Monday 23 December 2013

நண்பர்களுக்கு வணக்கம்,
என்னுடைய கட்டுரைகளை தொடர்ச்சியாக படித்து விட்டு எனது நண்பர் எனக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். அதில் என்னை கடவுள் மறுப்பு கொள்கைக்கு மாறி விட்டாயா என்றும் கேட்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை, பிரபஞ்சத்தில் இருக்கிற மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளை உருவாக்கி அவை ஒவ்வொன்றும் உயிர்வாழ ஏற்ற உடலை,உணவை,இடத்தை வழங்கி இருக்கிற அந்த பிரபஞ்ச சக்தியை வணங்குகிறேன்.எப்பொழுதும் அச்ச்சக்தியுடன் தொடர்பும் கொண்டிருக்கிறேன் நன்றி உணர்வால். இச்ச்சக்தியுடன் தொடர்பில் இருக்கிற சாதுக்களோடும், ஆராய்ச்சியாளர்களோடும் சித்தர்களோடும் தொடர்பில் இருக்கிறேன். இது நிதர்சனமான உண்மை.
அதே நேரத்தில் ஆன்மீகத்தின் பெயராலோ, கடவுளின் பெயராலோ நடைபெறுகிற விசயத்தை, முன்னோர்கள் சொன்னதை கடைபிடித்து வருகிற மக்களுக்கு, அவ்விஷயத்தில் நான் அறிந்த, புரிந்து கொண்ட, அனுபவித்த அறிவியல் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். அதை தெளிவு பெற விவரித்தும் கூற முயல்கிறேன். அக்காலத்தில் கேள்விகளாலும்,விவாதங்களாலும் ஒரு நல்ல விஷயம் மக்களுக்கு செல்லாமல் போய் விடும் என்று கடவுளின் பெயராலோ,கோவிலின் பெயராலோ அல்லது ஜோதிடத்திலோ இருக்கிற, அல்ல ஏற்படுத்திய அறிவியல் உண்மையை மக்களுக்கு பயம் ஏற்படுத்தி உணர்த்திய கதைகளின் அறிவியல் உண்மைகளை மக்கள் புரிந்து கொண்டு
பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் எழுதி வருகிறேன். தோழமைகளே.
சனி, புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு,விதி,பரிகாரம் போன்ற கட்டுரைகளுக்கு நண்பர்களிடத்தில் நல்ல பாராட்டுகளும், இதே பாதையில் இருப்பவர்களின் விமர்சனங்களையும் பார்க்கிற பொழுது உங்களின் ஒத்துழைப்பில் என்னுடைய இந்த முக நூல் துவக்க நோக்கம் நிறைவேறுவதாக உணர்கிறேன்.
சில நண்பர்கள் என்னை கேள்வி பதில் பகுதியை தொடங்க சொல்லி கேட்கிறார்கள். உங்களின் கேள்விகளை என்னுடைய Timeline il post செய்யுங்கள். நான் எனக்கு தெரிந்தவரை அதற்க்கு பதில் கூற தயாராக உள்ளேன் நண்பர்களே. இன்னும் வரும்.............. அன்புடன் அஸ்ட்ரோ பாபு.
நண்பர்களுக்கு வணக்கம்,
பண்டிகை காலங்கள் முடிந்து பருவ மழை காலங்களில் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த பருவ மழை நன்கு பெய்து பூமியை குளிர செய்து விவசாயம் பெருகி அனைத்து வளங்களை, அனைத்து மக்களும் பெற்றிட எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் அந்த பிரபஞ்ச சக்தியை மனதார பிராத்திக்கிறேன்.
மக்களிடையே பெரும் கேள்விகளாய் இருக்கும் விஷயம் யோகம், தோஷம் என்பன அவற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
யோகம்: நம் ஜனனத்தின் போதே நம் விளையாட்டு சூத்திரத்தை நம் உடலில் புகுத்திதான் அனுப்பி இருக்கிறார்கள் என்று என் முந்தைய கட்டுரைகளில் நிறைய உதாரணங்களோடு கூறியிருக்கிறேன்
ஒரு உயிரின் ஜனனத்தில் கிரகங்களின் நிலைதான் நம் உடலில் ஆதிக்கம் செய்கிறது இதை நம் முன்னோர்கள் வரைபடமாக சொன்னதுதான் ஜோதிடத்தின் ஜாதக கட்டம். இதுதான் உடம்பின் முதல் ஸ்கேன். எந்த கிரகம் உடலில் எந்த இடத்தில என்ன வலுவுடன் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்ல கூடியது . ஜாதக கட்டத்தை, (உடம்பின் ஸ்கேன் ) அலசி பார்க்கும்போது வலுவுடன் இருக்கிற இடங்களை நல்லது என்றும் வலுவிழந்து இருக்கிற இடங்களை கெட்டது என எடுத்து கொண்டால், அந்த நல்ல இடங்களின் தன்மையும் செயல்பாடும் யோகம் எனவும். கெட்ட இடங்களின் தன்மையும் செயல்பாடும் தோஷம் எனவும் கொள்ளலாம்.மேலும் கிரகங்களின் குண நலன்களையும் கணக்கில் கொண்டு பார்த்து அந்த யோகத்தின் பலத்தையும் கணக்கிடலாம்.உதாரணத்திற்கு,
சந்திரனும் செவ்வாய்யும் சேர்ந்து இருந்தால் சந்த்ரமங்கள யோகம் மனமும்,இரத்தமும், இரத்தம் சார்ந்த பகுதியும் மிக பலமாக இருக்கும் எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்கும். உடம்பு துடிப்பாகவும் இருக்கும் புதுமை விரும்பிகளாக, அதை நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி வெற்றியும் காண்பர்.இந்த கிரக சேர்க்கை உடையவர்களை பார்த்து இவர்கள் எப்படி இப்படி இருக்கின்றனர் என மற்றவர் வியக்கும் வண்ணம் இருப்பர்.மேலும்
லக்னத்தில் ஒரு நல்ல கிரகம் வலுபெற்றலோ அல்லது அந்த கிரகம் இரத்த சம்பத்தப்பட்ட இடத்திலோ அல்லது அறிவு சார்ந்த இடத்திலோ அல்லது மனம், உடம்பு, நரம்பு, தசை சார்ந்த கிரகங்களோடு கூடி இருந்தாலோ ராஜயோகம் என்பர் வாழ்கையின் அனைத்து சந்தோசங்களும் இவர்களுக்கு கை கூடும்.

