Monday, 16 March 2015


திருமண பொருத்தம்

நண்பர்களுக்கு வணக்கம்,

நண்பர்கள் திரு.வரதராஜ் அவர்களும்,திரு விஷ்வம்பரி அவர்களும் திருமண பொருத்தம் எதற்கு என்றும்,ஏன் திருமண பொருத்தம் பெண்ணிலிருந்து ஆணுக்கு பார்கிறார்கள் என்ற கேள்விக்கு எனக்கு புரிந்த நான் உணர்ந்த விசயங்களை உங்களுடன் இப்பதிவின் மூலமாக பகிர்ந்து கொள்கிறேன்.

நான் ஏற்கனவே என் கட்டுரைகளில் எழுதி உள்ளபடி பூமியில் இருக்கிற அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனபெருக்கம் செய்வது மட்டுமே.மனிதர்கள் உட்பட இதுதான் இயற்கை வழங்கிய ஒன்று. வாழ்க்கை வசதி பணம் எல்லாம் நம் ஏற்படுத்திய விஷயம். இயற்கைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த இன பெருக்கத்திற்கான செயல்தான் கலவி, இயற்கையின் பரிணாம தத்துவத்தில் பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவின் உதவியால் அந்த செயலை (காரணத்தை)வைத்து கொண்டு பலனை ( காரியத்தை) மறந்து போனோம்.
சிற்றின்பம் பேரின்பம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கால அளவு மட்டுமே. மனம் இறந்த நிலையை ஒன்றும் இல்லா தெய்வீக நிலையை இரண்டிலும் பெற முடியம். சிற்றின்பத்தில் சிறிது நேரம் உணர முடியும். பேரின்பத்தில் அதே நிலையில் இருக்க முடியும். இரண்டின் கடைசி எல்லையும் ஒன்றுதான்.ஒன்றும் இல்லா நிலை. அந்த தன்மைதான் பிரபஞ்ச மூலத்தோடு தொடர்பு ஏற்படுத்தும்.ஏனெனில் மூலமும் ஒன்றும் இல்லாததுதான். இதுதான் கடவுள் தன்மை.இந்த தன்மையில் கலவியில் இருக்கும் பொழுது அச்செயலின் உச்சத்தில்தான் மனம் இறந்து ஒன்றும் இல்லா நிலையில் கடவுள் தன்மையில்தான் சிருஷ்டி நடக்கிறது.இது மனிதனுக்கு மட்டும் இறை என்ற பிரபஞ்சம் சக்தி வழங்கிய வரம். ஜீவ ராசிகளில் மனிதன் மட்டுமே தன சிருஷ்டிப்பதை உணர முடியும்.
இன பெருக்கத்திற்கும் சந்ததி விருத்திக்கும் வித்தியாசம் இருக்கிறது. இனபெருக்கம் பொது தன்மைக்கான சொல்.சந்ததி விருத்தி சுய நலம். நான் என்ற அகங்காரம் வேலை செய்கிற இடம்.கூட்டமாக மனிதன் வாழ்ந்த இடத்தில்,தான் என்ற தன்மையை நிலை நாட்ட ,திறமையை வெளிபடுத்தி செய்கிற செயல்களில் (வேட்டை ஆடுதல்,விவசாயம்,காத்தல்) மாற்றத்தையும்,திறமையையும் கொண்டு வர செயல் செய்கிற பொருளான மனிதனை திறம் பட படைத்தல்.அதனால் கிடைக்கிற பலனில் தன்னை முன்னினிலை படுத்தல். என் சந்ததி தான் திறமை படைத்தவர் என்ற நிலையை உருவாக்குதல்.இந்த அகங்காரம் தான் மனித குலம் இன்று இவ்வாறு மேம்பாடடைய வழி வகுத்தது.
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட படைப்பிற்கு படைப்பாளிகள் ஆகிய இரண்டு சக்திகள் தேவை தானே, ஆண்,பெண் (விதை,விளைவிக்கிற இடம் பூமி) விதை சிறப்பாக விளைய செழிப்பான பூமி வேண்டும். வேறு முறையில் சொன்னால் செழிப்பான பூமியில் விதைக்கிற விதை சீரிய விளைச்சலை தரும் தானே?
அதேபோல்தரமான பூமியை தேர்ந்தெடுக்கும்போதே அப்பூமிக்கு தகுந்த விதையையும் தேர்தெடுத்து விளைச்சலில் திறமையான,சிறப்பானவற்றை கொண்டு வந்தனர்.பூமியின்(பெண்) தன்மை விதையின்(ஆண்) தன்மை இரண்டையும் அவர்கள் உருவான நட்சத்திரத்தை வைத்து (இதற்க்கு தான் நேற்று ஜனனம் கட்டுரை பதிந்தேன் புரிதலுக்காக) தீர்மானித்து இணைத்தனர். இதுதான் அந்த காலத்தைய பெயர் பொருத்தம் மற்றும் நட்சத்திர பொருத்தம்.

பின்னர் மனிதர்கள் வாழ்வியல் ஆசைகளில் ஈடுபட தொடங்கியபோது "நான்"" பெரிது பட துவங்கி என் மனைவி,என் குடும்பம், என் சந்ததி,என் பொருள்,என் சொத்து,....... என்ற தன்மைக்கு மாறியபொழுது,இணைந்து வாழ்தல் தவிர்க்க இயலாதாய் போனது. அப்பொழுதுதான் இணைந்து வாழ்வதற்கான அடுத்த பரிமாணம் ஆன குணம்(நட்சத்திரம்),கணம்(உடல் அமைப்பு),ராசி(குணம் கணம் கட்டமைப்பு),பூமியாகிய பெண்ணின் ஸ்திர தன்மை(ஸ்திரீ தீர்க்கம்) யோனி (கலவிக்கான பொருளான உறுப்பு) வசியம்(கவருகிற தன்மை)மகேந்திரம்(அழகு),ரஜ்ஜு (உடல் கூருகலின் திடம்),வேதை (கருத்து, பரிமாற்ற ஒற்றுமை) போன்றவற்றை நம் முன்னோர்கள் கணக்கிட்டு ஒரு பெண்ணையும் (பூமி) ஆணையும்(விதை) இணைத்தார்கள், ஆனால் ஆண் மற்றும் பெண்ணின் முழுதன்மையையும் அறிய அவர்கள் பிறந்த சூத்திரமான ஜாதகத்தை வைத்து தான் அறிய வேண்டும்
திருமணம் ஆனவர்களுக்கு தெரியும் இனைவாக அல்லது ஒத்துபோகிற மனம் மற்றும் குணம், சிறந்த உடல் அமைப்பு,,கவருகிற அழகும் சேர்ந்தால் திருமண வாழ்க்கை எத்தனை சுகம் என்று.

சரி ஏன் இத்தனை பொருத்தங்களையும் பெண்ணிலிருந்து பார்க்க வேண்டும் பாகம் 2 இல் தொடருகிறேன் ..இன்னும் வரும்.....அஸ்ட்ரோ பாபு

No comments:

Post a Comment