Monday, 16 March 2015

கோவிலும் ஸ்தல விருட்ஷ்மும் பாகம் 1 

நண்பர்களுக்கு வணக்கம்,
ஸ்தல விருட்ஷம் பற்றிய என் வினாவிற்கு நண்பர்கள் பலரும் பதிலளித்திருந்தார்கள். இதில் நான் உணர்ந்த விஷயங்களை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.
கோவில் என்பது பிரபஞ்ச சக்திகளான சூரிய வட்ட பாதையில் இருக்கிற கிரகங்களின் சக்திகள், அச்சக்திகள் சூரிய வட்ட பாதையில் சுற்றி வருகிற தன்மை,அச்சுற்றில் அக்கிரகங்களின் தன்மைகள் செயல்படும் விதம் அச்செயல்கள் பூமியில் ஏற்படுத்தும் சக்தியின் தாக்கம் அறிந்து நம் முன்னோர்கள் அச்சக்தியின் தன்மையை,அவ்விடத்தில் வாழும் மக்களுக்கு பயன் தருமாறு ஏற்படுத்தி வைத்த மிக பெரிய அமிர்தமான விஷயம்.
கிரக சக்திகள் பூமியில் ஏற்படுத்துகிற மாற்றத்தை மக்கள் வாழும் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு அமைத்து அதன் பயனை மக்களுக்கு கோவில் என்ற பொது இடத்தில் மக்களை வரவழைத்து வழங்கினார்கள்.
இதிலும் இரண்டு விதமான தன்மைகள் இருக்கின்றன. 1). கிரக சக்திகள் இயற்கையாகவே பூமியில் கிடைப்பது (சுயம்பு ) 2). தேவைபடுகிற சக்திகளை பிரபஞ்சத்திலிருந்து கிரகித்து அச்சக்தியை தீர்மானித்து அப்பயனை வழங்கியது.
இச்சக்திகள் இவ்விடத்தில் கிடைக்கிற அல்லது தீர்மானிக்கிற இடங்களை சில சூத்திரங்கலின் படியே (ஆகம விதிகள்) அமைத்தனர். அச் சூத்திரங்கலில்,திசை, திக்கு, மேலும் நம் பூமியை ஆளுகிற இரண்டு பெரிய சக்திகளான சூரியன் சந்திரன் செயல்படும் விதம் (திதி,நட்சத்திரம்) ,மேற்கூறிய விஷயங்கள் பூகோள ரீதியாக அவ்விடங்களில் எவ்வாறு சிறப்பாக செயல்படும் என்பதையும் தீர்மானித்தே கோவில்கள் என்ற அமைப்பை தீர்மானித்தார்கள்.
அவ்வாறு கோவில்கள் தீர்மானித்தலில் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்ற பஞ்ச பூத சக்திகளின் அமைப்பு மிக முக்கியமாக கொள்ளப்பட்டது. சுயம்பு கோவில்களுக்கு, நிலத்தை இயற்கையே தீர்மானித்து விடும். மற்ற கோவில்களுக்கு, நிலத்தை தேர்ந்தெடுத்தல், நீர் பூத அமைப்பை குளங்கள் மூலமாக ஏற்படுத்துதல், நெருப்பு பூதத்தை விளக்குகள் மூலமாகவோ அல்லது பந்தங்களின் மூலமாகவோ கொண்டு வருதல்,காற்று தத்துவத்தை அக்கோவில் தீர்மானிக்கிற இடத்தில் காற்று வீசுகிற தன்மைக்கு அமைத்து உள் கொணர்தல், ஆகாயத்தத்துவத்தை மரங்கள் மூலமாக கொண்டு வந்து இந்த பஞ்ச பூத அடிப்படையிலும் கிரக சக்திகளை தீர்மானித்து,ஆகர்

ஷன படுத்தி, மக்களின் நலனுக்காக கோவில் அமைத்தனர். அங்கு தீர்மானித்த பஞ்ச பூத தத்துவங்களோடு, கிரக தன்மைகள்,நட்சத்திர தன்மைகள்,பூகோள அமைப்பு போன்றவற்றையும் உட்புகுத்தி கட்டமைத்ததுதான் கோவில் என்ற அமைப்பு.கர்ப்ப கிரகத்தில் இருக்கும் சிலைக்கு கூட இத்தன்மைகளை கவர்ந்து வெளியிடுகிற நீரோட்டமுள்ள கற்களை தேர்ந்தெடுத்து தான் பயன்படுத்தினர்.
இதில் குளம் என்கின்ற புஷ்க்கரணி பிரபஞ்ச தன்மையில் அவ்விடத்தில் தீர்மானித்து இருக்கிற சக்தியை பிரபஞ்சத்தில் பெற்று உள்வைத்து கொள்ளும் தன்மை கொண்டது.
இப்பூமியில் இருக்கும் அனைத்து கல்,மண்,புழு,பூச்சி,மனிதன்,தாவரங்கள் அனைத்தும் பிரபஞ்ச கிரக ஆற்றலினால் உருவாக்கப்பட்டவையே.இவைகளில் தாவரங்கள் மட்டுமே,மற்றவைகளின் இயக்கு சக்தியான உணவை வழங்கி மற்றவற்றை காக்கும் திறன் படித்தவையாக இருக்கிறது.நம் முன்னோர்கள் அக்காக்கும் சக்திகளில், எவ்வித கிரக ஆற்றல் இவைகள் பெற்றிருக்கிறதோ அதன்படி பிரித்து.மக்களுக்குஉணவாக பயன்படும் வகைகளில் கொடுத்தனர் . பாகம் 2இல் தொடரும் .........

No comments:

Post a Comment