Monday, 28 November 2016

பத்தில் பாவி நலம்,பாம்பு பலம்.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த சில தினங்களுக்கு முன்னால் நான் மேற்கண்ட கேள்வியை ஜோதிட குழுக்களில் கேட்டிருந்தேன்.மூத்த ஜோதிடரும் எனது மதிப்பிற்குரிய மூத்த ஜோதிடர் திரு.jJosyam ramu அய்யா அவர்களும்,திரு valar raajan அவர்களும் astro selvam அவர்களும்,திரு,senthil nathan பதில் அளித்து இருந்தனர்.அருமையான ஜோதிட விஷயங்கள் ஜோதிட அறிவின் அலசல்கள் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேற் கூறிய கேள்விக்கான நான் உணர்ந்த விஷயங்களை இங்கு நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.நான் உணர்ந்த விஷயம் மிக சாதரணமான யதார்த்தத்தை அடிப்படையாக கொண்டது.என் எழுத்துகள் எப்பொழுதும் யதார்த்த வாழ்வியலில் ஜோதிடம் எவ்வாறு சொல்லபட்டிருக்கிறது என்பதை நோக்கித்தான் இருக்கும் என்பதை என் நண்பர்கள் அறிவார்கள் 
ஒரு தனி மனிதனனின் செய்களை நம் முன்னோர்கள் அகம்,புறம் என இரு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கின்றனர்.புறம் என்பது வாழ்வியல் ஆதார செயல்களாகவும், அகம் என்பது இறை நோக்கு செயல்களாகவும் செயல்படும்.இதையே ஜோதிடத்தில் புறம் சார்ந்த செயல்களின் காரகத்துவத்தை வைத்திருக்கும் கிரகங்களை பாபர்கள் என்றும். அகம் சார்ந்த செயல்களின் காரத்துவங்களை வைத்திருக்கும் கிரகங்களை சுபர் எனவும் பிரித்து வைத்திருக்கின்றனர்.இந்த முத்தாய்போடு கேள்விக்கு செல்வோம்.
பாபர்கள் என்பர் சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது சுபர் என்போர், வளர்பிறை சந்திரன்,குரு,சுக்கிரன், தனித்த புதன் இவ்வாறு தானே ஜோதிடத்தில் வடிவமைக்க பட்டிருக்கிறது.
பாபர்களுக்கான அடிப்படை செயல்கள். சூரியன்,- தைரியம்,செவ்வாய் - வீரியம்,சனி-உழைப்பு,ராகு-அதி தீவிரம்,கேது_ஞானம். 
ஒரு தொழிலோ அல்லது வியாபாரமோ செய்வதற்கு மேற்குறிய விஷயங்கள்தானே அத்தொழிலில் வெற்றியடைய தேவையானவை .10 பாவம் என்பது தொழில் கர்மம் ஜீவனம் சார்ந்ததுதானே. ஒரு தொழிலில் அல்லது வியாபாரத்தில் அல்லது பணியில் தைரியம்,வீரியம்,கடின உழைப்பு, அதி தீவிரமான செயல்கள், அத்தொழில் சார்ந்த ஞானம் இவைகள் இருக்கும் பொழுது வெற்றிதானே இதைத்தானே பத்தில் பாவி நலம் என்றனர்.
இதே பத்தில் பாம்பு பலம் என்பது ராகுவின் அதி தீவிரமோ அல்லது அத்தொழிலின் ஞானமோ அத்தொழிலில் மேன்மை அடைவதற்கான பலம் தானே.இதைத்தான் நம் முன்னோர்கள் பத்தில் பாவி நலம் பாம்பு பலம் என்றனர். இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு

1 comment: