Tuesday 29 November 2016

நண்பர்களுக்கு வணக்கம்,
கிடட தட்ட 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் எழுத துவங்குகிறேன்.முகநூலுளில்முகநூலில் கடந்த வாரம் இரு கேள்விகள் கேட்டு இருந்தேன்.
1) ஒரு கிரகத்திற்கு ஏன் மூன்று நடத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது?
2) ஒரு நடசத்த்ரிக்கு ஏன் 4 பாதங்கள் கொடுத்திருக்கிறார்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நான் உணர்ந்த விஷயங்களை உலக தமிழ்த் ஜோதிடர்கள் மஹா சபை 3 வது கருத்தரங்கு சென்னையில் என் உரையின் தலைப்பாக எடுத்து உரையாற்றினேன் அக்கருத்தை இங்கும் நண்பர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு கிரகத்திற்கு ஏன் 3 நட்சத்திரம்?
இந்த பிரபஞ்சமே முப்பரிமாண தன்மையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. முப்பரிமாண நிலை என்பது மூன்று வித குணபேதங்கள் என்று பொருள், இது காலத்தின் அடிப்படையில் பிரிக்க பட்டிருக்கின்றன எளிமையாக கூறின் வெயில் காலம், மழைக்காலம்,குளிர்காலம் எனக்கூட கொள்ளலாம். .சூரிய குடும்பம் என்கின்ற அனைத்து கோள்களும் இயங்கும் பாதை ஒரு நீள்வட்ட பாதை என்பதும் அது 360 டிகிரி என்பதையும் நாம் அறிவோம். இதில் பூமி ஒரு நாளைக்கு ஒரு டிகிரி நகர்கிறது. அவ்வாறு 120 டிகிரி நகர்ந்துவுடன் காலத்தின் அடுத்த நிலையை அடையும் இன்னும் விரிவாக பார்ப்போம் ,
இயற்பியலில் முக்கோண வடிவம்தான் இயக்கத்தை தோற்று விக்கும் என்ற விதியையும் படித்திருப்போம்.
அவ்வாறாயின் 360 டிகிரிக்கு இந்த முக்கோண வடிவம் என்பது மூன்று புள்ளிகள், அந்த மூன்று புள்ளிகளை சரிசமமாக பிரிப்பின் 360/3 = 120 டிகிரி. ஒரு வட்ட வடிவ அமைப்பு என்பது 360 டிகிரி அதில் சரி சமமான மூன்று புள்ளிகள் என்பது 120 டிகிரியிலிருந்து 240 டிகிரி,240 டிகிரிலிருந்து 360 டிகிரி.
இந்த விதியின் அடிப்படையில்தான் நாம் அன்றாட உபயோகிக்கும் மின் விசிறி அமைக்கப்பட்டிருக்கிறது.அதிக காற்று வேண்டும் என்றால் மூன்று தடுகளுக்கு பதிலாக 4 அல்லது 5 தகடுகளை வைத்திருக்கலாம்தானே. அந்த மின் விசிறியின் இயக்கப்படா வட்டப்பாதை 360 டிகிரி தானே.அதில் இயங்கும் மூன்று தகடுகள் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் அமைய பட்டிருப்பதை நாம் உணரலாம். ஆக இயக்கம் நடைபெறுதல் இந்த 120டிகிரி இடைவெளியில் இருக்கிற புள்ளிகளாம்.
ஜோதிடத்தில் இந்த 120 டிகிரி இடைவெளிதான் திரிகோணம் என்ற 1,5,9 விதியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.1, 5,9, 120 டிகிரி இடைவெளிதான். 9 என்பது நாம் வந்த மூலம்,ஒன்று நாம்,5 என்பது நம்மால் ஏற்பட போகும் விளைவு. என கொள்கிறது ஜோதிடம்.
இந்த 120 டிகிரி இடைவெளிதான் இயக்க தத்துவமாக சூரிய பாதையில் இயங்கி கொண்டிருக்கிறது.
