்தியும் வேண்டும்தானே இதை அப்படியே மனிதனுள் கண்டு கொண்டால் செயல்பட இருக்கும் இருப்பு,  உடம்பு.
அந்த உடம்பு செயல்பட இயக்கம் என்ற ஒன்று தேவைதானே. இருப்பு என்பது உடல் அந்த உடல் செயல்பட உதவும் உந்துதல் இயக்கம்.
ஆக இந்த மனித  உடலில் பஞ்ச பூத தத்துவங்கள் எங்கனம் செயல்படும், உடலில் இருக்கும் இயக்கத்தில் இந்த பஞ்ச  பூத தத்துவங்கள் எங்ஙனம் செயல்படும் என்பதை அடிப்படையாக கொண்டே அம்மனிதனின் செயல்பாடுகளும்,  அந்த செயல்பாட்டை ஒற்றியே அவனுடைய குணாதிசயங்களும் அந்த குணாதிசியங்களை ஏற்றே அம்மனிதனின் வாழ்வியல் விஷயங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.இந்த விஷயங்கள்தான் ஜோதிடம். இந்த அமைப்புகள் இங்கனம் செயல்படுகையில் அதன் பயனான  வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற பல்வேறு விதமான கணக்குகள் ஜோதிட பலன். இந்த இருப்பையும்,இயக்கத்தையும் கண்டு கொள்ள நம் முன்னோர்கள் பலவிதமான கணக்குகளை தங்கள் புரிந்து கொண்ட விதத்தில் வெளிப்படுத்தியவைதான் பல்வேறு ஜோதிட முறைகள்.
இந்த தத்துவம் தன பிரபஞ்சத்தின் அனைத்து விஷயங்களிலும் பிரதிபலிக்கும்.எது ஒன்று வேண்டுமென்றாலும் அல்லது இருந்தாலும்  அது உருவாக்கவேப்பட வேண்டும் இல்லையா. அந்த உருவாக்களுக்கு இதே இருப்பும்,இயக்கமும் வேண்டும். இவ்வாறே இந்த தொடர்நிலைகளில் தான் இந்த பிரபஞ்ச்ம இயங்கி கொண்டே இருக்கிறது.இந்த உருவாக்கள் தத்துவார்த்தங்கள்  நின்று போனாலோ அல்லது அறுந்தாலோ பிரபஞ்ச்ம நின்று  விடும்.
மேலும் நாம் என்று சிந்திக்கும் நிலையில் மனிதனின் இருப்பாகிய உடல் உருவாக்கப்பட தானே வேண்டும். அவ்வாறு உருவாகிற பொழுது, உருவாக்குகிற இருப்பும் இயக்கமும் தன விஷயங்களை அடிப்படையாக கொண்டேதான் இருப்பு,இயக்கத்தை உருவாக்குகின்றன.
மூலமான ஒன்று இயக்கத்தால் தூண்டி இயங்க  பெற்று ஒன்றை உருவாக்குகிறது.அவ்வாறு உருவாக்கிய ஒன்றில் இருப்பும்,இயக்கமும் தன்னகத்தே பெற்று இன்னொன்றை உருவாக்க.... என்ற தொடர் சங்கிலிதான் இந்த பிரபஞ்ச இயக்க நிலை.

சரி, பஞ்ச பூதங்கள் 5  ம் 2   நிலைகளில் இருப்பு மற்றும் இயக்கத்தன்மையில் இயங்கினாலும் அல்லது உருவாக்கினாலும் அந்த உருவாக்க்களுக்குள்ளும் இரு நிலை இருக்கிறது, ஆம் ஆண மற்றும் பெண் என்ற குண பேதங்களை கொண்ட உருவக மாற்றங்களை கொண்ட இருபடி நிலை இந்த இருபடி நிலைகளான ஆண் மற்றும் பெண்ணினுள்ளும் இருப்பு, இயக்கம் என்ற நிலையே கொண்டே இந்த பிரபஞ்ச சக்தி தன லீலையான உருவாக்கத்தை நகத்தி கொண்டே இருக்கிறது....... இன்னும் வரும். .... ஆஸ்ட்ரோ பாபு.
ஸ்ருஷ்டி தத்துவம்,
பாகம் - 1.

நண்பர்களுக்கு வணக்கம்,
பல மாதங்கள் கழித்து மீண்டும் எழுத துவங்குகிறேன். என்னுள் நெடுநாளாய் ஓடி கொண்டிருந்த இந்த ஸ்ருஷ்டி தத்துவத்தை,அதில் நான் உணர்ந்த விஷயங்களை நண்பர்களாகிய உங்களுடன் இத்தொடரின்  மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.இதில் நான் எழுத போகும் விஷயங்கள் அனைத்தும் என் சொந்த உணர்தல்களே.ஒவ்வொரு விஷயங்களையும் என்னுள் விதைத்து எழுத தூண்டுகிற என் குரு நாகாவே இத்தொடரையும்  எழுத தூண்டுகிறார். அவரை வணங்கி  இத்தொடரை தொடர்கிறேன்.
