Tuesday, 29 November 2016

நண்பர்களுக்கு வணக்கம்,
கிடட தட்ட 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எழுத துவங்குகிறேன்.முகநூலுளில்முகநூலில் கடந்த வாரம் இரு கேள்விகள் கேட்டு இருந்தேன்.
1) ஒரு கிரகத்திற்கு ஏன் மூன்று நடத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
2) ஒரு நடசத்த்ரிக்கு ஏன் 4 பாதங்கள் கொடுத்திருக்கிறார்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நான் உணர்ந்த விஷயங்களை உலக தமிழ்த் ஜோதிடர்கள் மஹா சபை 3 வது கருத்தரங்கு சென்னையில் என் உரையின் தலைப்பாக எடுத்து உரையாற்றினேன் அக்கருத்தை இங்கும் நண்பர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு கிரகத்திற்கு ஏன் 3 நட்சத்திரம்?
இந்த பிரபஞ்சமே முப்பரிமாண தன்மையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. முப்பரிமாண நிலை என்பது மூன்று வித குணபேதங்கள் என்று பொருள், இது காலத்தின் அடிப்படையில் பிரிக்க பட்டிருக்கின்றன எளிமையாக கூறின் வெயில் காலம், மழைக்காலம்,குளிர்காலம் எனக்கூட கொள்ளலாம். .சூரிய குடும்பம் என்கின்ற அனைத்து கோள்களும் இயங்கும் பாதை ஒரு நீள்வட்ட பாதை என்பதும் அது 360 டிகிரி என்பதையும் நாம் அறிவோம். இதில் பூமி ஒரு நாளைக்கு ஒரு டிகிரி நகர்கிறது. அவ்வாறு 120 டிகிரி நகர்ந்துவுடன் காலத்தின் அடுத்த நிலையை அடையும் இன்னும் விரிவாக பார்ப்போம் ,
இயற்பியலில் முக்கோண வடிவம்தான் இயக்கத்தை தோற்று விக்கும் என்ற விதியையும் படித்திருப்போம்.
அவ்வாறாயின் 360 டிகிரிக்கு இந்த முக்கோண வடிவம் என்பது மூன்று புள்ளிகள், அந்த மூன்று புள்ளிகளை சரிசமமாக பிரிப்பின் 360/3 = 120 டிகிரி. ஒரு வட்ட வடிவ அமைப்பு என்பது 360 டிகிரி அதில் சரி சமமான மூன்று புள்ளிகள் என்பது 120 டிகிரியிலிருந்து 240 டிகிரி,240 டிகிரிலிருந்து 360 டிகிரி.
இந்த விதியின் அடிப்படையில்தான் நாம் அன்றாட உபயோகிக்கும் மின் விசிறி அமைக்கப்பட்டிருக்கிறது.அதிக காற்று வேண்டும் என்றால் மூன்று தடுகளுக்கு பதிலாக 4 அல்லது 5 தகடுகளை வைத்திருக்கலாம்தானே. அந்த மின் விசிறியின் இயக்கப்படா வட்டப்பாதை 360 டிகிரி தானே.அதில் இயங்கும் மூன்று தகடுகள் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் அமைய பட்டிருப்பதை நாம் உணரலாம். ஆக இயக்கம் நடைபெறுதல் இந்த 120டிகிரி இடைவெளியில் இருக்கிற புள்ளிகளாம்.
ஜோதிடத்தில் இந்த 120 டிகிரி இடைவெளிதான் திரிகோணம் என்ற 1,5,9 விதியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.1, 5,9, 120 டிகிரி இடைவெளிதான். 9 என்பது நாம் வந்த மூலம்,ஒன்று நாம்,5 என்பது நம்மால் ஏற்பட போகும் விளைவு. என கொள்கிறது ஜோதிடம்.
இந்த 120 டிகிரி இடைவெளிதான் இயக்க தத்துவமாக சூரிய பாதையில் இயங்கி கொண்டிருக்கிறது.
உதாரணமாக மேஷ ராசியில் 0 டிகிரியில் துவங்கும் அஷ்வினி 1 பாதம்,கடகத்தில் ஆயில்யம் 4 இல் முடியும் இது 120 டிகிரி. மீண்டும் 120 இடைவெளியான சிம்மத்தில் மகம் 1 பாதத்தில் துவங்கும் அடுத்த பரிமாணம் அல்லது குண பேதம்,கேட்டை 4 இல் முடியும்.240 டிகிரியில்,மூன்றாம் பரிணாமம் அல்லது குண பேதம் மூலத்தில் துவங்கி ரேவதி 4 இல் 360 டிகிரியில் நிறைவு பெறும்
இந்த முப்பரிமாண நிலை ஒரு கிரகத்திற்கு வழங்கி ஒரு கிரகம் பிரபஞ்ச சூரிய பாதையில் தன முப்பரிமாண நிலையை எவ்வாறு வெளிப்படுத்தும் என்ற 120 டிகிரி இடைவெளி புள்ளியை கணக்கிட்டு தான் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்ஷத்திரம்
அசுவினி முதல் ஆயில்யம் வரை அனைத்து 9 கிரகங்களின் தன்மையினை கொடுத்து அதை அடுத்த பரிமாணம் அல்லது குண பேதம் அல்லது மாற்றம் என்ற மகம் முதல் கேட்டை,அடுத்த இயக்க பரிமாணம் அல்லது குணமாக மூலம் முதல் ரேவதி வரை என்று கணக்கிட்டுள்ளார்கள்.ஒவ்வொரு 120 டிகிரியும் ஒவ்வொரு இயக்கத்தன்மை கொண்டிருப்பதால் தான் தனித்தனி பெயரிட்டு அடையாளத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.மேலும்
நான் முதல் பத்தியில் சொன்னது போல கால மாற்றங்கள் இந்த 120டிகிரியில்தான் இருக்கிறது முதல் 120 டிகிரி வெயில் காலம். இங்கு இந்த 9 கிரகங்களின் முதல் நட்சத்திரங்கள் செயல் வேறு விதமாகவும் அடுத்த மகம் முதல் கேட்டை வரை மழைக்காலம் இங்கும் இந்த கிரக நட்சத்திரங்கள் செயல் வேறுவிதமாகவும், மூலம் முதல் ரேவதி வரை குளிர் காலம் இங்கு கிரக நட்சத்திரங்கள் வேறு விதமாகவும் தான் குண பேதங்களை பிரதிபளிப்பதால் தான் ஒரு கிரகம் மூன்று கால நிலையிலும் தன்னை எவ்வாறு பிரதிபளிக்கிறது என்கின்ற கணக்குதான் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம். அடுத்த பாகத்தில் ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் என்பதை தொடர்கிறேன். இன்னும் வரும்.... ஆஸ்ட்ரோ பாபு.

1 comment: