பெண்களுக்கு மாதவிடாய் வரமா? சாபமா? பாகம் 2
இந்த கர்ப்பப்பை செயல்பாடு சந்திரன், செவ்வாய் இரண்டு கிரகத்தை வைத்தே செயல் படுகிறது. சந்திரன் பூமியை சுற்றி வருகிற சுற்று பாதையில், நம் சூரிய வட்ட பாதையின் ஏரியல் வியூ ஆனா நட்சத்திரங்களின் முப்பரிமாண தன்மைகளை கடக்கிறது என்பதை என் முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அதாவது கால புருஷ தத்துவப்படி ஒரு நட்சத்திலிருந்து 9ம் நட்சத்திரம் வரை 9 கிரகங்களின் தன்மைகளும் இருக்கும். அடுத்து 10-19 நட்சத்திரம் வரை அதே கிரகங்களின் அடுத்த பரிமாணம்,19-27 நட்சத்திரம் அதே கிரகங்களின் மற்றொரு பரிணாமத்தையும் பெறும்.
அவ்வாறு ஒரு பெண் பூப்படைந்த பிறகு, சந்திரன் முதல் 9 நட்சத்திரங்களை கடக்கும் பொழுது பெண்ணுள், கர்ப்பப்பையில் கரு முட்டை உருவாக்கம் (படைத்தல்) (சர தன்மை), அடுத்த 9 நட்சத்திர பயணத்தில் கருமுட்டை பயன்பாடுக்கு தயார் நிலையில் இருக்கின்ற நிலை(காத்தல்)(ஸ்திர தன்மை), அடுத்த 9 நட்சித்திர பயணத்தில் தன தன்மையை இழத்தல்(அழித்தல்)(உபய தன்மை) என்ற சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.இது தான் இயற்கையான சுழற்சி.(சரியான மாத விடாய்), இதற்கு ஜாதகத்தில் சந்திரன் நிலையும்,செவ்வாய் நிலையும் சரியாக இருக்க வேண்டும். அதிக பலமும்,பலமில்லா தன்மையும் கர்ப்பப்பை அல்லது இரத்த போக்குகளில் மாறுபட்ட தன்மை இருக்கும். செவ்வாய் தன்மையின் மாறுபட்டு தன்மை பெண்களுக்கு அதிக படியான இரத்த போக்கு, வயிற்று வலிபோன்றவை இருக்கும். இவ்வாறு செயல் இழந்து போன கரு முட்டைகளை வெளியேற்றி கர்ப்ப கிரகமான மூலகிரகத்தை சுத்தம் செய்து மீண்டும் அடுத்த மேற்கூறிய மூன்று இயக்கத்தை உருவாக்குகிற செயல் தானே மாத விலக்கு.

ஒரு ஜனனத்தை உருவாக்குகிற சுழற்சி இயக்கம், இப் புனிதம் எங்கே,எவ்வாறு தீட்டாகி போனது? பெண்களே கூட அருவருப்பு அடைகிற தன்மையை ஏன் கொடுத்தது? அறியாமையா? அல்லது புரிதல் இல்லையா? வீட்டை விட்டு வெளியே இருத்தல், தெய்வீக காரியங்களுக்கு இக்காலங்களில் தடை,பெண்களே கூட வீட்டுக்கு வெளியில் போய் இருந்து கொள்வர்.உணவு உண்ண தனி தட்டு, தனி உடுப்பு, யாருடனும் பேசாத தன்மை என்று எங்கள் ஊரில் பார்கின்றேன்.
இயற்கை (கடவுள்) செய்கின்ற செயலில் தீட்டா? எனக்கு புரியவே இல்லை. கோவிலில் கர்ப்ப கிரகத்தை சுத்த படுத்துகிற போது, அங்கே இருக்கிற தேவையற்ற விசயங்களை வெளியேற்றுகிற போது திரை போடுகிற விசயமாகத்தான் நான் தனிப்பட்டு சிந்திக்கிறேன் பெண்களின் இக்காலத்தை.

மேலும் கரு முட்டைகளின் அழிதலும் சுத்தம் செய்தலையும் இயற்க்கை நடத்தி கொண்டிருக்கும் வேளையில் உருவாக்கம் என்பது சாத்தியமில்லா பொழுது,உருவாக்கத்திற்கான செயலான உடல் இணைவை இயற்க்கை தடை செய்திருக்கும். பெண்களுக்கு ஒரு மாறு பட்ட மன நிலை,உடல் தளர்ச்சி, யோனியின் தசைகளில் ஒரு தளர்ச்சி,உடல் தசை வலிமையின் இயக்க குறை பாடு போன்றவை, பெண்மையின் சுத்திகரிக்கும் காலத்திற்கு இயற்கை வழங்கிய ஒன்றே. கூடல் அப்பொழுது இயலாத செயல், இது ஆணுக்கும்,பெண்ணுக்கும் சிரமத்தை வழங்கும் என்றுதான் பெண்ணை தனித்திருக்க வைத்து மாத விடாய் காலத்தை கடக்க, ஓய்வெடுக்க கூறினார்கள். வெளியேறும் கழிவுகளால் கிருமி பரவல்கள் இருக்கும் என்ற படியாலும் பெண்கள் தன நிலையில் அக்காலத்தில் செயல் பட முடியாது என்பதாலும் அவர்களை ஒதுங்கி இருக்குமாறு செய்தார்கள். ஆனால் பின்னர் தவறான புரிதலலினால் இன்று அது தீண்டத்தகாத ஒன்றாகவே மாறிப்போனது.கிருமி பரவல்கள், திடமற்ற மனநிலை,உடல் நிலை தளர்ச்சி மற்றும் மாற்றத்திற்குத்தான் அன்றைய காலத்தில் மக்களின் பொதுகூடமான கோவில்களில் பெண்களை தவிர்த்தனர்.
ஆனால் சுகாதாரத்திற்கு என எத்தனையோ விசயங்கள் நாகரீக மேம்பாட்டால் இன்றைக்கு வந்திருக்கிற பொழுதும் மாத விலக்கு பிரச்சனையை " பூனையை தூணில் கட்டு என்ற மடாதிபதியின் நோக்கில்தான்" இன்றைக்கும் பார்த்து கொண்டிருக்கிறோம்.இன்றைக்கும் சாய் பாபா கோவில்களிலும்,சித்தர்களின் ஜீவ சமாதிகளிலும் எவ்வித மறுப்பும் இல்லை. மேல்மருவத்தூர் கோவிலிலும் மாத விலக்கான பெண்கள் பூஜை செய்யலாம் என்ற நிலை பாராட்ட தக்க ஒன்று.மாத விலக்கு என்பது பெண்ணியத்தை சுத்த படுத்துவதும் அவர்களின் தெய்வீக தன்மையை புதுபித்தலுமே தவிர தெய்வ குற்றமோ தீண்டதகாத ஒன்றோ இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. இதை பெண்கள் தான் முதலில் உணர்ந்து மாத விடாய் காலங்களில் பெருமையுடன் உணர வேண்டுமே தவிர தன்னை பெண்கள் தாழ்வாக எண்ணக்கூடாது என்பதே
இக்கட்டுரையின் நோக்கம். உணருங்கள்,பெருமை கொள்ளுங்கள்......இன்னும் வரும்..... அஸ்ட்ரோ பாபு.