தோஷம்: மேற்கூறியவையில் எதிர்மறை தான் தோஷம் என்பர். கெட்ட இடங்களில் கெட்ட கிரகங்கள் வலுபெறல். உதாரணத்திற்கு உடலை மட்டும் சொல்லகூடிய 8 ம் இடத்தில் செவ்வாய் இருப்பின் இரத்தம் மிகவும் வேகமாக இருக்கும். அளவுக்கு மீறிய செயல்பாடு உடம்பின் வேகமும் அதிகம் இருக்கும் . கோபம்,முரட்டு தனம் முன்பின் யோசியாமை போன்ற குணங்களால் விபத்து இரத்த அழுத்தம்,தசைகளின் மாற்று செயல்பாடு போன்றவை இருக்கும்.இவர்களால் வாழ்க்கையை நிதானித்து பார்கவோ நடக்கவோ முடியாது.பொதுவாக தோஷம் செவ்வாய்,ராகு, கேது போன்றவைக்கு மட்டும் பெருவாரியாக சொல்ல பட்டிருகிறது . இன்னும் விளக்கமாக இந்த செவ்வாய்,ராகு ,கேது பற்றி தனித்தனியே ஏற்கனவே எழுதி உள்ளேன் அவற்றை படித்து பார்த்து அவற்றின் எதிர்மறை (சாதக கட்டத்தில் மறைமுக இடங்கள்) செயல்பாட்டை ஒப்பிட்டு பார்த்தால் தோஷம் என்பது என்னும் தெள்ளதெளிவாக புரியும். இன்னும் வரும் ...... அஸ்ட்ரோ பாபு.
திருமண சடங்குகள்

நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை இன்று வெறும் செயல்களாக மாறிப்போன சக்தி வாய்ந்த திருமண சடங்குகளை பற்றியது. காரியத்தை மறந்து வெறும் காரணங்களை மட்டும் வைத்து கொண்டது இன்றைய தலைமுறை.
இந்த பூமியில் ஜனித்த அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனபெருக்கம் செய்வது மட்டுமே. இதை இன்றைய சுழலில் கூறினால் எத்தனையோ மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் உள்ளாகும். ஆனால் உண்மை இதுதான். இந்த இனபெருக்க விசயத்தை மிகவும் முறைபடுத்தி நல்லதொரு வாரிசுகளை இந்த பூமியில் அவதரிக்க செய்ய, பல விஷயங்களை உள்ளடக்கி, ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் மட்டுமே ஒரு பந்தம் உருவாக்கி ஒரு உறவை பலபடுத்தி அதன் மூலமாக நல்ல வாரிசுகளை உருவாக்க ஏற்பட்டதுதான் இந்த திருமண உறவு, இது இந்த பூமியில் உள்ள ஜீவராசிகளில் மனித இனத்தில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு. அதனால் தான் என்னமோ பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்திருக்கிறது.
ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமண உறவுக்கு தேர்வு செய்கிறபோது, மனம்,உடல் ரீதியான பொருத்தங்களை பார்த்து (ஜாதகம்) , அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்து வருகிற சூரிய மாதத்தில்,நட்சத்திரத்தில்,திதியில், திருமணம் செய்வார்கள். ஆணுக்கும்,பெண்ணுக்கும் குரு அச்சமயத்தில் நல்ல ராசிகளை கடக்குகிற காலமும், நல்ல தட்ப வெப்ப சூழ்நிலையும், பெண்ணின் கரு முட்டயுணுடைய பலத்தை அறிய அப்பெண்னின் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டும் திருமண நாளை தீர்மாணிப்பார்கள்.திருமணத்திற்கு முன் ஆணையும்,பெண்ணையும் மன ரீதியாக உடல் ரீதியாக தயார் செய்வதுதான் சடங்குகள் என்ற பெயரில் சொல்லபடுகின்றன.
இந்த சடங்குகள் ஆண்,பெண் இரு பாலரின் சமுதாயத்தை பொருத்து மாறுபடும்,அவர்களுடைய வாழ்க்கை முறை, வாழுகிற தட்ப,வெப்ப நிலை,உணவு,இவைகளை வைத்துதான் திருமண சடங்குகள் ஏற்படுத்த பட்டன.உதாரணத்திற்கு
புலால் உணவை திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் இருந்து உண்ணாது இருத்தல்.(உடலில் தாமசகுணம் ஏற்பட) வெளியூர் பயணம் மறுத்தல்(தட்ப,வெப்ப மாறுதல், விபத்து போன்றவை நேராமல் இருக்க) ஆடல்,பாடல்,(மனதை குதூகலமாக வைத்து இருத்தல்). பலவகை பொருட்கள் கொண்டு நீராடல் (உடலின் வெப்பத்தை தணித்து உடம்பிலும் ,மனத்திலும் ஒரு நிதானத்தை கொண்டு வர) மேலும் சமுதாயம் சார்ந்த சீர்கள் தாய்மாமன்,சம்மந்தி வீடு சீர், என்று ஒரு பாதுகாப்பு உணர்வை அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அளித்தல்.சொந்தங்களையும் பந்தங்களையும் இணைத்தல்,இது போக பல்வேறு மன வருத்தங்களில் இருக்கிற சொந்த பந்தங்களை சரி செய்து அவர்களை மன நிறைவோடு பங்குபெற செய்து வாழுகிற கூட்டத்தை பல படுத்தல்.