உதாரணமாக மேஷ ராசியில் 0 டிகிரியில் துவங்கும் அஷ்வினி 1 பாதம்,கடகத்தில் ஆயில்யம் 4 இல் முடியும் இது 120 டிகிரி. மீண்டும் 120 இடைவெளியான சிம்மத்தில் மகம் 1 பாதத்தில் துவங்கும் அடுத்த பரிமாணம் அல்லது குண பேதம்,கேட்டை 4 இல் முடியும்.240 டிகிரியில்,மூன்றாம் பரிணாமம் அல்லது குண பேதம் மூலத்தில் துவங்கி ரேவதி 4 இல் 360 டிகிரியில் நிறைவு பெறும்
இந்த முப்பரிமாண நிலை ஒரு கிரகத்திற்கு வழங்கி ஒரு கிரகம் பிரபஞ்ச சூரிய பாதையில் தன முப்பரிமாண நிலையை எவ்வாறு வெளிப்படுத்தும் என்ற 120 டிகிரி இடைவெளி புள்ளியை கணக்கிட்டு தான் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்ஷத்திரம்
அசுவினி முதல் ஆயில்யம் வரை அனைத்து 9 கிரகங்களின் தன்மையினை கொடுத்து அதை அடுத்த பரிமாணம் அல்லது குண பேதம் அல்லது மாற்றம் என்ற மகம் முதல் கேட்டை,அடுத்த இயக்க பரிமாணம் அல்லது குணமாக மூலம் முதல் ரேவதி வரை என்று கணக்கிட்டுள்ளார்கள்.ஒவ்வொரு 120 டிகிரியும் ஒவ்வொரு இயக்கத்தன்மை கொண்டிருப்பதால் தான் தனித்தனி பெயரிட்டு அடையாளத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.மேலும்
நான் முதல் பத்தியில் சொன்னது போல கால மாற்றங்கள் இந்த 120டிகிரியில்தான் இருக்கிறது முதல் 120 டிகிரி வெயில் காலம். இங்கு இந்த 9 கிரகங்களின் முதல் நட்சத்திரங்கள் செயல் வேறு விதமாகவும் அடுத்த மகம் முதல் கேட்டை வரை மழைக்காலம் இங்கும் இந்த கிரக நட்சத்திரங்கள் செயல் வேறுவிதமாகவும், மூலம் முதல் ரேவதி வரை குளிர் காலம் இங்கு கிரக நட்சத்திரங்கள் வேறு விதமாகவும் தான் குண பேதங்களை பிரதிபளிப்பதால் தான் ஒரு கிரகம் மூன்று கால நிலையிலும் தன்னை எவ்வாறு பிரதிபளிக்கிறது என்கின்ற கணக்குதான் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம். அடுத்த பாகத்தில் ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம் என்பதை தொடர்கிறேன். இன்னும் வரும்.... ஆஸ்ட்ரோ பாபு.

கிரக பார்வை பாகம் - 1
நண்பர்களுக்கு வணக்கம்
கிரகங்களுக்கு ஏன் 3 நட்ச்சத்திரம்? ஒரு நட்சத்திரத்திற்கு ஏன் 4 பாதம்? என்ற என் முந்தய கட்டுரைகளுக்கு நண்பர்களிடத்தில் கிடைத்த வரவேற்பும்,பதில்களும்,வாழ்த்துக்களும்,தொலைபேசி அழைப்புகளும் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது.உங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள் . அதை தொடர்ந்து கிரக பார்வை என்பது என்ன? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. என்னுள் நான் உணர்ந்த விஷயங்களை நண்பர்கள் உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
கிரகப் பார்வைகள் என்பது என்ன?
சூரிய வட்ட பாதையில் இயங்குகின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து கொள்கிறதா என்ன? இதற்கு, ஒரு கிரகத்தின் கதிர் வீச்சைத்தான் பார்வைகள் என்று சொல்கிறார்கள் ஒரு சாரார் சரி அப்படி பார்த்தோமானால் பல்லாயிர கணக்கான மையில்களுக்கு அப்பால் இருக்கும் கிரகம் தன கதிர் வீச்சை பூமியில் செலுத்தும் போது பூமியில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்தரிக்கும் பொதுவாகத்த்தானே கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் அனைவரும் ஒரே குண செயல்பாடுகளை உடையவர்களாகத்தானே இருப்பார்கள்? நிஜத்தில் அவ்வாறு இல்லையே இது ஏன்? இது போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்த வண்ணமே இருந்தன.
