Monday, 16 March 2015

பெண்களுக்கு மாதவிடாய் வரமா? சாபமா?
நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை ஒரு சர்ச்சை யான விஷயத்தை கையிலெடுத்து சுறுக்கி கொடுத்திருக்கிறேன்.சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்தே எழுதியிருக்கிறேன்.குறிப்பாக பெண்களின் விழிப்புணர்வுக்காக
பிரபஞ்சத்தின் தன்மை இரண்டு சக்திகளை அடிப்படையாக கொண்டதே.1).சிவம்,2)சக்தி. சிவம்- ஆண், சக்தி- பெண், இத்தன்மைகளை பூமியில் இருக்கிற தன்மைகளோடு ஒப்பிடின்,எதற்கு என்று நோக்கின்,இனபெருக்கமே அன்றி வேறொன்றும்மில்லை.ஆண்,பெண் என்ற பிரிவு தன்மை உயிரினங்களில் ஏன்? ஒன்றாக ஒரே தன்மையில் இருந்திருக்கலாமே. இயற்க்கை கொடுத்த தன்மை,விதி,கட்டளை தானே,அவ்வாறாயின்,அந்தந்த தன்மைக்கு உரிய தகுதியை அத்தன்மைகள் அடைந்திருப்பதுதானே சிறப்பு,விதைக்க முடியாத ஆணும்,விளைவிக்க முடியாத பெண்ணும்,எதற்கு? இவ்வாறு இல்லையெனில் படைத்தலின் அடிப்படை ,இயற்கையின் விதி தோற்றுவிடும்தானே? சரி நாம் வாழும் இந்திய நாட்டில் பெண் என்பவள் போற்றபடுபவாளாய்,வணங்குதலுக்கு உரியவளாய் அனைத்து உருவாக்கத்திற்கும்,மேற்கோளாய் தானே கொண்டிருக்கிறோம்.அனைத்து கடவுள்களின் ஆதி சக்தியாக கூட பராசக்தி வடிவம் கொடுத்து நம் இந்து சமயம் வைத்திருக்கிறதா இல்லையா? ஏன் அப்படி?
பெண் என்பது இயக்கம் ஒரு உருவாக்கம் தேவை எனில் இருப்பை விட இயக்கத்திற்கே முக்கியத்துவம்,இயற்க்கை பெண்ணிற்கு வழங்கிய பெரிய வரமே உருவாக்கம் தானே, எங்கெல்லாம் உருவாக்கம் இருக்கிறதோ அங்கு பெண் தன்மை இருக்கும். இது இயற்கையின் ஆணை,வடிவமைப்பு இதுதான். இன்றிலிருந்து உருவாக்க தன்மையை பெண்ணிற்கு இயற்க்கை தடை செய்கிறது என்று வைத்து கொள்வோம். மனித இயக்கம் இருக்குமா?இருக்கவே முடியாது என அறுதியிட்டு கூறலாம். ஆனால் உருவாக்கத்திற்கான ஒரு செயல்தான் கலவி,உடலுறவு இந்த செயலை மனிதன் தன பகுத்தறிவு தன்மையால் பகுத்தறிவின் மையமான உணர்தலில் சுகம் கண்டு பெண் என்பவள் சுகத்திற்க்குத்தான் என்ற சுகம் காணுகிற ஆசையின் விளைவாய் பெண்மை மாறுபட்ட தன்மையால் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. வாழுகின்ற நிலைகளை,சமயத்தை வடிவமைத்த நம் முன்னோர் இந்த ஆசையை மனித குல வளர்ச்சிக்கு பயன்படுத்தி, ஆண் என்ற வலிமையை பெண் என்பவள் தான் வெளிபடுத்த வேண்டும் என்ற சூத்திரத்துக்குள் வைத்ததுதான் இன்றைய சூழ்நிலையில் புரிதல் மாறிப்போனது.ஆண் தன்னை முன்னிறுத்துகிற நான் என்ற இயற்கையான அகங்காரம் நாளைடைவில் ஆதிக்கமாய் மாறி,தன்னை நிலை நிறுத்த பெண் தன்மையை மறைவுகளுக்குள்ளே கொண்டு சென்று விட்டது.