நான் என் முந்தைய  கட்டுரைகளில் உரைத்துள்ளபடி, இந்த பூமியில் ஜனித்த மனித உயிர்கள் உட்பட அனைத்தின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. உயிர்கள் தன்னை நிலைநிறுத்தி கொள்ள உணவு, இயக்கசுவாசம், இவை இரண்டுமே இனப்பெருக்க என்ற விஷ்யத்திற்குத்தான்.இது,இது மட்டுமே இயற்கை வழங்கிய விஷயம். பரிணாம வளர்சசியில் மனிதன் வளர்ச்சியுற்று ஆறாம் அறிவை பெற்று அதன் மூலம் சிந்தனை என்ற அதிசய  ஆற்றலில் நாகரிக மேம்பாடு அடைந்து. அந்த நாகரிக மேம்பாட்டின் வளர்சசியில் கூட்டம் கூட்டமாக விரிந்து அந்த கூட்டத்தின் நலனுக்கென சில விதிகளை வகுத்து,அவரவர் வாழ்ந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு தத்தம் வாழ்வாதாரங்களை பெருக்கி கொண்டனர்.

அவ்வாறு வாழ்ந்த கூட்டங்களில்  தம் கூட்டத்தின் நலனுக்காக ,தம் வாழ்வாதாரத்திற்காக , தங்கள்  செயல்களை பிரித்து தான் வாழ்ந்து வந்த கூட்டத்தின் உறுப்பினர்களையும்  அந்த செயல்பாட்டிற்காக பிரித்து தங்களை காத்து மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்கி வாழ்ந்து  வந்தனர். அச்செயல்பாடுகளாவன, கற்பித்தல்,காத்தல்,கொணர்தல் ,அல்லது வழங்குதல்,பராமரித்தல் என கூட்ட  உறுப்பினர்கள் பிரிக்கப்ட்டு ஒவ்வொரு கூட்டமும் தத்தம் பணிகளை செவ்வனே செய்து தங்கள் கூட்ட வாழ்வாதாரத்திற்காக வாழ்ந்து வந்தனர்.

ஆதிகால மனிதனின் இந்த வாழ்வியல் முறைகளில் அவன் கண்ட,உணர்ந்த  விஷயங்கள் 5 அவை நீர்,நிலம்,நெருப்பு காற்று ஆகாயம் இவை மட்டுமே.  இவற்றின் ஒவ்வொன்றின் செயல்பாடுகளும் வாழ்வாரத்தின் இன்றியமையா ஒன்றாக இருந்த படியால்  அவற்றை அவன் வணங்கும் பூதங்களாக(உருவம் இல்லா எதையும் செய்யும் வல்லமை படைத்த )மாற்றி, அந்த பூதங்களின் பயன் பாட்டினை புரிந்து கொண்டு அந்த பயன்பாடுகளை தன வாழ்வு மேம்பட எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் விளைவால் பல சூட்சுமங்களை கண்டறிந்து அந்த சூட்சுமங்களை  சொல்லி சென்றதுதான் வேதங்களாய் இன்றும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து நின்று கொண்டிருக்கிறது.
இந்த பஞ்ச பூதங்கள் தான் இந்த பூமியில் இருக்கிற அனைத்து விஷயங்களின் மனிதன் உட்பட ஆதாரமாக இருக்கிறது அல்லது கட்டமைப்பாக இருக்கிறது. அவ்வாறு எடுத்து கொள்கைகளில் மனிதனுக்குள்ளும் இந்த பஞ்ச பூத தன்மைகள் இருப்பதை உணர்ந்து அந்த பஞ்ச பூத தன்மைதான் மனிதனின் உடலமைப்புகளாய் இருக்கின்றன  என்பதை அறிந்து, தன வாழ்வாதார செயல்களுக்கு அந்த பூத அமைப்புகள் உடையவர்களை பயன்படுத்தி கொண்டனர்.உதாரணமாக நெருப்பு(காத்தல்),நிலம்(கொணர்தல் அல்லது வழங்குதல்),காற்று(கற்பித்தல்),நீர்(பராமத்தால்) என்பனவாம்.
இந்த பஞ்ச பூத அடிப்படை கட்டமைப்பை கொண்டவர்களை மேற் சொன்ன செயல்பாடுகளுக்கு பிரித்து பயன்படுத்தி தங்கள் கூட்டத்தினை காத்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் வந்த சிலரின் தனிப்பட்ட குண பேதங்களால் இவைகள் வர்ணங்களாக மாற்றப்பட்டு பல பிரிவுகளாய் பிரிந்து வேறுவிதமாய் போனது இன்று.
இந்த பஞ்ச பூத உடல் கட்டமைப்புக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆராய்ந்து அக்கட்டமைப்புகளுக்கு காரணமாய் இருக்கின்ற பஞ்ச பூத தத்துவங்களை உள்வாங்கி எப்படி எவ்வாறு,என்று தேடி எடுத்த விஷயங்கள் தான் பிரபஞ்சம், கிரகங்கள் சூரியன் சந்திரன்,நட்சத்திரங்கள் கிரகங்கள் போன்றவை.இந்த விஷயங்கள் எப்படி பூமியில் இருக்கும் உயிர்களை உருவாக்குகிறது என்பது தான் ஜோதிடம், அவ்வாறு உருவாக்கப்பட்ட உயிர்கள் எவ்வாறு செயல்படும் என்பதுதான் ஜோதிட பலன்.இந்த பஞ்ச பூத தத்துவங்கள் தான்  சிவா எனும் நமசிவாயமாய் ...    இன்னும் தொடரும் .....அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்  இன்னும் வரும். ஆஸ்ட்ரோ பாபு.