இந்த கேள்விகளை என்னுள் விதைத்து தேடி என் குருமார்களின் உதவியோடு நான் உணர்ந்த விஷயங்களை இங்கே கொடுத்து இருக்கிறேன், சரி, முதலில் பார்வைகளை பார்ப்போம்.
குரு 5,7,9 , சனி 3 7 10 செவ்வாய் 4 7 8 மற்ற கிரகங்கள் அனைத்திற்கும் 7 பார்வை இது ஜோதிட நூல்கள் உரைக்கின்ற விஷயம்.
நான் ஏற்கனவே என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து எழுதி வருகிற விஷயம் ஜோதிடம் என்பது எங்கோ மோடி மஸ்தான் வேலை செய்கிறது என்றில்லாமல் ஜோதிடம் இயங்குவது நம்முள் தான் பிரபஞ்ச்ச சக்தியில் ஒவ்வொரு கிரகத்தின் சக்திகளும் கலந்தே தான் இருக்கிறது, மிக எளிதாக உரைப்பின், ஒரு 4அல்லது 5 ரசாயனங்கள் ஒன்றாக கலக்கும்போது ஒவ்வொரு ரசாயனமும் தன தனித்தன்மையையும் அதே நேரத்தில் ஒன்றாக இணையும் போது ஒரு பொது தன்மையையும் தோற்றுவிக்கும் தானே. அவ்வாறே தான் சூரிய வட்ட பாதையில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு சக்தியை பிரபஞ்ச்சத்தில் வெளிப்படுத்தி கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிப்படுத்தும் சக்திகளின் மூலத்தில் இருந்துதான் நாம் தோன்றி இருக்கிறோம். அவ்வாறு நம் மூல சக்திகளே நாம் இருக்கும் பூமி இயங்குகிற சூரிய பாதையின் தாக்கம், இந்த கிரக உற்பத்தியான நம்முள், எவ்வாறு வெளிப்படுகிறது என்பதின் கணக்கே ஜோதிடம் அன்றி வேறில்லை.
அவ்வாறு இயங்கும் கிரக செயல்பாடுகளை தான் கிரக காரகங்களாக மூல நூல்களில் நம் பாட்டன் முப்பாட்டன் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காரங்கள் செய்லபாடுகளாக வெளிப்படுவதுதான் பார்வைகள் என குறிப்பிட்டுள்ளனர். தொடர்சசி அடுத்த பாகத்தில்............ இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு

Monday 28 November 2016

நண்பர்களுக்கு வணக்கம்,
ஒரு கிரகத்திற்கு ஏன் மூன்று நட்ஷத்திரம்,ஒரு நடச்சத்திரத்திற்கு ஏன் 4 பாதம் என்ற கட்டுரையின் தொடர்சசி இந்த கட்டுரை.
முந்தைய பதிவில் ஒரு கிரகத்திற்கு ஏன் மூன்று நடசத்திரம் என்ற நானே எழுப்பிய கேள்விக்கு நான் உணர்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன்.
இங்கு ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்ற விஷயங்களை தொடர்ந்து பார்ப்போம் 
ஒரு நட்சத்திரத்திற்கு ஏன் 4 பாதங்கள்?
பிரபஞ்ச அடக்க சக்திகளான பஞ்ச பூதங்களை மூலமாக கொண்டுதான் அனைத்து படைப்புகளும் படைக்க பட்டிருக்கின்றன.அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்றான மனித இனத்திற்குள் இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதின் கணக்குதான் இந்த 4 பாதம்.
நான் சென்ற கட்டுரையில் விவரித்த இயக்க புள்ளியான 120 டிகிரி இடைவெளியில் அல்லது ஒவ்வொரு பரிமாணத்தில் இந்த பஞ்ச பூத தத்துவம் எவ்வாறு செயல்படும் என்கின்ற கணக்குதான் இது.