திருமணம் செய்கிற ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒரு உற்சாகமான மனநிலையில், பாதுகாப்பான உணர்வில் இருவரின் குண நலன்களும் உடலும்(நட்சத்திரம்) பொருந்துகிற ஹோரையில் இணைய வைப்பார்கள்,அப்படி இணைகிற பொழுது உருவாகிற வாரிசு திட மனதுடன்,நல்ல குண நலன்களுடனும்,திடமான உடல் வாகுடனும் பிறக்கும் என்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை உள்வாங்கியதுதான் இந்த திருமண சடங்குகள். இப்பொழுது பலன்களை மறந்து சடங்குகள் மட்டுமே இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்.திருமணத்திற்கு செல்லும் போது சடங்குகளை உற்று கவனிங்கள் உங்களுக்கே தெளிவுற புரியும் இனிமேல். இன்னும் வரும்.......... அஸ்ட்ரோ பாபு

Wednesday 18 December 2013

நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை சனியை பற்றியது.இந்த தலைப்பை பார்த்ததும் என் கட்டுரைகளை ஜோதிட கட்டுரைதானே என்று தள்ளியவர்கள் கூட உடனே கூர்ந்து படிபீர்களே!! அந்த அளவுக்கு சனி பற்றிய பயம் நம்முள் இருக்கிறது.
சனி என்னவோ நமக்கு நேர் அல்லது மறைவாக இருந்து கொண்டு கங்கணம் கட்டி கொண்டு நமக்கு கெடுதல் செய்வதாக நினைத்து கொள்கிறோம். நமக்கு முன்னோர்கள் கூறியதும்,பல வழக்கு பழமொழிகளும் நம்மை அப்படி நினைக்க சொல்லி பயமுறுத்துகின்றன.ஆனால் சனி தான் நம் உடலின் செயல்களை தீர்மானம் செய்கிற மிக பெரிய சக்தியாகும். ஆம்,CEREBELLAR SPINAL FLUID (CSF) என்று சொல்லகூடிய வல்லிய சக்தி திரவம்.
இந்த திரவம் மூலையில் உற்பத்தியாகி CEREBELLUM வழியாக VENTRICLE 1,2 நுழைந்து நம்முடைய BRAIN CAVITY சீர் படுத்தி VENTRICLE 3,4,MEDULLA வழியாக நரம்பு மண்டலத்தை தூண்டி,FLEXES இயக்கி CANAL OF SPINAL GUARD அடைந்து முதுகு எலும்பின் கடைசி வரை சென்று ஒரு பெரிய ஆதார சக்தியாக விளங்குகிறது.
CSF : CONTROL OF BRAIN CAVITIES, நம் மூளையின் இயங்கு தன்மை
CEREBELLUM : எச்சரிக்கை செய்தல் அதிர்வு உண்டாக்கி அடர்ளின் சுரக்க செய்து நம்மை பாதுகாத்து கொள்ள செய்தல்
VENTRICLE : மூளையின் இரண்டு பகுதியின் பிராதன CPU
MEDULLA : புரிந்து கொள்ளுதல் செயல்களை நரம்புகளுக்கு அனுப்புதல் அதன் செயல்பாடு.