Wednesday 17 May 2017

கடவுளும் காமமும் ஜோதிடமும்
பாகம் 1
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த சில மாதங்களாக அதீத வேலை நிமித்தம் காரணமாக என்னால் தொடர்ந்து எழுதி புதிய பதிவுகள் எதுவும் இட இயலவில்லை.என் எழுத்துக்கள் மூலமாக உங்களை சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக என் மனதில் ஓடி கொண்டிருந்த சில எண்ணங்களை ஒருமைபடுத்தி ஒரு தொடர் கட்டுரையாக கடவுளும் காமும் ஜோதிடமும் என்ற தலைப்பில் எழுத இருக்கிறேன். 
கடவுள் என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களும்,விளக்கங்களும்,புராண இதிகாச வேதங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், கடவுள் தன்மையை நான் உணர்ந்த விதத்தில் என்னால் முடிந்தவரை விவரிக்க முயல்கிறேன்.இந்த தொடர் கட்டுரை மூலமாக. ஞானிகளும் ,யோகிகளும்,சித்தர்களும் பல்வேறு விதமாக கடவுளை விவரித்து இருந்தாலும் கடவுள் என்பது ஒன்று தான் என்பதை அவர்களும் தங்கள் கூற்றினுள் தெளிவுற உணர்த்தி சென்றிருக்கின்றனர். அந்த ஒன்றை,ஒன்றான ஒன்றினுள் ஒன்றாக இருக்கிற தன்மையை நான் உணர்ந்த விதத்தில் தொடர்ந்து எழுதுகிறேன்.
கடவுளை உணர்வதே நிலையான இன்பம் என்ற முன்னோர்களின் கூற்றில் இரண்டுவித தன்மைகளை இந்த இன்பத்தில் எடுத்து கொடுத்து சென்றிருக்கிறார்கள்.கடவுளை உணர்வது பேரின்பம் மற்றதெல்லாம் சிற்றின்பம் எனலாம்.ஆனால் நாளைடைவில் சிற்றின்பம் என்ற வார்த்தையை தாம்பத்திய உறவுக்கு கொடுத்து விட்டனர்.இருந்த போதிலும் கடவுள் தன்மயை இரண்டு இன்பத்திலும் உணரமுடியும்.ஆனால் பேரின்பத்தில் கடவுள் தன்மையில் நிலைத்து தொடர்ந்து இருக்க முடியும்.சிற்றின்பத்தில் கடவுள் தன்மை தொட்டு உணர மட்டுமே முடியும்.இந்த இரண்டு இன்பங்களுக்கும் கால அளவு தான் வேறுபாடு.இறை பற்றிய விவரங்களை தொடர்ந்து விரிவாக அடுத்த பாகத்திலிருந்து எழுதுகிறேன்.
சரி, இந்த கடவுள் தன்மையை உணர்வதற்கு உண்டான ஜோதிட அமைப்புகள் எவ்வாறு இருக்கும். அந்த அமைப்புகள் நம்முள் எவ்வாறு செயல்பட்டு கடவுள் தன்மையில் இருக்க வைக்கும். அது பேரின்பமோ,சிற்றின்பமோ தெய்வ தன்மையை உணர்தல் என்பதே பெரிய பாக்கியம் அல்லவா? அதற்குண்டான ஜோதிட அமைப்புகளை இத்தொடர் கட்டுரையில் விவரித்து எழுதுகிறேன்.
மிக பெரிய கடும் சுமையான விஷயத்தை கையிலெடுத்து சுமக்க இருக்கிறேன் என் குரு நாகாவையும், சத்குரு கசவனம்பட்டி மௌன குருவும்,அப்பன் அம்பலத்தானும் துணை நிற்க கை கூப்பி வணங்கி வேண்டி தொடர்கிறேன் . பாகம் 2 இல்........ இன்னும் வரும்
....அஸ்ட்ரோ பாபு. .
கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 2.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடவுளும் ,காமமும்,ஜோதிடமும் என்ற தொடர் கட்டுரையின் பாகம் 2 இல் தலைப்பில் இருக்கும் மூன்று தன்மைகளுக்கும், நான் உணர்ந்த விதத்தில் ஒரு சிறு விளக்கம் அளித்துவிட்டு இம்முன்றும் ஒருங்கே செயல்படும் விதங்களுக்கு படிப்படியாக வருகிறேன். ஆதலால் என் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் ஒன்று.தொடர்ந்து தொடர் கட்டுரையை படித்து வாருங்கள் அப்பொழுதுதான் இந்த தலைப்பின் முழு தாத்பரியமும் புரியும்.