ஒரு நட்சத்திரத்தின் செயல்பாடு இந்த பஞ்ச பூதங்கள் மூலமாகத்தான் நடைபெறும் ஏனெனில் படைப்பே இந்த பஞ்ச பூதத்தால் தானே ஆனது. அதில் நாம் ஆகிய இந்த பூமி ஆகாய தத்துவத்தில் இயங்குவதால் அதை பொதுவாக கொண்டு மற்ற நீர் ,நிலம்,நெருப்பு,காற்று என்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படும் என்ற கணக்குதான் ஒரு நட்சத்தரத்திற்கு 4 பாதங்கள்.
120 டிகிரி இயக்க புள்ளியில் இந்த பஞ்ச பூத தத்துவங்கள் எவ்வாறு செயல்படும் என்பதைத்தான் 4 வித குண மாறுபாடுகளை 4 பாதங்களாக சொல்லி இருக்கிறார்கள்.
அதேபோல் மூன்று வித காலங்களில், பருவ கால மாற்றங்களில் நீர்,நிலம்,நெருப்பு ,காற்று,என்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படும் என்பதும் தான்
உதாரணமாக மேஷத்தில் பரணி நட்சத்திரத்தின் தன்மை இந்த பஞ்ச பூத தத்துவங்களாக எவ்வாறு செயல்படும். ஒரு கிரகம் உதாரணமாக செவ்வாய் பரணி நட்சத்திர காலில் இருந்தால் 1 பாதம் நெருப்பு,2 ம்பாதம் ,நிலம் , 3ம் பாதம்காற்று, 4ம் பாதம் நீர் என்ற பஞ்ச பூத தத்துவத்தின் குணாதிசியங்கள் அடிப்படையில் தான் தன பலன்களை அதாவது செயல்களை வெளிப்படுத்தும்.
ஒரு கிரகம் மூன்று நட்சத்திர குண பேதங்களை கொண்டு 4வித தத்துவங்களை உள்ளடக்கி தான் தன செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதை நம் முப்பாட்டன் களான யோகிகளும் சித்தர்களும் மனித செயல்பாடுகளை மிக துல்லியமாக கண்டறிந்து நமக்கு கொடுத்ததுதான் ஜோதிடக்கலை, ஜோதிடத்தை வணங்குவோம் சுவாசிப்போம்...... இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு.
கிரகப் பார்வை - 2

நண்பர்களுக்கு வணக்கம்,

கிரகப் பார்வை என்பது என்ன? என்ற கட்டுரையின் 2ம் பாகம்,
சென்ற  பாகத்தில் சில அடிப்படை விஷயங்களை விளக்கி இருந்தேன்.அதை தொடர்ந்து கிரகப் பார்வைகளுக்குள் போவோம்.
கிரகப் பார்வை குருவுக்கு 5,7,9, சனி,3,7,10, செவ்வாய்,4,7,8 மற்ற கிரகங்களுக்கு 7 ம் பார்வை. ஏன் இப்படி,

குரு 5,7,9

இயல்பான மற்றும் பொதுவான குருவின் குணாதிசியங்கள் ஆவண. நல் ஒழுக்கம்,கல்வி,பராம்பரியம் காத்தல்,நற்பெயர், குழந்தை,தனம்  அல்லது பொருள் இவை தானே.
5 என்பது குழந்தை,நம் பராம்பரியம்  தானே, குழந்தை பெறுவதற்கு உண்டான விந்தணுவின் வலிமையை கொணர்வது, நம் பராம்பரியத்தை காத்து அடுத்த சந்ததிக்கு அனுப்புவது,ஆசை போன்றவை தானே. இதுவும் குருவின் குணாதியங்கள் தானே

7.  நம் எதிரே  உள்ள அனைத்துமே  7 இடம் தானே,நற்பெயர் நற்குணங்கள் பிரயோகப்படுவது  7 ம் இடத்திற்கு தானே,7 ம் இடம் தானே இவற்றை தீர்மானமும்9 செய்யும்.

9. பாக்கியமாம், பாக்கியம் என்ற வகையில் கிடைத்தல் என பொருள் கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு கிடைக்க நற்குணம்,நற் செயல், திடடமிடல் செயல்படுத்தல் போன்றவை தேவை தானே? அதற்கு நம் மூலையில் சிந்திக்கும் திறன் செயல்படும் திறன் ஆகியவையும் குருவின் குணாதியங்களே.

