Monday, 28 November 2016

ஜோதிடம் உண்மையா?
3 வது முகனூல் ஜோதிட கருத்தரங்கத்தில் எனது உரை:
தலைப்பு :- ஜோதிடம் உண்மையா?
அவையோருக்கு வணக்கம்,
இக் கருத்தரங்கில் நான் எடுத்து இருக்கும் தலைப்பு ஜோதிடம் உண்மையா? இத்தனை ஜோதிட வல்லுனர்கள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில் இந்த தலைப்பை எப்படி தேர்ந்து எடுத்தீர் என்ற கேள்வியை அநேகமான பேர் என்னிடம் வினாவினார்கள்.
ஜோதிடம் உண்மை என்பதை ஜோதிடர்கலாகிய நம்மை நாடி வருகிற மக்களை விட நமக்குதான் தீர்கமாக தெரிந்து இருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் தான் இந்த கேள்வியையும் அதற்கான பதிலையும் எனக்கு தேடி கொடுத்தது.
ஒரு டீ கடையில் ஒருவர் ஜோதிட மாத இதழ் படித்து கொண்டு இருந்தார் அங்கு வந்த அவரின் நண்பர் அவரை பார்த்து என்னப்பா ஜோதிட பத்திரிகை எல்லாம் படிக்கீரிங்க என கேட்க அந்த நபர் கொஞ்சம் அறிவு வளர்க்கலாம்னு சொல்ல நண்பர் அட போப்பா எல்லாம் சும்மா ஒட்டுறானுங்க என்றார்.இந்த ஓட்றானுங்க என்ற வார்த்தை என்னுள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்த புதிது. எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. உண்மையில் ஒட்டுறாங்களோ என்று? இந்த கேள்வியை என்னுள் போட்டு நான் தேடி எடுத்த விசயங்களை என் அருமை நண்பர்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளவே இந்த தலைப்பு.
வானில் இருக்கிற கிரகங்களின் அசைவுகள், கிரகங்களின் தன்மைகள் இவற்றை சொல்வது வானவியல், அந்த கிரங்களின் குண நலன்கள் அதன் தன்மை பூமியில் இருக்கிற நமக்கு எவ்வாறு சம்பந்த படுகிறது என்பதை சொல்வது ஜோதிடம். இன்னும் விரிவாக பார்ப்போம்.
நாம் சொல்கிற ஜோதிட பலன்கள் எதன் அடிப்படையில் சொல்லபடுகிறது? ஜாதக கட்டத்தில் இருக்கிற கிரகங்கள் அமைப்பின்படி தானே? கிரகங்கள் எப்படி,எங்கே?இருந்து இந்த வேலையை செய்கிறது? பிரபஞ்சத்தில் இருந்து தன குணநலன்களுக்கு ஏற்றவாறு அதன் பலனை செய்கிறது என்பதை நாம் படித்தும் உணர்ந்தும் தான் பலன் சொல்கிறோம்.
பிரபஞ்சத்தில் இருந்து கிரகங்கள் தன வேலையை செய்கின்றன என்றால் ஒரு 40 வயது மனிதருக்கு, ஜனன கால பலன்கள் எவ்வாறு எடுக்கிறோம்? அவர் பிறந்த அதே கிரக சுழலா இப்பொழுது இருக்கிறது? அப்படியென்றால் தானே கிரகங்கள் மேலே இருந்து வேலை செய்கிறது எனலாம்?40 வருடத்திற்கு முன்னாள் இருந் தா கிரக சுழல் இப்பொழுது எங்கே இருக்கிறது? அதை போட்டாகாப்பி
எடுத்து வைத்து கொண்டா கிரகங்கள் வேலை செய்கிறது? அல்லது நமக்கு அருகிலேயே அதன் நேரடி மேற்பார்வையிலா நாம் இருக்கிறோம்.சரி இன்றைய கோள்சாரத்திற்கும் நம்மிடம் ஒரு விளக்கம் இருக்கிறதே? இன்றைய கோள்சாரம் ஜனன கால சந்திரனனின் நிலையை வைத்து தானே சொல்லபடுகிறது. ஜனன கால அமைப்பின் படியேதான் இன்றைய கோள் சாரமும் செயல்படும் என்றல்லவா சொல்கிறோம்? அப்படி என்றால் இந்த இன்று இல்லா ஜனன கால கிரக சுழலை எதை வைத்து சொல்கிறோம்? அவை எங்கிருந்து செயல்படுகிறது? இந்த விசயத்தில் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைகிற பொழுது பிரபஞ்சத்தில் இருக்கிற கிரக சுழல்கள், அக் கிரக சுழல்கள். அக் கிரக சுழல்கள் பிரபஞ்சத்தில் ஏற்படுத்துகிற சூழ்நிலை மாற்றங்கள், கிரகங்களின் இழு மற்றும் விலக்கு விசைகள், கிரகங்கள் சுற்றுகிற தன் பாதை, வேகம் மேற்க்கூரிய அனைத்தும் கலக்கிற கலவை இப்பிரபஞ்சத்தில் என்ன விதத்தில் இருக்கிறதோ,அவை என்ன விதமான வேதியல் மாற்றங்களை கொண்டிருக்கிறதோ அதன் படியும்,மேற் கூறியபடி ஏற்கனவே செய்யப்பட்ட அந்த ஆண் மற்றும் பெண் இயல்புகளை தன்னடக்கி தான் ஒரு ஜனனம் இருக்கும்.