கடவுள்:- கடவுள் என்ற வார்த்தைக்கு நம் ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும்,ரிஷிகளும் பல்வேறு விதமான தத்துவார்த்தங்க்களை கூறி சென்றிருந்தாலும் நான் கடவுள் என்ற வார்த்தைக்கு இயற்கை என்ற ஒற்றை சொல்லைத்தான் என் அனுபவமாக கொண்டிருக்கிறேன். கடவுள் என்பதை இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி(பிரபஞ்சம் என்பதை அடுத்து வரும் பத்ததிகளில் விவரித்து இருக்கிறேன்) என கொள்ளலாம்..
கடவுள் என்பதற்கு பலவேறு விதமான வடிவங்களை நம் முன்னோர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.அந்த வடிவ சித்திரங்கள் அனைத்தும் பிரபஞ்ச சக்தி செயல்படும் விதமாகத்தான் இருக்கிறது அனுபவத்தில். பொதுவாக கடவுள் என்பது இயற்கை என்றாலும் இந்த இயற்க்கை என்பது இருப்பது, அதை தவிர வேறொரு வார்த்தையும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பை தான் இயற்கை என்று சொல்கிறோம் .அப்படித்தானே.
இயற்கை-இருப்பு இவற்றிற்கு எதுவும் விளக்கங்களோ வியாக்கியானங்களோ இல்லாத ஒன்றுதானே? "எதுவும் அற்ற" என்று கூட கொள்ளலாம் அல்லவா.இயற்கை-இருப்பு என்றால் இருப்பது அவ்வளவுதான் அதற்கு மேல் விளக்கங்கள் இல்லை.அந்த எதுவும் அற்ற இருப்பாகிய இயற்கையே கடவுள்.இந்த இருப்பு இயற்க்கை தான் பிரபஞ்சம்.
அப்படியெனில் இந்த பிரபஞ்சம் எங்கே இருக்கிறது.மனிதனாகிய நமக்கு எதிரே இருக்கும் அனைத்துமே பிரபஞ்சம்.தான்.
அறிவியல் ரீதியாக விடை காண முயன்றால் .. அதற்கு நாம், நாம் இருக்கும் இடம், நாம் இருக்கும் இடம் இருக்கும் இடம்,அதன் சூழ்நிலை,அந்த சூழ்நிலை இயங்கும் விதம் அந்த இயக்கம் வெளிபடுத்துகிற தன்மை அந்த தன்மையின் விளைவுகள் என தொடர்ந்து கொண்டே போகலாம் இருந்த போதும் அப்படியும் சென்று தேடிய விளைவு...
நாம் இருக்கும் இடமாகிய பூமி,பூமி இருக்கின்ற சூரிய குடும்பம் அந்த குடும்பத்தில் இருக்கின்ற 9 கிரகம்,2 நிழல் தன்மைகள் இத்தனை விஷயங்களும் ஒரு குறிப்பிட்ட சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஒரு சீரான பாதையில் சீரான இடைவெளியில் தானும் இயங்கி கொண்டே சூரியனையும் சுற்றி வருகின்றன என்று நாம் அறிந்ததே
இந்த இயக்க குடும்பத்தில் ஈர்ப்பு விசை,விலக்கு விசை, இவை இரண்டும் உற்பத்தி செய்யும் காந்த சக்தி,அதன் பிறப்பான மின் சக்தி, மின் சக்தியின் உற்பத்தி என ஒரு கலவை சூரிய குடும்ப இருப்பிடத்தில் செயல்பட்டு கொண்டே இருக்கின்றன.இத்தனை செய்லகளும் நடைபெறும் இடம் அந்தரம் எனும் வெற்று வெளி, இவை மட்டுமில்லாமல் இந்த நாம் சூரிய குடும்பம் போல பல நூறு சூரிய குடும்பங்களும், பால் வெளி மண்டலங்களும்,நட்சத்திர கூட்டங்களும் வெட்ட வெளியில் தான் சீரான இயக்கத்தில் இருக்கின்றன.இத்தனை விஷயங்களும் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆதாரமான இருப்பு என்கின்ற இடம்தான் கடவுள் என நான் உணர்ந்தேன்.உணர,உணர,தெளிய,தெளிய பிரமாண்டம் விரிய விரிய யோசிக்கின்ற,ஆராய்கின்ற நான் இல்லாமலே இருப்புக்குள் அடங்கினேன் என்பதே உண்மை. விரிந்த வெளியில் இயங்குகின்ற கடவுள் தன்மைகளை அடுத்த பாகம் 3 இல் தொடர்கிறேன் இன்னும் வரும்..... அஸ்ட்ரோ பாபு.
கடவுளும்,காமமும்,ஜோதிடமும்.
பாகம் - 3.
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை கடவுளும் காமமும் ஜோதிடமும் என்ற தொடர் கட்டுரையின் பாகம் 3, சென்ற பாகத்தில் கடவுள் என்ற தன்மையின் ஒரு பகுதியை பார்த்தோம் , அதை தொடர்ந்து கடவுள் என்ற தன்மையின் இன்னொரு தன்மையை பற்றி இந்த பாகத்தில் பார்ப்போம்.