இந்த குணாதிசியங்கள் தான் குரு தான் இருக்கும் இடத்திலிருந்து செயல்படுத்துவார்,இதைத்தான்  பார்வை என்றனர். உதாரணமாக விருச்சிகத்தில் குரு இருப்பின் தன குண காரகமான 5 மிடம், மீனம்,7 ம்  இடம் ரிஷபம்,9ம் இடம் கடக ராசி நிலைகளை அந்த ராசிக்கு உண்டான லக்கின, ஆதிபத்தியங்களை கொண்டும் தன் காரகங்களை, மூன்று குணாதிசியங்களை தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிப்படுத்துவார்.இது பார்வை என உரைத்து இருக்கின்றனர்.நம் முன்னோர்

இது போலவே தான் சனிக்கும் 3,7,10. பார்வைகள், சனி கர்மாக்காரகன், ஒரு கர்மம் செய்வதற்கு தன் முனைப்பு, 3. இடம், செயல்படுகிற 7 இடம், செய்யும் கர்மம் 10 இடம் என கொண்டு சனி தான் இருக்கும் இடத்திலிருந்து இந்த குணாதிசியங்களை வெளிப்படுத்துவார்.

அதே தான் செவ்வாய்க்கும் 4,7,8, செவ்வாய் இரத்தகாரகன், வீரியத்தை குறிப்பவன் என்பார். 4 ம் இடம் என்பது தாய் ஸ்தானம் கூட. தன் இரத்த விருத்தியையும் அதன் செயல்பாடான சுகம், குணம்,கற்பு,போன்றவற்றையும் 7 ம் இடமான செயல்படுகிற இடத்தையும், 8 ம் இடம் ஆனா உழைப்பு, செயல்படுகிற தன்மை அல்லது விதம் போன்றவற்றை தன் குணாதிசியங்களை வெளிப்படுத்துவார்.

மற்ற கிரகங்களுக்கு அந்த கிரக காரகங்கள்  செயல்படும் இடமான 7 இடத்தை  பார்வையாக கொடுத்து இருக்கிறார்கள். ஒரு கிரகம் தன் செயல்பாட்டை செய்கிறது எனில் அதில் நம் எதிர் இருக்கும் தன்மைகளுக்கு  தானே. நம் எதிர் இருக்கும் அனைத்துமே 7 ம் இடம் தானே.
இவற்றைத்தான் பார்வைகள் என் சொல்லப்பட்டிருக்கிறது.நீங்களும் சோதித்து பாருங்களேன். நண்பர்களே. தங்கள் கருத்துக்களை பதியுங்கள் உங்கள் கருத்துக்கள் என் போன்ற மாணவனுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். .......... இன்னும் வரும் ஆஸ்ட்ரோ பாபு  
ஜோதிடம் உண்மையா?
3 வது முகனூல் ஜோதிட கருத்தரங்கத்தில் எனது உரை:
தலைப்பு :- ஜோதிடம் உண்மையா?
அவையோருக்கு வணக்கம்,
இக் கருத்தரங்கில் நான் எடுத்து இருக்கும் தலைப்பு ஜோதிடம் உண்மையா? இத்தனை ஜோதிட வல்லுனர்கள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில் இந்த தலைப்பை எப்படி தேர்ந்து எடுத்தீர் என்ற கேள்வியை அநேகமான பேர் என்னிடம் வினாவினார்கள்.
ஜோதிடம் உண்மை என்பதை ஜோதிடர்கலாகிய நம்மை நாடி வருகிற மக்களை விட நமக்குதான் தீர்கமாக தெரிந்து இருக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் தான் இந்த கேள்வியையும் அதற்கான பதிலையும் எனக்கு தேடி கொடுத்தது.
ஒரு டீ கடையில் ஒருவர் ஜோதிட மாத இதழ் படித்து கொண்டு இருந்தார் அங்கு வந்த அவரின் நண்பர் அவரை பார்த்து என்னப்பா ஜோதிட பத்திரிகை எல்லாம் படிக்கீரிங்க என கேட்க அந்த நபர் கொஞ்சம் அறிவு வளர்க்கலாம்னு சொல்ல நண்பர் அட போப்பா எல்லாம் சும்மா ஒட்டுறானுங்க என்றார்.இந்த ஓட்றானுங்க என்ற வார்த்தை என்னுள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ஜோதிடத்தை படிக்க ஆரம்பித்த புதிது. எனக்கே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. உண்மையில் ஒட்டுறாங்களோ என்று? இந்த கேள்வியை என்னுள் போட்டு நான் தேடி எடுத்த விசயங்களை என் அருமை நண்பர்களோடு இங்கே பகிர்ந்து கொள்ளவே இந்த தலைப்பு.