இந்த கலவையில் ஏற்படுகிற ஜனனம் தாயின் சக்தியின் துணையோடு வளர்ந்து எந்த சுத்திரத்தில் உட்புகுந்ததோ அதன் அடிப்படையில் வளரும். அந்த உரு தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து தாயின் தொடர்பான தொப்புள் கொடி அறுக்கபட்டப்பின் இப்பிரபஞ்ச சக்திகளோடு தொடர்பு ஏற்படுத்துகிற முதல் மூச்சுத்தான் அந்த உருவை இயக்குகிற கருவாக இயங்கும் .இந்த கிரக அமைப்புகளோடு பிறந்த இக்குழந்தை இவ்வாறான செயல்,சிந்தனை,குணநலன்களை கொண்டிருக்கும் என்பதைத்தான் ஜனன கால பலன்களாக சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை.
ஜாதக கட்டம் என்பது பிரபஞ்சத்தில் இருக்கிற கிரக ஓட்டங்களின் பூமியிலிருந்து பார்க்கும் பார்வையே அன்றி வேறொன்றும் இல்லை. ஜாதக கட்டத்தில் இருக்கிற நிலைமை வானத்தில் எங்கோ இருந்து கொண்டு அம்புகளையோ பூ மழையோ பொழிவதில்லை.
மேலே நான் கூறிய தன்மைகளோடு இருக்கிற மனிதனுக்கு இன்றைய கோள்களின் நிலை எவ்வாறு செயல்படும் என்கின்ற கணக்குத்தான் கோள் சாரம் என்கின்ற கோட்சார தன்மை..
சரி ஜோதிடம் என்பது பிரபஞ்ச இயங்கு தன்மை,ஜோதிட பலன் என்பது இந்த இயங்கு தன்மையின் செயல்கள், ஜாதகம் என்பது பிரபஞ்ச இயங்கு தன்மை மனிதனுள் எவ்வாறு செயல் படுகிறது என்பது. இந்த செயல்பாட்டின் விளைவுகள் ஜாதக பலன்கள். ஆக ஜோதிடம் வேறு,ஜோதிட பலன்கள் வேறு,ஜாதகம் வேறு, ஜாதக பலன்கள் வேறு.
பிரபஞ்ச தன்மை என்றும் மாறுவதில்லை பிரபஞ்ச தன்மையின் செயல் பாட்டின் புரிதல் தான் ஜோதிட பலன்.
இந்த புரிதல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது இயற்கை. அப்படி மாறுபடுகிற தன்மைதான் ஜோதிடத்தின் ஒவ்வொரு முறைகள். எந்த முறையில் பயணித்தாலும் விடை ஒன்றுதான்.ஏனெனில் பிரபஞ்சம் என்றுமே மாறாதது. அதுதான் நம் வாழ்வியலின் மையம். இதுதான் உண்மை உண்மை இதுதான் ஜோதிடம்
இந்த ஜோதிடம் நம்முள் இயங்குவதற்கும் ஒரு சூட்சுமம் ஒரு இடத்தில் செயல்படுகிறது. எது தெரியுமா? அதுதான் நம் நுனி மூக்கு இந்த பிரபஞ்ச தொடர்பான மூச்சு என்று சொல்ல படுகிற பிராணன் நம்முள் நுழைகிற நுழைவாயில்.பிராணன் இல்லையெனில் நாம் இல்லை நாம் இல்லையெனில் எப்படி ஜோதிடம் வேலை செய்யும்..இதை பற்றி கூற இன்னும் நேரம் வேண்டும் என்பதால் பிறிதொரு தருணத்திலோ. அல்லது முகனூலிலொ விரிவாக எழுதுகிறேன்.
சிவம் எனும் உயிர் ஒன்று. அதை இயக்குகிற சூரியன் சந்திரன் சக்தி இரண்டு,நம்முள் இயங்குகிற இயக்கம் திர்கோணம் மூன்று, இந்த இயங்கு சக்திகளின் இருப்பிடம் கேந்திரம் நான்கு,இந்த நான்கும், ஐந்தான நமசிவய எனும் பஞ்சாட்சர தத்துவத்துக்குள் அடங்கும்.இந்த பஞ்சாட்சர தத்துவம் இயங்குகிற சரவணபவ எனும் 6 சக்கரங்கள், தாது உப்புகலான ஏழு.இவைகளின் உற்பத்தி மூலமான எட்டு திக்குகள்,நம் உற்பத்தியின் மூலமான 9 கிரகங்களின் தன்மைகள். என தான் நம் சூத்திரம் இயங்குகிறது. புரிந்து கொள்வோம்.உணர்வோம்,மேம்படுவோம். இன்னும் வரும்... அஸ்ட்ரோ பாபு.

1 comment:

  1. Jothidattirku nalla arimugam. Kadaisi paguthiyai innum virivaaga eluthinal sirappu

    ReplyDelete