NAN NERVINESS SYSTEM, ELECTRICITY ,தசைகளின் தூண்டுதல் மேற்கூறிய வற்றை அனைத்தையும் இணைத்து இருக்கிற WIRING JUNCTION ஆனா நரம்பு மண்டல. இவைகளுடைய செயல்பாட்டைதான் சனி தீர்மானிகிறது.இப்பொழுது புரிகிறதா சனி பாதித்தால் எங்கு எங்கெல்லாம் பிரச்சனை ஏற்படும் என்று. இத்தனை PORTFOLIO வை சனி வைத்து இருப்பதால் தான் பயம். மற்ற கிரகங்களுக்கு 1,2 PORTFOLIO தான் உண்டு. இத்தனைக்கும் சூரிய வட்ட பாதையில் 6 வதாக தொலை தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதன் கதிர்வீச்சு பூமியை பூமியில் இருக்கிற உயிர்களில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது பார்த்தீர்களா. நான் ஒரு முறை நாசா WEB SITE ல் படித்தது, பூமியில் இருந்து ராக்கெட்டில் பயணித்தால் 700 கி,மீ, வேகத்தில் 41/2 ஆண்டுகள் ஆகுமாம் சனியை சென்றடைய.
ஜோதிடத்தில் சனியின் கோட்சார பயணம் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் ஆகும்.ராசி மண்டலத்தில் ஒரு ராசியின் ஒரு கிரகத்தின் அதிக பயணம் சனிக்கு மட்டுமே.
சரி இதே சனி ஒருவருள் பலமாக இருந்தால் மேற்கூறிய அனைத்து இடங்களும் மிக வலுவாகத் தானே இருக்கும். மூளையின் வலிமை,தசை வலிமை, நரம்புகளின் வலிமை ,புரிந்து கொள்ளுதல்,உள்வாங்குதல்,செயல் படுத்துதல் அனைத்து விசயங்களிலும் பலமானவராக இருப்பார்.அம்மனிதனின் செயல் பாடுகளும் மிக தீர்கமாக இருக்கும். மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி சனி. இவர்கள் அதிக ஆளுமை ராசியான சிம்ம ராசிகாரர்களை கூட சில சமயம் வெல்ல வல்லவர்கள்.
சனி ஊழியகாரகதுவதுக்கு குறிப்பிட்டு உள்ளார்கள்.ஏனென்றால் மேற்கூறிய வற்றை ஒப்பிட்டு பாருங்கள் புரியும். மகரம்,கும்பம், சனி உச்சம் பெறுகிற துலாம் ராசிகரர்கள் ஆட்களை வைத்து வேலை வாங்குவதில் வல்லவர்கள், பெரிய INDUSTRIALISTஆக . இந்த ராசிகரர்களாக இருப்பதும் சனியின் மகிமைதான்.சனி நீசம் பெறுகிற மேஷ ராசி காரர்கள் அமைதியாக சோம்பலாக வலிமை குறைந்தவர்களாக இருபதும் சனியின் மகிமைதான்.(ராசி கட்டத்தில் மற்ற கிரகங்களின் உச்ச நீச ஆட்சி இவைகளால் சிலருக்கு விலக்கும் இருக்கும்).
சனி நம் ராசி மண்டலத்தை சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும் இந்த 30 ஆண்டுகளில் சனி 3,6,11, இடங்களில் மட்டும் நன்மை செய்வார், அப்படியானால் 30 ஆண்டுகளில் 7 1/2 ஆண்டு காலம் மட்டும்தான் ஒருவனுக்கு கோட்சார ரீதியாக நலம் பயப்பார்.22 1/2 ஆண்டுகள் சுகசனி,அர்தாஷ்ட, அஷ்டம,7 1/2 ஆண்டு சனி என கெடு பலன்களை அளிப்பார் என ஜோதிடம் கூறுகிறது.
நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக கூறுகிறபடி நாம் பிறந்த FORMULA வையும் PROGRAM யையும் யாராலும் மாற்ற இயலாது. ஆதலால் அதை புரிந்து கொண்டு சனியை நண்பனாக்கி கொண்டு அவருடனே பயணித்தால் எக்காலத்தையும் பொற்காலம் ஆக்க முடியும்.

இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு.