வானில் இருக்கிற கிரகங்களின் அசைவுகள், கிரகங்களின் தன்மைகள் இவற்றை சொல்வது வானவியல், அந்த கிரங்களின் குண நலன்கள் அதன் தன்மை பூமியில் இருக்கிற நமக்கு எவ்வாறு சம்பந்த படுகிறது என்பதை சொல்வது ஜோதிடம். இன்னும் விரிவாக பார்ப்போம்.
நாம் சொல்கிற ஜோதிட பலன்கள் எதன் அடிப்படையில் சொல்லபடுகிறது? ஜாதக கட்டத்தில் இருக்கிற கிரகங்கள் அமைப்பின்படி தானே? கிரகங்கள் எப்படி,எங்கே?இருந்து இந்த வேலையை செய்கிறது? பிரபஞ்சத்தில் இருந்து தன குணநலன்களுக்கு ஏற்றவாறு அதன் பலனை செய்கிறது என்பதை நாம் படித்தும் உணர்ந்தும் தான் பலன் சொல்கிறோம்.
பிரபஞ்சத்தில் இருந்து கிரகங்கள் தன வேலையை செய்கின்றன என்றால் ஒரு 40 வயது மனிதருக்கு, ஜனன கால பலன்கள் எவ்வாறு எடுக்கிறோம்? அவர் பிறந்த அதே கிரக சுழலா இப்பொழுது இருக்கிறது? அப்படியென்றால் தானே கிரகங்கள் மேலே இருந்து வேலை செய்கிறது எனலாம்?40 வருடத்திற்கு முன்னாள் இருந் தா கிரக சுழல் இப்பொழுது எங்கே இருக்கிறது? அதை போட்டாகாப்பி
எடுத்து வைத்து கொண்டா கிரகங்கள் வேலை செய்கிறது? அல்லது நமக்கு அருகிலேயே அதன் நேரடி மேற்பார்வையிலா நாம் இருக்கிறோம்.சரி இன்றைய கோள்சாரத்திற்கும் நம்மிடம் ஒரு விளக்கம் இருக்கிறதே? இன்றைய கோள்சாரம் ஜனன கால சந்திரனனின் நிலையை வைத்து தானே சொல்லபடுகிறது. ஜனன கால அமைப்பின் படியேதான் இன்றைய கோள் சாரமும் செயல்படும் என்றல்லவா சொல்கிறோம்? அப்படி என்றால் இந்த இன்று இல்லா ஜனன கால கிரக சுழலை எதை வைத்து சொல்கிறோம்? அவை எங்கிருந்து செயல்படுகிறது? இந்த விசயத்தில் நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைகிற பொழுது பிரபஞ்சத்தில் இருக்கிற கிரக சுழல்கள், அக் கிரக சுழல்கள். அக் கிரக சுழல்கள் பிரபஞ்சத்தில் ஏற்படுத்துகிற சூழ்நிலை மாற்றங்கள், கிரகங்களின் இழு மற்றும் விலக்கு விசைகள், கிரகங்கள் சுற்றுகிற தன் பாதை, வேகம் மேற்க்கூரிய அனைத்தும் கலக்கிற கலவை இப்பிரபஞ்சத்தில் என்ன விதத்தில் இருக்கிறதோ,அவை என்ன விதமான வேதியல் மாற்றங்களை கொண்டிருக்கிறதோ அதன் படியும்,மேற் கூறியபடி ஏற்கனவே செய்யப்பட்ட அந்த ஆண் மற்றும் பெண் இயல்புகளை தன்னடக்கி தான் ஒரு ஜனனம் இருக்கும்.