2ம் பாகத்தில் உரைத்த இயற்கை,இருப்பு போன்றவற்றின் வெவ்வேறான உணர்த்தல்கள் உரைப்பட காரணமாய் இருந்த இருப்பு உண்மை என்கின்ற போது உரைக்கப்பட்ட விஷயங்களும் உண்மையாகத்தானே இருக்க முடியும். அந்த வெவ்வேறான உணர்தலுக்கு வடிவம் கொடுத்து தான் இத்தனை கடவுள்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன இங்கே இப்பொழுது.
இந்த இயற்கை இருப்பு இருப்பாகவே இருந்திருந்தால் எவ்வித பலனும் இல்லை. இந்த இருப்பு செயல்பட துவங்க இயக்கம் என்ற தன்மையும் உருவாயிற்று இதைத்தான் சலனத்தில் இருந்து பிறந்தது வானமண்டலத்தில் அல்லது பிரபஞ்சத்தில் சூரியனும்,மற்ற கோள்களும் என்பார் நம் முன்னோர்.
ஒரு விளைவு ஏற்படின் அல்லது தேவைப்படின் இரண்டு உண்மைகள் தேவைதானே விளைவுக்கு மூலமாகிய பொருளும் அந்த பொருள் இயக்கம் பெற்று இயங்கினால்தானே உற்பத்தி,அப்படியாயின் பொருள் என்பதை இருப்பும் செயல் செய்ய தூண்டுவதை இயக்கம் என கொள்ளலாம் தானே. இருப்பை போலவே இயக்கமும் இயற்கையே.பிரபஞ்சம் இருப்பு எனில் அதன் சலனம்
இயக்கம்
.பிரபஞ்சம் வெறும் இருப்பாக இருப்பின் பலன்களான படைத்தல் எங்ஙனம் நிகழும்? படைத்தல் என்பவை இருப்பு,இயக்கம் இரண்டும் இணைதளால் உண்டாகும் விளைவே.மேலே குறிப்பிட்டுள்ள ஒரு சட்ட திட்ட விதிகளுக்குள் சுழற்சியும் ,சுழற்சியின் விளைவும்,விசை சக்திகளும் நடைபெறுகின்றன.ஆதலால் இருப்பும் இயற்கை,இயக்கமும் இயற்கை
நாம் இருக்கும் இடம் இருக்கும் இடத்தின்இருப்பையும்,இயக்கத்தையும்
நாம் எவ்வாறு உணர்வது அதற்கு நாம் இருக்கும் இடமான பூமி என்ற இருப்பில் இருந்தால்தானே உணர முடியும். பிரபஞ்ச இருப்பும் இயக்கமும் உண்டாக்கிய ஒரு கோளான பூமியிலும் அந்த இருப்பும் இயக்க்மும் இருக்கத்தானே செய்யும்.இந்த இருப்பு இயக்கம் இணைந்து செயல்படும் போது உருவாகும் விளைவு அல்லது பலன்தான் படைப்பு.
நாம் வாழும் பூமியில் இருப்பும் இயக்கமும் மூன்று வித கட்டமைப்பில் தன விளைவை உண்டு பண்ணி கொண்டிருக்கின்றன. அவை, படைத்தல்,படைத்ததை காத்தல், பின் அவற்றை அழித்தல் மீண்டும் படைப்பு என ஒரு சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படியெனில் இருப்பு இயக்கம் அதன் விளைவான படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற பலனை தருகிற பொழுது இருப்பும்,இயக்கமும் இந்த மூன்று விளைவுகளை தருவதற்கு ஒரு பாதையின் மூலமாக பயணிக்கின்றன.அந்த பாதை இம்முன்று விளைவுகளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்தானே
அந்த அடிப்படைதான் இருப்பாகிய பூமி இயக்கத்துடன் இணைந்து படைத்தலில் ஈடுபட நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்ற 5 விதமான படிகளில் தன இயக்கத்தை இயக்கி இந்த மூன்று விஷயங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. அதாவது,இருப்பாகிய பூமி,இயக்கத்துடன் சேர்ந்து நிலம்,நீர்,நெருப்பு காற்று ஆகாயம் என்ற விதிகளின் வழியே படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற வினையை தொடர்ந்து இந்த பூமியில் நடத்தி கொண்டிருக்கிறது எனலாம்.இந்த மூன்று நிலைகளிலும் ஆதாரமான இருப்பும்,இயக்கமும் தன்னை நிலை நிறுத்தியே செயல்படுகிறது என்பதே முக்கியம்.
இருப்பு இயக்கம் இவ்விரண்டும் படைத்தலில் ஆண் மற்றும் பெண் தன்மையாக, காத்தலில் உருவம் மற்றும் வளர்ச்சியாக,அழித்தலில் முடிவு மற்றும் துவக்கமாக தன இருபடி தன்மைகளை கொண்டே தான் இந்த சுழற்சியை நடத்தி கொண்டிருக்கிறது. மேற் கூறிய விஷயங்கள் அனைத்தும் அடிப்படை சூத்திரங்கலான 5 தன்மைகளும் இணைந்தே தான் சுழற்சியை சுழட்டி கொண்டிருக்கிறது.