சரி இவ்வாறு போற்றுதலுக்குரிய பெண்ணின் உருவாக்க தன்மைக்கு காரணம்,உருவாக்கம் நிகழ்கிற கர்ப்ப கிரகமான கர்ப்பப்பை. இந்த கர்ப்பப்பை எனும் விசயம் இல்லையெனில் பெண் என்கின்ற தன்மை எங்கே? இயற்க்கை ஆண்,பெண், என்ற தன்மையின் ஆதாரமான வித்தியாசமே இதுதானே இந்த கர்ப்பப்பையில் அதியதக்க விசயங்களை இயற்க்கை வழங்கி இருக்கிறது.
பெண் மனம்,உடல் வலிமையை செயல்படுத்த கூடிய ப்ரோட்டின் உற்பத்தி ,உடல் கட்டமைப்பின் ஆதாரமான எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு காரணமான கால்சியம் உற்பத்தி,இரத்த சுத்திகரிப்பின் ஒரு பங்கு, இரத்தத்தை கட்ட விடாமல் இருக்க செய்யும் ஒரு திராவக சுரப்பு,வேல் என்ற அமைப்பான முதுகு தண்டின் இருப்பை நிர்மாணிக்கிற தசை நார் வலிமை, போன்ற முக்கிய விசயங்களை இந்த கர்ப்பப்பைக்குள் இயற்க்கை வடிவமைத்து இருக்கிறது. அதே போல் விந்துவும்,கருமுட்டையும் இணைந்து உருவாகிற ஒரு விசயத்தை தன்னுள் கொண்டு, அதை அடுத்த பரிணாமத்திற்கு,கொண்டு சென்று உடலாக,உயிராக,ஆன்மாவின் உறையிடமாக மாற்றுகிற அற்புதமான வரம் தானே இக் கர்ப்பப்பை.
கர்ப்பபையை எத்தனை பாதுகாப்போடு இயற்க்கை வழங்கி இருக்கிறது. உடலில்உள்ள அனைத்து உறுப்புகளின் இயக்கத்தில், இயற்க்கை சயமாக சுத்த படுத்தி தூய்மையாக வைத்து கொள்ளும் ஒரே இடம் கர்ப்பப்பை தானே அவ்வாறு சுத்த படுத்துகிற ஒரு விசயம் தானே இந்த மாத விடாய்.ஒவ்வொரு மாதமும் மாத விடாய் விடாமல் நடை பெற வேண்டும்.அப்பொழுதுதான் பெண் என்கின்ற இயக்கம் தடையில்லாமல் நடை பெறும்.(கருத்தரித்திருக்கிற காலத்தை தவிர ) அப்படி இல்லையெனில் என்னென்ன சிரமம் என்பதை பெண்கள் உணரத்தானே செய்கிறார்கள்.
சரி இந்த இயற்க்கை சூத்திரம் தான் என்ன? நம் மஜ்ஜையிலிருந்து உருவாகிற இரத்தம் (செவ்வாய்), அதன் இயக்கமான இரத்த ஓட்டம் (சந்திரன்) இதன் அடிப்படையில்தானே இச் சுத்திகரிப்பு நடைபெறுகிறது.இக் கர்ப்பப்பையின் திறப்பான பூப்படைதல், சுக்கிரனனின் pinal klant இன் செயல்பாடும் ஒரு காரணம். கர்ப்பப்பை வளர்ச்சியுற்றதும் அதை ரிப்பன் வெட்டி திறப்பவர் சுக்கிரன்.ஜனன கால பிறப்பு சூத்திரமான ஜாதக அமைப்பில் செவ்வாய், சந்திரன்,சுக்கிரன் எப்பொழுது சம்மந்தம் பெறுகிறதோ அதுதானே பெண் தன்னை பெண் என்று அறிவிக்கிற பூப்படைதல்.அதே போல் ஜனனத்தில் செவ்வாய் இருக்கின்ற , அக்கிரகத்தை இயக்குகிற தன்மையான நட்சத்திர பாதத்தை கோட்சார சந்திரன் கடக்கிற நாளில் தான் மாத சுத்திகரிப்பான மாத விடாய் , இன்னும் சூட்சுமங்கள் ...... பாகம் 2 ......இல் ,

No comments:

Post a Comment