FEMALE NAAGA

புகைப்படம்: FEMALE NAGA AT MAHA KUMBH MELA tHANKS TO MOHAN'S ADVENTURE GALLERY

POWER OF NAAGAS

புகைப்படம்
இராகு 
சூரியனின் வட்ட பாதையில் சந்திரன் பூமியை சுற்றி வருகிற கிரகம் சந்திரன் பூமியை சுற்றுகிற வட்ட பாதையும் பூமி சூரியனை சுற்றுகிற வட்ட பாதையும் இணையும் இடம்தான் ராகு.அப்படி பார்த்தல் சூரியன் உடைய நிழல் ராகு. சந்திரன் உடைய நிழல் கேது ஆகும்.முதலில் ராகு பத்தி பார்போம். இந்த ராகு பூமியில் உள்ள உயிர்களின் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பாக மனித உடலில் தசை,தசை நார்கள், அவற்றின் செயல்கள், உடலில் உள்ள மின் சக்தி. இந்த மின் சக்தி தூண்டுகிற நரம்பும் தசை நார்களும் தூண்டுகிற இடம் (NERO MUSCULAR JUNCTION) இவைகளை இயக்குகிற சக்தியாக ராகு இருக்கிறது.ஜனன காலத்தில் இராகுவின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை பொருத்து அந்த ஜாதகரின் தசை செயல்பாட்டை கணக்கிடலாம். நல்ல இடங்களில் ராகு இருந்தால் நல்ல செயல்களுக்கும் கெட்ட இடத்தில இருந்தால் கெட்ட செயல்களுக்கும் இந்த தசை வலிவு பயன்படும் குறிப்பாக 6 ம் இடம் ராகுவிற்கு சிறந்ததாக கருதலாம்,நோய் எதிரி வேலை போன்ற வற்றிற்கு உரிய ஸ்தானமாக ஜோதிடத்தில் கொள்கிறார்கள். இந்த இடத்தில ராகு இருந்தால் நோய் நொடி எதிர்ப்பு, எதிரியை வெல்லுதல், வேலையில் சிறப்பு இருக்கும். அதேபோல் 9ம் இடம் தன வலிமையால் அனைத்து பாகியங்களையும் பெறுவார். 2 ல் இராகு நாக்கிலும் சொல்லிலும் வலிமை இருக்கும். வார்த்தைகள் கத்தி வைத்து வெட்டியது போல் இருக்கும். 2ம் இடம் வாக்கு ஸ்தானம் மட்டும் இல்ல குடும்ப ஸ்தானம் கூட குடும்பத்தில் அனுசரணையும் அரவணைப்பும் மிக முக்கியம். நேர்கோட்டு செயல் அங்கு பல எதிர் விளைவுகளை உண்டு பண்ணும் என்பதால் தான் 2 ல் இராகு இருப்பவரை இராகு வலுவாக உள்ள ஜாதகருக்குதான் பொருத்துதல் வேண்டும் திருமண பொருத்தத்தில். வலிவோடு வலிவு சேரும்போது சமம் ஆகும். என்று

இராகு வலிமை குறைவாக இருப்பவர்கள் தசையின் வலிமையை கூட் ட கூடிய மொச்சை உளுந்து பயிர் வகைகளை அதிக அளவில் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். இவற்றில் ப்ரோட்டின் அதிகம் இருக்கும் ப்ரோட்டின் தசையை வலு படுத்தும். இருந்தாலும் ஜனன நேரத்தில் இராகுவின் நிலைமயை பொறுத்து தான் அதை முடிவு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை ஒரு மனிதனுடைய அனைத்தும் பிறப்பிலேயே தீர்மானம் செய்யப்பட்டு விடுகிறது. செய்த பொருளை மாற்றவோ திருத்தி உரு மாற்றவோ முடியாத வாறுதான் ப்ரோக்ராம் செய்ய பட்டு அனுப்பி வைக்க பட்டு இருக்கிறோம். எந்த ஒரு பரிகாரமோ எந்திர தந்திர தகடுகளோ இந்த இயல்பை மாற்ற முடியாது. ஆனால் கோவில்கள், சித்தர் சமாதிகள் வேண்டுமானால் 15-20 சதவீதம் வரை தேவை படுகிற சக்தியை தூண்டும் அம்மாதிரி விசயங்களை தான் கோவில் இடத்தில பொருத்தி ஜனன பாதிப்பில் இருக்கிற மக்களை அங்கு வர வைத்து அந்த மாற்று சக்தி இணைய பெறுமாறு செய்தார்கள் அங்கு உபயோகிக்கிற பொருள்களின் வாசனையும் (smell theraphy) மந்திரங்களும் (sound therophy ) பிரசாதங்களும்(food theraphy) அங்கு தீர்மானித்து இருக்கிற சக்தியை ஒட்டியேதான் இருக்கும் அச்சக்தியை தூண்டும்.கூட

உலகம் என்பது எழுதிய நாடக மேடை.
நம் எலோரும் நடிகர்கள் மட்டுமே.