ஆதியில் இந்த 5 தன்மைகளைதான் மனிதன் கடவுள்களாகவே வழிபட்டு வந்திருக்கிறான்.பின்னர் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் அவை மாறுபட்டு இந்த 5 தன்மைகளின் செயல்பாடுகளும் தன்மைகளும் வடிவங்களாக வடிவமைக்கப்பட்டன
.இவ்வாறு இயற்கை,இயக்கம் என்ற தன்மை படைத்தல்,காத்தல், அழித்தல் என்ற இயக்க விளைவை 5 விதமான தன்மையின் அடிப்படையில் நிகழ்த்தி கொண்டே இருந்த பொழுது இவற்றினுள் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருந்தன அந்த மாற்றங்கள் தான் பரிணாம வளர்ச்சியாக வெளிப்பட்டது. அந்த பரிணாம வளர்ச்சியில் தான் தேடுதல் என்ற புதிய விஷயம் வெளிப்பட்டு அதை அறிவாக உணரப்பட்டு தேடுதல் தன பயணத்தை தொடங்கியது,அந்த பயணம் தான் என்னை இதை எழுதவும் செய்கிறது. இந்த தேடுதலின் அறிவை அடுத்த பாகம் 4 இல் தொடர்கிறேன். இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.
கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 4.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த 3 பாகத்தில் கடவுள் தன்மைகள்,அதன் தொழில்,அந்த தொழிலின் அடிப்படை விதிகள்,அதன் மாற்றங்கள்,பரிணாம வளர்ச்சி பற்றி பார்த்தோம். இந்த பாகம் 4 இல் இன்னும் அதை சற்று விரிவாக பார்ப்போம்.
கடவுளின் மூன்று செயல்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,இந்த செயல்களின் அடிப்படைகளான நிலம்,நீர்,நெருப்பு,காற்று ஆகாயம் என்ற5 தத்துவங்களின் தொடர் மாற்றங்களும் அதன் மூலமாக நடக்கும் 3 தொழில்களின் தொடர் மாற்றங்களும் பரிணாம் என்ற வளர்ச்சியை வழங்கி கொண்டே இருக்கின்றன
அந்த பரிணாம் வளர்ச்சியில் அறிவு என்ற தன்மை வளர்ச்சி யுற்று தேடுதல் பிறந்து மூலத்தை தேட துவங்கியது. அந்த தேடுதல் பயணம் படைத்தலில், உயிர் ஆன்மா என்ற இருபடி தன்மையையும்,காத்தலில் வேதம் உபநிஷம்,என்ற இருபடி தன்மையையும்,அழித்தலில் முக்தி என்ற தன்மையையும் உணரத்துவங்கியதின் விளைவும், இந்த உணர்தலின் விரிவாக்கமும் தான் ஆன்மீகம் என்ற அடை மொழிக்குள் வந்து விழுந்தது.
இந்த பூமியில் நடைபெற்று கொண்டிருந்த 3 வினைகளில்,இவற்றிற்கு மூலமாக இருந்த இருப்பு இயக்கம் அவற்றின் செயல்பாடு தன்மைகளான 5 யும் கண்டு பயந்து வழிபட துவங்கி,அவைகளை நட்பாக்கி,அவைகள் என்ன? அவற்றின் தன்மை என் ஆராய முற்பட்டு அவைகளுடன் எவ்வாறு கலக்க அல்லது ஒன்றிணைய வேண்டும் என்று அனுபவம் மூலமாக கற்றறிந்து அதன் வழிமுறைகளை பின்பற்றி கடந்து பொய் இயற்கை கடவுள் தன்மைகளான இருப்பையும் இயக்கத்தையும் அடைந்த மனிதன் அதை அடுத்த சந்ததினருக்கு தெரியப்படுத்தி கொண்டே இருந்ததுதான் வேதம்,உபநிஷ தத்துவங்கள்,மேற்குறிய விஷயங்கள் அனைத்தும் அடங்கிய விஷயம் ஒரு நான்வித முறைகளில் இன்னும் உணரப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
1.பக்தி,2,கர்ம,3,யோகம்,இராஜ என்ற 4 பாதைகளில் இந்த ஆன்மீக உணரல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
பக்தி:- பக்தி என்பது முன்னர் உரைத்தபடி ஆதி மனிதன் இயற்கையை கண்டு பய ந்து அடிபணிந்து தன்னை இயற்கையுடம் ஒப்படைத்து இயற்கையை போற்றி வேண்டி கொள்வது இதுதான் ஒப்படைத்தல் அல்லது சரணடைதல் என்ற தன்மையின் விளைவால் ஏற்பட்ட அதீத கற்பனையில் பல உருவங்களை படைத்து தன்னை அந்த உருவங்களிடம் ஒப்படைத்தது.
கர்ம:-இயற்கைக்கு மாறான விஷயங்களில் ஈடுபடாமல் தன் செயல்களை இயற்கையை ஒட்டியே செய்து வந்து, இயற்கைக்கு ஒத்திசையானவை புண்ணியம். மாறானவை பாவம் எனக்கொண்டு நாம் வாழ்கின்ற இடத்தின் தன்மைக்கு இணைந்து கூட்டத்தோடு வாழ்ந்து சென்றது.