இந்த கலவையில் ஏற்படுகிற ஜனனம் தாயின் சக்தியின் துணையோடு வளர்ந்து எந்த சுத்திரத்தில் உட்புகுந்ததோ அதன் அடிப்படையில் வளரும். அந்த உரு தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்து தாயின் தொடர்பான தொப்புள் கொடி அறுக்கபட்டப்பின் இப்பிரபஞ்ச சக்திகளோடு தொடர்பு ஏற்படுத்துகிற முதல் மூச்சுத்தான் அந்த உருவை இயக்குகிற கருவாக இயங்கும் .இந்த கிரக அமைப்புகளோடு பிறந்த இக்குழந்தை இவ்வாறான செயல்,சிந்தனை,குணநலன்களை கொண்டிருக்கும் என்பதைத்தான் ஜனன கால பலன்களாக சொல்லி கொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை.
ஜாதக கட்டம் என்பது பிரபஞ்சத்தில் இருக்கிற கிரக ஓட்டங்களின் பூமியிலிருந்து பார்க்கும் பார்வையே அன்றி வேறொன்றும் இல்லை. ஜாதக கட்டத்தில் இருக்கிற நிலைமை வானத்தில் எங்கோ இருந்து கொண்டு அம்புகளையோ பூ மழையோ பொழிவதில்லை.
மேலே நான் கூறிய தன்மைகளோடு இருக்கிற மனிதனுக்கு இன்றைய கோள்களின் நிலை எவ்வாறு செயல்படும் என்கின்ற கணக்குத்தான் கோள் சாரம் என்கின்ற கோட்சார தன்மை..
சரி ஜோதிடம் என்பது பிரபஞ்ச இயங்கு தன்மை,ஜோதிட பலன் என்பது இந்த இயங்கு தன்மையின் செயல்கள், ஜாதகம் என்பது பிரபஞ்ச இயங்கு தன்மை மனிதனுள் எவ்வாறு செயல் படுகிறது என்பது. இந்த செயல்பாட்டின் விளைவுகள் ஜாதக பலன்கள். ஆக ஜோதிடம் வேறு,ஜோதிட பலன்கள் வேறு,ஜாதகம் வேறு, ஜாதக பலன்கள் வேறு.
பிரபஞ்ச தன்மை என்றும் மாறுவதில்லை பிரபஞ்ச தன்மையின் செயல் பாட்டின் புரிதல் தான் ஜோதிட பலன்.
இந்த புரிதல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது இயற்கை. அப்படி மாறுபடுகிற தன்மைதான் ஜோதிடத்தின் ஒவ்வொரு முறைகள். எந்த முறையில் பயணித்தாலும் விடை ஒன்றுதான்.ஏனெனில் பிரபஞ்சம் என்றுமே மாறாதது. அதுதான் நம் வாழ்வியலின் மையம். இதுதான் உண்மை உண்மை இதுதான் ஜோதிடம்
இந்த ஜோதிடம் நம்முள் இயங்குவதற்கும் ஒரு சூட்சுமம் ஒரு இடத்தில் செயல்படுகிறது. எது தெரியுமா? அதுதான் நம் நுனி மூக்கு இந்த பிரபஞ்ச தொடர்பான மூச்சு என்று சொல்ல படுகிற பிராணன் நம்முள் நுழைகிற நுழைவாயில்.பிராணன் இல்லையெனில் நாம் இல்லை நாம் இல்லையெனில் எப்படி ஜோதிடம் வேலை செய்யும்..இதை பற்றி கூற இன்னும் நேரம் வேண்டும் என்பதால் பிறிதொரு தருணத்திலோ. அல்லது முகனூலிலொ விரிவாக எழுதுகிறேன்.
சிவம் எனும் உயிர் ஒன்று. அதை இயக்குகிற சூரியன் சந்திரன் சக்தி இரண்டு,நம்முள் இயங்குகிற இயக்கம் திர்கோணம் மூன்று, இந்த இயங்கு சக்திகளின் இருப்பிடம் கேந்திரம் நான்கு,இந்த நான்கும், ஐந்தான நமசிவய எனும் பஞ்சாட்சர தத்துவத்துக்குள் அடங்கும்.இந்த பஞ்சாட்சர தத்துவம் இயங்குகிற சரவணபவ எனும் 6 சக்கரங்கள், தாது உப்புகலான ஏழு.இவைகளின் உற்பத்தி மூலமான எட்டு திக்குகள்,நம் உற்பத்தியின் மூலமான 9 கிரகங்களின் தன்மைகள். என தான் நம் சூத்திரம் இயங்குகிறது. புரிந்து கொள்வோம்.உணர்வோம்,மேம்படுவோம். இன்னும் வரும்... அஸ்ட்ரோ பாபு.