இன்னும் வரும். அன்புடன் அஸ்ட்ரோ பாபு.
நண்பர்களுக்கு வணக்கம், இந்த கட்டுரை ஜனனத்தை பற்றி,
ஜனனம்
இரு மூல பொருள்கள், அப் பொருட்களின் சேர்க்கை, சேர்க்கையின் மாற்றங்கள் இம் மூல பொருட்கள் சேருகிறபோது இருக்கிற பிரபஞ்ச சூழ்நிலை,அச்சுழலில் இருக்கிற வேதியல் சூழ்நிலை அச் சூழ்நிலையில் இரு வேறு மூல பொருட்களின் சேர்க்கையின் விளைவு தான் ஒரு மனிதனை, அவனுடைய செயல்பாடுகளை, செயல்பாடுகளை நிர்மாணிக்கிற மனிதனின் கட்டுபாட்டு அறையான மூளையை (Formation of Brain) தீர்மானம் செய்கிறது.

விளக்கமாக பார்தோமானால், இரு வேறு மூல கூறுகள் உடைய (DNA) மூல பொருள்கள் 1,ஆணின் விந்து 2.பெண்ணின் கரு முட்டை, கரு முட்டை வெடித்து விந்தில் இருக்கிற அணுக்களை உள்வாங்கி உயிர் வித்தல். இந்த இடம்தான் ஜனனம் இந்த ஜனனம் நிகழ்கிற சூழ்நிலையின் வேதியியல் பண்புகளை பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்கள்த்தான் தீர்மானம் செய்கின்றன. ஜனன லக்னம்,ராசி என்பனவற்ற்ரை முந்தைய கட்டுரையில் விளக்கி இருந்தேன்.
எடுத்து காட்டிற்கு

ஜனனத்தில் செவ்வாய் 1,4,7,10 இடங்களில் இருந்தால் அந்த குழந்தையின் இரத்த வகை பாசிடிவ் வகை (+) இருக்கும் செய்வாய் நீசம் பெற்றாலோ , மறைவிடங்களில்,நீசன் பார்வை பெற்றுஇருந்தலோ நெகடிவ் இரத்த வைகையை சார்ந்ததாக இருக்கும்.
ஜனன நேரம் மிக முக்கியம் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜனன நேரத்தை வைத்துதான் அவருடைய ஜனனம் எப்பொழுது நிகழ்ந்தது அப் போதைய கிரக சுழ்நிலையை ஜோதிடத்தில் கணித்து கூறுகின்றனர்.
ஜனனத்தில் லக்னதிர்க்கு 2,4,7,12 ராகு இருந்தால் நல்ல தசை வலுவுடன் இருப்பார் இவருடைய மிகவும் வலுவாக இருக்கும்.hemoglobin அளவு அதிக பட்சமாக ஆண்களுக்கு 11 ஐ தாண்டியும் பெண்களுக்கு 13 ம் இருக்கும் blood fluid plates 6 ஐ தொட்டும் இருக்கும்

ஜனத்தில் குரு 1,4,7,10 இடங்களில் இருந்தால் இவருடைய நுண்ணறிவும் பகுத்துஅறிவும் மிக அதிகமாக இருக்கும் இவர்கள் எந்த ஒரு இறுக்கமான சூழ்நிலைகளிலும் மிக சரியான முடிவை எடுக்கவும் அச் சூழ்நிலையை நிதானமாக அணுகுவதிலும் வல்லவர்கள்.

ஜனனத்தின் போதே நம்முடைய விளையாட்டை பார்மட் செய்துதான் அனுப்பி இருகிறார்கள் இந்த பார்மட்டை நம்மால் மாற்றவோ திருத்தவோ இயலாது வானவெளியில் இருக்கிற கிரகங்களுடைய ஆதிக்கம் தான் நம்மை வழி நடத்துகிறது.

இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் இருக்கிறது பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்திலும் இருக்கிறது என்று கூறினார்கள்.