யோகம்:- இயற்கையுடன் நட்பு பாராட்டி அவற்றுடன் கலக்க எந்த விதத்தில் 5 வித தன்மைகளை பயன்படுத்தி இருப்பு இயக்கத்தை உணர்ந்து அதன் பால் இணைந்து அல்லது கலக்க, நமக்கும் இயற்கையான பிரபஞ்சத்திற்கும் உண்டான நேரடி தொடர்பான சுவாசம்,அது செயல்படும் முறை இவற்றை கொண்டு தான் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் என்ற சூட்சுமத்தை கண்டுபிடித்து அனுபவம் பெற்று மூல்த்துடன் கலந்தது.
இராஜ:- இந்த இருப்பு இயக்கத்தை உணர்ந்ததோடு மட்டுமிலாமல் 5 வித தன்மைகளை ஒரு சக்திகளாக்கி பூதங்கள் என்ற தன்னிலை மிஞ்சிய சக்தியாக் கொண்டு அவற்றின் மூலம் இருப்பு இயக்கத்தை அடைந்து அத்துடன் நிலைத்தல் என்பனவாம்.
மூன்று நிலைகளான படைத்தல்,காத்தல்,அழித்தல் 5 வித தன்மைகளில் செயல் பட்ட விதம் உணரப்பட்டு,உரைக்கப்பட்ட விஷயத்தை வெளிபடுத்துவதுதான் வேதங்கள்.வேதங்களும் கால மாற்றங்களில் உணர்தல் மாறுபட மீண்டும் புணரமைக்கபட்டு இறுதியாக 4 வேதங்களாக இன்று வரை தொடர்கிறது
எனது உணர்தலில் நான் கூறிய ஒவ்வொன்றும் ஒரு கோடிட்ட விஷயங்களே மாபெரும் ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கும் விஷயத்தை சுருங்க விவரிக்க முயன்று இருக்கிறேன்.
சரி, இருப்பு,இயக்கம் இரண்டுமே இயற்கையை கடவுள் என்று வணங்கியவுடன் இருப்பை சிவமாகவும்,இயக்கத்தை சக்தியாகவும் கொண்டு இரண்டு வித தன்மைகளை ஆண்,பெண் என்ற நிலையில் கொண்டு மூன்று தன்மைகளை கடந்து கொண்டே இருக்கிறோம். பாகம் 5 இல் தொடர்கிறேன். இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு.
கடவுளும்,காமமும்,ஜோதிடமும்
பாகம் - 5
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த 4 பாகங்களாக கடவுள் தன்மைகள்,செயல்பாடுகள்,அவற்றின் தன்மைகளை விளக்கி இருந்தேன், அது என்னவோ தெரியவில்லை,கடந்த 3 ஆண்டுகளாக முகனூலிலே பலவேறான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.அவற்றிற்கெல்லாம் கிடைத்த விருப்பங்களும் ,பகிரதல்களும் , கருத்தூட்டங்களும்
இந்த கடவுள் கட்டுரைக்கு கிடைக்கவில்லை காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை.நான் எழுதிய விஷயங்களில் புரிதல் இல்லையா, அல்லது எழுதிய விஷயங்கள் தவறா என்று எனக்கு தெரியவில்லை,சரி மற்றோருவர்களின் விருப்பங்களுக்கும்,பகிர்தலுக்கும் உண்டான விஷயம் இல்லை இது. .என்னை ஒரு கருவியாக்கி என் குருமார்கள் சில விஷயங்களை பகிர்கிறார்கள் என்ற கோணத்திலே நான் எடுத்து கொள்கிறேன்.அதனால் அது அவர்கள் (குரு) பிரச்சனை. ஒன்று மட்டும் நிச்சயம் ,அவர்கள்தான் என்னை வழி நடத்துகிறார்கள் என்ற ஒரு நிதர்சனமான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.அதனால் தொடர்ந்து இந்த கட்டுரையை தொடர்கிறேன்
.
பாகம் 4 இல், கடவுள் என்பது இயற்கை,அந்த இயற்கை இரண்டு விதமான சக்தி ஓட்டங்களை கொண் டிருக்கிறது ஒன்று இருப்பு இன்னொன்று இயக்கம்,இந்த இருப்பும் இயக்கமும் சேர்ந்து மூன்று விதமான வினைகளை இந்த பிரபஞ்சத்தில் நடத்தி கொண்டிருக்கின்றன,படைத்தல்,காத்தல்,அழித்தல்,என்பன.இந்த மூன்று வினைகளும் 5 விதமான வழி முறைகளின்படி தொடர்ந்து இந்த பூமியிலே நடந்து கொண்டிருக்கின்றன. இது பற்றிய அனைத்து விஷயங்களையும் கடந்த 4 பாகங்களில் விவரித்து இருக்கிறேன்.இருப்பு இயக்கம் அது நடத்தும் தொழில்கள்,அது எதன் மூலமாக தன் தொழில்களை நடத்தி கொண்டிருக்கிறது.போன்ற விவரங்களை என்னால் இயன்ற அளவுக்கு சுருக்கி கொடுத்து இருக்கிறேன்.கடவுளை பற்றி நான் உணர்ந்த விஷயங்களை இதற்கு மேல் என்னால் சுருக்கி கொடுக்க இயலவில்லை ..