பத்தில் பாவி நலம்,பாம்பு பலம்.
நண்பர்களுக்கு வணக்கம்,
கடந்த சில தினங்களுக்கு முன்னால் நான் மேற்கண்ட கேள்வியை ஜோதிட குழுக்களில் கேட்டிருந்தேன்.மூத்த ஜோதிடரும் எனது மதிப்பிற்குரிய மூத்த ஜோதிடர் திரு.jJosyam ramu அய்யா அவர்களும்,திரு valar raajan அவர்களும் astro selvam அவர்களும்,திரு,senthil nathan பதில் அளித்து இருந்தனர்.அருமையான ஜோதிட விஷயங்கள் ஜோதிட அறிவின் அலசல்கள் அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேற் கூறிய கேள்விக்கான நான் உணர்ந்த விஷயங்களை இங்கு நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.நான் உணர்ந்த விஷயம் மிக சாதரணமான யதார்த்தத்தை அடிப்படையாக கொண்டது.என் எழுத்துகள் எப்பொழுதும் யதார்த்த வாழ்வியலில் ஜோதிடம் எவ்வாறு சொல்லபட்டிருக்கிறது என்பதை நோக்கித்தான் இருக்கும் என்பதை என் நண்பர்கள் அறிவார்கள் 
ஒரு தனி மனிதனனின் செய்களை நம் முன்னோர்கள் அகம்,புறம் என இரு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்கின்றனர்.புறம் என்பது வாழ்வியல் ஆதார செயல்களாகவும், அகம் என்பது இறை நோக்கு செயல்களாகவும் செயல்படும்.இதையே ஜோதிடத்தில் புறம் சார்ந்த செயல்களின் காரகத்துவத்தை வைத்திருக்கும் கிரகங்களை பாபர்கள் என்றும். அகம் சார்ந்த செயல்களின் காரத்துவங்களை வைத்திருக்கும் கிரகங்களை சுபர் எனவும் பிரித்து வைத்திருக்கின்றனர்.இந்த முத்தாய்போடு கேள்விக்கு செல்வோம்.
பாபர்கள் என்பர் சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது சுபர் என்போர், வளர்பிறை சந்திரன்,குரு,சுக்கிரன், தனித்த புதன் இவ்வாறு தானே ஜோதிடத்தில் வடிவமைக்க பட்டிருக்கிறது.
பாபர்களுக்கான அடிப்படை செயல்கள். சூரியன்,- தைரியம்,செவ்வாய் - வீரியம்,சனி-உழைப்பு,ராகு-அதி தீவிரம்,கேது_ஞானம். 
ஒரு தொழிலோ அல்லது வியாபாரமோ செய்வதற்கு மேற்குறிய விஷயங்கள்தானே அத்தொழிலில் வெற்றியடைய தேவையானவை .10 பாவம் என்பது தொழில் கர்மம் ஜீவனம் சார்ந்ததுதானே. ஒரு தொழிலில் அல்லது வியாபாரத்தில் அல்லது பணியில் தைரியம்,வீரியம்,கடின உழைப்பு, அதி தீவிரமான செயல்கள், அத்தொழில் சார்ந்த ஞானம் இவைகள் இருக்கும் பொழுது வெற்றிதானே இதைத்தானே பத்தில் பாவி நலம் என்றனர்.
இதே பத்தில் பாம்பு பலம் என்பது ராகுவின் அதி தீவிரமோ அல்லது அத்தொழிலின் ஞானமோ அத்தொழிலில் மேன்மை அடைவதற்கான பலம் தானே.இதைத்தான் நம் முன்னோர்கள் பத்தில் பாவி நலம் பாம்பு பலம் என்றனர். இன்னும் வரும் அஸ்ட்ரோ பாபு