இன்னும் வரும். அஸ்ட்ரோ பாபு
புரட்டாசியில் ஏன் பெருமாள் வழிபாடு 

நண்பர்களுக்கு வணக்கம், புரட்டாசியில் மட்டும் ஏன் பெருமாளுக்கு சிறப்பு. பூமி சூரியனின் சுற்று பாதையில் சூரியனின் வீரியத்தில் இருந்து மறைகிற காலம். புரட்டாசியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தை மாதம் மகர ராசியில் சஞ்சரிகிறவரை 4 மாதங்கள் பூமி சூரியனின் தென் கோட்டு பகுதியில் பயணிக்கிற காலம். தென் மேற்கு பருவ மழை முடிஞ்சு ஆடி காற்றை கடந்து அடை மழை பருவ காலத்தில் பூமி நுழைகிற மாதம் புரட்டாசி .அக்காலத்தில் மக்கள் ஆடியில் விதைத்து விட்டு மழைக்காக எதிர் பார்த்து கொண்டு இருக்கிற பருவமும் கூட.
இந்த பிரபஞ்ச பருவ நிலை மாற்றம் பூமியில் மனித உடம்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.பூமியின் ஜீவராசிகளின் இனபெருக்கத்திற்கான காலம்.மந்த மாருதம் என்று சொல்லுகிற ஊத காற்று வீசுகிற காலம்.
சரி இதற்கும் பெருமாள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம். இதற்க்கு முன் ஒரு கேள்வி. ஏன் மற்ற தெய்வங்களை புரட்டாசிற்க்கு சொல்ல வில்லை? குறிப்பாக சிவ வழிபாட்டை ஏன் கூறவில்லை? ஏன் பெருமாளை மட்டும்
வழிபட சொன்னார்கள்.ஏனென்றால் ஈஸ்வர சக்தி குருதன்மை முக்தி,சந்நியாசி குணம்.பெருமாள் சுக்கிர தன்மை கல்யாண குணம் சம்சாரம்.களத்திரம்.இந்த இரண்டு கோவிலுக்கும் செல்கிறவர்கள் நிச்சயம் இந்த வேறுபாட்டை உணர்ந்து இருப்பார்கள்.ஈஸ்வர கோவிலில் ஒரு அமைதியையும் பெருமாள் கோவிலில் ஒரு உற்சாக உணர்வையும் உணர்ந்து இருப்பார்கள்.
இந்த இனபெருக்க பருவத்தில் பெருமாள்கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன் படுத்துகிற பச்சை கற்பூரம்,சந்தனம்,சம்பங்கி பூ,துளசி தீர்த்தம்.போன்றவை உதவும்.இது நம்முள் சுக்கிர தன்மையை தூண்டியும் சமன்படுத்தவும்(neutralizer ) செய்யும். மனதும் தெய்வீக தன்மையோடு இருக்கும்.இந்த பருவத்தில் உருவாகிற வாரிசுகள் நிலைதன்மைஉடனும்,புத்தி சாலிகளாகவும், தெய்வ பக்தி உடையவர்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் உடம்பில் அசுர தன்மையை தூண்ட கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் சம்சார வாழ்வில் ஈடுபட்டு நல் வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்றுதான் புரடசியில் பெருமாள் வழிபாடு.
மேலும் அடைமழை காலம் தொடங்குவதால் பருவ நிலை மாற்றத்தால் உண்டாகிற தொற்று நோய் கிருமிகள் உருவாகி நம் உடம்பை தாக்கும்.(சளி காய்ச்சல் போன்றவை ) இதிலிருந்து காக்கவும் பெருமாள் கோவில் பச்சை கற்பூரமும் துளசியும், நாம் இருக்கிற விரதமும் மனதையும் உடம்பையும் தகுடு போல வைக்க உதவும். ஐயப்பன் விரதம் இருப்பவர்களுக்கு தெரியும் 48 நாள் விரதம் உடம்பை எந்த அளவுக்கு சீராக்கும் என்று.அடை மழை காலம் என்பதால் ஜீரண சக்தி குறைவாக இருக்கும் ஆதலால் எளிதில் ஜீரணமாககூடிய சைவ உணவுகளை உட்கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சிறிது நேரம் தங்கி இருந்து அச்சக்தியை புரடசியில் பெற்று வாருங்கள்.வயதில் இருப்பவர்கள் நல்ல வாரிசுகளை பெறுங்கள் வயது கடந்தவர்கள் நல்ல தேக ஆரோகியத்தை பெறுங்கள்.

இன்னும் வரும்........ அஸ்ட்ரோ பாபு.