கடந்த பாகங்களில் இறுதியாக நான் முடித்த இடம் இந்த இருப்பு,இயக்கம் இரண்டு விதமாக தன்னுடைய வடிவங்களை இந்த பூமியில் பதித்திருக்கிறது ஒன்று ஆண் இருப்பு ,இன்னொன்று பெண். இயக்கம்.
இந்த பூமியிலே இருக்கிற அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் இந்த இரண்டு விஷயங்கள் இருப்பதை நாம் அறிவோம்.
இந்த கடவுளை நிறுத்தி இந்த பேருந்திலே இருந்து இறங்கி அடுத்த பேருந்தான காமம் என்ற பேருந்திலே பயணிப்போம்.
காமம் என்பது என்ன? காமம் என்றவுடன் எல்லோருடைய முகத்திலும் அல்லது சிந்தனையிலும் ஒரு சுருக்கம் நிகழ்கிறது ஏனென்றால் இந்த காமம் என்றவுடன் ஆணும் பெண்ணும் இணைகிற உடலுறவு என்கின்ற ஒரு தன்மைக்கு நம்மை தள்ளி இருக்கிறார்கள். அதனால் இந்த காமம் என்கின்ற விஷயம் ஆன்மிகத்திற்கு எதிரான ஒருதன்மை என்ற ஒரு எதிர் மறையான ஒரு சிந்தனையை நம்முள் விதைத்திருக்கிறார்கள் .உண்மையை நோக்கின் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. காமம் என்ற விஷயம் சலனம்,இருப்பு இயக்கத்தை நோக்கிய சலனம்,இயக்கம் இருப்பை நோக்கிய சலனம் . இந்த இரண்டு சலனங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் பொழுது படைத்தல் சாத்தியமாகிறது.
எப்பொழுதெல்லாம் சலனம் நம்முள் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் காமம் தன வேலையை செய்கிறது என்ற அர்த்தம்,காமம் என்பது சலனம் மட்டுமே வெற்றோன்றும் இல்லை. இந்த காமம் என்ற சலனநிலையை i நிறுத்துகிற பொழுது இருப்பு அல்லது இயக்கத்துடன் இருக்க முடியும் என்பதால்தான் காமம் ஆன்மீகத்திர்கு ஆகாது என்றார்கள் ,சலனம் நிகழ்கிறபொழுது சற்று விழிப்புணர்வுடன் இருந்தால் சலனம் நிகழும் இடமான மூலமான இருப்பையும் இயக்கத்தையும் நம்மால உணர முடியும். இந்த சலனம் இயற்கையில் இருக்கிற அனைத்து விஷயங்களிலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இருப்பின் ,இயக்கத்தை நோக்கிய சலனம் காமம் ,இயக்கத்தின் இருப்பை நோக்கிய சலனம் காமம். இந்த இரண்டு சலனங்களும் ஈர்ப்பு என்ற புள்ளியில் நிச்சயமாக சந்திக்கும் அந்த புள்ளியின் உடைய வினை படைத்தல்.இந்த காமத்தை பலவேறு விதமாக பல்வேறு ஞானிகளும் யோகிகளும் சித்தர்களும் தன்னுடைய புரிதல்களை இந்த உலகுக்கு உரைத்து சென்றிருந்தாலும் கூட இன்னும் காமம் சரியான புரிதல் இல்லாமல் தவித்து கொண்டுதான் இருக்கிறது. இந்த காமம் எங்கு நிகழ்கிறது இருப்பு,இயக்கம் இரண்டினுல்தானே.
காமம் என்பதை சலனப்படுதல் என்கின்ற ஒரே நிலையிலிருந்து உணர முற்படுவோம்.நீங்கள் எதை ஒன்றை நோக்கி பயண்ப்படுகிறீர்களோ அது அனைத்தும் காமம்.ஒரு சாதாரண மனிதன் பொருளீட்டுகிற தன்மையாகிய பணம் என்ற ஒன்றை நோக்கிய பயணம் காமம். ,புகழ் என்ற ஒரு தன்மையை பயணப்படுகிறது காமம். இருப்பாகிய ஆண் இயக்கமாகிய பெண்ணை நோக்கி பயணப்படுவது காமம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உணர்வுகளுக்குள் மட்டுமே காமம் தன்னுடைய வேலையை செய்கிறது.சலனம் என்பதே உணர்வுகளுக்குள் இருப்பும் இயக்கமும் வரும் பொழுதுதான் நிகழத்துவங்கும் எப்பொழுதெல்லாம் நீங்கள் உணர்வுகளை கடந்து போகிறிர்களோ அப்பொழுது காமம் உங்களை விட்டு விலகி நிற்கும்.அதனால்தான் முன்னோர்கள் இந்த காமத்தை விலக்க சொன்னார்கள்.சலனம் இல்லாதபொழுது இருப்பும் இயக்கமும் தன தன்மைக்ளில்தானே இருக்கும் இந்த ,உணர்வுகள் பற்றிய உணர்த்தல்கள் .எப்பொழுது புரிய ஆரம்பிக்கிறதோ.அப்பொழுது நாம் இருப்பை நோக்கி திரும்புகிறோம் என்று அர்த்தம். அடுத்த பாகம் 6 இல் தொடர்கிறேன்.இன்னும் வரும்.அஸ்ட்ரோ பாபு